stalin100

ருபதாண்டுகளுக்கு முன், 2001-ல் அப்போதைய நிதியமைச்சர் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்குப் பின், தற்போது தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் வெள்ளை அறிக்கை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் கடைசி கட்டத்திலும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி படுபாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதும், தமிழ்நாடு அரசின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதோடு, ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் ரூபாய் கடன் சுமை ஏற்றப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வெள்ளை அறிக்கை, ஒவ்வொரு தமிழரின் அடிவயிற்றிலும் புளி கரைப்பதாகவே உள்ளது.

FM

இவ்வளவு இழப்புகளைப் பார்க்கும் போது, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மகளிர் உரிமைத்தொகை, கல்விக்கடன் ரத்து, விவசாயக்கடன் ரத்து உள்ளிட்ட சலுகைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்திருப்பதைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸின் கருத்துகளைக் கேட் டோம்.

Advertisment

"தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடு வோமென்று குறிப்பிட்டி ருந்தது. ஒரு வெளிப்படையான, நேர்மையான அரசைத் தருவோம் என்றும் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன் முதல் கட்டம் தான் இது. இந்த வெள்ளை அறிக்கையின்மூலம், கலைஞரின் ஆட்சி 2011-ல் நிறைவடையும்போது நமக்கு ரூ.2,500 கோடிக்கு மேல் உபரி வருமானமாக இருந்த நிலையில், தற்போது ஏறக்குறைய 90,000 கோடி பற்றாக்குறையாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

eps

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை தமிழ்நாட்டுக்கு போதாத காலம் எனலாம். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தை தமிழ்நாட்டின் பொல்லாத காலம் எனலாம். மத்தியிலுள்ள மோடியின் ஆட்சியை கொடுமையான காலம் எனலாம். ஏனென்றால், 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தபிறகுதான் மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய நிதி ஒதுக்கீடு, நமக்கு வரவேண்டிய மானியங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது, மத்திய அரசு வசூலிக்கின்ற வருமான வரி, கலால் வரி, சுங்க வரி ஆகியவற்றிலெல்லாம் மாநில அரசுக்குப் பங்கு கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக சர்சார்ஜாக (செஸ்) இவற்றை வசூலிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சர்சார்ஜாக வசூலித்த தொகை மூன்றரை லட்சம் கோடி ரூபாய். அதில் தமிழ்நாட்டுக்குக் கொடுத்துள்ள தொகை வெறும் 700 கோடி ரூபாய் மட்டுமே.

Advertisment

பழனிசாமி அரசில், போட்ட சாலையையே திரும்பப் போடுவது, தூர் வாருவதாகவும், தடுப்பணை கட்டுவதாகவும் கணக்குக் காட்டி தேவையில்லாமல் கடன்களை வாங்கிக் குவித்தார்கள். வாங்கப்பட்ட கடன் அனைத்தும் எடப்பாடியின் நெடுஞ்சாலைத் துறையிலும், வேலுமணியின் உள்ளாட்சித் துறையிலும்தான் செலவிடப்பட்டன. இப்படி வீணடிக்கப்பட்ட 1 லட்சம் கோடியைத்தான் நிதியமைச்சர் சுட்டிக்காட்டி யுள்ளார். இவற்றைச் சரிசெய்தபடி, தேர்தல் வாக்குறுதிகளையும் வரும் ஐந்தாண்டுகளில் தொடர்ச்சியாக நிறைவேற்றுவார்கள். இன்றைய தமிழ்நாடு அரசானது, எந்த இடத்தில் வரியை வசூலிக்க வேண்டுமோ, எங்கே அரசாங்கத்தின் வருவாயைப் பெருக்க வேண்டுமோ, மக்களுக்குச் சுமையில்லாமல் அவற்றைப் பெருக்கி, ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய நிதியைப் போராடி, வாதாடிப் பெற்று, அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்துவார்கள்'' என்றார்.

ff

கடந்த ஆட்சிக்காலத்தில் என்னென்ன விஷயங்களில் மக்கள் பணம் வீணடிக்கப் பட்டிருக்கும் என்பதையும், இந்த சுமை, தமிழ்நாடு மக்களின்மீது தானே சுமத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.கனகராஜிடம் கேட்டபோது, "வெள்ளை அறிக்கையின்மூலம் கண்டறியப்பட்ட நிதி இழப்புகள் நமக்கு புதிதாகத் தெரிய வந்தவை அல்ல. எனவே இந்த அறிக்கையானது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பாதிப்பை ஏற் படுத்துமென்று நான் நினைக்கவில்லை. கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையைப் பொறுத்தவரை, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிய முறைகேடு நடந்தது. அடுத்ததாக, குறைந்த விலைக்கு ஒப்பந்தம் போட வந்தவர்களைப் புறக்கணித்துவிட்டு அதிக விலைக்கு விற்க வந்தவர்களோடு ஒப்பந்தம் போடப்பட்ட முறைகேடு நடந்திருக்கிறது. வெளியாட் களிடமிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டுமென்பதற்காகவே நம்முடைய அனல்மின் நிலையங்களின் உற்பத்தியை நிறுத்திவைத்திருக்கிறார்கள். எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப்பணியை பாதியில் கைவிட்டார்கள்.

அதானியிடம் 7 ரூபாய் 1 பைசாவுக்கு சூரிய சக்தி மின்சாரம் பெற நீண்டகால ஒப்பந்தம் ஒன்று போட்டுள்ளார்கள். இது ஒரு யூனிட் என்ற அளவில் பார்க்கும்போது, சாதாரணமான தொகையாகத்தான் தெரியும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த ஒப்பந்தத்தின்மூலம் தமிழ்நாட்டுக்கு 23,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் வந்துள்ள செய்தி என்னவென்றால், வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதாகக் கூறிவிட்டு உள்நாட்டு நிலக்கரியை அதே விலைக்கு வாங்கி முறைகேடு நடத்தியிருக்கிறார்கள். இதுபோல மின்சாரத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அடுத்ததாக பேக்கேஜிங் கான்ட் ராக்ட் என்ற முறையில் பொதுப்பணித்துறையில் ஒரு ஊழல் நடந்திருக் கிறது. இதன்படி 5 மாவட்டங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு அனைத்து சாலைகளுக்கும் ஒரே நேரத்தில் கான்ட்ராக்ட் கொடுத்துவிட்டு, தொடக்கத்தி லேயே தங்களுக்குத் தேவையான கமிஷனை எடுத்துக்கொள்வார்கள். இதில், அரசாங்கம் மாறினால்கூட கான்ட்ராக்டை ரத்து செய்ய முடியாதபடி செய்திருக்கிறார்கள். கொரோனா பாதுகாப்பு நடவடிக் கையாக ப்ளீச்சிங் பவுடர் வாங்கி யதில்கூட ஊழல் நடந்திருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா சிகிச்சைக்கான மருத் துவர்களின் பயன்பாட்டுக்கான உபகரணங்களில் ஊழல் நடந்திருக் கிறது. 22 ரூபாய்க்கு இந்த அரசாங்கம் கொள்முதல் செய்யும் முகக்கவசத்துக்கு கடந்த ஆட்சியாளர்கள் 200 ரூபாய் செலவுக்கணக்கு காட்டுகிறார்கள். முழு கவச உடையை 273 ரூபாய்க்கு இந்த அரசாங்கம் வாங்குவதை அவர்கள் 800 ரூபாய்க்கு வாங்கியதாகக் காட்டுகிறார்கள்.

அதேபோல, மருத்துவமனைகள் தங்களுக் குத் தேவையானவற்றை மருத்துவப் பொருட்கள் கொள்முதல் கழகத்துக்கு தகவல் கொடுப்பார் கள். இந்த நிறுவனம்தான் ஆர்டர் கொடுக்கும். ஆனால் இந்த கொரோனா காலத்தில், மருத்துவ மனைகளே கேட்காததையெல்லாம் இவர்களே வாங்கி அனுப்பி, அதன்பின்னர் அவர்கள் கேட்டதுபோல் காட்டியதெல்லாம் நடந்திருக் கிறது. இப்படி வாங்கப்பட்ட பல இயந்திரங் களை இயக்குவதற்குக்கூட சரியான ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. இப்படித்தான் ஒவ் வொரு துறையிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. அந்த தவறு களையெல்லாம் கண்டறிந்து களைவதற்கு இந்த வெள்ளை அறிக்கை பயன்படக்கூடும். மற்றபடி இந்த அறிக்கையால் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்பில்லை'' என்று தெளிவுபடுத்தினார்.

ff

இத்தனை முறைகேடுகளையும் தாண்டி, தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியதுபோல அடுத்த ஐந்தாண்டு களில் இந்த நிதி இழப்புகளை சரி செய்வது சாத்தியப்படுமா என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனிடம் கேட்டபோது, "இனிவரும் காலத்தில் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு வளர்ச்சியை எட்டும் என்பதைப் பொறுத்தே இதற்கான பதிலை நாம் பெற முடியும். தற்போது கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்ததாக மூன்றாவது அலை வரக்கூடும். எனவே இந்த ஆண்டிலும் வருவாய் பற்றாக்குறை ஏற்படவே வாய்ப்புள்ளது. எனவே கடன் வாங்குவதற்கான தேவை ஏற்படும். எனவே நம்மால் இது குறித்து உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் நிதியமைச்சர் நம்பிக்கையாகச் சொல்கிறார். இதைச் சரி செய்வதென்பது வரிகளை உயர்த்தாமல் முடியாது. இனிவரும் காலத்தில் நாம் ஏற்கனவே வாங்கியுள்ள கடன் அளவு குறையுமா என்று பார்த்தால் குறையாது. 5 லட்சத்து 70 ஆயிரம் கோடிக்கு கீழாகக் கடன் குறைவதற்கு வாய்ப்பில்லை. நடப்பு ஆண்டிலும் கடன் உயரும். ஆனால் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில் இனிமேல் வாங்கக்கூடிய கடன்களின் சதவீதம் குறையக்கூடும்'' என்றார்.

இவர் கூறியிருக்கும் எதார்த்த நிலையைப் பார்க்கும்போது... வரவுள்ள பட்ஜெட், தமிழ்நாடு அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்றே பார்க்க முடிகிறது. "சமூக நீதிக்கான பாதையிலிருந்து விலகாமல், இந்த நிதி இழப்புகளைச் சரிசெய்வோம் என்று நிதியமைச்சர் உறுதியளித் திருந்தார். அந்த உறுதி காப்பாற்றப் பட வேண்டும்' என எதிர் பார்க்கிறார்கள் தமிழக மக்கள்.