Advertisment

வஞ்சிக்கும் அரசுகள்! வாழ்வை மீட்கும் இளைஞர்கள்! -புதிய பாதையில் "கஜா' நிலம்!

peoples

ஜா புயல் தாக்கி 25 நாட்கள் கடந்துவிட்டன. புயல் கசக்கிப்போட்ட பகுதிகளை காயவைத்துக் கொண்டிருக்கிறது அரசாங்க இயந்திரம்.

Advertisment

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றால் எதிர்ப்பு வலுக்கும் என்பதால், அதிகாரிகள் சொல்லும் தகவல்களை வைத்தே புள்ளிவிபரங்களை வெளியிடுகின்றனர் அமைச்சர்கள். அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரங்களில் நூறு சதவீதமும், peopleகிராமங்களில் 95 சதவீதமும் மின்சேவை வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அப்படியா உள்ளது நிலைமை? என்பதை அறிய கிராமங்களை நோக்கி பயணித்தோம்.

கீரமங்கலம், பனங்குளம், குளமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் உள்ளூர் இளைஞர்களே மின்கம்பங்களை நட்டுக் கொண்டிருந்தனர். "மின்வாரிய ஊழியர்கள் இல்லையா?' என்று கேட்கையில், “""புயல் தாக்கிய சமயத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, ஆந்திரா, கேரளா என பல பகுதிகளில் இருந்தும் மின் ஊழியர்கள் வந்தார்கள். ஒரு வாரத்திற்கு இளைஞர்கள் துணையுடன் வேலை வேகமாக நடந்தது. அதன்பிறகு ஊழியர்கள் கொஞ்சம்கொஞ்சமாக கிளம்பிவிட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் ஒவ்வொரு மின்வாரிய அலுவலகமாக ஆய்வுசெய்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மின்வாரிய அதிகாரிகள் ‘"ஊழியர்களும், மின்கம்பங்களும் பற்றாக்குறை'’என்றனர். புதன்கிழமைக்குள் எல்லாம் சரியாகிடும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன நாள

ஜா புயல் தாக்கி 25 நாட்கள் கடந்துவிட்டன. புயல் கசக்கிப்போட்ட பகுதிகளை காயவைத்துக் கொண்டிருக்கிறது அரசாங்க இயந்திரம்.

Advertisment

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றால் எதிர்ப்பு வலுக்கும் என்பதால், அதிகாரிகள் சொல்லும் தகவல்களை வைத்தே புள்ளிவிபரங்களை வெளியிடுகின்றனர் அமைச்சர்கள். அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரங்களில் நூறு சதவீதமும், peopleகிராமங்களில் 95 சதவீதமும் மின்சேவை வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அப்படியா உள்ளது நிலைமை? என்பதை அறிய கிராமங்களை நோக்கி பயணித்தோம்.

கீரமங்கலம், பனங்குளம், குளமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் உள்ளூர் இளைஞர்களே மின்கம்பங்களை நட்டுக் கொண்டிருந்தனர். "மின்வாரிய ஊழியர்கள் இல்லையா?' என்று கேட்கையில், “""புயல் தாக்கிய சமயத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, ஆந்திரா, கேரளா என பல பகுதிகளில் இருந்தும் மின் ஊழியர்கள் வந்தார்கள். ஒரு வாரத்திற்கு இளைஞர்கள் துணையுடன் வேலை வேகமாக நடந்தது. அதன்பிறகு ஊழியர்கள் கொஞ்சம்கொஞ்சமாக கிளம்பிவிட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் ஒவ்வொரு மின்வாரிய அலுவலகமாக ஆய்வுசெய்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மின்வாரிய அதிகாரிகள் ‘"ஊழியர்களும், மின்கம்பங்களும் பற்றாக்குறை'’என்றனர். புதன்கிழமைக்குள் எல்லாம் சரியாகிடும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன நாளில் எஞ்சியிருந்த வெளியூர் ஊழியர்களும் கிளம்பிவிட்டனர். இனிமே காத்துக்கிடக்க வேண்டாமென்றுதான் நாங்களே களமிறங்கிவிட்டோம்''’என்றனர்.

இதுவொரு புறமிருக்க, கந்தர்வக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுமுகத்தின் மீது, எந்தவிதமான உதவியும் செய்யாமல் இழுத்தடிப்பதால் கடுங்கோபத்தில் இருக்கின்றனர் பொதுமக்கள். இளைஞர்கள் சிலர் அவருக்கே தொடர்புகொண்டு பீப் வார்த்தைகளால் அர்ச்சித்தனர். தன் தொகுதியில் இருக்கும் முத்தன்பள்ளம் கிராமத்தைப் பற்றி அவருக்கு தெரியவே இல்லை. நிவாரண உதவிகூட சென்றுசேர முடியாத அளவுக்கு சாலைவசதி இல்லாமல் கிடக்கிறது அந்த ஊர். சில தினங்களில் மக்களின் கோபம் தணிந்திருக்கும் என்று நினைத்து தொகுதிப்பக்கம் போனவரை, கறம்பக்குடி அருகே குலப்பெண்பட்டி கிராமத்தில் குடிதண்ணீருக்காக சாலைமறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அங்கிருந்து தப்பிச்செல்லவே படாதபாடு படவேண்டியிருந்தது அவருக்கு.

