ஒன்றிய அரசால் ஆபத்து! நாகையில் எச்சரித்த முதல்வர்!

ss

நீண்ட இடைவேளைக்குப் பிறகு முதல்வரின் வருகையால் தி.மு.க. கொடிகளாலும், தொண்டர் களின் கரவொலியாலும் அதிர்ந் திருக்கிறது நாகை மாவட்டம்.

நாகையில் தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தி.மு.க. மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண விழா, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மார்ச் 2-ஆம் தேதி சென்னையிலிருந்து நாகை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நாகை பயணியர் விடுதியில் தங்கினார். 3-ஆம் தேதி காலை மூத்த அமைச்சர்கள், கழக நிர்வாகிகளோடு ஆலோ சனை நடத்தியவர், மீனவர்கள் பகுதிக்குச் சென்று மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் வந்திருந்த விவசாயிகளையும், விவசாய சங்கத் தினரையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

ss

திருமண விழாவில் பேசிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "புழுக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வரின் கையிலும் பேப்பர்கொண்டு விசிறிவரு கிறீர்கள்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு முதல்வரின் வருகையால் தி.மு.க. கொடிகளாலும், தொண்டர் களின் கரவொலியாலும் அதிர்ந் திருக்கிறது நாகை மாவட்டம்.

நாகையில் தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தி.மு.க. மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண விழா, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மார்ச் 2-ஆம் தேதி சென்னையிலிருந்து நாகை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நாகை பயணியர் விடுதியில் தங்கினார். 3-ஆம் தேதி காலை மூத்த அமைச்சர்கள், கழக நிர்வாகிகளோடு ஆலோ சனை நடத்தியவர், மீனவர்கள் பகுதிக்குச் சென்று மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் வந்திருந்த விவசாயிகளையும், விவசாய சங்கத் தினரையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

ss

திருமண விழாவில் பேசிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "புழுக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வரின் கையிலும் பேப்பர்கொண்டு விசிறிவரு கிறீர்கள். அதைவிட இந்த நாட்டில் பெரிய புழுக்கம் இருக்கிறது. அந்தப் புழுக்கம் நாட் டையே சீர்குலைக்கும். அந்த புழுக்கத்தை போக்கத்தான் நம்முடைய முதல்வர் போராடி வருகிறார்''’என்று கூறியபோது திருமண மேடையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

திருமணத்தை நடத்திவைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இரண்டு தினங் களுக்கு முன்பு எனது பிறந்தநாளை முடித்து விட்டு, தற்போது தாய் மண்ணுக்கு வந்திருக் கிறேன். பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அடுத்து நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. நாம் இன்று எதிர்நோக்கி யுள்ள பிரச்சனைகள் அனைவருக்கும் தெரியும். மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்திக் கொண்டுவந்துவிட வேண்டுமென்று ஒன்றிய அரசு திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக் கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஒன்றிய அரசு கவனத்தை செலுத்திக்கொண்டி ருக்கிறது. வருகிற ஐந்தாம் தேதி நாம் அனைத் துக் கட்சிக்கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்திருக்கும் தமிழகத்திலுள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பெரும்பாலும் அனைவரும் வருவதாக நமக்கு செய்தி அனுப்பியுள்ளனர். சிலர் மட்டும் தாங்கள் வர வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர். வரமுடியாது என்று கூறியவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதை அரசியலாக, கட்சிப் பிரச்சினையாக பார்க்கா மல் நம் தமிழ்நாட்டின் உரிமையாகப் பாருங்கள். 39 எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை வைத்து போராடிக்கொண்டிருக் கிறோம். இவர்கள் இருந்தால்தான் நம் எண்ணங்கள் வெற்றிபெறமுடியும். இவன் என்ன கூப்பிடுவதென நினைக்கவேண்டாம், இதில் கவுரவம் பார்க்கவேண்டாம். இது தமிழ்நாட் டின் பிரச்சனை. இதை சிந்தித்துப் பார்த்து அனைத்துக் கட்சிகளும் கூட்டத்திற்கு வரவேண்டும்''’என்று பேசி முடித்தார்.

ss

அங்கிருந்து புறப்பட்ட தமிழக முதல்வர், நாகை பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து களை துவக்கிவைத்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய பின் பேசிய ஸ்டாலின், "நிலவளமும், கடல் வளமும் சூழ்ந்திருக்கக்கூடிய தமிழர்களுக்கு நாகர்கள் என்று பெயர் வர காரணமானது இந்த நாகை மாவட்டம். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் மறைமலை அடிகள் பிறந்ததும் நாகை மாவட்டத்தில்தான். ஒருபக்கம் சிக்கல் சிங்காரவேலர் கோயில், மறுபக்கம் வேளாங்கண்ணி, மற்றொரு பக்கம் நாகூர் தர்கா என சஓகநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சமத்துவ மாவட்டமாக விளங்கிவருகிறது நாகை மாவட்டம் என்றவர், ரூ.260 கோடி மதிப்பிலான திட்டங்களை வரிசைப்படுத்தி, மாவட்டத்திற்கான சிப்காட் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட ஆறு முத்தாய்ப்பான திட்டங்கள் துவங்குவதற்கான உத்தரவாதம் கொடுத்ததோடு, மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது, படகு கள் பறிமுதல் செய்யப்படுவது, கைதுசெய்யப் படுவது குறித்தும் பேசி, பிரச்சினைக்குத் தீர்வுகாணாத ஒன்றிய அரசையும் கண்டித்தார்.

மாலை நாகை மாவட்ட கட்சி நிர்வாகி களின் ஆலோசனைக் கூட்டத்தில், யாரையும் பெயர் சொல்லிக் குறிப்பிடாதபோதும், "2019, 2021, 2024 தேர்தல் ரிசல்ட்டை வைத்துக் கொண்டு, "கம்யூனிஸ்ட் பெல்ட்டான கீழையூர் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கில் கட்சிச் செயல்பாடு நன்று. நாகப்பட்டினம் தெற்கு, வடக்கு, திருமருகல் தெற்கு பகுதிகளில் நிர்வாகிகளின் செயல்பாடு சுமார். வேதாரண்யம், தலைஞாயிறு மோசம்' என்று கோடிட்டுக் காட்டிவிட்டு வந்தார். "தலைஞாயிறு நிர்வாகி யான பேரூர் செயலாளர் சுப்பிரமணியம் செயல்பாட்டில் தவறுகள் எதுவுமில்லை. அதேசமயம் அவரது செயல்பாடு மந்தமாக இருக்கிறது என்கிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள். நாகூரில் கட்சி நிர்வாகிகள் செயல்பாடு நன்றாகவே இருக்கிறது'' என்றார் முதல்வர்.

அதேசமயம் கட்சிக்காரர்களோ, முதல் வரின் விசிட்டின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பகுதி மீனவர்களை மையப்படுத்தியே இருக்கிறது. இப்பகுதிகளில் மீனவர்களைப் போலவே விவசாயிகளும் அதி கம். அதனால் இந்தப் பிரச்சனையை அ.தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் கையிலெடுப்பார்கள். அது லோக்கல் கட்சிக்காரர்களுக்குத்தான் பாதிப்பு என்கிறார்கள்.

nkn080325
இதையும் படியுங்கள்
Subscribe