தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு எதுவும் செய்கிறோமோ,…இல்லையோ…தேர்தலுக்கு எதாவது புதுமையாகச் செய்தால்தான் மக்கள் நம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள். அதனை அ.தி.மு.க. அமைச்சரும் விராலிமலை வேட்பாளருமான விஜயபாஸ்கர் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

vv

தனது இரண்டாவது மகள் அனன்யா கையில் மைக்கைக் கொடுத்து, ""நான் விஜய பாஸ்கரோட இரண்டாவது பொண்ணு. அப்பா தினமும் இரவும் பகலும் உங்களுக் காகத்தான் உழைக்கிறார். உங்களுக்கு ஒண்ணுனா அவர் துடிச்சுப் போயிடுவார். காது கேக்கலைன்னா காதுகேட்கிற மெஷினா வருவார். கண்ணு தெரியலைனா கண்ணாடியா வருவார். கஜா புயல்னா கரண்டா வருவார். கொரோனானா மாத்திரை மருந்தா வருவார். தீபா வளி, பொங்கல்னா எங்களோட கொண்டாடுறதைவிட உங்க ளோட கொண்டாடத்தான் நினைப்பார். என் அப்பாங்கிறதைவிட, உங்க வீட்டுப் பிள்ளைனு சொல்லணும். அப்படி நினைச்சு ஓட்டுப் போடுவீங்களா''…என தொகுதி மக்களை சென்டிமெண்டாக அடித்தார்.

பின் ராசநாயக்கன்பட்டி மாதாகோவில் அருகே விஜயபாஸ்கர் பேசும்போது, ""மக்களுக்காக உழைச்சு…உழைச்சு கஷ்டப்பட்டு இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில ஏழரை கிலோ எடை குறைஞ்சு நிற்கிற இந்த விஜயபாஸ்கர் மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதை யாராச்சும் யோசிச்சீங்களா?… எனக்கும் சுகர் இருக்கு. நானும் மாத்திரை சாப்பிடறேன். நான் நேரம், காலம் பார்த்து கரெக்டா சாப்பிட்டு, வாக்கிங் போய், மாத்திரை சாப்பிட்டு, மத்தியானம் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்து, ராத்திரி சரியா பத்துமணிக்கு தூங்கி, காலைல அஞ்சுமணிக்கு எழுந்து உடற்பயிற்சி செஞ்சிருந்தேன்னா நான் நல்லாருந்திருப்பேனே. எனக்கும் தலைசுத்தல் வருது. பி.பி. இருக்கு. சுகர் இருக்கு. உடம்புல கோளாறு இருக்கு. எடுத்துக்கிட்ட பொறுப்புல மக்களுக்கு ஒழுங்கா வேலை செய்யணு மேனு மனசுக்குள் வெறியிருக்கு. இந்த மக்களுக்கு இயேசுநாதர் சிலுவைய சுமந்தமாதிரி, விராலிமலையைச் சுமந் தேன்''’என்று சென்ட்டி மெண்டாக போட்டுத் தாக்கினார்.

Advertisment

மற்றுமொரு பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சி வேட் பாளர்கள் காலை வாரி, ""பத்து வருஷமா இந்த தொகுதிக்கு ஓடா... மாடா தேய்ஞ்சுருக் கேன். எல்லா கஷ் டத்தையும் நான் தாங்கிக்கிட்டு, பொது மக்களோட கஷ்டத்தைத் துடைக்கத்தான் விஜயபாஸ்கருக்கு எம்.எல்.ஏ. பதவி. எனது குடும்பத்தைப் பார்த்துக் கிறதுக்கு,… என் சொத்தைப் பாதுகாக்க அந்தப் பதவி கிடையாது. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அழுறாங்க, காலைப் பிடிக்கிறாங்க... சொத்து போயிடுச்சுங்கிறாங்க... நடிக்கக்கூடாது. என் பிரச் சினையை மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு, உங்க கண்ணுல கண்ணீர் வராம பாத்துக்கத் தான் விஜயபாஸ்கர் உழைக்கிறேன். எதை இழந்தாலும் உங்களுக்காக தொடர்ந்து செய்வேன். வியர்வையும் ரத்தத்தையும் உங்களுக்காகச் சிந்து வேன்''’என கண் கலங்கினார்.

விஜயபாஸ்கரின் யுக்தி மக்களிடம் செல்லுபடியாகிறதா என மே 2-ல் பார்க்கலாம்.

Advertisment