பாலிவுட் நட்சத்திரங்களின் குடியிருப்பு மும்பை என்பதை மாற்றி டெல்லிக்குக்கு அவர்களை இடம்மாறச் செய்துள்ளது குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள்.
அஜய் தேவ்கான், அக்ஷய்குமார், அமிதாப்பச்சன் ஆகிய மூவரைத் தவிர தீபிகா படுகோன், ஆதித்யா கபூர், ரிச்சா சத்தா, ஹன்சூல் மேத்தா என பாலிவுட்டைச் சேர்ந்த ஒரு பெரும் படையே டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சுற்றி வருகிறது.
தீபிகா படுகோன், தலைமறைவு தாதா தாவூத் இப்ராகிம் சொன்னபடி செயல்படுகிறார். பாலிவுட்டில் தங்களை முற்போக்காக காட்டிக்கொள்பவவர் கள், பாகிஸ்தானுக்கு துணை போகிறார்கள் என பா.ஜ.க. தரப்பு விமர்சிப்பதுடன் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் பிரபலங்களுக்கு ரெய்டு மிரட்டலும் விடுக்கிறது. நடிகர்-நடிகையரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கிளறப்படுகிறது.
"சப்பாக்' திரைப்படம் இசுலாமிய இளைஞன் ஒருவனால் ஆசிட் வீசப்பட்டு முகத்தை இழந்த இந்து பெண்ணின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் இஸ்லாமிய இளைஞன் என்பதை மறைத்துவிட்டு இந்து இளைஞன் என காட்டுகிறார் அத்திரைப்படத்தை தயாரித்த தீபிகா படுகோன் என வசைமாரி பொழிகிறார்கள் பா.ஜ.க.வினர். அவர்கள் இந்த அளவு கொந்தளிக்க காரணம் தீபிகா படுகோன் ஜே.என்.யூ. மாணவர்களை சந்தித்த சம்பவம் உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்ததுதான். பா.ஜ.க.வினரின் எதிர் பிரச்சாரம் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அந்த படத்துக்கு வரிவிலக்கு அளிக்க முன்வரும் அளவுக்கு இருந்தது. இந்த வரிவிலக்குகளால் சப்பாக் படம் ஒரே நாளில் பதினேழு கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்தது.
தீபிகா படுகோனின் வழியில் பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் கஷ்யாப், அனுபவ் சின்கா, ஜோயா அக்தர், நடிகைகள் டாப்ஸி, தியா மிர்ஸா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் மும்பை கார்ட்டர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராக போராடிய மக்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்ல கேரளாவின் லேடி சூப்பர் ஸ்டார் எனப்படும் மஞ்சு வாரியாரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்தை வெளியிட்டு கேரளாவில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் திரைப்பட நட்சத் திரங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது பா.ஜ.க. அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. அவர்கள் இதுவரை அந்த சட்டத்திற்கு நோட்டிபி கேஷன் வழங்காமல் கிடப்பில் போட்டிருந்தனர். இந்த எதிர்ப்பு களுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என அந்த சட் டத்தை இந்தியா முழுவதும் நோட்டிபிகேஷன் கொடுத்தனர் அமலுக்கு கொண்டு வந்து விட்டது.
திரைப்பட நட்சத்திரங்கள் ஏன் இந்த சட்டத்தை எதிர்க் கிறார்கள் என பாலிவுட் வட்டாரத்தினரிடம் கேட்டோம். ""முழுவதும் கணினி மற்றும் செல்போன் மயமாகிவிட்ட திரைப்பட மார்க்கெட்டில் திரைப்படத்தை தியேட்டரில் போய் பார்ப்பவர்கள் இளைஞர்களும் மாணவர்களும் தான். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை மிகக்கடுமை யாக எதிர்க்கின்றனர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா மில்பா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசாரை ஏவி அவர்களது போராட்டத்தில் ரத்தம் ஒழுகும் காட்சிகளை அரங்கேற்றினார் கள்.
ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் கடந்த 70 நாட்களாக போராடி வருகிறது. அந்தப் போராட்டத்தை அடக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. களமிறக்கப்பட்டது. அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களு டன் வந்து தாக்கினார்கள். குறிப்பாக போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய இடதுசாரி மாணவர் அமைப்புத் தலைவர் களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை டெல்லி போலீசாரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரும் வேடிக்கை பார்த்தனர். அந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் பெண் தலைவி. அயில்கோஷ் பயங்கர ஆயுதங்களால் ரத்தம் ஒழுக மண்டையில் தாக்கப்பட்டார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலமான அசாமில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்வை இருமுறை ரத்து செய்துள்ளார். இப்படி குடி யுரிமை சட்டத்திற்கு எழும் எதிர்ப்பும் அதை முறியடிக்க பா.ஜ.க.வினர் கையாளும் எதிர்த்தாக்குதலும் திரைப்பட நட்சத்திரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய திரைப் படங்களின் தலைநகரான மும்பையில் அமைந்துள்ள சிவசேனா தலைமையிலான ஆட்சியும் பா.ஜ.க. கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மவுனமான ஆதரவை வழங்கி யுள்ளது. இப்படி எதிர்ப்பு அலை வேகமாக வீசுவதால் திரைப்பட நட்சத்திரங்களான தீபிகா போன்றோர் தீப்பந்தத்தை ஏந்திவிட்டனர் என்கிறார்கள்.
திரைப்பட நட்சத்திரங் களின் எதிர்ப்பை சமாளிக்க பா.ஜ.க. இந்தி நடிகர் அஜய் தேவ்கானையும் அக்ஷய் குமாரையும் களத்தில் இறக்கி அவர்கள் மூலமாக டெல்லி மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.க்கு ஆதரவு தெரிவிக்க வைக்கும் அளவுக்கு பா.ஜ.க. இறங்கி விட்டது. அதே நேரத்தில், தீபிகா போன்றவர்களை பழிவாங்கு வதற்கான ப்ளானும் ரெடியாகி யுள்ளது.
-தாமோதரன் பிரகாஷ், ஆதனூர் சோழன்