டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வெற்றிபெற்றவர்கள் 7-ஆம் தேதி 16-வது சட்டப்பேரவையில் புதிதாக ஆட்சியமைக்க பதவி ஏற்றுள்ளனர். பதவி ஏற்ற அமைச்சர்களின் பட்டியலில் டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூட அமைச்சர் இல்லை என்று விவசாயிகளும் உடன்பிறப்புகளும் வாக்காளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித் ததைச் சொல்லி, நானும் விவசாயி என டெல்டா முழுவதும் வாக்கு சேகரிக்க வந்த எடப்பாடியைப் புறக்கணித்து மண்ணின் மைந்தரான ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று நினைத்துதான் இந்த முறை பாகுபாடு பார்க்காமல் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒட்டுமொத்தமாக வாக்களித்தோம். ஆனால் முதலமைச்சர் தவிர மற்ற யாருமே டெல்டாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

dmk

அதாவது அமைச்சரவைப் பட்டியலில் ஒருங் கிணைந்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 7-ல் தி.மு.க. கூட்டணியும் (7 தொகுதி யிலும் உதயசூரியனே வென்றது), திருவாரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் மூன்றும் (அதில் 2 உதய சூரியன்), நாகை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் இரண் டும் (2-ம் கூட்டணி), மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிபெற்றுள்ளன. மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியிருக்கிறது.

Advertisment

இத்தனை தொகுதிகளை முழுமையாக அள்ளியதால் புதிய அமைச்சரவையில் நடிகர் சிவாஜிகணேசனை தோற்கடித்தது முதல் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ள திருவையாறு துரை.சந்திரசேகரன், 3 முறை வென்றுள்ள கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருவிடை மருதூர் கோவி.செழியன், திருவாரூர் பூண்டி எஸ்.கலை வாணன், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வென்ற பட்டுக் கோட்டை கா.அண்ணாத்துரை இவர்களில் மாவட்டத்திற்கு ஒருவராவது அமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பு உடன்பிறப்பு களிடமும் விவசாயிகளிடமும் இருந்தது. ஆனால் பட்டியலில் யார் பெயரும் இடம் பெறாததால் தி.மு.க.வினரும், டெல்டா மாவட்ட மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது கலைஞர், சட்டமன்றத்தில் டெல்டா மாவட்டத்தில் தேர்ந் தெடுக்கப்பட்ட கும்பகோணம் கோசி.மணி, தஞ்சை உபயத்துல்லா, திருவாரூர் உ.மதி வாணன் ஆகியோர் அமைச்சர் களாக பதவி வகித்திருந்த மாவட்டத்தில் தற்போது ஒருவர்கூட அமைச்சர் இல்லை.

தமிழகத்தின் நெற்களஞ் சியம் எனப்படுகிற ஒருங் கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இரு கழக ஆட்சிகளிலும் கோ.சி. மணி உள்ளாட்சி, கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். மன்னை நாராயணன் அமைச்சராக இருந்திருக் கிறார். ஜெ., காலகட்டத்துல அழகு திருநாவுக்கரசு அமைச்சரா நியமிக்கப்பட்டார். நாகையைச் சேர்ந்த, முதல் முறையாக வெற்றிபெற்ற ஜெய பால் மீன்வளத்துறை அமைச்சரா கோலோச்சினார். திருவாரூர் காமராஜ் உணவுத்துறை அமைச் சரா இருந்ததோட, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தார். வேளாண்துறை அமைச்சரா மறைந்த துரைக்கண்ணு செயல் பட்டிருக்கார். டெல்டா மாவட் டங்களின் 18 தொகுதிகளில் இந்தமுறை மூன்று முன்னாள் அமைச்சர்களைத் தவிர எல்லா தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிதான் ஜெயிச்சிருக்கு.

Advertisment

"ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் டெல்டா மாவட் டத்திலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் கணிசமானவர்கள் சட்டமன்றம் சென்றுள்ளனர். அதாவது தி.மு.க.வுக்கு எப்போதும் சாதகமான மாவட்டமாக டெல்டா உள்ளது'' என்கின்ற உடன்பிறப்பு கள்... ஆனால் இந்தமுறை வஞ்சிக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறோம்'' என்றனர்.

ஆனாலும், "10 வருடங் களுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் ஏறுவதை கொண்டாடாமல் இருக்க முடியுமா? அதனாலதான் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுகிறோம். ஒரத்தநாட்டில் அ.தி.மு.க. வைத் திலிங்கத்திடம் வெற்றியைப் பறிகொடுத்த புல்லட் ராமச் சந்திரன் தோல்வியை மறந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். இப்படி டெல்டா முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தன'' என்கிறார்கள்.

டெல்டா மாவட்டத்தில் அமைச்சர் இல்லை என்பதால் உ.பி.களும் வாக்களித்த விவசாயிகளும் வேதனையில் உள்ளதாக வேகமாக தகவல் பரவியதால் முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் டெல்டா மக்களை சமாதானப்படுத்தும் விதமாக தனது டுவிட்டர் பதிவில்.. "முத்துவேல் கருணா நிதி ஸ்டாலின் எனும் நான்" என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப் பேற்றுக் கொண்டேன்!

காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த்தமிழ் நாட்டிற்கு சேவை செய்திட "மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!'' என்ற அந்தப் பதிவு பலரையும் யோசிக்க வைத்தது.

இந்த சமாதானம் போது மானதாக இருக்குமா என்ற பேச்சு வரும்போது மாலையில் திருவிடைமருதூர் கோவி.செழியன் அரசு தலைமைக் கொறடா வாக அறிவிக்கப்பட்டுள்ளதில் ஓரளவு சமாதானம் அடைந் துள்ளனர்.