Advertisment

மரண தண்டனை! இக்கட்டில் ஷேக் ஹசீனா!

bengal

ங்களாதேஷின் சர்வதேச குற்றத் தீர்ப்பாயம், நவம்பர் 18-ஆம் தேதி, பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மாணவர் புரட்சியை இரும்புக் கரம்கொண்டு அடக்கமுயன்றவருமான ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

Advertisment

பங்களாதேஷில் 2024-ஆம் ஆண்டில், அந்நாட்டின் அரசுக்கெதி ராக மாணவர் புரட்சி வேகம்பெறத் தொடங்கியது. மாணவர் போராட் டத்தைப் புரிந்துகொள்ள அங்கு அரசு வேலைவாய்ப்புகளில் நிலவிய கோட்டா முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். பங்களாதேஷின் அரசு வேலைகளில் 30% சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களது வாரிசுகளுக்குப் போய்விடும். ஏழை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினருக்கு 15% இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 1% இடங்கள். இத னால் திறமையான மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை என்ற மனக்குறை நிலவியது. மேலும், இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30% இடங்களை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் போலிச்சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டு கட்சிக்காரர்களுக்க

ங்களாதேஷின் சர்வதேச குற்றத் தீர்ப்பாயம், நவம்பர் 18-ஆம் தேதி, பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மாணவர் புரட்சியை இரும்புக் கரம்கொண்டு அடக்கமுயன்றவருமான ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

Advertisment

பங்களாதேஷில் 2024-ஆம் ஆண்டில், அந்நாட்டின் அரசுக்கெதி ராக மாணவர் புரட்சி வேகம்பெறத் தொடங்கியது. மாணவர் போராட் டத்தைப் புரிந்துகொள்ள அங்கு அரசு வேலைவாய்ப்புகளில் நிலவிய கோட்டா முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். பங்களாதேஷின் அரசு வேலைகளில் 30% சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களது வாரிசுகளுக்குப் போய்விடும். ஏழை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினருக்கு 15% இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 1% இடங்கள். இத னால் திறமையான மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை என்ற மனக்குறை நிலவியது. மேலும், இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30% இடங்களை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் போலிச்சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டு கட்சிக்காரர்களுக்கும், பணம் தருபவர்களுக்கும் அரசு வேலையை பெற்றுத்தர பயன்படுத்தினர். இது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இந்த கோட்டா நடைமுறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. பங்களாதேஷின் முக்கிய மாணவர் அமைப்பான "சத்ரா லீக்' அமைதியாகப் போராட் டத்தைத் தொடங்க, அவர்களது போராட்டத்தை நசுக்க காவல்துறை முனைப்புக்காட்டியது. ஜூலை மாதம் நடந்த போராட்டத்தில் பெரிய அளவில் உயிர்ச்சேதங்கள் நடந்தன. அதுதான் இந்தப் போ ராட்டத்தின் திருப்புமுனையானது.

Advertisment

பங்களாதேஷ் மாணவர் போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா. சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது. தற் போது அமைந் துள்ள இடைக் கால அரசோ, 800 பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

அதற்குமுன்பே தேர்தல்களில் முறைகேடும், விதிமுறைகள் மீறப்படுவதாகவும் கூறி எதிர்க் கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்ததும் நடந்திருந் தது. இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை அடக்க, காவல்துறை, ராணுவம் இவற்றை முழுவீச்சில் பயன்படுத்தினார் ஷேக் ஹசீனா. எனினும், மாணவர் போராட்டத்தை அடக்கமுடி யாத நிலையில் அவர் பங்களாதேஷிலிருந்து தப்பியோடினார். இதையடுத்து, அங்கே இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில்தான் ஹசீனா மீதான குற்றத்தை விசாரிக்க சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

இந்த நீதிமன்றத்துக்கு கோலம் மோர்டுசா மொசும்டர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். முழுமையான விசாரணைக்குப் பின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி டாக்காவின் சங்கர்புல் பகுதியில் ஆறு போராட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் போராடிய மாணவர்கள்மீது ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், உயிராபத்து விளைவிக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்திய குற்றச்சாட்டும் உண்டு. ஹசீனாவின் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு மறுக்கப்பட்டது. இந்த வழக்கில் பங்களாதேஷின் முன்னாள் ஐ.ஜி. சௌத்ரி அப்துல்லா அல்லிமாமுன் அப்ரூவராகி சாட்சியளிக்க, அவர் ஐந்தாண்டு சிறைத்தண்டனையுடன் தப்பித்துள்ளார்.

bengal1

இந்நிலையில் மரண தண்டனையுடன், ஹசீனா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியாவிடம், "ஷேக் ஹசீனாவையும், அந்நாட் டின் உள்துறை அமைச்சர் அஸாதுஸ்மான் கானையும் ஒப்படைக்கும்படி கோருகிறோம். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு தங்குமிடம் வழங்குவது "நட்பற்ற' செயலாகவும், நீதியைப் புறக்கணிப்பதாகவும் கருதப்படும்''” என்று கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பைப் புறக்கணித்திருக்கும் ஷேக்ஹசீனா, இந்த நீதிமன்றத்தை கங்காரு நீதிமன்றம் என விமர்சித்ததுடன், அவாமி லீக் கட்சி நவம்பர் 18-ஆம் தேதி நாடு முழுவதும் பந்த் நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. அதேசமயம் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா, மேல்முறையீடு செய்யமுடியும். அதற்கு அவர் பங்களாதேஷுக்கு வந்து சரணடைய வேண்டும். பிறகே மேல்முறையீட்டு வாய்ப் பளிப்போம் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் சர்வதேச தீர்ப்பாயம்    1971-ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளுக்காக அமைக்கப்பட்டது. ஆனால், அவாமி லீக் ஆட்சிக் காலத்தில் (2009- 2024) ஜமாத்தே இஸ்லாமி, பாகிஸ்தான் நேஷனலிஸ்ட் பார்ட்டி தலைவர்களுக்கு எதிராக இதே தீர்ப்பாயம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இது "அரசியல் எதிரிகளை அழிக்கும் கருவி" என்று விமர்சனம் அக்காலகட்டத்தில் எழுந்தது. இடைக்கால அரசு, அதே யுக்தியை ஹசீனாவுக் கெதிராகப் பயன்படுத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

ஹசீனா இந்தியாவில் இருப்பதால், அவர் இல்லாமல் நடந்த விசாரணை நியாயமற்றது. அவர் தலையிடவோ, சாட்சிகளை அழைக்கவோ வாய்ப்பு இல்லை. ஐ.நா. உயரதிகாரி ரவினா சம்தாசானி, "சர்வதேச நியாயத் தரங்களை இந்த தீர்ப்பாயம் பூர்த்தி செய்யவில்லை'' என்று கூறியுள்ளார். தவிரவும் இப்போதிருக்கும் இடைக்கால அரசின் விருப்புவெறுப்புகளுக்கேற்ப, இந்தத் தீர்ப்பாயம் செயல்பட்டுள்ளதென்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா ஹசீனாவை ஒப்படைக்கப்போகிறதா… அல்லது அவரைப் பாதுகாக்கப்போகிறதா? என்ன முடிவெடுக்கப் போகிறது? என்ற கேள்வி யெழுந்துள்ளது.

nkn221125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe