மிழகத்தின் தலைமை செவிலியர் கண்காணிப்பாளரான ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா தொற்றால் உயிரிழந்ததை தமிழக அரசு, மறைத்த கொடூரம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

dd

இதுகுறித்து நாம் மேலும் விசாரித்தபோது, மருத்துவமனையில் எழுதப்படும் கேஸ் ஷீட் எனப்படும் மருத்துவக் குறிப்புதான் நீதிமன்றத்திலேயே ஆதாரமாக தாக்கல் செய்யப்படும். அப்படியிருக்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையிலுள்ள அனைத்து நர்ஸுகளுக்கும் தலைமை கண்காணிப்பாளரான 58 வயதான ஜோன் மேரி பிரிசில்லாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மூன்று மருத்துவர்கள் கேஸ் ஷீட்டில் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டிருந்தபோதும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் ஜெயந்தி மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

அவருக்கு, கொரோனா நெகட்டிவ் என்றால் ஏன் கொரோனா பாசிட்டிவ் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்? அவரது, குடும்பத்தின ரைக்கூட பார்க்கவிடாமல் ஏன் தனிமைப்படுத்தவேண்டும்? டீன் ஜெயந்தியுடன் எப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜோன் மேரி பிரிசில்லாவை வார்டில் வந்துகூட பார்க்க வில்லையே ஏன்?’’என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்புகிறார்கள்.

""அரசுக்கு கெட்டபெயர் வரக்கூடாது, நிவாரணத் தொகை அளிப்பதை தவிர்க்கவேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்குத்தான் மருத்துவர் கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை மறைக்கிறது அரசு''’’என்று குற்றஞ்சாட்டும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தி நம்மிடம், ""மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லிவந்ததை நிறுத்திவிட்டார்கள். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையிலுள்ள மூன்று பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே பாசிட்டிவ் என்றால் மொத்த பயிற்சி மருத்துவர்களும் 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், எழும்பூர் அரசு தாய் சேய்நல மருத்துவமனை , அரசு கோஷா மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியிருக்கிறது. பாசிட்டிவ் ஆனாலே 2 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், யாருக்குமே வழங்கப்படவில்லை. அப்படியிருக்க, கொரோனாவால் இறந்தால் 50 லட்ச ரூபாய் நிதி கொடுக்க வேண்டும் என்பதற்காக மறைக்கப்படுகிறது நர்ஸிங் சூப்பிரெண்டெண்ட் ஜோன் மேரி பிரிசில்லாவின் கொரோனா மரணம். சில, நேரங்களில் பரிசோதனைகளில் தவறான நெகட்டிவ் காண்பிக்கப்படுவதால் கொரோனா சூழலில் பணியாற்றி இறக்கும் அனைவருக்கும் 50 லட்ச ரூபாய் நிதியளிக்கவேண்டும்''’ என்கிறார் கோரிக்கையாக.

மருத்துவப்பணியாளர்கள் விஷயத்திலேயே அரசாங்கம் இப்படி ஏமாற்றுகிறது என்றால் பொதுமக்களின் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

-மனோசௌந்தர்