கடன் சுமை - கூடுதல் விலை! 'ஷாக்' அடிக்கும் ஊழல்! - சீரமைக்குமா தி.மு.க. அரசு?

se

தூய்மையான நிர்வாகத்தை நிலைநிறுத்த துறைவாரியான உயரதிகாரிகளை தொடர்ச்சியாக இடமாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில், தமிழக மின்வாரியத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஊழல்கள் மலிந்து கிடக்கும் வாரியத்தில் புதிய தலைவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகம் என்கிறார்கள் மின்வாரியப் பணியாளர்கள் சங்கத்தினர்.

தடையில்லா மின்சாரத்தை அனைவருக்கும் வழங்கும் தமிழக மின்வாரியத்தில், 18,500 மெகாவாட் மின் நிறுவுத்திறனைக் கொண்டிருக்கிறது தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். ஆனால், பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களின் வாயிலாக நமக்கு கிடைக்கும் மின் உற்பத்தி 13,395 மெகாவாட் மட்டுமே. அதேசமயம், தமிழகத்தின் சராசரி மின் தேவையோ சுமார் 15,500 மெகாவாட்டாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மின்நுகர்வு சுமார் 900 லட்சம் யூனிட் அதிகரித்துள்ளன.

senthilbalaji

இந்த நிலையில், மின் உற்பத்திக்கும் மின் தேவைக்குமான இடைவெளியைக் குறைக்க தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் அதிக விலைக்கு மின்கொள்முதல் செய்ய முந்தைய அ.தி.மு.க. அரசு போட்டுள்ள ஒப்பந்ததால் மின்தட்டுப்பாடு இல்லாமல் நகர்த்திவந்துள்ளது மின்வாரியம். ஆனால், இப்படி தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதால், கடன் சுமையில் தத்தளிக்கும் மின் வாரியத்தின் குரல்வளை மேன்மேலும் இறுகிக்கொண்டே வருகிறது. இது ஆபத் தான போக்கு என்கிறார்கள் வாரியத்தின் மின் பொறியாளர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்துறை பொறியாளர் கள் சங்கத்தின் தலைவர் காந்தியிடம் நாம் பேசிய போது, "கடன் மற்றும் நட்டம் ஆகிய இரண்டு விசயங் கள்தான் வாரியம் எதிர்கொண்டி ருக்கிற மிகப்பெரிய சிக்கல்கள். தமிழக மின்வாரியத்தின் தற்போ தைய கடன் ச

தூய்மையான நிர்வாகத்தை நிலைநிறுத்த துறைவாரியான உயரதிகாரிகளை தொடர்ச்சியாக இடமாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில், தமிழக மின்வாரியத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஊழல்கள் மலிந்து கிடக்கும் வாரியத்தில் புதிய தலைவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகம் என்கிறார்கள் மின்வாரியப் பணியாளர்கள் சங்கத்தினர்.

தடையில்லா மின்சாரத்தை அனைவருக்கும் வழங்கும் தமிழக மின்வாரியத்தில், 18,500 மெகாவாட் மின் நிறுவுத்திறனைக் கொண்டிருக்கிறது தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். ஆனால், பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களின் வாயிலாக நமக்கு கிடைக்கும் மின் உற்பத்தி 13,395 மெகாவாட் மட்டுமே. அதேசமயம், தமிழகத்தின் சராசரி மின் தேவையோ சுமார் 15,500 மெகாவாட்டாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மின்நுகர்வு சுமார் 900 லட்சம் யூனிட் அதிகரித்துள்ளன.

senthilbalaji

இந்த நிலையில், மின் உற்பத்திக்கும் மின் தேவைக்குமான இடைவெளியைக் குறைக்க தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் அதிக விலைக்கு மின்கொள்முதல் செய்ய முந்தைய அ.தி.மு.க. அரசு போட்டுள்ள ஒப்பந்ததால் மின்தட்டுப்பாடு இல்லாமல் நகர்த்திவந்துள்ளது மின்வாரியம். ஆனால், இப்படி தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதால், கடன் சுமையில் தத்தளிக்கும் மின் வாரியத்தின் குரல்வளை மேன்மேலும் இறுகிக்கொண்டே வருகிறது. இது ஆபத் தான போக்கு என்கிறார்கள் வாரியத்தின் மின் பொறியாளர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்துறை பொறியாளர் கள் சங்கத்தின் தலைவர் காந்தியிடம் நாம் பேசிய போது, "கடன் மற்றும் நட்டம் ஆகிய இரண்டு விசயங் கள்தான் வாரியம் எதிர்கொண்டி ருக்கிற மிகப்பெரிய சிக்கல்கள். தமிழக மின்வாரியத்தின் தற்போ தைய கடன் சுமை 1,73,000 கோடி. அதேசமயம் வருசத்துக்கு 45,000 கோடி ரூபாய் நட்டத்தையும் சந் தித்துக் கொண்டிருக்கிறது வாரியம். மிகச் சரியான திட்டமிடல்கள் இருந்தால் 4 வருடத்தில் கடனை அடைத்து வாரியத்தை லாபகரமாக மீட்டெடுக்க முடியும்.

உதாரணமாக, விவசாயக் கிணறுகளையெல்லாம் சூரிய சக்தி (சோலார் பேனல்) சிஸ்டத்துக்குள் கொண்டு வரவேண்டும். சோலார் பேனல் மூலம் 16 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரத்தை தனியாரிட மிருந்து வாரியம் வாங்குகிறது. இதற்காக வாரியம் தரக்கூடிய மானியம் மட்டுமே 4,078 கோடி ரூபாய். இப்படிப்பட்ட சூழலில், இருக்கிற எல்லா கிணறுகளையும் 2 ஆண்டுகளில் மூடிவிட்டு, சோலார் பேனல் சிஸ்டத்துக்கு கொண்டு வந்துவிட்டால் 16 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்கத் தேவை யில்லை. மானியமும் கொடுக்கத் தேவையில்லை. இதன்மூலம் வருசத்துக்கு 11,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும். பேனல் அமைக்க 4,800 கோடி வாரியத்துக்கு செலவாகும். இது ஒன்டைம் இன்வெஸ்ட் மெண்ட்தான். இதிலும்கூட முதல் 6 மாதத்திலேயே முதலீடு செய்த ரூ.4,800 கோடியை எடுத்துவிட முடியும். அதன்பிறகு ஒவ்வொரு வருசமும் 11,000 கோடி வாரியத்துக்கு லாபம்தான்.

senthilbalaji

அதேபோல, பேங்கிங் சிஸ்டம்னு ஒன்னு இருக்கு. உருப்படாத திட்டங்களில் இதுவும் ஒன்னு. அதாவது, ஜூன் முதல் செப்டம்பர் வரைதான் காற்றாலை மின்சாரம் அதிகமாகக் கிடைக்கும். அதேசமயம், மழை வெள்ளமும் இந்த மாதங்களில் அதிகம். அப்போது, காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்யவேண்டிய அதிகதேவை வாரியத்துக்கு இருக்காது. ஏனெனில், காற்றாலையை தவிர்த்த மற்ற மின்உற்பத்தித் திட்டங்களிலிருந்து கிடைக்கக்கூடிய மின்சாரமே போதுமானதாக இருக்கும். மேலும், இந்த காலகட்டங்களில் வெளிச்சந்தையில் மின்சாரத்தின் விலையும் மிகக் குறைவாக இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மொத்த மின் சாரத்தையும் வாங்கி, சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, பணத்தை பேங்கில் சேமித்து வைப்பதுபோல. அப்படி சேமித்து வைத்து அந்த மின்சாரத்தை அடுத்த வருட மார்ச் மாதம் வரை பயன்படுத்த வேண்டும். இதுதான் பேங்கிங் சிஸ்டம். எங்கேயாவது, மின்சாரத்தை சேமித்து வைக்க முடியுமா? முடியாது. அறிவியல் ரீதியாகவே இது சாத்திய மில்லை என்று வாரியத்திற்கு பல முறை சுட்டிக்காட்டி யிருக்கிறோம். ஆனால், உண்மைகளை உணராமல், இந்த சிஸ்டத்தைப் பிடித்துக்கொண்டு வாரியமும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

senthilbalaji

இப்படி சாத்தியமில்லாத சிஸ்டத்தால் வாரியத்துக்கு இதுவரை ரூ.20,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கிற தொழிலதிபர்கள் பலரும் காற்றாலை மின்சாரத்தை தயாரித்து வருகிறார்கள். அவர்களின் நன்மைக்காகவே இந்த சிஸ்டத்தை வைத்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்து ஒரு யூனிட் காற்றாலை மின்சாரத்தை அதிகபட்சம் 3 ரூபாய்க்கு வாங்க வேண்டியதை 6 முதல் 8 ரூபாய் வரை வாங்குகிறது வாரியம். இதன்மூலம் மெகா ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பேங்கிங் சிஸ்டத்தை ஒழித்தாலே வருசத்துக்கு 1,400 கோடி ரூபாய் வாரியத்துக்கு லாபம் கிடைக்கும். அடுத்து, நீண்ட கால மின் ஒப்பந்த திட்டங்கள் மூலமும் வாரியம் நட்டத்தை சந்திக்கிறது. ஊழல்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கும் இது போன்றவைகளை ஒழித்தாலே, 4 ஆண்டுகளில் வாரியத்தை மீட்டெடுத்துவிடலாம்'' என்கிறார் மிக அழுத்தமாக.

மின்வாரியத்தின் ஊழல்கள் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்துள்ள அறப் போர் இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் நாம் பேசிய போது...

"நீண்டகால ஒப்பந்தத்தின்படி தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதன் மூலம் மட்டுமே வாரியத்துக்கு 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக பொதுச் சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் அதிகபட்சம் 3 ரூபாய் 50 காசு களுக்கு எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தின் மின் கிரிடினை தேசிய கிரிட்டோடு ஒன்றிணைத்த பிறகு இது இன்னமும் எளிதாகி விட்டது. ஆனால், முந்தைய அ.தி.மு.க. அரசோ சட்டவிரோத ஒப்பந்தங்கள் மூலம் 4 ரூபாய் 90 காசுகள் முதல் 6 ரூபாய் வரை அதிக விலைக்கு கொள்முதல் செய்துள்ளது.

senthilbalaji

இப்படி அதிக விலைக்கு கொள்முதல் செய்வதை 15 முதல் 20 ஆண்டுகள் வரை நீண்டகால ஒப்பந்தங்களாக 11 ஒப்பந்தங்கள் தனியாரிடம் போட்டுக்கொண்டது அ.தி.மு.க. அரசு. அதிக விலை கொடுத்து வாங்குவதன் மூலம் 1 லட்சம் கோடி வாரியத்துக்கு இழப்பு. இதன்மூலம் மெகா ஊழல்கள் நடந்திருக்கின்றன. மேலும், நிலக்கரி இறக்குமதியில் 6,000 கோடி ஊழல் நடந்துள்ளது.

இவைகளுக்கு காரணம், மின்சாரத்துறை அமைச்சர்களாக கடந்த காலங்களில் இருந்த நத்தம் விஸ்வநாதன், தங்கமணி ஆகிய இரு வரும்தான். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளோம். மின் உற்பத்திக்கும் மின் தேவைக்குமான இடைவெளி மிகக்குறைவுதான். அதனால், மின் பற்றாக்குறை எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, அப்போது உடனடியாக மின்சாரத்தை கொள்முதல் செய்ய பொதுச்சந்தையில் மிகக்குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள முடியும். அவர்களிடம் குறுகிய கால ஒப்பந்தத்தையும் போட்டுக்கொள்ள வழிகள் இருக்கின்றன.

அதனால், ஊழல் களுக்காகவே அதிக விலைக்கு கொள்முதல் செய்ய போட்டுக் கொண்டிருக்கும் நீண்டகால ஒப்பந்தங்களை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே வாரியத்தைக் காப்பற்றலாம். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க. ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலினும், வாரியத்தின் புதிய தலைவராக வந்துள்ள ராஜேஷ் லக்கானியும் இதைச் செய்வார்களா என எதிர் பார்க்கிறோம்'' என்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.

மேலும் நாம் விசாரித்தபோது, "அதிக விலைக்கு நீண்டகாலத்திற்கு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்துடன் போட்டுக் கொண்டார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. அவருக்கு பின்பு அதே நடைமுறை தொடர்ந்தபடிதான் இருக்கிறது. இதனால் ஏற்படும் இழப்புகள்தான் வாரியத்தை மீளாத கடன் சுமைக்குத் தள்ளியிருக்கிறது.

அதேபோல, மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியின் தரத்தில் வாரியம் கவனம் செலுத்துவதே இல்லை. தனியாரிட மிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தரமற்ற நிலக்கரியை வாங்குகிறார்கள். ஆனால், தரமான நிலக்கரியை வாங்கியதாகக் கோப்புகளில் மட்டும் குறிப்புகள் இருக்கும்.

இப்படி தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்ததன் மூலம் எடப்பாடி ஆட்சிக் காலங்களில் நடந்த முறைகேடுகள் மட்டுமே 6,000 கோடி ரூபாய். மின்வாரியத்தில் நடந்துள்ள ஊழல்களைக் கண்டறிய ஒரு கமிஷனை தி.மு.க. அரசு நியமித்தால் மெகா ஊழல்கள் அம்பலமாகும்'' என்கின்றனர் வாரியத்தின் மின்பொறியாளர்கள் சங்கத்தினர்.

ஊழல்களைக் களைய வேண்டியதும் வாரியத்தை கடன் சுமையிலிருந்து மீட்க வேண்டி யதுமான பொறுப்பு புதிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இருக்கிறது. அவரது கருத்தை அறிய தொடர்பு கொண்டபோது, தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார் அவர். வாரியம் எதிர்நோக்கியிருக்கும் இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்தால் குறைந்த விலைக்கு மக்களுக்கு மின் சாரத்தைக் கொடுக்க முடியும்; எதிர்காலத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழலும் வராது என்பதே வாரிய அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

nkn220521
இதையும் படியுங்கள்
Subscribe