தனியார் கம்பெனியில் சடலமான இளம்ஜோடி! பாலியில் பலாத்காரமா?

cc

ட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறது. தமிழகத்தில் பன்னாட்டு தொழிற்சாலைகள் அதிகம் இயங்குவதால், பீகார், சத்தீஸ்கர், அரியானா, மேற்கு வங்கம், ஒடிஸா என இந்தியா முழுவதுமிருந்தும் வேலைக்காக ஆட்கள் வந்து குவிகின்றனர். இதனால் தமிழகத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோவதாக சில இடங்களில் குரலெழுந்தாலும், சில சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் கிளம்பத் தொடங்கியுள்ளன.

murder

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் பகுதியில் நடந்த கொள்ளை முயற்சியில் டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் கொலை செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற வடமாநில கொள்ளையர் கள், தங்களைப் பிடிக்க முயன்ற பொது மக்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் போன்றவை, பணி நிமித்தமாக தமிழகம் வரும் வடமாநிலத் தார் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையால் கவனத்தில் கொள

ட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறது. தமிழகத்தில் பன்னாட்டு தொழிற்சாலைகள் அதிகம் இயங்குவதால், பீகார், சத்தீஸ்கர், அரியானா, மேற்கு வங்கம், ஒடிஸா என இந்தியா முழுவதுமிருந்தும் வேலைக்காக ஆட்கள் வந்து குவிகின்றனர். இதனால் தமிழகத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோவதாக சில இடங்களில் குரலெழுந்தாலும், சில சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் கிளம்பத் தொடங்கியுள்ளன.

murder

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் பகுதியில் நடந்த கொள்ளை முயற்சியில் டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் கொலை செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற வடமாநில கொள்ளையர் கள், தங்களைப் பிடிக்க முயன்ற பொது மக்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் போன்றவை, பணி நிமித்தமாக தமிழகம் வரும் வடமாநிலத் தார் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் தொழிற் பேட்டையில் இயங்கிவந்த அருண் இஞ்ஜினி யரிங் கம்பெனி, பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் நிறுவனமாகும். கடந்த 2019-ஆம் ஆண்டு தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. அந்த கம்பெனியில் சமீ பத்தில் பராமரிப்பு பணிகள் நடந்துவந்ததாகக் கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த கம்பெனியின் மூன்றாவது தளத்திலுள்ள இரண்டு கழிவறைகளில் ஒரு ஆண் மற்றும் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டது அப்பகுதியினரை அதிரவைத்துள்ளது.

குன்றத்தூர் போலீசார் இரு சடலங்களை யும் மீட்டு இறந்துபோனவர்கள் யார்? கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

இந்த சம்பவத்தில் இறந்துபோன ஆண் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ரத்தினம் போரா (25) என தெரியவந்துள்ளது. இவர் தனது குடும்பத்தினருடன் திருமுடிவாக்கம் பகுதியில் தங்கி, இங்குள்ள கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இறந்துகிடந்த பெண் அவரது உறவினரான நிருபமா போரா (16), எனவும் இருவருக்கும் மகள், தந்தை உறவு எனவும் கூறப்படுகிறது. இருவரும் உறவுமுறை மீறி காதல்வயப்பட்டிருந்ததாகவும், உறவினர்கள், பெற்றோர் கண்டித்து வந்த நிலையில்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிருபமா போராவைக் காணவில்லை என அவரது பெற்றோர் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்ததன்பேரில் அந்தப் பெண்ணை மீட்டனர்.

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தனது உறவினர் வீட்டிற்குச் சென்றதாக நிருபமா கூறியதால், நிருபமாவை பெற்றோ ருடன் அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகும் இருவரின் முறை தவறிய காதல் தொடர்ந்தது. இருவரும் தங்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்த நிலையில் செயல்படாமலிருந்த தனியார் கம் பெனியில் அங்கு பணியிலிருந்த அதே மாநிலத் தைச் சேர்ந்த காவலாளிகளின் துணையோடு தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது. பெண் ணிடம் உல்லாசமாக இருக்கும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரத்தினம் போராவை கொலை செய்துவிட்டு, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்கார கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நிருபமா போராவை காணவில்லை என அவரது பெற்றோர் குன்றத்தூர் போலீசில் புகாரளித்துள்ளனர். ஆனால் பெண் மீட்கப்படாத நிலையில், பெற்றோர் அஸ்ஸாம் மாநிலத்துக்கே சென்றுவிட்டதால், அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

murder

இந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் லலிதா, "வேலை தேடி தமிழகம் வரும் வட மாநில தொழிலாளர்களின் விவரம் போலீஸாரிடம் இல்லை. இங்கு வந்து தங்கி வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களின் விவரங் களை சம்பந்தப்பட்ட நிறு வனங்கள், வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள், கட் டாயமாகச் சேகரித்து போலீ ஸாரிடம் வழங்கவேண்டும். இதை முறைப்படுத்த வேண் டும். விமான நிலையங்களில் வேலைக்குச் சேர்வதற்கு லோக்கல் காவல்நிலை யத்தின் வெரிபிகேஷன் சர்ட்டிபிகேட் அவசியம். அதுபோல, எந்த நிறுவனத்திலும் ஆட்களைச் சேர்ப்பதற்கு சான்றிதழ் கோரினால், இவர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளதா, எங்கிருந்து வந்தவர்கள் என அறிய உதவியாக இருக்கும்.

இந்த வழக்கில் நிருபமா போரா என்ற மைனர் பெண்ணை முதல் தடவை கடத்திய போதே போக்சோ சட்டத்தின்கீழ் ரத்தினம் போரா மீது நடவடிக்கை எடுத்திருந்தாலே இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். இது பாலியல் பலாத்காரமா அல்லது தற்கொலையா என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க... மூன்று வருடமாக செயல்படாத நிறுவனத்தில் ஒரு மைனர் பெண்ணை தங்க எப்படி அனுமதித்தார்கள், இருவரும் தம்பதியாக இருந்தால்கூட தங்க வைக்கக்கூடாது. தொழிலாளர் நலத்துறை, இதுபோன்ற நிறுவனங்களில் தங்கியிருப்பவர்கள் குறித்து முறையாக ஆய்வு மேற்கொள்கிறதா என கேள்வியெழுகிறது. இதில் பல சட்ட விதிமீறல்கள் இருக்கு''” என்றார் ஆதங்கத்துடன்.

பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும்முன்னர் வெளி மாநிலத்தவர் விவகாரத்தில் காவல்துறையும் அரசும் உஷாராகவேண்டும்.

nkn101121
இதையும் படியுங்கள்
Subscribe