தென்காசி மாவட்டம் புளியங் குடி அருகிலுள்ள டிஎன்.புதுக்குடியில் பெட்டிக்கடை நடத்தி யவர் தங்கசாமி. அவர் சட்டவிரோதமாக மது விற்பனையிலும் ஈடுபட்டதாக, கடந்த ஜூன் 12ஆம் தேதி ரெய்டு வந்த புளியங் குடி போலீசார், தங்கசாமியை கைது செய்து, சிவகிரி கோர்ட் டில் ரிமாண்ட் செய்து, அன்றைய தினமே பாளை மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஜூன் 14ஆம் தேதி அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக, பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தங்கசாமியை கொண்டுசெல்ல, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisment

ff

தங்கசாமி சிறையில் நெஞ்சு வலியால் மரணமடைந்ததை நம்ப மறுத்து, உடலை வாங்க மறுத்த பெற்றோரும், உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்பாட்டுக்கு வந்த கடையநல்லூர் தாசில்தார் மற்றும் டி.எஸ்.பி. சுதிர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பலனளிக்காததால், நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் திரிவேணி விசாரணை நடத்தியிருக்கிறார். அவர் முன்னிலையிலேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டது.

dd

Advertisment

ஜூன் 17ஆம் தேதி வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தங்கசாமியின் உடலில் தொடை மற்றும் விலா எலும்புப் பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும், இறப்பதற்கு 3-4-நாட்களுக்கு முன்பு இக்காயங் கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும், மரணத்துக்கு அவை காரணமல்ல என்றும் சொல்லப் பட்டது. பிரேதப் பரிசோதனை வீடியோ நகல் வேண்டுமென்றும், போலீசார் மீது கொலை வழக்கும், வன்கொடு மைத் தடுப்பு வழக்கும் பதிய வேண்டுமென் றும் கூறி உடலை வாங்க மறுத்தனர். இந்நிலையில், ஜூன் 22ஆம் தேதி, தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், தொகுதி எம். எல்.ஏ. சதன் திருமலைக்குமார், தி.மு.க.வின் மா.செ. வும் எம்.எல்.ஏ.வுமான ராஜா உள்ளிட்டவர்கள், தங்கசாமியின் உறவினர்களோடு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணமும், தங்கசாமியின் தாயாருக்கு பென்ஷன் வழங்கவும், அவரது சகோதரருக்கு நகராட்சியில் தற்காலிக வேலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று கலெக்டர் உறுதியளித்தார். எம்.எல்.ஏ. ராஜா, தி.மு.க.சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றார்.

தாயார் கருப்பி அம்மாளை சந்தித்தபோது, "அரசாங்கம் நடவடிக்கை எடுக்குறோம்னு சொன்னதால உடலை வாங்குறோம்யா. அவம் பாக்குற கூலி வேலையில கெடைச்ச 250 ரூவாயில தான்யா குடும்பப்பாடு கழியும். எப்ப புடிச்சிட்டுப் போனாங்க, என்ன நடந்ததுன்னே தெரியலைய்யா." என்றார் கண்ணீருடன். தங்கசாமி மரணத்தில் சந்தேகத்தை தெளிவாக்க வேண்டியது சிறைத்துறை, காவல்துறையின் கடமை!

-செய்தி, படங்கள்: ப.இராம்குமார்