Advertisment

பேரூராட்சிகளில் பகல் கொள்ளை! மாடிவிட்ட சக அலுவலர்கள்!

karur

ரண்டு மாதத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட் டத்திலுள்ள அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலு வலராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த் திருப்பதாக வந்த புகாரின் பேரில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான காக்கிகள் சிலர் திடீரென உத்தம பாளையத்திலுள்ள பாலசுப்ரமணியன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்ட 20-க்கு மேற்பட்ட சொத்து ஆவணங் களை கைப்பற்றினார்கள்.

Advertismen

ரண்டு மாதத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட் டத்திலுள்ள அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலு வலராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த் திருப்பதாக வந்த புகாரின் பேரில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான காக்கிகள் சிலர் திடீரென உத்தம பாளையத்திலுள்ள பாலசுப்ரமணியன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்ட 20-க்கு மேற்பட்ட சொத்து ஆவணங் களை கைப்பற்றினார்கள்.

Advertisment

cc

அதுபோல் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் குறித்து விசாரணை செய்தபின் உத்தமபாளையத்திலுள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு பால சுப்பிரமணியனை அழைத்துச் சென்று லாக்கரை சோதனை செய்து அந்த லாக்கரையும் சீல் வைத்துவிட்டுத் திரும்பினார்கள்.

இதுசம்பந்தமாக பேரூராட்சி செயல் அலுவலர்கள்(ஊ.ஞ) சிலரிடம் கேட்டபோது... ""அந்த பாலசுப்ரமணியனின் தந்தை காமாட்சி பணியின்போது இறந்ததால், வாரிசு அடிப்படையில் கிளர்க்காக பணியில் சேர்ந்து செயல் அலுவலராக பதவி உயர்வு பெற்றார். வருமானம் வரக்கூடிய பேரூராட்சிகளான ஆண்டிப்பட்டி, குச்சனூர், கோம்பை, கெங்கு வார்பட்டி, தேவதானப்பட்டி, அனுமந்தன்பட்டி இப்படி சில பேரூராட்சிகளில் இ.ஓ.வாக இருந்துகொண்டு பேரூராட்சிக்கு ஒதுக்கப்படும் ரோடு, சாக்கடை, ஓவர்டேங், லைட், குடிதண்ணீர் போன்ற திட்டப் பணிகள் மூலம் கமிஷன் மற்றும் முறைகேடு செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

இதைப் பொறுக்கமுடியாத வருமானமில்லாத பேரூராட்சிகளில் இருக்கக்கூடிய சில இ.ஓ.க்கள், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மறைமுகமாக பெட்டிஷன் போட்டுவந்தனர். பால சுப்பிரமணியனுக்கு ஓ.பி.எஸ். தம்பி ராஜா மற்றும் பேரூராட்சி இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் நெருக்கம் என்பதால், அதன்மூலம் தொடர்ந்து வருமானம் வரக்கூடிய பேரூராட்சிகளில் பணியாற்றிக் கொண்டு தேற்றுவதில் ஒரு கணிசமான தொகையை கப்பமும் கட்டிவந்தார்.

தற்போதுகூட அய்யம்பாளை யத்திற்கு இ.ஓ.வாக வருவதற்கு ஏ.டி. முதல் இயக்குனர் வரை ஒரு கணிசமான தொகையைக் கொடுத்திருக்கிறார். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி பல ரிக்கார்டுகளை கைப்பற்றியிருக்கிறது. அப்படி இருந்தும்கூட துறைரீதியான நடவடிக்கை ஏதுமில்லை. தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் முறைகேடுகள் மூலம் தொடர்ந்து பல இ.ஓ.க்கள் பகல் கொள்ளையடித்து சொத்துக்கு மேல் சொத்து குவித்து வருகிறார்கள்' என்றனர்.

""கடந்த சில மாதங்களாகவே செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன்மேல் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து நாங்களும் ரகசியமாக விசாரணை செய்த பின்தான் சோதனையிட்டோம். சிக்கிய ஆவணங்கள் குறித்து ஆராய்ந்து, விசாரணை செய்து அதை துறைரீதியான நடவடிக்கைக்கு அனுப்பிவைப்போமே தவிர பணிநீக்கம், கைது என்ற நடவடிக்கை எல்லாம் இப்போதைக்கு இல்லை என்றார்'' தேனி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா

-சக்தி

nkn260920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe