Advertisment

தலிபான்களிடம் தப்பியவர் இந்தியாவில் சீரழிப்பு! -ஸ்பானிஷ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

ss

ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த 28 வயதுப் பெண், ஜார்கண்டின் தும்கா மாவட் டத்தைச் சேர்ந்த பகுதியில் 7 பேர் கொண்ட கும்ப லால் கற்பழிக்கப்பட்டது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த பெண்ணான பெர்னான்டா அவரது பிரேசில் கணவர் வின் சென்ட் இருவரும் ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் சுற்றுலா மேற்கொண்டிருந்தனர். அந்தப் பெண் பல்வேறு நாடுகளுக்கும் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து தனது அனுபவங்களைப் பதிவுசெ

ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த 28 வயதுப் பெண், ஜார்கண்டின் தும்கா மாவட் டத்தைச் சேர்ந்த பகுதியில் 7 பேர் கொண்ட கும்ப லால் கற்பழிக்கப்பட்டது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த பெண்ணான பெர்னான்டா அவரது பிரேசில் கணவர் வின் சென்ட் இருவரும் ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் சுற்றுலா மேற்கொண்டிருந்தனர். அந்தப் பெண் பல்வேறு நாடுகளுக்கும் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து தனது அனுபவங்களைப் பதிவுசெய்யும் விளாக்கராகத் திகழ்கிறார். தனது பயணத்தில் இலங்கைக்குச் சென்று அங்கிருந்து இந்தியா வந்த இந்தத் தம்பதி ஜார்கண்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறது.

Advertisment

ss

ஜார்கண்டின் தும்கா மாவட்டத்துக்கு வந்த அவர்கள் மார்ச் 1-ஆம் தேதி மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்துக்குப் பின் அப்பகுதியில் தங்க லாட்ஜ் கிடைக்காததால், ஊரைவிட்டு ஒதுக்கமான பகுதியில் டெண்ட் அடித்திருக்கின்றனர். அப் போது அங்குவந்த உள்ளூரைச் சேர்ந்த ஒரு கும்பல் அவரது கணவரைத் தாக்கிவிட்டு, அந்தப் பெண் ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கையிலிருந்த பணத்தையும் பறித்துச் சென்றுள்ளது.

சற்றுநேரத்துக்குப் பின் அந்தப் பகுதியில் ரவுண்ட்ஸ் வந்த காவலர்களை இரவு 11 மணி யளவில் இந்த ஜோடி கைகாட்டி நிறுத்தியிருக் கின்றனர். போலீசாரால் ஸ்பானிஷையும், அவர்களது ஆங் கிலத்தையும் புரிந்து கொள்ள முடியாத நிலை யில் அழைத் துச்சென்று மருத்துவமனை யில் சேர்த் திருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலை யில், இருவரும் ஆபத்தான நிலையில் இல்லை யெனவும், குற்றத்தில் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை போலீஸ் தேடிவருவதாகவும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

"ஹலோ இந்தியா! ஏறக்குறைய 5 வருடங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து 150,000 கிமீக்கு மேல் பயணம் செய்த பிறகு, நாம் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது. இந்தியா பற்றி நிறைய கேள்விப்பட் டிருக்கிறோம்'’என்று கடந்த வருடம் ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் அவரும் அவரது கணவரும் பதிவிட்டார். ஆனால் இந்தியா வில் தனக்கு இத்தகைய துயரம் நேருமென அவர் அப்போது கற்பனை செய்துகூட பார்த்திருக்கமாட் டார். இப்போதோ அவர், "கடவுளே, அவர்கள் எங் களை உயிரோடு விட்டார்களே'” எனக் கூறியபடி நிகழ்ந்ததை எண்ணி அதிர்ச்சியிலிருக்கிறார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயணம் செய்தபோது, பெண்களுக்கு எதிரானவர்களாகக் கருதப்படும் ஆப்கானைச் சேர்ந்த தலிபான்கள் சிலருடன்கூட புகைப்படம் எடுத்து பதிவிட்டவர் பத்திரமாகத் திரும்பிவிட்டார். இந்தியாவிலோ சில தெருப்பொறுக்கிகளிடம் சிக்கிச் சீரழிந்திருக்கிறார்.

nkn090324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe