Advertisment

பேரவையில் பேரலையாக எழுந்த விவாதங்கள்! -மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா

ss

ட்டமன்ற நிகழ்வு கள் குறித்த தனது விமர்சனத்தை இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா.

Advertisment

இந்திய ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்தே, பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மேலாண்மை செய்வதை ஆளுநர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அத்தகைய மோதல் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

assembly

அப்படி ஒரு சூழலில்தான், தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தைத் திருத்தி மாநில அரசுக்கு அந்த அதிகாரத்தை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் 25-ந்தேதி தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாகச் சொல்லி பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க.வும் எதிர்த்தது.

Advertisment

அப்போது, இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதன் அவசியத்தை சபைக்கு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பூஞ்சே ஆணையத்தின் பரிந்துரைகள் மீது 2017-ல் மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு கருத்துக்களை கேட்கிறபோது, அன்றைக்கு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது என்றும் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார் முதல்வர் ஸ்டாலின். அன்று ஆதரித்து இன்று எதிர்க்கும் எடப்பாடி பழனிச்சாமியை அம்பலப்படுத்தும்விதமாக முதல்வரின் பேச்சு இருந்தது.

ss

மசோதா மீது நான் பேசியபோது, "துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அரசுக்கும் அவருக்கும் நிர்வாக மோதல்கள் உருவாகும் என்பதை பூஞ்சே ஆணையம

ட்டமன்ற நிகழ்வு கள் குறித்த தனது விமர்சனத்தை இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா.

Advertisment

இந்திய ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்தே, பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மேலாண்மை செய்வதை ஆளுநர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அத்தகைய மோதல் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

assembly

அப்படி ஒரு சூழலில்தான், தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தைத் திருத்தி மாநில அரசுக்கு அந்த அதிகாரத்தை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் 25-ந்தேதி தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாகச் சொல்லி பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க.வும் எதிர்த்தது.

Advertisment

அப்போது, இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதன் அவசியத்தை சபைக்கு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பூஞ்சே ஆணையத்தின் பரிந்துரைகள் மீது 2017-ல் மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு கருத்துக்களை கேட்கிறபோது, அன்றைக்கு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது என்றும் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார் முதல்வர் ஸ்டாலின். அன்று ஆதரித்து இன்று எதிர்க்கும் எடப்பாடி பழனிச்சாமியை அம்பலப்படுத்தும்விதமாக முதல்வரின் பேச்சு இருந்தது.

ss

மசோதா மீது நான் பேசியபோது, "துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அரசுக்கும் அவருக்கும் நிர்வாக மோதல்கள் உருவாகும் என்பதை பூஞ்சே ஆணையம் வலியுறுத்தியதை முதல்வர் இங்கு சுட்டிக்காட்டினார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட சர்ச் கமிட்டி, தகுதியுள்ள 3 நபர்களை தேர்வு செய்து ஆளுநரிடம் கொடுத்தது. இதில் ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுக்கவேண்டும். ஆனா, 3 பேரையும் நிராகரித்த ஆளுநர் புதிதாக ஒரு சர்ச் assகமிட்டியை அமைக்க உத்தரவிடுகிறார். மோதல் போக்குகளுக்கு இது ஒரு உதாரணம். அதுமட்டுமல்ல, புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக இந்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், புதிய கல்விக்கொள்கை சம்பந்தமாக இன்றைக்கு ஊட்டியில் துணைவேந்தர்களின் மாநாட்டை ஆளுநர் நடத்திக்கொண்டிருக்கிறார். உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங் கள் மட்டுமல்லாமல், தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும்''’என்று அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை சுட்டிக்காட்டினேன்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் அ.தி.மு.க. கோவிந்தசாமி சில கருத்துக்களைச் சொல்ல, அதற்கு அமைச்சர் பெரியகருப்பன் சில கருத்துக்களைச் சொல்ல சலசலப்பு உருவானது. இதைப் பயன்படுத்தி அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. மேலும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்வர்தான் இருக்க வேண்டும் என்பதையும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, வனம் மற்றும் சுற்றுச் சூழல்துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதன்மீது பேசிய விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, ‘’"ஆளுநர் மாளிகை அமைந்துள்ள கிண்டி வளாகம் வனத்துறைக்குச் சொந்தமானது. ஆளுநருக்கு எதற்கு அவ்வளவு பெரிய பங்களா வளாகம்? அந்த இடத்தை வனத்துறை கையகப்படுத்திட்டு ஆளுநருக்கு அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களா ஒதுக்கிவிடலாம்''” என்று பேச, சபையில் ஒரே கலகலப்பு.

26-ந் தேதி சபை கூடியது. பல முக்கிய அறிவிப்புகளைக் கேட்டது அன்றைய சபை. குறிப்பாக, 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், கலைஞரின் பன்முகத்தன்மைகளையும் ஆற்றல்களையும் உருக்கமாக நினைவுகூர்ந்துவிட்டு, கலைஞரின் பிறந்தநாள், அவர் பிறந்த மாவட்டமான திருவாரூரில் ஜூன் 3-ந் தேதி அரசு விழா வாக கொண்டாடப்படும். சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும்'' என்றார். இதனை வாசிக்கும்போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தார் முதல்வர்.

அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சிகளும் இதனை வரவேற்றுப் பேசி னர். பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன், "மத்தி யில் முதன்முறையாக பா.ஜ.க. அரசு (வாஜ்பாய் அரசு) 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ததற்கு காரணம் கலைஞர்தான்''’என்று பதிவு செய்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துரைமுருகன், ‘’ஐந்து வருசம் ஆட்சியில் குறைந்தபட்ச செயல்திட் டம்னு ஒன்றை அமல்படுத்தி எங்கள் வழிக்கு உங்களைக் கொண்டுவந்தோம். உங்கள் வழிக்கு நாங்கள் வரவில்லை'' என்று அரசியல்ரீதியாக ஒரு பஞ்ச் வைத்தார்.

சென்னையிலிருக்கும் தலைமைச்செயலக காலனி பகுதி காவல் நிலையத்தில் நடந்த காவல் மரணம் (கஸ்டோடியல் டெத்) குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், காவல்துறையினரின் சித்ரவதை இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கassembly வேண்டுமென்பதையும் மரணமடைந்த விக்னேஷ் குடும்பத்திற்கு இழப்பீடும், மருத்துவமனையி லுள்ள சுரேஷ் என்பவருக்கு உயர்சிகிச்சையும் வழங்க வேண்டும் என்று பேசினோம். முதல்வரின் பதிலில் அதற்கான உறுதி வழங்கப்பட்டது.

எரிசக்தி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை, தொழிலாளர்கள் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. பா.ஜ.க. வானதி சீனிவாசன் பேசும்போது, "டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்பவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு செல்ல வாகன வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்'' என்று சொல்ல, பேரவையில் சிரிப்பலை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன் பேசும்போது, "இந்தாண்டு மே தினம் நூற்றாண்டை கொண்டாடுகிறது. அரசு அதனை விமரிசையாகக் கொண்டாடவேண்டும்” என்று எடுத்துச் சொன்னார்.

27-ந்தேதி சபை பதட்டமாக கூடியது. தஞ்சை களிமேடு கிராமத்தில் அப்பர் சுவாமி வீதிஉலாவின் போது மின்சாரக் கம்பியில் தேர் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள துயரச் சம்பவத்தை முதல்வர் சபைக்கு தெரிவித்தார். இறந்தவர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தியது பேரவை. இதனையடுத்து, தஞ்சைக்கு கிளம்பிச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த பிரச்சனைக்காக பல கட்சிகளும் கொடுத்திருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிவிட்டு வெளிநடப்பு செய்தது அ.தி.மு.க. காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பேசும்போது, ஜெயலலிதா ஆட்சியில் நடந்த மகாமகம் விபத்து சம்பவத்தை விவரித்த துடன் சபையில் அன்றைக்கு ஜெயலலிதா பேசிய குறிப்புகளை சுட்டிக்காட்டிப் பேசிமுடித்த நிலையில், உறுப்பினர்கள் பலரும் பேசினர். சபை மரபுக்கு மாறாக பா.ஜ.க.வும் இதில் பேசியது.

இந்தச்சூழலில் வெளி நடப்பு செய்திருந்த அ.தி.மு.க. வினர் சபைக்கு மீண்டும் வேகமாக வந்தனர். செல்வப் பெருந்தகையின் மகாமகம் பேச்சுக்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அதனை ஏற்காத சபாநாயகர் தனபால், ”நடந்திருப்பது துயர சம்பவம். இதனை அரசியாலாக்காதீர்கள்”என்றார். மீண்டும் எடப்பாடி பேச முயற்சிக்க, அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்க, அ.தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்துகொண்டு ரகளை செய்தனர். அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைய, சபைக் காவலர்களை அழைத்து அ.தி.மு.க.வினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இந்த 16-வது சட்டமன்றத்தில் முதல்முறை நடந்த வெளியேற்றம் இது.

நான் பேசும்போது, "ஒரு பிரச்சினையின் மீது வெளிநடப்பு செய்து விட்டு அதே பிரச்சனைக்காக மீண்டும் உள்ளே வந்து பேசுவது மரபு கிடையாது. கடந்த காலங்களில் இப்படி எத்தனையோ விபத்துகள் நடந்திருக்கிறது. எந்த முதல்வரும் ஸ்பாட்டுக்கு சென்றதில்லை. ஆனால், விடியற் காலை 3 மணிக்கு விபத்து நடந்ததை அறிந்ததும், சபைகூடியதும் அதனை பேரவைக்கு தெரி வித்துவிட்டு உடனடியாக ஸ்பாட்டுக்கு சென்று மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டி ருக்கிறார் நம் முதல்வர்'' என்று பதிவு செய்தேன்.

பேரவையில் சட்டம், நீதி, சிறைத்துறை மற்றும் செய்தி விளம்பரம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. உறுப்பினர் வேல்முருகன் பேசும்போது, ‘’"பாளையங்கோட்டை சிறையில் கலைஞர் இருந்த அறையை நூலகமாக உருவாக்கி பாதுகாக்க வேண்டும்''’என்று கோரிக்கை வைத்தார்.

உறுப்பினர் அப்துல்சமது பேசும்போது, "விசாரணைக் கைதிகளின் உறவினர்கள் இறந்து விட்டால் அவர்கள் பரோலில் செல்வதில் சிக்கல் இருக்கிறது. தண்டனைக் கைதிகளை பரோலில் அனுப்ப சிறை அதிகாரியே அனுமதியளிக் கிறார். விசாரணைக் கைதிகள் பரோலில் செல்ல நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டிய திருக்கிறது. அவர்களுக்கான அனுமதியையும் சிறை நிர்வாகமே தரவேண்டும். காயிதே மில்லத், திப்பு சுல்தான் மணிமண்டபங்களில் நூலகம் அமைப்பதுடன் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை ஒலி-ஒளிப் படங்களாக காட்சிப்படுத்த வேண்டும்''’என்று கோரிக்கை வைத்தார். மணிமண்டபக் கோரிக்கையை ஏற்கும் வகையில் உறுதியளித்தார் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்.

nkn300422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe