Advertisment

ராங்கால் மாண்புமிகு உதயநிதி! ஷிஃப்ட் ஆகும் சீனியர்கள்! பா.ஜ.க.வில் சேர டீலிங் பேசிய தமிழக எம்.பி.! எடப்பாடித் தரப்பு மா.செ.க்களை வளைக்கும் ஓபி.எஸ்.!

rr

"ஹலோ தலைவரே, இந்த மாதம் 14 ஆம் தேதி வாக்கில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று கோட்டை வட் டாரத்தில் பரபரப்பாகத் தகவல் அடிபடுது.''

Advertisment

"ஆமாம்பா, தி.மு.க. இளைஞரணியினர் கண்டுவரும் கனவும் ஒன்றும் நிறைவேறப் போகுதாமே?''”

rr

"அதேதாங்க தலைவரே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கப் போகிறார் என்றும், அமைச்சர் மெய்யநாதனிடம் இருக்கும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, இவருக்கு வழங்கப்படலாம் என்றும், மெய்யநாதனுக்கு வேறு துறை ஒதுக்கப்படும் என்றும், கூடவே ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் சிலரின் துறை களும் மாற்றி அமைக்கப்பட இருக்கின்றன என்றும், கோட்டைத் தரப்பில் பரபரப்பாக டாக் அடிபடுது. ஆனால் இதுபற்றி யாரும் வாயைத் திறக்க மறுக்கிறாங்க. அதேநேரம் இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதைப் பார்க்க முடியுது.''”

"காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி, டெல்லிக்குப் போய் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திச்சிருக் காரே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த 4ஆம் தேதி டெல்லி சென்ற காங்கிரஸ் கட்சியின் சீனியர் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி, அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திச்சிருக்கார். இந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரசின் நிலைமை, கூட்டணி விவகாரம்னு பல்வேறு விசயங்களை கார்கேவிடம் அவர் பகிர்ந்துக்கிட் டாராம். அப்போது கார்கே, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் குறித்து தனக்கு வந்த புகார்களைப் பற்றி, விஜயதாரணி யிடம் விசாரிக்க, அதன் உண்மைத் தன்மை குறித்தும், அதன் பின்னணி குறித்தும் தாரணி விவரித்தாராம். அப்ப, சந்தடிச்சாக்கில் ஒரு ஆப்ளிகேசனையும் அவர் கார்கேயிடம் வச்சிருக்கார்.''”

"தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வேணும்னு கேட்டாரா?''”

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, மூத்த காங்கிரஸ் உறுப்பினர் என்ற முறையில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவி போனமுறையே எனக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கணும். ஆனால், அது கைநழுவிடிச்சி. இருந்தும் தலைமை கேட்டுக் கிட்டதால் அப்ப நான் அமைதியா இருந்துட்டேன். இந்த முறை யாவது தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு எனக்குக் கிடைக்கணும்னு விரும்பறேன். இந்தப் பொறுப்புக்கு அண்மைக் காலத்தில் பெண்கள் யாரும் நம் கட்சியில் நியமிக்கப்பட்டதில்லை. அதனால் பெண்களுக்கான பிரதி நிதித்துவம் என்ற அடிப்படை யிலும் எ

"ஹலோ தலைவரே, இந்த மாதம் 14 ஆம் தேதி வாக்கில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று கோட்டை வட் டாரத்தில் பரபரப்பாகத் தகவல் அடிபடுது.''

Advertisment

"ஆமாம்பா, தி.மு.க. இளைஞரணியினர் கண்டுவரும் கனவும் ஒன்றும் நிறைவேறப் போகுதாமே?''”

rr

"அதேதாங்க தலைவரே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கப் போகிறார் என்றும், அமைச்சர் மெய்யநாதனிடம் இருக்கும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, இவருக்கு வழங்கப்படலாம் என்றும், மெய்யநாதனுக்கு வேறு துறை ஒதுக்கப்படும் என்றும், கூடவே ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் சிலரின் துறை களும் மாற்றி அமைக்கப்பட இருக்கின்றன என்றும், கோட்டைத் தரப்பில் பரபரப்பாக டாக் அடிபடுது. ஆனால் இதுபற்றி யாரும் வாயைத் திறக்க மறுக்கிறாங்க. அதேநேரம் இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதைப் பார்க்க முடியுது.''”

"காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி, டெல்லிக்குப் போய் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திச்சிருக் காரே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த 4ஆம் தேதி டெல்லி சென்ற காங்கிரஸ் கட்சியின் சீனியர் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி, அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திச்சிருக்கார். இந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரசின் நிலைமை, கூட்டணி விவகாரம்னு பல்வேறு விசயங்களை கார்கேவிடம் அவர் பகிர்ந்துக்கிட் டாராம். அப்போது கார்கே, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் குறித்து தனக்கு வந்த புகார்களைப் பற்றி, விஜயதாரணி யிடம் விசாரிக்க, அதன் உண்மைத் தன்மை குறித்தும், அதன் பின்னணி குறித்தும் தாரணி விவரித்தாராம். அப்ப, சந்தடிச்சாக்கில் ஒரு ஆப்ளிகேசனையும் அவர் கார்கேயிடம் வச்சிருக்கார்.''”

"தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வேணும்னு கேட்டாரா?''”

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, மூத்த காங்கிரஸ் உறுப்பினர் என்ற முறையில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவி போனமுறையே எனக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கணும். ஆனால், அது கைநழுவிடிச்சி. இருந்தும் தலைமை கேட்டுக் கிட்டதால் அப்ப நான் அமைதியா இருந்துட்டேன். இந்த முறை யாவது தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு எனக்குக் கிடைக்கணும்னு விரும்பறேன். இந்தப் பொறுப்புக்கு அண்மைக் காலத்தில் பெண்கள் யாரும் நம் கட்சியில் நியமிக்கப்பட்டதில்லை. அதனால் பெண்களுக்கான பிரதி நிதித்துவம் என்ற அடிப்படை யிலும் எனக்கு அந்தத் தகுதி உண்டு. அதனால் எனக்கு ஒருமுறை வாய்ப்பளியுங்கள்னு அவர் கேட்டுக்கொண்டாராம். மேலும், இன்னொரு பாயின்டையும் அவர் அங்கே வச்சிருக்கார்.''’

"என்ன?''”

"கட்சியை விட்டுப் போய் தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டு, மீண்டும் இங்கே தஞ்சமடைந் தவர்களுக்கும் கூட இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கு. அதுபோல் வேறு கட்சியிலிருந்து காங்கிரசுக்கு வந்தவர்களுக்கும் தலைவர் பதவி கொடுக்கப் பட்டிருக்கு. அதனால், இங்கே கட்சி விசுவாசிகள் பலரும் விரக்தியில் இருக்காங்க. அதனால் கே.எஸ்.அழகிரியை மாற்றிவிட்டு, புதிய தலைவரை நியமிக்கும் பட்சத்தில், காங்கிரஸுக்குத் துரோகம் செய்யாதவர்கள், காங்கிரசை விட்டு வெளியேறாதவர்கள், யார் யார்னு சீர்தூக்கிப் பார்த்து, சரியான நபருக்கு வாய்ப்பளியுங்கள். அதுதான் தலைமை மீது கட்சி தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் கார்கேவிடம் விஜயதாரணி உருக்கமாகக் கேட்டுக்கிட்டாராம். கார்கேவோ, இதுபற்றி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி, உரிய நேரத்தில் தலைமை முடிவெடுக்கும்னு சொல்லி அனுப்பியிருக்கார்.’''’

"இந்தப் பரபரப்புக்கு நடுவே தமிழக முதல்வர் ஸ்டாலினையும் விஜயதாரணி சந்திச்சிருக்காரே?”

"டெல்லி சென்ற விஜயதாரணி, தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது, பிரதமர் மோடி கூட்டிய ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினும், அதே தமிழ்நாடு இல்லத்தில்தான் தங்கினார். அவர் வந்ததை அறிந்த விஜயதாரணி, ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்த சந்திப்பில், ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் சிறப்பு குறித்து தனது மகிழ்ச்சியை உற்சாகமாக ஸ்டாலினிடம் தெரிவித்தாராம் விஜயதாரணி. அதேசமயம், அரசியல் ரீதியாகவும் அவர் பேசியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் தங்களுக்குள் பரபரப்பாக விவாதிக்கிறார்களாம்.''”

"அண்மையில் சென்னைக்கு வந்த முன்னாள் துணை ஜனாதிபதியும் பா.ஜ.க.வின் சீனியர் தலைவர்களில் ஒருவருமான வெங்கையா நாயுடுவை, காங்கிரஸ் எம்..பி. ஒருவர் ரகசியமாக சந்திச்சிருக்காரே?''”

rr

"தமிழக காங்கிரசில் மொத்தம் 8 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், கடந்த வாரம் சென்னைக்கு வந்த வந்த வெங்கையா நாயுடுவைச் சந்தித்து நீண்டநேரம் ஆலோசித் திருக்கிறார். அப்போது அவர், "நான் தற்போது ஜெயித்துள்ள தொகுதியில் மக்களின் நன்மதிப்பை நிறைய பெற்றிருக்கிறேன். சிட்டிங் தொகுதிங்கிற முறையில் காங்கிரசில் மீண்டும் அடுத்த முறையும் எனக்கே வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மீண்டும் காங் கிரசில் இருந்து ஜெயிக்க எனக்கு விருப்பமில்லை. காரணம், நான் மத்திய அமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறேன். மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது பா.ஜ.க.தான். என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கப்போவதில்லை. அதனால், காங்கிரசில் இருந்து ஜெயிப்பதைவிட பா.ஜ.க.வில் இருந்து ஜெயிக்க விரும்புகிறேன், ஜெயித்தும் காட்டுவேன். அதனால், எனக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டால் பா.ஜ.க. வில் இப்போதே இணைந்து விடவும் தயாராக இருக்கிறேன்'னு பகிரங்கமாகவே டீலிங் பேசியிருக்கார்.''”

"அதுக்கு வெங்கையா என்ன சொன்னாராம்?''”

"அந்த எம்.பி.யின் முகபாவத்தையும், அவர் முகத்தில் முகாமிட்டிருந்த ஆசையையும் கவனித்த வெங்கையா, "நீங்கள் எங்கள் கட்சிக்கு வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. விருப்பம். அந்த வகையில், உங்களைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியும். அதே நேரம், உங்களைக் கட்சியில் சேர்த்து அமைச்சர் பதவி தருவதால் பா.ஜ.க.வுக்கு என்ன லாபம்? என மேலிட தலைவர்கள் யோசிப் பார்களே...…அதற்கு நான் என்ன பதில் சொல்வது?' என திருப்பிக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த எம்.பி.யால் பதில் பேச முடியவில்லையாம். இருப்பினும், அவரது ஆசையை மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதி தந்திருக்கிறாராம் வெங்கய்யா.''”

rr

"ஜெ. நினைவுநாளில் தினகரன் அதிக கூட்டத்தைக் கூட்டியிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே... ஜெ.வின் நினைவு நாளான டிசம்பர் 5-ஆம் தேதி, மெரினாவில் உள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த.... எடப்பாடி, ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா என நான்கு தரப்பினருக்கும் சென்னை காவல்துறை தனித்தனியாக நேரம் ஒதுக்கிக் கொடுத்திருந்தது. இதில் எடப்பாடியை விட தினகரனும் அதற்கு அடுத்ததாக ஓ.பி.எஸ்.ஸும் பெரும் திரளான கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். தான் அஞ்சலி செலுத்தும்போது, தினகரனுடன் வந்தவர்கள் இருப்பார்கள் என்று சசிகலா போட்ட கணக்குக்கு மாறாக, அவர்கள், அவர் எதிரில் வரும்போதே அவரை அலட்சியப்படுத்திவிட்டுச் செல்ல, ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம் சசி. அதேபோல் ஓ.பி.எஸ். திட்டம்போட்டு ஆட்களைத் திரட்டிக்கொண்டு வர, எடப் பாடியால் பெரிதாக ஆள் பலத்தைக் காட்ட முடியவில்லை. காரணம், சென்னையிலேயே அ.தி.மு.க.வினரில் 35 சதவீதத்தினரை ஓ.பி.எஸ். தன் பக்கம் வளைத்துவிட்டாராம். அதேபோல் எடப்பாடி பக்கம் இருந்த மா.செ.க்கள் பலரையும் ஓ.பி.எஸ். தரப்பு சைலண்ட்டாகத் தங்கள் பக்கம் கொண்டு வந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.''”

"சரிப்பா, நில நிர்வாகத்துறை ஆணையரான நாகராஜன் ஐ.ஏ.எஸ்., மறுபடியும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்காரே?”

"ஆமாங்க தலைவரே... நாகராஜ் ஐ.ஏ.எஸ்., தனியார் கல்வி நிறுவனத்துக்கு ஆதரவாக ஒரு அரசாணையை வெளியிட வைத்த விவகாரம் குறித்து அண்மையில்தான் நாம் பேசிக்கிட்டோம். இப்போது அவர், தனக்குக் கீழ் உள்ள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தரக்குறைவாகப் பேசியதாக பெரும் சர்ச்சை வெடித்திருக்கு.. அதாவது இவருக்குக் கீழ், நில நிர்வாகத்துறையின் இணை ஆணையராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான செந்தாமரை நியமிக்கப்பட்டி ருக்கிறார். இவருக்கு சினிமா மற்றும் இர்ரிகேசன் என இரண்டு விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கு. அந்த வகையில், கன்னியாகுமரியில் உள்ள லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட சக்ரவர்த்தி என்ற தியேட்டர் விவகாரம் இவரின் கீழ் வந்திருக்கு.’

"அந்த தியேட்டரின் லைசென்ஸை ரத்து செய்ய வைத்ததே அப்போது குமரி மாவட்ட ஆட்சியராக இருந்த இதே நாகராஜன்தானே?''”

rr

"சரியா சொன்னீங்க தலைவரே, அந்த தியேட்டரின் மேல்முறையீடு குறித்து விசாரித்து முடிவெடுக்கும் பொறுப்பு செந்தாமரை ஐ.ஏ.எஸ். ஸிடம் வந்திருக்கு. இதையறிந்த நாகராஜன், குறிப்பிட்ட அந்த தியேட்டர் மறுபடியும் இயங்க அனுமதிக்கக் கூடாது. அதனால் பழைய ஆர்டரே தொடரும்படி செய்யுங்கள்னு செந்தாமரையிடம் சொல்லி இருக்கிறார். இதையடுத்து நடந்த ஒரு ஆய்வுக்கூட்டத்தில், செந்தாமரையைப் பார்த்து, "நான் சொன்ன மாதிரி ஆர்டர் ரெடி பண்ணிட் டீங்களா?' என்று நாகராஜன் கேட்க, "இன்னும் இல்லை சார். விசாரித்துக் கொண்டிருக்கிறேன். அது முடிந்ததும் ஆர்டர் போடுகிறேன்' என செந்தாமரை சொல்ல, "நான் சொன்ன பிறகும் விசாரிக்கிறேன் என்று எப்படிச் சொல்லலாம்? நான் சொன்னால் அதை அப்படியே கேட்கமுடி யாதா? கெட் அவுட்' என்று அங்கேயே அவரை ஒருமையில் திட்டி சாமியாடி இருக்கிறார். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் எரிச்சலடைய வைத்திருக்கிறது.''”

"அதோடு நிற்காமல், அந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை, தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையிலும் நாகராஜன் இறங்கறாராமே?''”

"அதுவும் உண்மைதாங்க தலைவரே. குறிப்பாக, செந்தாமரையிடம் சினிமா மற்றும் இர்ரிகேசன் ஆகிய 2 சப்ஜெக்ட்டுகள் இருக்கிறது. இவை தொடர்பான ரிப்போர்ட்டுகளை நாகராஜ னிடம் தான் செந்தாமரை கொடுக்க வேண்டும். ஆனால், இப்போது சினிமா தொடர்பான ரிப் போர்ட்டுகளை வருவாய் நிர்வாக ஆணையரிட மும், இர்ரிகேசன் தொடர்பான ரிப்போர்ட்டை நில நிர்வாக ஆணையரான தம்மிடமும் கொடுக்க வேண்டும் என்று அரசாணையைப் பிறப்பிக்க வைத்திருக்கிறாராம் நாகராஜன். இது தவறானது என்று கோட்டையில் உள்ள சட்டத்துறையினரே சொல்கிறார்கள். அதேபோல், "உங்களுக்கு இனி அலுவலக உதவியாளர் இருக்க மாட்டார், உங்க ளின் அறையை நீங்களே திறந்து மூடிக்கொள்ள வேண்டும், உங்கள் அலுவலக பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்' என்றும் நாகராஜன் மிரட்டலாகச் சொல்லி வருகிறாராம். அந்த பெண் அதிகாரி தலித் என்பதால்தான் நாகராஜன், இப்படியெல்லாம் அவரிடம் வன்மத்தைக் காட்டுகிறாரா?”என்ற கேள்வியும் அங்கே தகிப்பை உருவாக்கி வருகிறது.''

"மதுரை மத்திய சிறை அதிகாரிகளை அதிரடியா இடமாற்றம் பண்ணியிருக்காங்களாமே?''

"ஆமாங்க தலைவரே! "மதுரை சிறை ரூ.100 கோடி ஊழல்! தப்பிக்கும் உயரதிகாரிகள்!'ங்கிற தலைப்பில், நவம்பர் 18-ஆம் தேதி நக்கீரன் இதழில் நாம ஏற்கனவே புலனாய்வுக் கட்டுரை எழுதி யிருந்தோம். அதையடுத்து அரசின் கவனத்துக்குப் போனதால், மதுரை மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் உட்பட 10 பேரை அதிரடியா இடமாற்றம் செஞ்சிருக்காங்க. இன்னும் சில அதிகாரிகள் மாற்றப்படலாம்னும் சொல்றாங்க.''”

"நானும் ஒரு செய்தியைப் பகிர்ந்துக்கறேன். அரசின் நெடுஞ்சாலைத் துறை உட்பட பல துறைகளிலும் ஒப்பந்த வேலைகளை எடுத்துச் செய்கிற ஜெயப்பிரகாஷ் என்பவர், தி.மு.க. அமைச்சர்கள் பலருக்கும் நெருக்கமானவர். இவ ருடைய மகனான அக்னீஸ்வரன் "அக்னி காலேஜ் ஆஃப் என்ஜினியரிங்'’ என்ற கல்லூரியை நடத்திவருகிறார். அண்மையில் அந்த ஜெயப்பிர காஷ், அந்தக் கல்லூரி விழாவிற்கு ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரான அனுராக் தாக்கூரை சிறப்பு விருந்தினராக அழைத்து, நிகழ்ச்சியைத் தடபுடலாக நடத்தினாராம். இதையறிந்த தி.மு.க. அமைச்சர்கள், ’"வருமானத்துக்கு மட்டும் நாங்க வேணும். மத்ததுக்கு பா.ஜ.க. புள்ளிகள் வேணுமா?'ன்னு அவர்மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்களாம்.''

nkn101222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe