தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், எளிய மனிதனுக்கும் அதிகாரம் என்ற அடிப்படையில் பல புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவசங்கருக்கு பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் எளிய மனிதர் கட்சிகளைக் கடந்து மாற்றுக் கட்சியினர், பொதுமக்கள் என எல்லோரிடமும் சகஜமாக நெருங்கிப் பேசிப் பழகக்கூடியவர்.
இவரது தந்தை மறைந்த சிவசுப்பிரமணியம் அரியலூர் பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் தி.மு.க.வில் முன்னோடியாக திகழ்ந்தவர். ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில் 1989-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வழக்கறிஞரான இவர், தற்போது நீலகிரி எம்.பி. முன்னாள் மத்திய அமைச்சருமான பெரம்பலூர் ராசாவை அரசியலுக்குக் கொண்டு வந்தவர். கலைஞர், பேராசிரியர், முரசொலி மாறன் ஆகியோரின் அன்பைப் பெற்றவர். இவருக்கு ஒருமுறை ராஜ்யசபா எம்.பி. பதவி கட்சித் தலைமை அளித்தது.
அப்பாவின் வழியில் சிவசங்கரும் தீவிரமாக கட்சிப் பணிகளில் செயல்பட்டவர். ஸ்டாலினின் அன்புக்கு பாத்திரமானவர். இவரது தாயார் ராஜேஸ்வரி, இவரது மனைவி டாக்டர் காயத்ரிதேவி. சிவசரண், சூர்யா என இரண்டு மகன்கள். முழுநேர அரசியல்வாதி. குடும்பத்தினரோடு இவர் இருந்ததைவிட கட்சியினருடன், பொதுமக்களுடன் இவர் மிக அதிக நேரத்தை செலவு செய்தவர்... இலக்கியவாதியும்கூட.
சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவுசெய்து தமிழக அளவில் நண்பர்களை பெற்றவர். "மக்களோடு நான்', "சோழன் ராஜா பிராப்தி', "தோழர் சோழன்' ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிலம்பு விளையாட்டு சம்மேளனத்தின் தமிழக அளவில் தலைவர், தடகள சங்கத்தின் தலைவர் இப்படி பன்முகத்தன்மை கொண்ட அரசியல்வாதி இவர்.
1996-2001 வரை பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர். 2001-2006 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். 2006-2011 ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் 2011 -2016 குன்னம் சட்டமன்ற உறுப் பினர். 2016 சட்டமன்றத் தேர்தலில் இவரை கட்சித் தலைமை அரியலூர் தொகுதியில் நிறுத்தியது. குறைந்த வாக்கு வித்தியாசத் தில் தோல்வியை சந்தித்தார். மீண்டும் 2021 தேர்தலில் அரியலூர் தொகுதியில் கட்சித்தலைமை போட்டி யிட வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையோடு அரியலூர் தொகுதியில் பல்வேறு ஆக்கப்பணிகளை முனைப் புடன் செய்துவந்தார். ஆனால் குன்னம் தொகுதி யில் போட்டியிட வாய்ப்பு அளித்தது கட்சித் தலைமை. அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க.வின் வேகம், சொந்தக் கட்சிக்குள் உள்குத்து ஆகியவற்றை முறியடித்து எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று இப்போது அமைச்சராகவும் ஆகி யுள்ள சிவசங்கரை ஆச் சரியமாகப் பார்க்கிறார்கள் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும்.
2011-2016-ல் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது அ.தி.மு.க. ஆட்சி, ஜெ. முதல்வர். அப்போது சட்டமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை எதிரொலிக்கச் செய்து பரபரப்பை ஏற் படுத்தியவர். அந்த காலகட்டத்தில் அவ்வப்போது சட்டமன்றத்தில் தி.மு.க.வினரை பேசவிடாமல் ஸ்டாலின் உட்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வெளியேற்றும்போது கடும் போராட்டம் நடத்தியவர்களில் சிவசங்கரும் ஒருவர். அதே போன்று தொகுதியிலும் மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்துவார்.
கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கட்சிப் பிரமுகர்களின் அனைத்துக் குடும்ப நிகழ்ச்சி களிலும் தவறாமல் கலந்து கொள்ள இரவு, பகல், பசி, தூக்கம், என்று பாராமல் சுற்றிக் கொண்டேயிருப்பார். அதே போன்று அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு விரோதமான திட் டங்களை, பிரச்சினைகளை எதிர்த்து மாட்டுவண்டியில் ஊர்வலமாகச் சென்று போராட் டம் உட்பட பல்வேறு போராட் டங்களை நடத்திக்கொண்டே யிருப்பார். அப்படிப்பட்ட கொள்கைப் பற்று மிக்க கடும் உழைப்பாளிக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளது தி.மு.க. தலைமை.
"ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது திருச்சி, தஞ்சை பகுதிகளுக்குத் தான் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில், அமைச்சர் பதவிகள் கிடைக்கும். மிகவும் பின்தங்கிய அரியலூர் மாவட்டம் தேவனூர் கிராமத்தில் பிறந்த சிவசங்கரை அமைச்சராக்கியுள்ளது வரலாற்றுப் பதிவு'' என்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள். மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலம் மாவட்ட மக்களுக்கு போதிய அளவு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இந்த சிமெண்ட் ஆலை களால் அடிக்கடி விபத்துக்கள், கிராமச் சாலைகள் பல இடங்களில் மோசமாக சீர்கெட்டு கிடக்கின்றன இவைகளையெல்லாம் சீர் செய்வார் என்ற பெரும் எதிர்பார்ப் போடு உள்ளனர் மாவட்ட மக்கள்