Advertisment

தமிழகத்தில் டிசம்பர் புரட்சி மாறும் தேர்தல் வியூகங்கள்

tnelection26

 

2026 தேர்தலை யொட்டி தமிழக அரசியலில் விசித்திரமான பல மாறு தல்கள் நடக்க இருக்கின்றன. அந்த பரபரப்பான விசயங் களில் மிக முக்கியமானது நடிகர் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "பிரதமரை சந்திக்க அவ்வளவு கெஞ்சிக் கேட்டும் ஓ.பி.எஸ்.சுக்கு பா.ஜ.க. அனுமதி தரவில்லை. ஆகவே ஓ.பி.எஸ்.ஸை அவமானப்படுத்திய பா.ஜ.க. கூட் டணியிலிருந்து அவர் வெளியேறி நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும். ஓ.பி.எஸ். -விஜய் கூட்டணி தென் தமிழகத்தில் பரவலாக வெற்றிபெறும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப்பற்றி கருத்து தெரி வித்த அ.தி.மு.க. வட்டாரங்கள், “"பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு காலா வதியான மாத்திரை. அவரை எடப்பாடி கண்டுகொள்வதே யில்லை. எம்.ஜி.ஆர். கட்சிக்காக வங்கியில் போடச்சொன்ன ஐம்பது கோடியில் 25 கோடியை எஸ்.ராமச் சந்திரன் என்கிற தனது பெயரில் போட்டு அபகரித்துக் கொண்டார் பண்ருட்டி. இந்த தகவல் அ.

 

2026 தேர்தலை யொட்டி தமிழக அரசியலில் விசித்திரமான பல மாறு தல்கள் நடக்க இருக்கின்றன. அந்த பரபரப்பான விசயங் களில் மிக முக்கியமானது நடிகர் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "பிரதமரை சந்திக்க அவ்வளவு கெஞ்சிக் கேட்டும் ஓ.பி.எஸ்.சுக்கு பா.ஜ.க. அனுமதி தரவில்லை. ஆகவே ஓ.பி.எஸ்.ஸை அவமானப்படுத்திய பா.ஜ.க. கூட் டணியிலிருந்து அவர் வெளியேறி நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும். ஓ.பி.எஸ். -விஜய் கூட்டணி தென் தமிழகத்தில் பரவலாக வெற்றிபெறும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப்பற்றி கருத்து தெரி வித்த அ.தி.மு.க. வட்டாரங்கள், “"பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு காலா வதியான மாத்திரை. அவரை எடப்பாடி கண்டுகொள்வதே யில்லை. எம்.ஜி.ஆர். கட்சிக்காக வங்கியில் போடச்சொன்ன ஐம்பது கோடியில் 25 கோடியை எஸ்.ராமச் சந்திரன் என்கிற தனது பெயரில் போட்டு அபகரித்துக் கொண்டார் பண்ருட்டி. இந்த தகவல் அ.தி.மு.க.வினர் அனைவருக்கும் தெரியும். அன்று முதல் அ.தி.மு.க.வினர் பண்ருட்டியை மதிப்பதில்லை. அவர் பா.ம.க.விடம் சென்றார். ஓ.பி.எஸ்.ஸிடம் சென்றார். எல்லா இடத்திலுமே செல்லாத காசாகி விட்டார். அதேபோல் ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கித் தருகிறேன் என குருமூர்த்தி மூலமாக வாக்குறுதி அளித்தவர் ஆடுமலை. ஆனால், இன்றும் ஒரு தனிக் கூட்டணி நடத்திக் கொண்டிருக்கிறார் ஆடுமலை. ஓ.பி.எஸ்., டி.டி.வி., ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் என அனைவரையும் ஒருங் கிணைத்து தனிக் கூட்டணியையே ஆடுமலை நடத்தி வருகிறார். எடப்பாடி மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான இந்தக் கூட்டணி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிக்கும் என ஆடுமலை நம்புகிறார். அவருடன் அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவரான எஸ்.பி.வேலுமணியும் கைகோர்க்கிறார். ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின் அப்பாய்ண்ட்மென்ட் தரக்கூடாது என எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமர் மோடி அவரைப் புறக்கணித்து விட்டார். அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் ஒரு சர்வதேச கராத்தே போட்டி ஒன்றை கோவையில் நடத்தினார். அதற்கு பிரதமரின் வாழ்த்து நேரடியாக அளிக்கப் பட்டுள்ளது.

Advertisment

பா.ஜ.க.வினரோ, "ஆடுமலை மறுபடியும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.. அ.தி.மு.க. படுதோல்வி அடைய வேண்டும்.. அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தோற்கும் பா.ஜ.க.வின் தலைமைப் பொறுப்புக்கு அவரே திரும்பவும் வர வேண்டும் எனத் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார். நயினார் நாகேந்திரன் தலைமையிலான பா.ஜ.க.வுடனான அ.தி.மு.க. கூட்டணி எங்கெல்லாம் தோற்கும், எப்படித் தோற்கும் எனக் கணக்குப் போட்டு செயல்பட்டு வருகிறார் ஆடுமலை. அதில் ஒன்றுதான் ஓ.பி.எஸ்.சும், டி.டி.வி. தினகரனும் நடிகர் விஜய் கூட்டணியில் இணையப் போகிறோம் என எழும் குரல்கள். 

இந்தக் குரல்களுக்கு சொந்தக்காரர் சாட்சாத் ஆடுமலைதான். அவரின் இந்த அசைவுகள் வருகிற ஜனவரி மாதம் வரை நடக்கும். அதற்குப்பிறகு ஆடுமலை தனிக்கட்சி தொடங்கிவிடுவார்'' என்கிறார்கள்”. 

tnelection26a

 

Advertisment

நடிகர் விஜய் தரப்பில் இதுபற்றி கேட்ட போது, “"நடிகர் விஜய்யை சந்திக்கவேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து வந்த அழைப்பை விஜய் நிராகரித்து விட்டார். விஜய்யின் வியூக அமைப்பாளரான ஜான் ஆரோக்கியம், விஜய் கூட்டணிக்கு சீமானும் அன்புமணியும் வருவார்கள் என்ற ஆர்வத்தில் அதற்காக காய்நகர்த்தி வருகிறார். சீமானின் விசுவாசியான ஜான் ஆரோக்கியத்தை மீறி விஜய் எதுவும் செய்வதில்லை.  ஜானின் பிளானில் எடப்பாடி பழனிச்சாமி டிசம்பர் மாதவாக்கில் விஜய்யுடன் கூட்டணி சேர முன் வருவார் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கின்றது. எடப்பாடியும் அ.தி.மு.க. கூட்டணிக்கு பெரிய கட்சி வரும் எனச்சொல்லி அந்த எதிர்பார்ப்பை அதிகரித்தபடி இருக்கிறார். இந்நிலையில் எடப்பாடிக்கும் பிரதமரை தனியாக சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எடப்பாடியிடம் போனில் பேசிய பிரதமர், அவரை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளார். பிரதமரிடம் வேலுமணியும், ஆடுமலையும் சேர்ந்துபோடும் திட்டங்களை விளக்கமாக கூறவுள்ளார் எடப்பாடி. அதற்காக விரைவில் டெல்லிக்குச் சென்று பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந்திக்க இருக்கிறார்'' என்கிறார்கள்.

“பா.ஜ.க.விற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய நயினார் அனுப்பிய லிஸ்ட் மூன்றாவது முறையாக திருப்பி அனுப்பப் பட்டுள்ளது. சரத்குமார், தொழிலதிபர் ஜெ.பி. என்கிற ஜெயப்பிரகாஷ், சசிகலா புஷ்பா என, பிற கட்சியிலிருந்து வந்தவர்கள் நயினார் மகன் மூலம் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்கிற புகார் டெல்லிக்குப் பறந்துள்ளது. இந்த நிலைமைகள் வருகிற டிசம்பர் மாதம் மாறும் என நம்புகிறார் நயினார் நாகேந்திரன். 

அதேபோல காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., ம.தி.மு.க. கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏதேனும் வருமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். 

ஆக "வருகிற டிசம்பர் மாதம் தமிழக அரசியலில் புயல் வீசும் மாதமாக இருக்கும்' என்கிறார்கள்”அரசியல் பார்வையாளர்கள். 

 

nkn300725
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe