அட்ஜெஸ்ட் செய்யாவிட்டால் அவதூறு! மாணவிகளுக்கு வலைவீசும் கல்லூரி ஓநாய்கள்! -ஸ்பாட் ரிப்போர்ட்!

student

ருப்புக்கோட்டை நிர்மலாதேவி, கோவை புனிதா வரிசையில் இதோ இன்னொரு ஆபத்து மாணவிகளுக்கு!

திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் இருக்கும் வாழவச்சனூர் என்கிற கிராமத்தில் 110 ஏக்கரில் அரசு விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த 2014-ல் தொடங்கப்பட்டது. அந்த கல்லூரியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவரின் மகள், இக்கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி படித்துவரும் இந்த மாணவிக்கு, கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்துள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த மாணவி, இப்போது பொங்கியெழுந்து புகார் செய்ததால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து தமிழ்நாடே கொந்தளித்துப் போய்க்கிடக்கிறது.

studentதனக்கு நடந்த அக்கிரமங்களை, டார்ச்சர்களை நம்மிடம் கொட்டித் தீர்த்த அந்த மாணவி, ""கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் ஒருநாள் கல்லூரி -விடுதி ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியருமான தங்கபாண்டியன் சார், பழைய விடுதி அலுவலகத்தில் இருந்தார். நான் அங்கு சென்றபோது யாரும் அங்கு கிடையாது. "பார்க்க ரொம்ப அழகாயிருக்க, ஆண் பேராசிரியர்களிடம் பேசாதே. என்னிடம் மட்டும் பேசு. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள், நான் செய்கிறேன்' எனச்சொல்லியவாறு என் கையை தடவியடி கன்னத்தை தடவ முயற்சித்த போது கையை தட்டிவிட்டுவிட்டு முறைத்துவிட்டு வந்துவிட்டேன். இதுபற்றி விடுதி துணைவார்டனான துணை பேராசிரியர் புனிதா மேடத்திடம் சொன்னேன். அவரோ, "நீ இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதே, நான் பார்த்துக்கறேன்'னு சொன்னார். நானும் யாரிடமும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழிச்சு என்னை வார்டன் அறைக்கு அழைத்தார். அங்கு போனபோது தங்கபாண்டியன் சார், புனிதா மேடம் இருவரும் இருந்தனர். "நீ ஐ.ஏ.எஸ். படிக்குறதுக்கு சார் உதவி செய்வார், ஐ.ஏ.எஸ். ஆக முடியலன்னாகூட அசிஸ்டென்ட் புரபஸர் ஆக உதவி செய்வார், அவர் சொல்றபடி அட்ஜெஸ்ட்பண்ணி நடந்துக்க'ன்னு ஒரு மாதிரியா பேசுனாங்க. நான் "முடியாது'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

கடந்த ஜனவரி மாதம் கல்லூரியில் க்ளப் டே முடிஞ்சதும் பழைய விடுதியில் இருந்து அனைவரையும் புதிய விடுதிக்கு மாத்தினாங்க. அங்க எனக்கு தரப்பட்ட ரூம் 26. என் ரூம் மெட்டா தீபிகா இருந்தாங்க. ரூம்ல உள்தாழ்ப்பாள் இல்லாததப் பார்த்து பகீர்னு ஆகி நானும் தீபிகாவும் புனிதா மேடத்திடம் புகார் சொன்னோம். ஆனா அவுங்க கண்டுக்கவேயில்லை. தினமும் 2 மணி நேரமாவுது என் ரூம்க்கு புனி

ருப்புக்கோட்டை நிர்மலாதேவி, கோவை புனிதா வரிசையில் இதோ இன்னொரு ஆபத்து மாணவிகளுக்கு!

திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் இருக்கும் வாழவச்சனூர் என்கிற கிராமத்தில் 110 ஏக்கரில் அரசு விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த 2014-ல் தொடங்கப்பட்டது. அந்த கல்லூரியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவரின் மகள், இக்கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி படித்துவரும் இந்த மாணவிக்கு, கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்துள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த மாணவி, இப்போது பொங்கியெழுந்து புகார் செய்ததால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து தமிழ்நாடே கொந்தளித்துப் போய்க்கிடக்கிறது.

studentதனக்கு நடந்த அக்கிரமங்களை, டார்ச்சர்களை நம்மிடம் கொட்டித் தீர்த்த அந்த மாணவி, ""கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் ஒருநாள் கல்லூரி -விடுதி ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியருமான தங்கபாண்டியன் சார், பழைய விடுதி அலுவலகத்தில் இருந்தார். நான் அங்கு சென்றபோது யாரும் அங்கு கிடையாது. "பார்க்க ரொம்ப அழகாயிருக்க, ஆண் பேராசிரியர்களிடம் பேசாதே. என்னிடம் மட்டும் பேசு. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள், நான் செய்கிறேன்' எனச்சொல்லியவாறு என் கையை தடவியடி கன்னத்தை தடவ முயற்சித்த போது கையை தட்டிவிட்டுவிட்டு முறைத்துவிட்டு வந்துவிட்டேன். இதுபற்றி விடுதி துணைவார்டனான துணை பேராசிரியர் புனிதா மேடத்திடம் சொன்னேன். அவரோ, "நீ இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதே, நான் பார்த்துக்கறேன்'னு சொன்னார். நானும் யாரிடமும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழிச்சு என்னை வார்டன் அறைக்கு அழைத்தார். அங்கு போனபோது தங்கபாண்டியன் சார், புனிதா மேடம் இருவரும் இருந்தனர். "நீ ஐ.ஏ.எஸ். படிக்குறதுக்கு சார் உதவி செய்வார், ஐ.ஏ.எஸ். ஆக முடியலன்னாகூட அசிஸ்டென்ட் புரபஸர் ஆக உதவி செய்வார், அவர் சொல்றபடி அட்ஜெஸ்ட்பண்ணி நடந்துக்க'ன்னு ஒரு மாதிரியா பேசுனாங்க. நான் "முடியாது'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

கடந்த ஜனவரி மாதம் கல்லூரியில் க்ளப் டே முடிஞ்சதும் பழைய விடுதியில் இருந்து அனைவரையும் புதிய விடுதிக்கு மாத்தினாங்க. அங்க எனக்கு தரப்பட்ட ரூம் 26. என் ரூம் மெட்டா தீபிகா இருந்தாங்க. ரூம்ல உள்தாழ்ப்பாள் இல்லாததப் பார்த்து பகீர்னு ஆகி நானும் தீபிகாவும் புனிதா மேடத்திடம் புகார் சொன்னோம். ஆனா அவுங்க கண்டுக்கவேயில்லை. தினமும் 2 மணி நேரமாவுது என் ரூம்க்கு புனிதா மேடம் வந்து, "தங்கபாண்டியன் சார் சொல்றபடி நடந்துக்க'ன்னு பிரைன்வாஷ் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அவுங்க சொன்னதையெல்லாம் மொபைல்ல ஆடியோவா ரெக்கார்ட் செய்து வச்சிருந்தேன். ஒருகட்டத்துக்கு மேல புனிதாவின் டார்ச்சர் தாங்காம டீன்கிட்ட புகார் எழுதித் தந்தேன். ஆறுதல் கூறுவார்னு நினைச்ச எனக்கு அதிர்ச்சிதான் கிடைத்தது. "என் ஸ்டாப்ப பத்தி என்கிட்டயே புகார் சொல்றியா'ன்னு நான் தந்த புகாரை வாங்கி கிழிச்சிப் போட்டுட்டார்.

studentவிடுதியில் க்ளாஸ் ரெப்ரசன்டேட்டிவ், மெஸ் இன்சார்ஜ் 2 பேர் என 3 மாணவிகள் மட்டும் தான் தினமும் இரவில் மொபைலை வச்சிக்கணும், மத்தவங்க இரவு 9:30 மணிக்கு தந்துட்டு, காலையில் 5:30 மணிக்கு வாங்கிக்கணும்னு சொல்லி நடைமுறைப்படுத்துனாங்க. அப்படி நான் கொடுத்தபோது, புனிதா மேடம் தினமும் என்னை அப்ரோச் செய்ததை மொபைல்ல ஆடியோவா ரெக்கார்டு பண்ணி வச்சிருந்ததை தெரிஞ்சிக்கிட்டாங்க. ஒருநாள் இரவு மொபைலை வார்டன்கிட்ட தந்துட்டு மறுநாள் காலையில் வாங்கி பார்த்தப்பதான் என் மொபைல் சிம்கார்டு, மெமரி கார்டு திருடு போயிருந்தது தெரிஞ்சதும் நொந்து போயிட்டேன். அதில்தான் அத்தனை ஆதாரமும் இருந்தது.

அதுக்கப்பறம்தான் மெஸ் இன்சார்ஜான நந்தினி, லாவண்யா இருவரும் புனிதா மேடம் தூண்டுதலால் என்னை க்ளாஸ் ரூம்ல தினமும் டார்ச்சர் செய்தாங்க. இதப்பத்தியும் புதிய ஒருங்கிணைப்பாளரா வந்திருந்த பேராசிரியர் சிவக்குமார் சாரிடம் போய் சொன்னேன். அவர் அவுங்களை அழைச்சி திட்டி அனுப்பினார். தங்கப்பாண்டியன் சார் தப்பா நடந்துக்க முயற்சிக்கறதையும் புனிதா மேடம் அதுக்கு ஒத்துழைக்குறதையும் சிவக்குமார் சாரிடம் புகாராக எழுதித் தந்தேன்.

அடுத்த இரண்டாவது நாள், 2018 ஜூலை 18-ஆம் தேதி விடுதியில் லாவண்யாவோட மொபைல் காணாமல் போய்டுச்சின்னு சொல்லிக்கிட்டே என் ரூம்க்குள்ள லாவண்யா, நந்தினி, புனிதா மேடம் ஆகியோர் வந்தார்கள். கைல மொபைலோட டெம்பர் க்ளாஸ் வச்சிருந்தாங்க. அது நொறுங்கிப்போய் இருந்தது. எங்கிட்ட கேட்டாங்க, எனக்கு தெரியாதுன்னு சொன்னேன். ஆனா, நான்தான் உடைச்சன்னு என் மேல புகார் தந்ததால ஜூலை 19-ந் தேதி விசாரணை கமிட்டி அமைச்சார் டீன் சார்.

அந்த கமிட்டி எங்கம்மாவையும் வரவச்சது. என்கிட்ட விசாரிச்சாங்க. எல்லோருடைய மொபைல்களையும் வாங்கி ஸ்டோர் ரூம்ல வச்சி லாக் செய்துடறாங்க. மெஸ் இன்சார்ஜ்ங்குறதால லாவண்யாவின் மொபைல் அவுங்க கைலதான் இருக்கும். அதையெப்படி நான் எடுப்பேன்னு விளக்கம் சொல்லியும் என்மேல குற்றம் உறுதியாகிடுச்சின்னு சொன்னாங்க.

உடனே டீன் ராஜேந்திரன் சார், எங்கம்மாவிடம், "விடுதியை விட்டு என் பொண்ணை அழைச்சிட்டுப்போறன்'னு எழுதி வச்சிருந்த கடிதத்தில் கையொப்பம் கேட்டாரு. "அதெல்லாம் முடியாது, என் மகள் என்ன தப்பு செய்தா'ன்னு எங்க அம்மா கேள்வி கேட்டதும், "எங்கிட்டயே திமிரா பேசறியா, நீ எப்படி திமிரா இருக்கியோ அதேமாதிரிதான் உன் பொண்ணும் இருக்கு'ன்னு கண்டமேனிக்கு திட்டுனாரு. ஆனாலும் எங்கம்மா கையொப்பம் போடாம கிளம்பிப் போய்ட்டாங்க. அதுக்குப் பிறகும் விடாம வீட்டுக்கு கடிதம் அனுப்பியும் வாங்காததால் திரும்பி வந்துடுச்சி. இப்படி அடுத்தடுத்து 3 கடிதம் அனுப்பியிருக்காங்க. ஆகஸ்ட் 1-ந் தேதி என்னை அழைச்சி "ஸ்டெடி லீவு முடிஞ்சி வரும்போது உங்க அப்பா -அம்மாவோட வரணும்'னு புனிதா மேடம் சொன்னாங்க. ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ஸ்டெடி லீவு விட்டதால் நானும் சென்னைக்கு போய்ட்டேன்.

student

19-ந் தேதி மதியம் மீண்டும் காலேஜ்க்கு நான் மட்டும் வந்தப்ப என்னை ரூமுக்குள்ள விடாததால வெளியில வேப்பமரத்தடியிலயே உட்கார்ந்திருக்கும் தகவலை வீட்டுக்குச் சொன்னேன். நள்ளிரவு 12:30 மணிக்கு வந்த புனிதா மேடம், "பெற்றோரை ஏன் கூட்டி வரல'ன்னு விடியற்காலை 3 மணிவரை திட்டுனாங்க. (புனிதா பேசிய ஆடியோ பதிவு பாக்ஸ் செய்தியாக) பாழடைஞ்ச, நாத்தம் பிடிச்ச ஒரு ரூமைக் காட்டி "இங்கேயே இரு. நாளைக்கு உன் பெற்றோர் வரட்டும்'னு சொன்னாங்க. பல்லைக் கடிச்சிக்கிட்டு அங்கதான் இருந்தேன். ஆகஸ்ட் 20-ந் தேதி எங்கப்பாவும், எங்கம்மாவும் வந்து பேசிய பிறகுதான் என்னை எக்ஸாம் எழுத அனுப்புனாங்க''’எனச் சொல்லியவாறே வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார் புனிதவதிகளால் சித்ரவதை செய்யப்பட்ட அந்த மாணவி.

அதன்பின் நடந்ததை அந்த மாணவியின் தந்தை மலைச்சாமி நம்மிடம், ""உள்ளே விடலன்னு என் மகள் போன் பண்ணியதும் நானும், என் மனைவியும் உடனே கிளம்பி வந்தோம். 21-ந் தேதி எக்ஸாம் எழுத விடுங்கன்னு டீன்கிட்ட கெஞ்சிக் கேட்டப்புறம்தான் அனுப்பி வச்சிட்டு, லாவண்யா செல்போன் விவகாரத்தை விசாரிக்க ஆரம்பிச்சாரு டீன். ஆதாரம் கேட்டதும் செல்போனை எடுத்து உடைச்சதா எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் 36 பெண்கள் கையொப்பம் போட்டிருந்ததைக் காட்டுனாரு. அன்னைக்கே என் மகள், தான் ஒரு நிரபராதிங்கிறத நிரூபிக்க, 40 மாணவிகளிடம் கையொப்பம் வாங்கி வச்சிருந்திருக்கு. இத தெரிஞ்சிக்கிட்ட புனிதா அதை கிழிச்சிப் போட்டிருக்காங்க. ஆனா இன்னொரு காப்பி என் மகளிடம் இருந்துருக்கு. என் மகள் தப்பு செஞ்சிருந்தா தண்டிக்கலாம். ஆனா தப்பா நடந்துக்க முயற்சி செய்ததை பத்தி புகார் சொன்னதுக்காக என் மகளை பாடாய்ப்படுத்தி துரத்தப் பாக்குறாங்க''’என்றார் கோபத்துடன்.

studentஅனைத்து அக்கிரமங்களுக்கும் மூலகர்த்தாவான கல்லூரி டீன் ராஜேந்திரனை சந்தித்து கேட்டபோது, ""தங்கபாண்டியன் அப்படியெல்லாம் நடந்துக்கவேயில்லை. என்னிடம் எந்த புகாரும் தரவில்லை. அந்த மாணவி பொய் சொல்கிறார். அந்த மாணவி மீது நிறைய திருட்டுப் புகார்கள் இருக்கு'' என திரும்பத் திரும்பச் சொன்னவரிடம், அந்த மாணவியின் ரூமில் உள்தாழ்ப்பாள் இல்லாதது பற்றிக் கேட்டபோது, "இருக்கே' என்றவர், "நான் டீன், நான் பொய் சொல்லமாட்டேன். அந்த மாணவி சொல்றதைப்பத்தி எதுவும் எழுதாதீங்க'’என்றார்.

டீனிடம் நாம் விளக்கம் பெற்றுக்கொண்டிருந்தபோதே, விசாரணைக்காக மாவட்ட நீதிபதி மகிழேந்தி, கல்லூரிக்கு வந்து இரண்டாமாண்டு மாணவிகளிடம் விசாரித்துக் கொண்டிருந்த போது, 50 மாணவிகள் இருந்தனர். "அந்த மாணவியால பாதிக்கப்பட்டவங்க மட்டும் இருங்க' என நீதிபதி சொன்னபோது, "நாங்க எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கோம்' என்றனர் கோரஸாய். "இதப்பத்தி வார்டன்கிட்ட புகார் கொடுத்தீர்களா?' என கேட்டதும், "வாய் வழியாதான் புகார் சொன்னோம்' என்றனர். "ஏம்மா இவ்ளோ பேர் பொருள் காணாமல் போயிருக்கறதா சொல்றீங்க, ஆனா புகார் தரலன்னு சொல்றீங்களே' என கேட்டதும் மௌனமாகிவிட்டனர். சில மாணவிகளோ, சில பேராசிரியர்கள் இருந்த ஒரு அறைக்குள் போய்வந்து போய்வந்து புகார் கூறினர். "உங்களுக்கு அங்க யார் சொல்லித் தர்றது' என நீதிபதி கேட்டதும் அமைதியாகிவிட்டனர்.

அப்போது குறுக்கே புகுந்த டீன், அந்த மாணவி மீது சில மாணவிகள் புகார் தந்திருப்பதாக சில தாள்களை நீட்டினார். அதைப்பார்த்த நீதிபதி, "இரண்டு வருசமா பொருள்கள் திருடு போகுதுன்னு மாணவிகள் சொல்றாங்க. ஆனா உங்க கையில இருக்குற புகாரோ போன மாசம் 26, 27 தேதிகளில் எழுதப்பட்டிருக்கு. இரண்டு நாள்ல மட்டும் இத்தனை புகார்கள் எப்படி வந்தது' என கேட்டதும் திருதிருவென விழித்தார் டீன். அப்போதும் விடாத நீதிபதி, "ராத்திரியில உட்கார வச்சி எழுதி வாங்குனீங்களா' எனக்கேட்க, டீன் முகம் வெளிறியது. செக்ஸ் டார்ச்சர் செய்த இணை பேராசிரியர் தங்கபாண்டியன், நீதிபதியிடம் "அந்தப் பெண் சொல்வது பொய்' என்றார்.

பெண்கள் விடுதிக்கு ஆய்வுக்குச் சென்ற நீதிபதி, அந்த மாணவி வாக்குமூலத்தில் கூறியதுபோல், அவள் தங்கியிருந்த அறையில் உள் தாழ்ப்பாள் கிடையாது என்பதையும் பக்கத்து அறையிலும் அதுபோல்தான் என்பதையும் உறுதிசெய்தார்.

studentபிரச்சனை பெரிதாகியதும், "தப்பு செய்தவர்களை காப்பாற்ற போலியாக டாகுமெண்டுகளை உருவாக்கியிருப்பது தெரிகிறது. மற்ற மாணவிகளை அந்த மாணவிக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளீர்கள்' என நேரடியாகவே டீனிடம் கூறிவிட்டு, "போலியா டாகுமெண்ட்களை இனிமேலும் உருவாக்கி மாட்டிக்காதீங்க'’என டீனை எச்சரித்துவிட்டுக் கிளம்பினார் நீதிபதி மகிழேந்தி.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி மகிழேந்தி,’’""தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது என்று ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பார்த்து கொதித்துப் போயுள்ளார்கள். அந்தப் பட்டியலில் தற்போது திருவண்ணாமலை கல்லூரியும் இணைந்துள்ளது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நேரில் வந்து வாக்குமூலம் அளித்திருக்கிறார். கல்லூரி பெண் பேராசிரியர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது, எத்தனை நிர்மலாதேவிகள் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் இன்னமும் வலம்வந்து கொண்டிருக்கிறார்களோ’’தெரியவில்லை'' என்றார் வேதனையுடன்.

நீதிபதியிடம் 40 பக்கத்துக்கு வாக்குமூலம் அளித்துள்ளார் அந்த மாணவி. இந்நிலையில், உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மைதிலி, புனிதா மீது விசாரணை ஆரம்பமாகியுள்ளது. புகார் தந்த மாணவியையும் விடுதியை விட்டு நீக்கியுள்ளது நிர்வாகம்.

-து.ராஜா

அரட்டல் -உருட்டல் -மிரட்டல்!

studentகடந்த 19-ந் தேதி இரவு வார்டன்களாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் மைதிலி, புனிதா இருவரும் மாணவியை மிரட்டும் 6 நிமிட ஆடியோ ரிலீசாகி பரபரப்பை அதிகப்படுத்தியது. அந்த ஆடியோவில் இருப்பது இதுதான். ""புடிப்பான், இடிப்பான் எல்லாஞ் செய்வாங்க. அது இந்த நாலு செவத்துக்குள்ளயே கிடக்கணும். நாங்க எதுக்கு இந்த விஷயத்தை வெளியில கொண்டுபோகாம இருக்கோம்னு தெரியுமா?. எனக்கு தெரிஞ்சி எத்தனை நடந்திருக்கு தெரியுமா. ஏன் சொல்லலை... பெண் பிள்ளைங்க அசிங்கப்படக்கூடாதுன்னுதான். இது சின்ன விசயம் மறந்துடு. அது அது கல்யாணமாகி, ஹஸ்பெண்ட்கூட நல்லா வாழுதுங்க. நீ இந்த சின்ன விசயத்தை மறந்துட்டு நாங்க சொல்ற மாதிரி கேட்டா ஒழுங்கா இரண்டு வருசம் படிச்சி முடிச்சிட்டு போகலாம். இல்லன்னா படிக்க முடியாது.

நீ வேறமாதிரி முடிவு எடுத்தாலும், எங்களை ஒண்ணும் செய்ய முடியாது. நாங்க இரண்டு பேர்தான் சாட்சி. நாங்க அந்த பொண்ணு சரியில்லன்னு சொன்னோம்ன்னா உன் லைப் முடிஞ்சி போச்சி. அப்படித்தான் சொல்லி வச்சிருக்கோம், ரெஜிஸ்ட்ராருக்கும் அப்படித்தான் ரிப்போர்ட் போயிருக்கு. நாங்க எல்லா எவிடன்ஸும் தயார் செய்து வச்சிட்டோம். நீ என்ன செய்தாலும் எங்கள ஒண்ணும் பண்ண முடியாது. நாங்க மூடி மறைச்சிடுவோம். உன்னை விரட்டி விட்டுட்டு, நீ காலேஜுக்கே வரலன்னு எவிடன்ஸையும் உருவாக்கிட்டு, எல்லாரையும் சொல்லச்சொல்லிடுவோம். உங்க வீட்ல வந்துகேட்டா... நீ எங்கயோ ஓடிட்டேன்னு சொல்லிருவோம். என்ன பண்ணிடுவ நீ, போலீஸ் கேஸ்தானே, ஒண்ணும் பண்ண முடியாது'' ’என சவடாலாகவே பேசுகிறார் புனிதா.

nkn280818
இதையும் படியுங்கள்
Subscribe