Advertisment

இதற்கிடையில், அனைத்துக் கட்சிகளும் மக்களுடன் இணைந்து நிவாரணம் கேட்டு போராட்டக்களத்தை அமைத்துவிட்டனர். டிசம்பர் 07ஆம் தேதி தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சி.பி.ஐ. தேசியச் செயலாளர் டி.ராஜா, கீரமங்கலத்தில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அதில் பேசியவர், “"நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கூடப்போகிறது. அதில் ராமர் கோவிலைப் பற்றி விவாதிப்பார்கள். கஜாவைப் பற்றி நிச்சயமாக நான் கேள்வியெழுப்புவேன். தென்னைக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடும், அனைத்துவிதமான கடன்களை ரத்துசெய்யக் கோரியும் வலியுறுத்துவேன்'’’என கூறினார். அதேமேடையில் பேசிய ஆலங்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன், “"இதுவரை கணக்கெடுப்பு கூட நடத்தவில்லை. மக்கள் நொந்து போயிருக்கும் இந்த வேளையில் கூட இழப்பீட்டைக் குறைக்கும் வேலைகளில்தான் மும்முரம் காட்டுகின்றனர். கூடியவிரைவில் விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன்'’என்றார்.

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ""பிள்ளைகளைப் போல வளர்த்த மரங்கள் புயலில் தாக்குப்பிடிக்காமல் வீடுகள் மீது சாய்ந்தன. விடிந்த பிறகு கொத்துக்கொத்தாக கிடந்த மரங்களைக் கண்டதும் நொந்துபோனேன். பொழைப்பே போச்சே'' என்று கதற, நெஞ்சோடு அணைத்திருந்த குழந்தை கண்ணீரைத் துடைத்தது. ""இனி அழுதுகொண்டிருந்தால் எதுவும் நடக்காது என்ற துணிவு வந்தது. ஹெலிகாப்டரில் காப்பாற்ற வருவார்கள் என்று வானம்பார்க்க வேண்டாம். கீழே கிடக்கும் தென்னை மரங்களை நாமே அகற்றுவோம் என்று முடிவெடுத்தோம். இளைஞர்களே ஒன்றுகூடி அரசாங்கத்திற்குப் பதிலாக புதிய பாதையை அமைத்தனர். இன்று அந்தப்பாதையைத்தான் அரசாங்கம் பயன்படுத்துகிறது. பட்டுக்கோட்டையில் நடந்த பேரணியில் கலந்துகொண்ட 95 வயது முதியவர், "நான் வைச்ச தென்னை முறிஞ்சிடுச்சு. என் பேரனுக்கு பலனில்லாம போயிடுச்சு. சாகுறதுக்குள்ள தென்னை வைச்சு பேரனுக்கு இளநீர் கொடுத்துட்டுதான் போவேன்'’என்று தைரியமாகப் பேசினார். தள்ளாத வயதில் அவருக்கே இத்தனை நம்பிக்கை இருக்கும்போது நமக்கென்ன வந்தது? நிமிர்ந்து நிற்போம்’’ என பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் பேசியது பலரையும் கண்கலங்க வைத்தது.

people

people

"மீண்டு எழுவோம்'’என்ற பெயரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசிய "நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்மிடம், “""டெல்டாவில் மண்ணுக்குள் இருக்கும் வளங்களைத் திருடத்தான் இப்பவும் முயற்சி செய்யுது மத்திய அரசு. அதனால்தான் நிவாரணம் கேட்டா காதுல விழுவதே இல்லை. அம்மையார் ஜெயலலிதா இருக்கும்போதே நிவாரணம் கொடுக்காத பா.ஜ.க., இப்ப இருக்கவங்க கேட்டதும் கொடுத்திடுமா? மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்டாவுக்கு உள்நோக்கத்தோடுதான் வந்தாங்க. நாகையில் 50 கிராமங்கள் தேவைப்படுறதால, மக்களின் போராட்ட மனநிலையை தெரிஞ்சிக்க வந்துருக்காங்க. நெடுவாசலுக்கு வரும்போது பெட்ரோலியத்துறை அதிகாரிகளைக் கூட்டிவந்தது சந்தேகத்தைக் கிளப்புதே? மரமும், பயிரும் போனதுல, மனவலிமை உடைஞ்சிருக்க இந்த சமயத்துல வரலாமுன்னு நினைச்சா, நாங்க எழவேண்டியிருக்கும். அப்பறம் தாங்கமாட்டாங்க''’என்றார் உறுதியுடன்.

கடந்தவாரம் வந்திருந்த மத்தியக்குழு இரவோடு இரவாக ஆய்வை முடித்துவிட்டு டெல்லி பறந்துவிட்டது. இந்தநிலையில் மத்திய வேளாண்குழு டெல்டா மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தி அதிகாரிகளிடம் கருத்து கேட்டுச் சென்றது. ஆனால், அதிகமாக பாதித்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, மத்திய தோட்டக்கலைத்துறை இணைச் செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் மத்திய தென்னை வளர்ச்சி வாரியத் தலைவர் ராஜூ நாராயணன், தமிழக தோட்டக்கலைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் பேராவூரணியில் தனியார் மண்டபத்தில் சிறிதுநேரம் ஆலோசனை செய்துவிட்டு, அருகில் உள்ள புதுக்கோட்டைக்கு வராமலேயே சென்றனர். ஆனால், புதுக்கோட்டை விவசாய பிரதிநிதிகள் சந்தித்துவிட்டதாக காரணம் சொன்னதால், விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

இப்படி மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி வருவதால், ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்காக அமெரிக்காவில் புயல் நிவாரணத்திற்காக வாகை மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள், மொய்விருந்து நடத்தி ஐந்தாயிரம் டாலர் வசூல்செய்து கிராமங்களில் சோலார் விளக்குகள் அமைக்க அனுப்பவுள்ளனர். இதைப்பார்த்த மற்றொரு மகளிர் குழுவும் டிசம்பர் 16-ஆம் தேதி மொய்விருந்து நடத்த இருக்கிறது.

-இரா.பகத்சிங்

nkn151218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe