"ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.''”

Advertisment

"ஆமாம்பா, தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்திய நிலையிலும், பீகாரில் பா.ஜ.க. கூட்டணி மாபெரும் வெற்றியைக் குவித்திருக்கிறதே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அங்கு நீண்டகாலம் முதல்வராக இருந்து வருபவர் நிதிஷ்குமார். இடையில் ஓர் ஆண்டைத் தவிர தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் அவர் பீகாரின் முதல்வராக இருந்தவர். இந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே இந்தமுறை தேர்தலைச் சந்தித்தனர். பா.ஜ.க.வும் ஐ.ஜ.த.மும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் பா.ஜ.க. 89 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுவருகிறது.''”

"பீகார் தேர்தல் வெற்றிக்காக உலக வங்கியின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியிருக் காங்களாமே?''

Advertisment

"ஆமாங்க தலைவரே, நடந்துமுடிந்த பீகார் தேர் தலில், உலக வங்கியின் நிதியை பா.ஜ.க. முறைகேடாக செலவழித்துள்ளதாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தலை முன்னிட்டு, மஹிலா ரோஜ்கர் யோஜ னா திட்டத்தின் கீழ், 1.25 கோடி பெண் வாக்கா ளர்களின் கணக்குகளுக்கு ரூ.10,000 ரூபாயை பீகார் முதல்வராக        இருந்த நிதிஷ்குமார் வழங்கி யிருக்கிறார். இதற்காக ஜூன் 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாள்வரை, கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி செலவிட்டிருக்காங்க. இதில்தான், பல்வேறு திட்டங்களுக்காக உலக வங்கி வழங்கிய 21,000 கோடி தொகைவரை முறைகேடாக செலவிட்டிருப்பதாகவும், குறிப்பா, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, 14,000 கோடி ரூபாயை எடுத்திருக்காங்கன்னும் பிரசாந்த் கிஷோ ரோட கட்சி குற்றம்சாட்டியிருப்பது பீகார் அரசியலில் பகீர் கிளப்பியிருக்கு!''

"தமிழக பா.ஜ.க.வுக்காக தேர்தல் வியூக அமைப்பு ஒன்று களமிறக்கப்பட்டு, அதனிடம் ஸ்பெஷல் அசைன்மெண்ட்டும் கொடுக்கப்பட்டி ருக்கிறதாமே?''’ 

"பா.ஜ.க. தரப்பிற்காக மிதுன் என்பவர் தலை மையிலான வராகி’ எனும் பெயருடைய தேர்தல் வியூக அமைப்பு தமிழ்நாட்டில் களமிறக்கப்பட்டி ருக்கிறது. அமித்ஷாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வியூக அமைப்புக்கு, பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டத்திலேயே கலந்துகொள் ளும் சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிற தாம். இந்த அமைப்பிடம் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார்  தொடங்கி, அவரது உதவியாளர் பொன் முடியின் எண் வரை இருக்கிறதாம். இது மத்திய உளவுத்துறையுடன் சேர்ந்து எடுத்த சர்வேயில், பா.ஜ.க.விற்கு மதுரை வடக்கு, தெற்கு, விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவை தெற்கு, மொடக்குறிச்சி, வேளச்சேரி, மயிலாப்பூர், திருச்செந்தூர், பழனி, தாராபுரம் மற்றும் அரியலூர் அல்லது பெரம்பலூர் உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்ததாம். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விற்கும் அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. கடந்தமுறை 4 தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க., இந்தப் பட்டியலின் அடிப்படையில் குறைந்த பட்சம் 15 தொகுதிகளிலாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்று அந்த வியூக அமைப்பிற்கு உத்தரவிட்டிருக்கிறாராம் அமித்ஷா.''”

"தமிழகத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்களுக்கு ஆட்டம் காட்ட டெல்லி திட்டமிடிருக்கிறது என்கிறார்களே?''” 

புத்தகத் திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், "என்னை அமலாக்கத்துறையை வைத்து டெல்லி மிரட்டப் பார்த்தது'’என்று குற்றம்சாட்டியிருந்தார். இப் போது பீகார் தேர்தலில் கிடைத்த அசுர வெற்றிக் குப் பிறகு, நிமிர்ந்திருக்கும் டெல்லி பா.ஜ.க., தமி ழகத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர் கள் பலரையும் அமலாக்கத்துறை, வருமான வரித் துறை போன்றவை மூலம் நெருக்கடிதரும் முடிவை எடுத்திருக்கிறதாம். எனவே விரைவில் டெல்லியின் ஆட்டத்தைத் தமிழகத்தில் பார்க்கலாம் என்கிறது அங்கிருந்து வரும் ஒரு அதிரடிச் செய்தி''” 

"கரூர் விவகாரத்தில் தி.மு.க. அரசின் மீதே பழி வரவேண்டும் என்று நடிகர் விஜய் டெல்லியில் லாபி செய்துவருகிறாராமே?''”

"தி.மு.க. ஆட்சியின் அலட்சியப் போக்கால் தான் இந்த சம்பவமே அரங்கேறியது என்றும், எனவே சம்மந்தப்பட்ட கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யவேண் டும் என்றும் விசாரணை அமைப்பு குரல் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் நடிகர் விஜய். இது நடக்க டெல்லியில் லாபி செய்து, அவர் பா.ஜ.க. மேலிடங்களோடு தீவிரமாகப் பேசிவரு கிறாராம். இந்த நிலையில், முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டரை அவர் தன்பக்கம் வளைத்திருக் கிறாராம்.  கிறிஸ்தவ அமைப்புகளுடன் தொடர் பில் இருந்துவரும் அலெக்சாண்டர், ஜெ.’பதவியில் இருந்த காலத்தில் சசிகலா, தினகரன் ஆகியோ ருடன் நெருக்கமான நட்பிலும் இருந்தவர். அப்படிப்பட்டவரை விஜய், தனக்கு      ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் குழுவில் இணைத்திருக்கிறாராம்.''”

"சென்னை தி.மு.க. மா.செ. ஒருவரின் உதவி யாளர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக் கிறாரே?''”

"

rang1

மத்திய சென்னை தி.மு.க. மா.செ.வின் உதவியாளரான பிரவீன்சரணுக்கு ஒரு வினோத பிரச்சினை இருக் கிறது. சாலையில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஓடிப்போய் அவர் பின்புறம் தட்டுவாராம். இது தொடர்பாக பல முறை புகார் வந்தபோதும் அவரை காவல்துறையினர் காப்பாற்றி வந்தனர். இந்த நிலையில், அண்மையில் சென்னை அசோக் நகரில் ஒரு பெண்ணிடம் இதேபோல் சில்மிஷம் செய்ய, இதை காவல்துறை சீரியசாக எடுத்துக்கொண்டது. இந்தத் தகவல் தென்சென்னை கமிஷனரான கண்ணன் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவர் இதை முதல்வர் அலுவலகத்தின் கவனத்துக்கே எடுத்துச் சென்றாராம். முதல்வர் அலுவலகமோ, ’"பெண்கள் விசயத்தில் ஏடாகூடம் செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் விடாதீர்கள்'’என்று அறி வுறுத்தியதாம். இதைத் தொடர்ந்து மத்திய சென் னை தி.மு.க. மா.செ.வின் உதவியாளரான பிரவீன் சரண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.''

"தமிழகத்தில்  சில அசைன்மெண்டுகளை செயல்படுத்தும் முனைப்பில் டெல்லி இருக்கிறது என்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. வின் மாநில துணைத்தலைவராகவும், மாநில பூத் கமிட்டி அமைப்பாளராகவும் இருப்பவர் ஜே.பி. எனப்படும் ஜெயப்பிரகாஷ். இவர்,  1980-களில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணியில் தனது அரசியலை ஆரம்பித்த வர். தனது மாமாவான அ.தி.மு.க.வின் அன்றைய அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிய மதுசூதன னிடம் அரசியல் பயின்றவர்.  2024  பிப்ரவரி மாதம் சென்னை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ஜே.பி.  பா.ஜ.க. மாஜி மாநிலத் தலைவருக்காக கோவையில் தேர்தல் வேலை பார்த்தார். அப்போது அவரது திறமையைப் பார்த்து பலரும் பாராட்டி யிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸும் அவர் பற்றி டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியதாம். அதன் அடிப்படையில்தான் ஜே.பி.க்கு பெரிய பொறுப்பு கள் கொடுக்கப்பட்டதாம்.  இவர் டெல்லியோடு நல்ல தொடர்பிலும் இருக்கிறார். பிற கட்சிகளில் இருந்து முக்கிய புள்ளிகளை பா.ஜ.க.வுக்கு அழைத்துவரும் அசைன்மெண்ட்டை டெல்லி  இவரிடம் கொடுத்திருக்கிறதாம். அந்த வகையில் தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் 6 பேருடன் ஜே.பி. பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். பொங்கலுக்கு முன்பாகவே அவர் தனது அசைன்மெண்ட்டை முடிப்பார் என்கிறது கமலாலயத் தரப்பு.''” 

"’மாஜி பா.ஜ.க. மாநிலத் தலைவரின் காஸ்ட்லியான ரியல் எஸ்டேட் வியாபாரம், பா.ஜ.க. தரப்பிலேயே சூறாவளியை எழுப்பிவருகிறதே?''”

"மாஜி பா.ஜ.க. மாநிலத் தலைவர் நடத்திவரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்த புகார், பா.ஜ.க.வின் தேசியத் தலைமைக்குச் சென்றது குறித்துப் பேசியிருக்கிறோம். பெங்களூரில் ’எலம் 14’ என்ற பெயரில்  ஆரம்பிக்கப்பட்ட அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், நந்திஹில்ஸ் பகுதியில் 246 அல்ட்ரா மாடர்ன் சொகுசு வில்லாக்களைக் கட்டி விற்பனை செய்யும் திட்டத்தை அறிவித்திருக் கிறது. அந்த வில்லாக்கள் ஹரோபண்டே என்னும் இடத்தில் 147-ம், கவர்னஹள்ளி என்னும் இடத்தில் 57-ம், கெரஹள்ளி என்னும் இடத்தில் 42-ம் அமைந்திருக்கிறது என்கிறார்கள். இந்த வில்லாக் களின்  விலை குறைந்தபட்சம் ரூ.9 கோடியாம். அதுவும் இந்த வில்லாக்கள் சிக்கபல்லப்புரா, ஹில்லாக் வியூவிலுள்ள ஈஷா அறக்கட்டளை அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாஜியின் மனைவி அகிலாவின் தம்பியான கார்த்திக் சுவாமிநாதன் மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளரான கிரண் விஸ்வநாத்  ஆகியோர் பெயரிலேயே இந்த பிஸ்னஸை மாஜி நடத்துகிறாராம். அந்த மாஜிக்கு இவ்வளவு பெரிய முதலீடு எப்படி வந்தது என்கிற கேள்வி, பா.ஜ.க. தரப்பிலேயே சூறாவளியை எழுப்பிவருகிறது.''”

"கட்சியின் சீனியர் அமைச்சர்கள் சிலர் ஸ்டாலினை திக்குமுக்காட வைப்பதாகச் சொல் கிறார்களே?''”

"தனக்குப் பின் தன் வாரிசுகளுக்கு பதவி கிடைக்குமா? என்ற நிலையில் தி.மு.க.  சீனியர்கள் பலரும் வருத்தமடைந்த நிலையில்,  தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மகனான கதிர் ஆனந்திற்கு எம்.பி. பதவியைத் தாண்டி கட்சியின் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இது மற்ற சீனியர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறதாம். ”இதே கார ணத்திற்காகவே, "ஐ.பி. மகன், பொன்முடி மகன், துரைமுருகன் மகன் ஆகியோருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டி ருப்பது மகிழ்ச்சியான விஷ யம் தலைவரே. அப்படியே எங்களது வாரிசுகளுக்கும் பதவி கொடுத்தால் நிம்மதியாக இருப்போம் தலைவரே' என  தலைவர் மு.க.ஸ்டாலினிடம்  மூச்சுமுட்டும் அளவிற்கு அன்பால் கோரிக்கை வைத்து தினசரி பேசி வருகின்றனராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள். இதனால் என்ன செய்வ தென்று திக்குமுக்காடி வருகிறாராம் ஸ்டாலின்.''”

"மாஜி மந்திரிகளையும் மீறி, மதுரை வடக்கில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று டாக்டர் சரவணன் துடிக்கிறாரே?''” 

"பல்வேறு கட்சிகளில் இருந்த மதுரை டாக்டர் சரவணன், தற்போது அ.தி.மு.க.வில் இருக்கிறார். வரும் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் நிற்கும் எண்ணத்துடன், அங்கு தேர்தல் வேலைகளையும் தொடங்கிவிட்டார். இவரை வளரவிட்டால் தங்களுக்கு ஆபத்து என்று கருதுகிற மாஜி அமைச்சர்களான உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர், எடப்பாடியிடமே சென்று, மதுரை வடக்கு நமக்கு வேண்டாம். அதைக் கூட்டணிக் கட்சிகளிடம்  தள்ளிவிடுங்கள் என்று தூபம் போட் டனர். இதைத் தொடர்ந்து, அண்மையில் மதுரைப் பக்கம் சுற்றுப்பயணம் சென்ற எடப்பாடி,’மதுரை வடக்கு கூட்டணிக்கு’என்று மைக்கிலேயே அறிவித்தார். இதைக்கேட்டு அப்செட் ஆனாலும். சுதாரித்துக்கொண்ட சரவணன், பா.ஜ.க. தலைமைக்கு நெருக்கமானவர்களிடம், "மதுரை வடக்கை விட்டுக்கொடுத்து கிழக்கை பெற்றுக்கொள்ளுங்கள். அதற்குண்டான செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று டீல் பேசி வருகிறாராம்.''”

"கடந்தவாரம் மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் என்பவர், தன் மனைவி சத்யா, 2 வயது மகன் தஷ்வந்த் மற்றும் உறவினர் பெண்ணுடன் அனஞ்சியூரில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு டூவீலரில் மதுரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அனஞ்சியூர் அருகே இரவு 7.30 மணியளவில், ராமநாதபுர மாவட்டம் ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயராணி பயணம் செய்த போலீஸ் வாகனம், டூவீலரை மோதியதில், பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சத்யா, தஷ்வந்த், சோனை ஈஸ்வரி ஆகியோர் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் சத்யாவும் தஷ்வந்தும் வழியிலேயே உயிரிழந்தனர். சோனை ஈஸ்வரி கடுமையாக காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்துக்குக் காரணமான அரசு போலீஸ் வாகனம், 2018ஆம் ஆண்டிலேயே இன்சூரன்ஸ் காலாவதி ஆனதாம். இன்சூரன்ஸ் இல்லாத அரசு வாகனங்களை இயக்குவது, சட்டவிரோதமானது என்று தெரிந்தும் காவல்துறை அதிகாரியே அதைப் பயன்படுத்தியிருக்கிறார். இவர் மீது மட்டுமல்லாது, இன்சூரன்ஸ் இல்லாத அந்த  வாகனத்தை அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கைக் குரல் அங்கே வலுத்துவருகிறதாம்.''”

"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். செப். 27ஆம் தேதி சென்னையில் உள்ள காவலர் குடியிருப்பில், கதவு உடைக்கப்படாமலே 16 சவரன் தங்க நகை திருடுபோனது. கதவைத் திறந்து சென்று, பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகையை மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டியதாக, சம்பந்தப் பட்ட காவலர் புகார் சொல்லியிருக்கிறார். தனது மனைவியுடன் சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு சென்ற நேரத்தில், இந்த சம்பவம் நடந்தது என்றும் ’கலைக்கு அரசனான அந்த காவலர் தெரிவித்திருக்கிறார். ஆனால், திருட்டுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, வீட்டுச் சாவியை வாங்கி வைத்திருந்த  பக்கத்து வீட்டு காக்கி சாதிக்க... கைரேகை நிபுணர்கள், குற்றப்பிரிவு போலீஸார் என பலரும் வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்து 45 நாட்களுக்கும் மேலாகியும், இதுவரை துப்பு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்கும், காவல் நிலையத்திற்கு உள்ள தூரம் 30 மீட்டர்தானாம். இதில் புகார் கொடுத்த காக்கியும், புகாருக்கு ஆளான காக்கியும் அதே காவல் நிலையத்தில்தான் பணியாற்றுகின்றனராம். எனினும் இன்னும் துப்பு துலங்கவில்லையாம்.''’