றுவடைத் திருநாளான பொங்கல் விழா இப்போது மாநக ரங்களில் உள்ள மால் களிலும் கொண் டாடப்படுகிறது. அதே நேரத்தில், அறுவடை நெல்லுக்குப் பதில், கடையில் அரிசி வாங்கி பொங்க லிடுவதே பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. நகரங்களில் பலருக்கு அரிசி எதிலிருந்து விளைகிறது என்பதே தெரியாத நிலை. கிராமங்களிலும் புது அரிசிக்குப் பதில் கடை அரிசி, ரேஷன் அரிசி என பொங்கல் வைக்கின்ற சூழல்.

dd

இந்தநிலைக்கு காரணம், விவசாயம் பல்வேறு காரணங்களால் பின்னடைவை சந்தித்திருப்பது தான். அண்டை மாநிலங்களை நம்பியே தமிழகத் தின் ஆறுகள் உள்ளன. பருவமழை தவறுகிறது. நீர்மேலாண்மை என்பது போதிய அளவில் கவனம் செலுத்தப்படாமல் இருக்கிறது. இவை மட்டுமின்றி, விவசாயப் பணிகளுக்கு தேவைப்படும் மனித ஆற்றல் முன்புபோல கிடைப்பதில்லை.

மண்ணில் போட்டால் பொன்னாக விளையும் என்ற நிலைமை மாறி விட்டது. விவசாயத் துறைக்கு போதிய ஆதரவு இல்லாததால், விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. அதனால், கிராமப்புறத் தில் இருந்த நில உடை மையாளர்கள், பெயரள வுக்கே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களும் குடும்பத்தினரும் வேறு தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். விவசாயிகளின் வாரிசுகள் நகரங்களை நோக்கி வந்து, அவர்கள் படித்ததற்கேற்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. அதேநேரத்தில், கணினித்துறை சார்ந்த பணியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நல்ல ஊதியம் கிடைத்தாலும், இயந்திரமயமான தங்களின் வாழ்க்கையை வெறுத்து விவசாயத்தை நோக்கி வரும் அக்கரைப் பச்சை மனதை காண முடிகிறது. இயற்கையான முறையில் விவசாயத்தில் ஈடுபட்டு, நல்ல விளைச்சலைக் காட்டுகிறார்கள். ஆனால், இதன் விகிதாச்சாரம் மிக மிகக் குறைவு. பெரிய அளவில் மீண்டும் விவசாயம் தழைக்க வேண்டுமென்றால் மரபும் நவீனமும் கைகோர்த் திட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. இதனை உணர்த்தியிருக்கிறார் காவிரி டெல்டாவிற்குட்பட்ட திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா.

dd

Advertisment

வயல்களில் இயற்கை மற்றும் ரசாயன மருந்து அடிப்பது, உரம் தெளிப்பது போன்றவற்றை எளிமையாக்கும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. கல்லூரியின் உதவியுடன் நமது இளைஞர்களால் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டு, சோதனை முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் தாக் ஷா நிறுவனத்தின் ட்ரோன் விமானத்தை தனது தொகுதியில் உள்ள விவசாயி களுக்கு டி.ஆர்.பி.ராஜா அறிமுகம் செய்திருக் கிறார். ""நமது இளைஞர்கள் மாநகரங்களை நோக்கி படையெடுப்பதைத் தவிர்த்து, அவர்களுக்கு விவசாயத்தின் மீது ஈர்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். விளைச்சலை அதிகரிக்கக்கூடிய இத்தகைய கருவி, எதிர் காலத்தில் விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்'' என்கிறார்.

சோதனை முயற்சியாக இந்த ட்ரோனை பயன்படுத்திய விவசாயி ஒருவர், ""தற்போதைய நடைமுறையால் செலவு அதிகம். பெரிய வயல்களில் நடக்க முடியலை. ஆளு கிடைப்பதில்லை. அதோடு உரம், பூச்சிமருந்து இதெல்லாம் உடம்புல படுறப்ப எரியுது. மூஞ்சியெல்லாம் பரவுது. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா, இது ரொம்ப ஈஸியா இருக்கு. மூஞ்சியிலே, உடம்புல எதுவும் படுறதில்லை. ரிமோட்டை நாங்க புடிச்சிக்கிட்டா, அது பாட்டுக்கு வேலையை பார்த்துடுது'' என்கிறார் மகிழ்ச்சியாக.

விவசாயத்தை அறியாமல் பொங்கலைப் போற்றுவது வெறும் சடங்காக மாறிவிடும். கிராமப்புற வேளாண்மையை நோக்கி இன்றைய நகர்ப்புற தலைமுறையினரின் பார்வை திரும்பும் வகையில், நகரத்தில் உருவாக்கப்படும் எளிமை யான நவீன தொழில்நுட்பங்களை கிராமங்களை நோக்கிக் கொண்டு செல்லும் மக்கள் பிரதிநிதியின் முயற்சி, மாநிலம் முழுவதும் பரவலாக வேண்டும்.

Advertisment

-கீரன்