Advertisment

ஏமாந்த பராகுவே! தொடரும் கைலாசா பித்தலாட்டங்கள்!

ss

ந்தியாவில் பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள நித்யானந்தா, வழக்குகளிலிருந்து தப்புவதற்காக மத்திய ஈக்வடார் பகுதியில் தீவு ஒன்றில் தன் பரிவாரங்களோடு செட்டிலாகி யிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தான் வசிக்கும் பகுதியை "கைலாசா ஐக்கிய நாடுகள் (மய்ண்ற்ங்க் நற்ஹற்ங்ள் ர்ச் ஃஹண்ப்ஹள்ஹ)' என்று அறிவித்துக்கொண்டு, அதற்கான அங்கீ காரத்தை பெறுவதற் காக பல்வேறு குறுக்கு வழிகளில் இறங்கி வருகிறது நித்யானந்தா கும்பல். ஏற்கெனவே கடந்த ஆண்டு பிப்ர வரியில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா.

ந்தியாவில் பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள நித்யானந்தா, வழக்குகளிலிருந்து தப்புவதற்காக மத்திய ஈக்வடார் பகுதியில் தீவு ஒன்றில் தன் பரிவாரங்களோடு செட்டிலாகி யிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தான் வசிக்கும் பகுதியை "கைலாசா ஐக்கிய நாடுகள் (மய்ண்ற்ங்க் நற்ஹற்ங்ள் ர்ச் ஃஹண்ப்ஹள்ஹ)' என்று அறிவித்துக்கொண்டு, அதற்கான அங்கீ காரத்தை பெறுவதற் காக பல்வேறு குறுக்கு வழிகளில் இறங்கி வருகிறது நித்யானந்தா கும்பல். ஏற்கெனவே கடந்த ஆண்டு பிப்ர வரியில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசா நாட்டின் பிரதிநிதி எனக் கூறிக்கொண்டு நித்யானந்தாவின் பெண் சீடர்கள் கலந்துகொண்டதாக வெளியிடப் பட்ட வீடியோவால் பெருத்த சர்ச்சை கிளம்பியது. கைலாசாவை ஐ.நா. அங்கீகரிக் கிறதா என்ற கேள்வி எழுந்ததில், அப்படி யெல்லாம் இல்லையென்று மறுக்கப்பட்டது.

Advertisment

nithy

அதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் நகரத்துக்கும் கைலாசாவுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக நித்யானந்தா கும்பல் செய்தி பரப்பியது. அதையடுத்து, கைலாசா என்பது போலி என்ற உண்மை தெரிந்ததால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அந்த ஒரு நகரத்துடன் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 30 நகரங்களுடன் கைலாசாவின் பெயரில் அந்த கும்பல் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கைலாசாவின் இணைய பக்கத்தில் செய்தி பகிரப்பட்டிருந்தது. மேலும், பிரான்ஸ், கினீ நாடுகளைச் சேர்ந்த சில நகரங்களுடன், ‘"சிஸ்டர் சிட்டி' என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதாகவும் செய்தி பகிரப்பட்டது. பின்னர் அதுவும் டுபாக்கூர் என்று அம்பலமானதும் ரத்தானது.

Advertisment

இந்நிலையில், நித்யானந்தா கும்பல், தென் அமெரிக்க நாடான பராகுவே அரசின் விவசாய அதிகாரியை ஏமாற்றி, புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகத் தெரியவந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், பராகுவே நாட்டைச் சேர்ந்த வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் தலைமை அதிகாரி அர்னால்டோ சாமோரோவுடன், கைலாசாவின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்ட இருவர் சந்தித்துப் பேசி, ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. நித்யானந்தா சீடர்கள், வேளாண்மைத்துறை அமைச்சர் கால்லோஸ் கிம்மென்ஸையும் சந்தித்துள்ளனர்.

தற்போது 2024, ஜனவரியிலிருந்து கைலாசா எனும் இந்துக்களின் புண்ணிய பூமிக்கு வந்து கடவுளை தரிசிக்கவும், தங்கிச் செல்லவும் விரும்பும் அனைவரும் இங்கே வரலாம்! அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பதுபோல் நித்யானந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் காட்டப்பட்டுள்ள மலைப்பகுதி, நார்வே நாட்டிலுள்ள லோஃபோடென் பகுதி என்று கூறப்படுகிறது.

ஆக, இல்லாத ஒரு தேசத்தை இருப்பதாகக் காட்டி உலக நாடுகளை ஏமாற்றிவரும் நித்யானந்தா கும்பலின் ஆட்டம் இன்னும் தொடர்ந்தபடியிருக் கிறது. இந்த பூனைக்கு யார் மணி கட்டுவதோ!

nkn130124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe