ஆன்மிகத்தின் பெயரில் மோசடி செய்யும் பிரேமானந்தா தொடங்கி காஞ்சி சங்கராச்சாரியார், நித்தியானந்தா, சிவசங்கரபாபா, சில பெண் சாமியார்கள், ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் லீலைகளை நக்கீரனில் தொடர்ந்து ஆதாரத்துடன் தோலுரித்து வருகிறோம். அந்த வரிசையில், மலேசியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து மோசடியில் ஈடுபடும் கே.எம்.சிவசாமி என்பவரின் சிஷ்யையாக இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண், அந்த நபரின் லீலைகளைப் பற்றியும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆதாரத்துடன் நம்மிடம் புகாரளித்தார்.
அரசு வேலையிலிருந்த சாந்தி, கடந்த 2017ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தி, தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளார். அதையடுத்து, 2017, ஜூன் மாதத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அங்கிருந்த சித்த மருத்துவர் புனிதா, அடுத்த வாரம் செங்கல்பட்டில் நடக்கவுள்ள மலேசியா மனவள பயிற்சியாளர் சிவசாமியின் வகுப்பிற்கு சென்றால் உங்கள் மன உளைச்சல் நீங்கும், பணம் கிடைக்கும், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றார். ஏழு நாட்கள் அங்கு சென்று அந்த வாழ்வியலைக் கற்றுக்கொள்ளலாம்'' என்றார், சாந்தியையும் அவர் கணவர் குமாரையும் அந்த மெய் உணர்வு வகுப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு நடந்ததைப் பற்றி சாந்தி கூறுகையில், "இரவு வேளையில் நடக்கும் மெய் உணர்வுப் பயிற்சி என்பதால் என்னுடைய கணவரையும் கூட்டிட்டு போனேன். அங்க போனதும் தலைக்கு 3500 ரூபாய் கட்டச் சொன்னாங்க. நாங்க தயங்கியதால் டாக்டர் புனிதாவே அந்த பணத்தைக் கட்டு னாங்க. செங்கல்பட்டுல அம்சா மஹால் என்ற மண்டபத்துல இந்த பயிற்சி வகுப்பு நடத்தினாங்க. உள்ளே கதவு, ஜன்னல் எல்லாம் கருப்புத் துணி போட்டு ஸ்கிரீன் மாதிரி அடைச் சிருந்தாங்க. 18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும் தான் அனுமதின்னு சொல்லிட்டாங்க. நிறைய பேர் உட்கார்ந்திருந் தாங்க. அங்க கொடுத்த ஃபார்ம்ல, ஏழு நாள் கண்டிப்பா வகுப்புக்கு வரணும், அங்க நடக்கிறத வெளில சொல்லக் கூடாது, செல்போன் எடுத்துட்டு போகக்கூடாது, கணவர் பக்கத்துல மனைவியோ, மனைவி பக்கத்துல கணவனோ உட்காரக்கூடாது அப்டீன்னு 15 ரூல்ஸ் அதுல இருந்துச்சு. கையெழுத்து போடச் சொன்னாங்க. என்னைய இன்னொரு ஆள் பக்கத்துல நெருக்கமா உட்காரச் சொல்லிட்டாங்க. என் கணவரை இன்னொரு பெண் பக்கத்துல உட்காரச் சொல்லிட்டாங்க.
பயிற்சியாளரோட சிஷ்யர்கள் தர்மராஜ், நந்தகுமார் ஆகியோர், மேடையிலேறி, "நாங்க இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதால தான், வெளியே நிக்கிற வால்வோ கார், பி.எம்.டபிள்யூ. கார், வீடு வசதியெல்லாம் வந்துச்சு. அதேபோல உங்களுக்கு வரணும்னா ஐயா சொல்றதைக் கேட்கணும்'னு சொல்லிட்டு போனபின், போலி பயிற்சியாளர் சிவசாமி கொஞ்ச நேரம் பேசினான். அதுக்கப்புறம் லைட் ஆஃப் பண்ணுனா, ஒரு துளி வெளிச்சம்கூட இல்லை. கும்மிருட்டுல சாம்பிராணி போல ஏதோ புகையைப் போட்டாங்க. அதை சுவாசிக்கச்சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல போதை தலைக்கேறியதுபோல உணர்வு.
அப்புறமா, பக்கத்துல உட்கார்ந்திருந்த ஆணோட கை கோர்த்துக்க சொன்னான். முதலில் அந்த ஆணோட கஷ் டத்தையெல்லாம் என்னிடம் சொல்லச் சொன்னான். அடுத்து என்னோட கஷ்டத்தை அந்த ஆணிடம் சொல்லச்சொன் னான். அவன் சொன்னமாதிரியெல்லாம் செய்தேன்.
ஒரு பத்தரை மணிக்கு லைட் ஆன் பண்ணிட்டு சாப் பிடச் சொன்னாங்க. அதுக்கப்புறம் மீண்டும் வகுப்பு தொடர்ந்ததும், லைட்ட ஆப் பண்ணிட்டு "உலகத்துல ஆண், பெண் என்பதெல்லாம் கிடையாது. சொந்தபந்தம் கிடையாது. நாம வெறும் ஆன்மாதான். அன்பு மட்டும்தான் இருக்கு. நமக்கு யாரைப் பிடிக்கிறதோ அவங்கட்ட அன்பு செலுத்தலாம்' என்றெல்லாம் மூளைச்சலவை செய்தான். முடிந்த தும் வீட்ல கொண்டுபோய் விட் டுட்டாங்க. அடுத்தடுத்த நாட் களில் வகுப்புகளில் அவன் ஆட்டி வைக்கும் பொம்மையாகவே மாறிட்டோம். முன் ஜென்ம ஆன்மாவோட பேச வைக்கி றேன்னு சொல்வான். பக்கத்துல இருக்கவங்கள கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சொல்வான். அவன் சொல்றமாதிரி அங்கிருந்த எல்லாரும் செஞ்சோம். அந்த சிவ சாமியும் எல்லா பெண்களையும் போதை மயக்கத்தோட கட்டிப் பிடிப்பான். கல்யாணமாகாத இளம்பெண்களும், ஆண்களும் கூட வந்திருந்தாங்க. அடுத்த நான்காவது நாளில், உண்டியலை வைத்து, உங்களுக்கு பிடிச்சதெல் லாம் உண்டியலில் போடுங்கன்னு சொன்னான். புருஷனுக்கோ, பொண்டாட்டிக்கோ யாரும் பயப்பட வேண்டாம், மதிக்க வேண்டாம், புடிச்சவங்க கூட பழகலாம், வாழலாம், உங்களுக்கு புடிச்ச வாழ்க்கைய வாழலாம்னு சொன்னான். கல்யாணம் ஆகா தவங்க, அப்பா, அம்மா பேச்சைக் கேட்கணும்னு அவசியமில்ல. இது ஒரு உடல், இந்த உடலை எப்படி வேணும்னாலும் திருப்திப்படுத்தலாம்னு சொல் வான். திருமணமாகாத பெண்ணை தனியறைக்கு கூட்டிட்டு போவாரு... என்ன பண்ணு வாருன்னே தெரியாது... ஏழாவது நாளில், 'உங்க வீட்ல இருக்கிற நகையெல்லாத்தையும் போட்டு வரணும், பணத்தையெல்லாம் எடுத்துட்டு வரணும்'னு மூளைச்சலவை செய்து, அதேபோல நகை, பணத்தையெல்லாம் நிறைய பேர் கொடுத்திருக்காங்க. அதேபோல, அவர் சொல்ற நிதி நிறுவனத்துல பணத்தை போடச் சொன் னாரு. பல பேரு அவர் சொன்னதுபோல பணம் போட்டு லட்சக்கணக்குல ஏமாந்திருக்காங்க. ஒரு போதை உலகத்துல எல்லாரையும் வாழ வச்சு, மூளைச்சலவை செய்து எல்லாத்தையும் ஏமாத்திட்டாரு. இதைப்பற்றி நான் கலெக்டர், மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், டி.ஜி.பி. வரைக்கும் புகாரளித்தும் எந்த நட வடிக்கையும் இல்ல.
இவன் வழக்கம் போல மலேசியாவிலிருந்து வந்து சென் னை, மூலக்கடை வள்ளி மஹால் மண்டபத்தில் வரவுள்ள 24ஆம் தேதி இதேபோல் நிகழ்ச்சி நடத்தப்போறான். தமிழ்நாடு முழுக்க இதுபோல் நிகழ்ச்சி நடத்தி மோசடி செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளான். ஆதாரத்தோடு புகாரளித்தும் நடவடிக்கை யில்லை. இந்நிலையில், என்னோட பணத்தை திருப்பித் தர்றதா சொல்லி மூன்று மாதத்துக்கு முன்பு செங்கல்பட்டு அம்சா மஹாலுக்கு வரச் சொன்னார்கள். அங்கு போனால் சாமியாரோட ஆட்கள் எங்களைத் தாக்கி, கை உடைக்கப்பட்டு கட்டுப் போட்டுள்ளேன்.
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத் தில் புகாரளித்து நடவடிக்கையில்லாததால் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகாரனுப்பினேன். உடனே எஃப்.ஐ.ஆர். போட்டாங்க, ஆனால் இதுவரை யாரையும் கைது பண்ணல. இந்த சாமியாரால பலரோட குடும்ப வாழ்க்கை சீரழிவதோடு, பணம், நகையெல்லாம் ஏமாற்றி பறிக்கிறாங்க. அந்தாளை மக்கள் முன்னால அம்பலப்படுத்தி இன்னும் பலர் ஏமாறாமல் நீங்க தான் தடுக்கணும்'' என்றார்.
சாந்தியின் புகார் தொடர்பாக மெய் உணர்வு அமைப்பின் தமிழக நிர்வாகியான சரணிடம் விசாரித்தோம். "நாங்கள் வாழ் வியலுக்கான பாடத்தை கற்றுத்தருகிறோம். வாழ்க்கையில் வெற்றி பெறுவது, அதையும் தாண்டி வளர்ச்சி பெறுவது, கோபத்தை எதிர்கொள்வது எனக் கற்றுத்தருகிறோம். இவ்வுலகில் அனைவர்மீதும் அன்பைச் செலுத்த வேண்டும். எல்லா ஜீவராசிகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும். உறவுகள், ஆண், பெண், ஜாதி, மதம் என எதுவும் கிடையாது. இங்கு அனைவரும் சமம்'' என்று தத்துவார்த்த மாகப் பேசுவதுபோல் மனம்போன போக்கில் உளறினார்.
"உங்களுடைய பயிற்சிப் பட்டறை யில் பெண்களை பாலியல் ரீதியில் தூண்டுவ தாகவும், லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாகவும், பயிற்சியின்போது சாம்பி ராணி போன்ற புகையைப் போட்டு சுயநினைவை இழக்கச் செய்வதாக வும் சாந்தி என்பவர் புகாரளித்துள்ளாரே? அவர் மீது தாக்குதல் நடத்தி கையை உடைத்ததாக எஃப்.ஐ.ஆர். பதிவாகியுள்ளதே?'' என்று கேட்டதற்கு... அவர் மழுப்பலாக பதில் சொல்லி, "எங்கள் சேர்மனே உங்ககிட்ட பேசுவாங்க'' என்று தொடர்பைத் துண்டித்தார்.
வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பணச்சிக்கல்கள் இருக்கும். இதற்கு தீர்வு சொல்வதாகக்கூறி, வாழ்வியலைக் கற்றுத் தருவதாகக் கூறி, இருட்டு அறையில், போதையேற்றி, வேறொரு ஆண், பெண்ணோடு நெருக்கமாகப் பின்னிப்பிணைய வைத்து, பாலியல் ஆசையைத் தூண்டி, மூளைச்சலவையின் மூலம், நகை பணத்தையும் பறிக்கக்கூடிய மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் சமூகக்குற்றங்களைத் தடுக்க முடியும். விழித்துக்கொள்ளுமா தமிழகக் காவல்துறை?