சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் லட்சக் கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இருவழிச்சாலையாக இருந்ததை நான்கு வழிச் சாலையாக மாற்றம் செய்தும் விபத்துக்கள் மட்டும் குறையவே இல்லை. இந்த நெடுஞ்சாலையில் திண்டிவனம் முதல் உளுந்தூர்பேட்டை வரை விபத்துக்கள் ஏற்படும்போது விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற, இறந்தவர்கள் உடல் களை பிரேதப் பரிசோதனை செய்ய முண்டியம்பாக்கம் மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது வழக்கம். அதில்தான் சமீபகாலமாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா மாம்பாக் கம், வாழைப்பந்தல், லாடவரம் ஊர்களைச் சேர்ந்த 22 பேர் ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடித்து 25-ஆம் தேதி மாலை அங்கிருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டை -விழுப்புரம் இடையிலுள்ள மாம்பாக்கம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பெரிய வாகை மரத்தின்மீது மோதியது.

g

இதில் முருகன், சக்தி, செல்வம், துரை, ராமலிங்கம், ரவி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் தனர். மற்ற 16 பேர் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி, சுப்பிரமணியன் உட்பட 7 பேர் உயிரிழக்க, மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இறந்துபோன 7 பேர் உடல்களையும் பிரேதப் பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட வர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கவேண்டிய முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், விபத்து நடந்த பகுதி கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் வருகிறது. எனவே மேற்படி ஏழு உடல்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று பிரேதப் பரிசோ தனை செய்யுமாறு கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி யடைந்த இறந்துபோனவர் களின் உறவினர்கள், முண்டி யம்பாக்கத்திலிருந்து கள்ளக் குறிச்சி செல்லவேண்டு மானால் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண் டும். இதனால் பல்வேறு சிர மங்கள் ஏற்படும். எனவே இங் கேயே பிரேதப் பரிசோதனை செய்து உடல்களை எங்க ளிடம் ஒப்படைக்கவேண்டு மென்று வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

ஆனால் முண்டியம்பாக் கம் மருத்துவக் கல்லூரி நிர் வாகம், இங்கு பிரேதப் பரி சோதனை செய்யமுடியாது. கள்ளக்குறிச்சிக்குத்தான் எடுத் துச் செல்லவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். துக்கத் திலும் சோகத்திலும் இருந்த அவர்கள், இதுகுறித்து ஆரணி பகுதியைச் சேர்ந்த அமைச்சர் காந்திக்கு தகவலளித்துள்ளனர். அமைச்சர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி யிடம் எடுத்துக்கூறியதன் பிறகு பிரேதப் பரிசோதனை செய்து உடல்களை ஒப்படைத்துள்ள னர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. சமீபகாலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் இப்படி விபத்தில் இறந்துபோனவர்களின் உடல் களை சம்பந்தப்பட்ட மாவட்ட மருத்துவமனை களுக்கு கொண்டுசென்றுதான் பிரேதப் பரிசோத னை செய்யவேண்டுமென்று வலியுறுத்தி வரு கிறார்கள். முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயலுக்கு இன்னொரு சம்பவமும் உதாரணம் என்கிறார் இருவேல்பட்டு பகுதி பா.ம.க. கட்சிக்காரரும் சமூக ஆர்வலரு மான எல்.எஸ்.ஹரி.

"எங்கள் ஊருக்கு அருகில் தேசிய நெடுஞ் சாலை செல்கிறது. கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி மடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி டிராக்டர் டிப்பரில் விறகு லோடு ஏற்றிக் கொண்டு வந்தபோது, தனியார் ஆம்னி பஸ் ஒன்று மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். அவ ரது விவகாரத்திலும், குப்புசாமியின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இறந்துபோன குப்புசாமியின் உறவினர்கள் அன்று இரவு 7 மணியளவில் மருத்துவமனை நுழைவாயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பின்பு மாவட்ட ஆட்சியர் பழனி மருத்துவ மனை நிர்வாகத்திடம் பேசியபிறகு, மறுநாள் காலை 10 மணியளவில் குப்புசாமி உடலை பிரேதப்பரிசோதனை செய்துதருவதாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டது. புதுச்சேரியிலுள்ள ஜிப்மர், பிம்ஸ் மருத்துவ மனைகள், அரசு மருத்துவமனைகள், நமது தமிழகத்திலுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக்கு செல்பவர்களிடம் மாநிலம் தாண்டி இங்கு யாரும் சிகிச்சைக்கு வரக்கூடாது என்று தெரிவித்தால் தமிழக மக்களின் நிலைமை என்னவாகும்? இதை முண்டியம்பாக்கம் மருத்துவமனை அதிகாரிகள் சிந்திக்கவேண்டும்''’என்கிறார்.

Advertisment

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, "செங்கல்பட்டு முதல் கடலூர் மாவட்டம் ராமத்தம் வரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்து களில் உயிரிழப்பவர்களை பிரேதப் பரி சோதனைக்கு இங்குதான் கொண்டுவருகிறார் கள். மருத்துவனையில் டாக்டர்கள் பற்றாக் குறை உள்ளது. இதனால் விபத்தில் இறந்து போனவர்கள் உடல்களை பிரேதப் பரிசோ தனை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. மருத்துவர்களுக்கும் அதிக பணிச்சுமை. நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் குடும்பம் உள்ளது. எங்கள் நிலைமையையும் கருத்தில் கொள்ளவேண்டும்''’என்கிறார்கள்.

தமிழக அரசுதான் இதற்கொரு தீர்வு காணவேண்டும்.

-எஸ்.பி.எஸ்.