துரத்தும் மரண தண்டனை!  தப்புவாரா கேரள நர்ஸ்..

புதுப்பிக்கப்பட்டது
keralanurse

 

கேரள மாநிலம் முழுவதும் ஏமன் நாட்டை நோக்கியே "திக்... திக்...' துடிப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும், நிமிஷா மரண தண்டனையிலிருந்து தப்புவாரா என்ற எதிர்பார்ப்போடு நகர்ந்து கொண்டிருக்கிறது. தொடர் முயற்சிகளால் தற் காலிகமாக மரண தண்டனை நிறுத்திவைப்பு என்ற செய்தி வந்தாலும், அதிலிருந்து முழுமையாக மீளாததால் பரபரப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது.

யார் அந்த நிமிஷா? கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கொல்லங் கோட்டைச் சேர்ந்தவர் நிமிஷா ப்ரியா. செவிலியர் படிப்பு முடித்த நிமிஷா, செவிலியர் பணிக்காக 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டுக்கு சென்றார். சிறிது காலம் ஏமன் நாட்டின் தலைநகரான சனாவிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி யவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பிவந்து, டோமி தாமஸ் என்பவரை மணமுடித்தார். பின்னர் கணவரோடு ஏமனில் வசித்துவந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர், 2014ஆம் ஆண்டு, ஏமனில் அரசியல் குழப்ப சூழலில் இவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டதால், நிமிஷா மட்டும் ஏமனில் இருந்துகொள்ள, அவரது கணவரும், மகளும் கேரளாவு

 

கேரள மாநிலம் முழுவதும் ஏமன் நாட்டை நோக்கியே "திக்... திக்...' துடிப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும், நிமிஷா மரண தண்டனையிலிருந்து தப்புவாரா என்ற எதிர்பார்ப்போடு நகர்ந்து கொண்டிருக்கிறது. தொடர் முயற்சிகளால் தற் காலிகமாக மரண தண்டனை நிறுத்திவைப்பு என்ற செய்தி வந்தாலும், அதிலிருந்து முழுமையாக மீளாததால் பரபரப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது.

யார் அந்த நிமிஷா? கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கொல்லங் கோட்டைச் சேர்ந்தவர் நிமிஷா ப்ரியா. செவிலியர் படிப்பு முடித்த நிமிஷா, செவிலியர் பணிக்காக 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டுக்கு சென்றார். சிறிது காலம் ஏமன் நாட்டின் தலைநகரான சனாவிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி யவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பிவந்து, டோமி தாமஸ் என்பவரை மணமுடித்தார். பின்னர் கணவரோடு ஏமனில் வசித்துவந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர், 2014ஆம் ஆண்டு, ஏமனில் அரசியல் குழப்ப சூழலில் இவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டதால், நிமிஷா மட்டும் ஏமனில் இருந்துகொள்ள, அவரது கணவரும், மகளும் கேரளாவுக்கே திரும்பினர். 

மருத்துவமனைகளில் நர்சாகப் பணியாற்று வது போதுமான வருமானத்தைத் தராததால், அப்பணியிலிருந்து விலகி, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டை சேர்ந்த தலால் அப்டோ மஹ்தி என்பவரோடு இணைந்து ஒரு கிளினிக்கை தொடங்கினார் நிமிஷா. இந்நிலையில், 2017ஆம் ஆண்டில், நிமிஷாவின் பார்ட்னரான தலால் மஹ்தி யின் உடல், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலை யில், ஒரு தண்ணீர்த் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த ஒரு மாதத்தில், ஏமன் நாட்டு எல்லையில் தப்பியோட முயன்ற போது நிமிஷா கைது செய்யப்பட்டார். 

அவரிடம் விசாரணை நடத்தியதில், தன்னை திருமணம் செய்துகொண்டதாக மஹ்தி போலியான டாகுமெண்டுகளை தயாரித்ததாக வும், தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்திய தாகவும், தன்னிடமிருந்த பணத்தையும், பாஸ்போர்ட்டையும் பிடுங்கிக்கொண்டு, துப்பாக்கியைக் காட்டி கொலை செய்வதாக மிரட்டியதாகவும் தெரிவித்தார் நிமிஷா. பிடுங்கிவைத்திருந்த பாஸ்போர்ட்டை பெறுவதற்காக மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்ததாகவும், ஆனால் எதிர்பாராதவித மாக மருந்தின் வீரியம் தாங்காமல் அவர் மரணமடைந்ததாகவும் குறிப்பிட்டார். மரணித்த மஹ்தியின் உடலை மறைப்பதற் காக, ஹனான் என்ற இன்னொரு பெண் ணோடு இணைந்து உடலைத் துண்டுதுண் டாக வெட்டி, அங்குள்ள தண்ணீர்த் தொட்டி ஒன்றில் போட்டு மறைத்ததாகவும் குறிப்பிட்டார். இவர் கொலை செய்யும் நோக்கத்தோடு மயக்க மருந்து கொடுக்க வில்லையென்றும், தவறுதலாக மரணம் நிகழ்ந்ததாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதாடியபோதும், சனாவிலுள்ள நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்த விவகாரத்தில் இன்னொரு சிக்கல், நிமிஷா கைது செய்யப்பட்டு சிறை யிலடைக்கப்பட்டுள்ள தலைநகர் சனா, ஹௌதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட் டிலுள்ள பகுதி. ஏமன் நாட்டோடுதான் இந்தியா தொடர்பிலிருக்கிறது. ஹௌதி கிளர்ச்சியாளர்களின் அமைப்போடு தொடர்பில் இல்லாத சூழலில், நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலி ருந்தே இவ்விவகாரத்தில் நிமிஷாவின் குடும்பத்தினரோடு தொடர்ந்து தொடர்பி லிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நிமிஷாவின் மரண தண்டனைக்கு ஜூலை 16ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டதும், நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற அவரது குடும்பத்தினர், பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டனர். 

keralanurse1

"சேவ் நிமிஷா' என்ற குழு சார்பாக வழக்கறிஞர் சுபாஷ்சந்திரன் இதுதொடர் பான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். 

மஹ்தி குடும்பத்தினரைப் பொறுத்த வரை, பெரிதும் கொந்தளிப்பான மனநிலை யில் இருந்ததால் இவ்விவகாரம் மிகவும் உணர்ச்சிகரமானதாக பார்க்கப்பட்டது. நிமிஷாவை மரணத் திலிருந்து மீட் பதற்கு மஹ்தியின் குடும்பத்தினரோடு தொடர்புகொள்வதே சரியான வழியென முடிவெடுத்து, ஏமனில் நிமிஷாவின் வழக்கை கையாண் டுவரும் வழக்கறிஞர் சாமுவேல் ஜெரோம், மஹ்தி யின் குடும்பத் தினரை தொடர்புகொள்ள பல வழிகளில் முயன்றார். பின்னர், முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லி யார் என்பவர் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய முயன் றார். அதோடு, ஷேக்ஹபீப் உமர்பின் ஹபீஸ் என்ற புகழ்பெற்ற சூஃபியும் இவ்விவகாரத் தில் தலையிட்டு, மஹ்தி குடும்பத் தினரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில், முடிவை மறுபரி சீலனை செய்ய மஹ்தி குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். 

ஷரியா சட்டத்தை பின்பற்றக்கூடிய ஏமன் இஸ் லாமிய முறைப்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டவர் அதிலிருந்து தப்புவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒப்புதல் கொடுத்தால் தண்டனையிலிருந்து தப்பலாம். இதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குருதித் தொகை அல்லது தியா எனப்படும் நஷ்டயீட்டுத் தொகை பேசி முடிவெடுத்து வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கக்கூடும். அந்த வகையில் மஹ்தி குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. இதில் குருதித்தொகையாக இந்திய மதிப்பில் 8.5 கோடியிலிருந்து 11 கோடிவரை தருவதற்கான பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அதுபோக மேலும் சில நிபந் தனைகளுக்கும் பேச்சுவார்த்தை குழுவினர் உடன்பட்டி ருக்கின்றனர். இதற்கான தொகையை வழங்குவதற்கும் ஒரு அமைப்பு முன்வந்திருக்கிறது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட, தற்போதைக்கு மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியான முயற்சிகளால் மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கான நம்பிக்கை எழுந்துள்ளதாக பேச்சுவார்த்தைக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.                    

 

nkn190725
இதையும் படியுங்கள்
Subscribe