மலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தயாநிதிமாறன் நையாண்டியாகச் சொன்ன கருத்து, பா.ம.க.வினரிடையே கடும் உஷ்ணத் தைக் கிளப்பி கல்வீச்சுவரை போயிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தயாநிதிமாறன் எம்.பி., சேலம் மேற்கு, ஓமலூர் தொகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரப்புரையில் ஈடுபட்டார்.

dd

டிசம்பர் 22-ஆம் தேதி ஓமலூர் தொகுதியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ""தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருமா?'' எனக் கேட்கப்பட்டது. அதற்கு தயாநிதிமாறன், “""கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.விடம் 400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பா.ம.க., அக்கட்சியுடன் கூட்டணி வைத் தது. ஒருவேளை, தி.மு.க. கூட்டணிக்கு வருவதாக இருந்தால் 500 கோடி, 1000 கோடி கேட்பார்கள். அவர்களுக்கு பணம்கொடுத்து கூட்டணியில் சேர்க்கு மளவுக்கு தி.மு.க.விடம் கோடிகள் இல்லை... கொள்கைகள் மட்டுமே இருக்கிறது'' என்றார். தயாநிதிமாறன் பேசியது வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவ, உடனடியாக பா.ம.க. மாநில துணைச்செயலாளர் அருள், தயாநிதிமாறனுக்கு கண்டனம் தெரிவித்து பேட்டியளித்தார்.

Advertisment

இரவு 7 மணியளவில், பொட்டிய புரத்தில் பூ வியாபாரிகளுடன் கலந்துரையாடலை முடித்துவிட்டு, கண் ணப்பாடி அருகே பழங்குடி மக்களைச் சந்திப்பதற்காக தயாநிதிமாறன் தனது பரப்புரை வேனில் சென்றுகொண்டி ருந்தார். அப்போது, திடீரென்று பா.ம.க. நிர்வாகிகள் அண்ணாமலை, மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் கையில் கருப்புக்கொடி ஏந்தியபடி தி.மு.க. மற்றும் தயாநிதிமாறனுக்கு எதிராக சாலையோரம் முழக்கமிட்டுக்கொண் டிருந்தனர். என்ன ஏதென்று அவ தானிப்பதற்குள் தயாநிதிமாறன் வந்த பரப்புரை வேன், அந்த கும்பலைக் கடந்து சென்றுவிட்டது.

பா.ம.க.வினர் பின்னர் சாலை மறியலில் இறங்கினர். போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாத பகுதி என்பதோடு, தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என தி.மு.க. நிர்வாகிகளும் ரொம்ப ஜாக் கிரதையாகவே நிலைமையைக் கையாண்டனர். உடனடியாக மாவட்ட எஸ்.பி., ஓமலூர் டி.எஸ்.பி. உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் தி.மு.க. தரப்பிலும் ஆள் திரள, இருதரப்புமே கல்வீச்சில் ஈடுபட்டதாகச் சொல்லப்படு கிறது. இதில், பார்த்திபன் எம்.பி., சென்ற கார் லேசாக சேத மடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க., பா.ம.க. ஆகிய இருதரப்பும் காவல்துறையில் புகாரளித்திருக்கின்றன.

d

Advertisment

கடலூர், அரியலூர் மாவட்டங்களில் சுழன்றடித்துவரும் உதயநிதி ஸ்டாலின், டிச. 22-ஆம் தேதி, மறைந்த காடுவெட்டி குருவின் வீட்டுக்கு நேரில் சென்று, அங்கு குருவின் மகன் கனலரசன், அவருடைய தாயாரைச் சந்தித்ததுடன், குருவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பா.ம.க.வின் முகமாக இருந்த காடுவெட்டி குரு குடும்பத்தின் மீதான தி.மு.க.வின் அணுக்கமான போக்கும் தயாநிதியின் விமர்சனப் பேச்சும் பா.ம.க.வின் ஆத்திரத்துக்குக் காரணமென்கிறார்கள்.

-இளையராஜா