Advertisment

அபாயம்! -சென்னை உட்பட 12 நகரங்கள் மூழ்குமா..?

cc

ங்கக் கடலில் உருவாகி சென்னை யை துவம்சம் செய்து ஆந்திரா வில் கரையைக் கடந்த மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை மக்களும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களும்தான்.

Advertisment

தற்போது, சென்னையின் பல்வேறு பகுதி களில் தேங்கிநிற்கும் வெள்ள நீர், பக்கிங்ஹாம் கால்வாய் மூலமாகவும், தென்சென்னையின் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வந்து அங்கி ருந்து ஓக்கியம் மடு வழியாக முட்டுக்காடு முகத் துவாரம் மூலமாகவும் கடலுக்குள் கொண்டு செல்லப் படுகின்றன. ஆனால், மிக்ஜாம் புயலால் வங்கக்கடலில் ஏற்பட்ட பேரலைகளின் தாக்கம் இன்னமும் குறையாத காரணத்தால் கடலானது வெள்ளநீரை உள்வாங்க மறுக்கிறது.

Advertisment

dd

கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதியில் உலக வங்கி உதவியோடு ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று, ‘இந்த நூற்றாண்டுக்குள் சென்னை உட்பட 12 இந்திய நகரங்கள் மூன்றடி தண்ணீரில் மூழ்க வாய

ங்கக் கடலில் உருவாகி சென்னை யை துவம்சம் செய்து ஆந்திரா வில் கரையைக் கடந்த மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை மக்களும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களும்தான்.

Advertisment

தற்போது, சென்னையின் பல்வேறு பகுதி களில் தேங்கிநிற்கும் வெள்ள நீர், பக்கிங்ஹாம் கால்வாய் மூலமாகவும், தென்சென்னையின் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வந்து அங்கி ருந்து ஓக்கியம் மடு வழியாக முட்டுக்காடு முகத் துவாரம் மூலமாகவும் கடலுக்குள் கொண்டு செல்லப் படுகின்றன. ஆனால், மிக்ஜாம் புயலால் வங்கக்கடலில் ஏற்பட்ட பேரலைகளின் தாக்கம் இன்னமும் குறையாத காரணத்தால் கடலானது வெள்ளநீரை உள்வாங்க மறுக்கிறது.

Advertisment

dd

கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதியில் உலக வங்கி உதவியோடு ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று, ‘இந்த நூற்றாண்டுக்குள் சென்னை உட்பட 12 இந்திய நகரங்கள் மூன்றடி தண்ணீரில் மூழ்க வாய்ப்பிருப்பதாக’ தெரிவித்த தகவல் தற்போது வெளிவந்து பெருநகர மக்களை பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

போட்ஸ்டாம் இன்ஸ்ட்டிடியூட்’ (டர்ற்ள்க்ஹம் ஒய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் ஈப்ண்ம்ஹற்ங் ஒம்ல்ஹஸ்ரீற் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட்) என்ற அந்த அமைப்பின் அறிக்கையின்படி சென்னை, மும்பை, கொச்சின், விசாகப்பட்டினம், மங்களூர் உள்ளிட்ட 12 கடற்கரை நகரங்களின் சில பகுதிகள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அதிகபட்சமாக 3 அடி ஆழத்திற்குள் மூழ்கவிருப்பதாகவும், கடல்மட்டம் உயர்ந்து வருவதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ‘மிக்ஜாம் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் எதிர்காலத்தில் உருவாகும்பட்சத்தில் சென்னை அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?’ என்ற விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், நீரியல் நிபுணரான பேராசிரியர் ஜனகராஜன் கூறியுள்ள கருத்து இந்த நேரத்தில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தொடர்மழையின் காரணமாக உருவான வெள்ளத்திற்கு காரணமே காணாமல்போன ஏரிகள் தான். பெருமளவு நீரை தேக்கிவைக்கக்கூடிய திருவள் ளூர், ராணிப்பேட்டை ஏரிகளைச் சுற்றியுள்ள ஆக்கிர மிப்பு காரணமாக மழைநீர் செல்லும் பெரும்பாலான வழிகள் அடைபட்டுப் போனதோடு பல்லாவரம் ஏரியும் இரண்டாகப் பிளக்கப்பட்டு அங்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால், அங்கும் நீர் வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் வாய்க்கால் ccபணிகள் ஓரளவு வடிகால்களை ஏற்படுத்தியிருப்பது ஆறுதல். மேலும், மழைநீரைச் சேமிக்க பொதுமக்களும் உறுதியேற்ப தோடு, அரசாங்கமும் இதுபோன்ற வெள்ளப் பாதிப் பைத் தடுக்க பேரிடர் காலங்களில் மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் சிந்தித்து அதைச் செயல்படுத்தவேண் டும்''’ என்கிறார்.

சென்னை பெரு நகர் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் சிலர் கூறும்போது, "கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளமானது சென்னைவாசிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. பதவியேற்ற உடன் மாநகரப் பகுதிகளில் உடனடியாக கால்வாய் தூர்வாரும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, பாதாளச் சாக்கடைப் பணிகளையும் முடித்துவிட்ட காரணத்தால்தான் கடந்த வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்போடு ஒப்பிடுகையில் தென்சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் வெள்ளம் உடனடியாக வடிந்து பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும், மின்சாரமும் உடனடியாக வழங்கப்பட்டன.

சென்னையானது வடகிழக்கு பருவ மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், புழல் ஏரியின் உபரிநீர் கால்வாய், கொசஸ்தலையாறு ஆகியவற்றின் வழியாக வெள்ள நீர் வெளியேறுவதில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்து நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நீர் வளத்துறை வாயிலாக தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகளும் முடியும் தறுவாயில் உள்ளது.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மூலம், 'சென்னை ஆற்றுப்படுகைகளில் விரிவான வெள்ளக் கட்டுப்பாட்டு பெருந் திட்டம்' ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக, முக்கிய நீர்வழித்தடங்களில் ஆங்காங்கே நீரோட்டத்தைக் கண்காணிக்கும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் நடக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக, தமிழக பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இயக்குனர் ராமன் உட்பட 8 அதிகாரிகள் கடந்த மே மாதம் ஜப்பான் நாட்டிற்குச் சென்று டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் செயல்படுத்தப்படும் நீர் வழித்தட மேலாண்மை குறித்து ஆய்வு செய்துவிட்டு வந்திருக்கின்றனர். எனவே, இனி வரும் காலங்களில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் முழுமையாக வெளியேற்றப்படும்.

குறிப்பிட்ட அந்த அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையானது விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டதாக இருக்கலாமே தவிர, இந்த நூற்றாண்டுக்குள் மூன்றடி நீரில் சென்னை மிதக்கும் என்பதெல்லாம் சற்று அதிகப்படியான கற்பனைக் கதை''’என்கின்றனர் அவர்கள்.

nkn201223
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe