காவிரி, தென்பெண்ணை, பாலாறு உள் ளிட்ட நூற்றுக்கணக் கான ஜீவநதிகளை குடைந்து மணல் கொள்ளை நடத்திய சேகர்ரெட்டி என அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்தி ரன் குழுமம் டெல்டா மாவட் டத்தின் விளைநிலங்களை குறிவைத்து மணல் கொள்ளை நடத்தி வருகிறது.

Advertisment

முப்போகம் விளைந்த டெல்டா மாவட்ட விளைநிலங் கள் தரிசு நிலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, எஸ்.ஆர். என் கிற ராமச்சந்திரனின் ஆதர வோடு அந்நிலங்களை மணல் குவாரிகளாக மாற்றி கனிமவளங் களை கொள்ளையடித்துவரு கின்றனர். தினசரி சராசரியாக தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங் களில் இருந்து 6000 லாரி களுக்குமேல் வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்துகின்றனர். இதற்காக அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், முன் னாள் அமைச்சர் வைத்தியலிங் கம் மற்றும் அ.ம.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மத்திய மண்டல காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அனைவருக் கும் கமிசன் போய்விடுவதால் மணல் கடத்தல் எந்த தடையும் இல்லாமல் நடக்கிறது என விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்துவருகின்றனர்.

sand

மணல் மாபியா சேகர் ரெட்டியின் நிழல் மனிதர்களாக தமிழகத்தில் வலம் வந்தவர்கள் மணல் ராமச்சந்திரனும், சர்வே யர் ரத்தினமும். எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ராமச்சந்திர னின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டை அடுத்துள்ள முத்துப் பட்டினம். தொடக்கத்தில் ராமச் சந்திரன் தி.மு.க.வில் இருந்து கொண்டு, புதுக்கோட்டை பெரியண்ணனுக்கு மிக நெருக்க மானார். அந்த சமயத்தில் படிக்காசுவும், ஆறுமுகசாமியும் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை நடத்தி வந்தார்கள். இவர்களோடு இணைந்த ராமச்சந்திரனும், ரெத்தினமும் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மணல் குவாரி களை எடுத்து நடத்தினர். மண லோடு நிறுத்திக் கொள்ளாமல் பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் போட பயன்படுத்தப் படும் செம்மண், செங்கல் சூளை, டயர் விற்பனை, ஹோட்டல்கள் என பிசினஸை டெவலப் படுத்தினர்.

Advertisment

தி.மு.க. ஆட்சி மாறி அ.தி. மு.க. ஆட்சிக்கு வந்தபோது சில அமைச்சர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அவர் களின் உதவியோடு ஆந்திரா சேகர் ரெட்டி, பிரேம், ராம்மோகன் ராவ் உள்ளிட்டவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண் டனர். அதோடு 2012-ல் புதுக் கோட்டை இடைத்தேர்தலுக் காக வந்த ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வ நாதன், வைத்திலிங்கம் உள் ளிட்ட அமைச்சர்களை புதுக் கோட்டையை அடுத்துள்ள காரியாபட்டியில் உள்ள விடுதி யில் தங்கவைத்து ராமச்சந்திரன் மூலம் பலமான உபசரிப்பும் செய்ய வைத்துள்ளார் உள்ளூர் அமைச்சர். மணல் பிசினஸ், ஆறுமுகசாமியிடம் இருந்து பிடுங்கப்பட்டு சேகர் ரெட்டி யிடமும், ராமச்சந்திரன் -ரத்தி னம் வசமும் வந்தது. இவர்கள் ’எஸ்.ஆர்.எஸ். மைன்ஸ்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்க லைசென்ஸ் பெற்றார்கள்.

மணல் ராமச்சந்திரன் தனது தொடர்புகளை விரிவு படுத்துவதற்காக முக்கிய அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் திருமண விழாக்களின் சாப்பாட்டுச் செலவை தானே ஏற்றுக்கொள்வாராம். திருப்பதி யில் நடைபெற்ற ராம்மோகன் ராவ் வீட்டு விசேஷத்தில் சேகர்ரெட்டி தலைமையில் 60 பவுன் நகையை ராமச்சந்திரன் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சேகர்ரெட்டியின் வீட்டில் ரெய்டு நடந்த அன்றே மணல் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப் பட்டு ஆதாரங்களும் கைப் பற்றப்பட்டன. இதையடுத்து, காண்ட்ராக்ட் வேலைகளில் மட்டுமே கவனத்தை செலுத் தினார். ஆறுகளில் மணல் அள்ளக்கூடாது என நீதிமன்றம் தடைவிதித்திருப்பதை சாதக மாக்கிகொண்டு புற்றீசலைப் போல டெல்டா மாவட்டங் களின் விளை நிலங்களில் மணல்கொள்ளையை நடத்தி வருகின்றனர் ராமச்சந்திரனும், வட மாவட்ட அமைச்சரின் அண்ணனும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தஞ்சை சரக டி.ஐ.ஜி.க்கும், கனிமவளத் துறைக்கும் புகார் கூறிவிட்டு நடவடிக்கைக்காக காத்திருக்கும் விவசாய சங்கத்தினரிடம் விசாரித்தோம். ‘’ ""தஞ்சை மாவட்டம் கள்ளபெரம்பூரில் துவங்கி கடைக்கோடி கிராம மான நெய்வாசல் வரையிலும் முப்பதுக்கு மேற்பட்ட மணல் குவாரிகள் எந்தவித அனுமதியும் இல்லாமல் விளைநிலங்களில் இயங்கிவருகின்றன. இவ்வளவு கொள்ளைக்கும் பின்னால் இருந்து இயக்குவது வட மாவட்ட அமைச்சரின் அண்ண னும், புதுக்கோட்டை ராமச் சந்திரன் குழுமத்தினரும் தான்''’என்கிறார்கள்.

Advertisment

இதுகுறித்து எஸ்.ஆர். குரூப்பைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரித்தபோது,’""அவர்கள் சொல்வது முற்றிலும் பொய். ஜெயலலிதா இருக்கும் வரை மணல் தொழிலில் இருந்தோம். அப்போது ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எங்களுக்கு என்று ஒரு ஏட்டு இருப்பார். அவருக்கு அரசாங்கம் கொடுக் கும் சம்பளத்தைவிட நாங்கதான் அதிக சம்பளம் கொடுப்போம். யாராவது எங்களை மீறி ஆற்றில் மணல் கடத்துறாங்களா என் பதை கவனித்து எங்களுக்கு சொல்லவேண்டும். அதுதான் அவர்களின் வேலை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாங்க அந்த தொழிலை விட்டுவிட்டு காண்ட் ராக்ட் வேலையில் மட்டும் கவனம் வைக்கிறோம். எங்களிடம் இருந்தவர்களும், எங்களிடம் இருந்த ரிட்டையர்டு ஆன ஏட்டுகளும் ஒன்று சேர்ந்து எங்க பெயரை சொல்லி வசூலிப்பதா எங்களுக்கும் தகவல் கிடைத் துள்ளது. யார், யாரெல்லாம் இதைச் செய்கிறார்கள் என கவனித்துவருகிறோம்''’என்கிறார் அவர்.

டெல்டாவின் மணல் வளம் கொள்ளைபோவதற்கு அமைச்சர்களே துணை போகிறார்கள் என்பதுதான் வேதனை மிகுந்த கொடுமை.

-க.செல்வகுமார்