ஒற்றுமைக்கு கட்அவுட் வேற்றுமைக்கு கெட் அவுட்! இந்து- முஸ்லிம் திருவிழா!

ss

பெரம்பலூர் மாவட்டம் வடக்குப் பகுதி யில் வேப்பந்தட்டை தாலுகா வில் உள்ளது வி. களத்தூர். இந்த ஊர் சுமார் 6000 வாக்காளர் களைக் கொண்ட பெரிய ஊராட்சி. இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் சரிசமமாக வாழ்கிறார்கள். கடந்த காலங் களில் மிகவும் ஒற்றுமையோடு வாழ்ந்துவந்த இரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் கோவில் திருவிழா நடத்துவதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விஸ்வரூபம் எடுத்தது.

ஊரில் லட்சுமி நாராயண பெருமாள் வகையறாவைச் சேர்ந்த கோவில்கள், மாரியம் மன், செல்லியம்மன்,

பெரம்பலூர் மாவட்டம் வடக்குப் பகுதி யில் வேப்பந்தட்டை தாலுகா வில் உள்ளது வி. களத்தூர். இந்த ஊர் சுமார் 6000 வாக்காளர் களைக் கொண்ட பெரிய ஊராட்சி. இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் சரிசமமாக வாழ்கிறார்கள். கடந்த காலங் களில் மிகவும் ஒற்றுமையோடு வாழ்ந்துவந்த இரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் கோவில் திருவிழா நடத்துவதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விஸ்வரூபம் எடுத்தது.

ஊரில் லட்சுமி நாராயண பெருமாள் வகையறாவைச் சேர்ந்த கோவில்கள், மாரியம் மன், செல்லியம்மன், ராயப்பா சுவாமி, சிவன் கோவில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் காப்புக் கட்டி மூன்று நாட்கள் திருவிழா நடக்கும் இந்தத் திருவிழாவில் சாமிகள் முஸ்லிம் தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்வதில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

dd

1912, 1984-ஆம் ஆண்டு களில் மதக்கலவர டென்ஷன் ஏற்பட்டு இருதரப்பிலும் சிலர் கைதுசெய்யப்பட்டனர். அதன்பிறகு 2012-ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது சில உத்தரவுகளைப் பிறப்பித்து, பதட்டத்துடன் திருவிழா நடத்தப்பட்டது. பிறகு இரு தரப்பினரும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத் தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு நீதிபதிகள் கிருபாகரன், வேல் முருகன் அமர்வு நீண்ட விசா ரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் "பொது இடங் களில் அவரவர் மத திருவிழாக் கள், சாமி ஊர்வலங்கள் நடத்து வதற்கு உரிமை உண்டு. அதை யாரும் தடுக்கக்கூடாது. இரு தரப்பினரும் ஒற்றுமையுடன் திருவிழாக்களை நடத்த வேண் டும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

தீர்ப்பின் பின்பே, வி.களத்தூர் கிராமத்தில் இருந்துவந்த டென்ஷன் குறைந்தது. இரு தரப்பினரும் அவரவர் சமூக முக்கியஸ்தர்களுடன் கூடிப் பேசி முடிவுசெய்தனர்

அதன்படி கடந்த மே மாதம் 16-ஆம் தேதி ஊரில் முஸ் லிம்கள் சந்தனக்கூடு திருவிழா நடத்தினார்கள். அந்த திருவிழாவில் கலந்துகொள்ள இந்து தரப்பு முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அதை யேற்று இந்துக்களில் உள்ள ஊர் முக்கியஸ்தர்கள் சந்தனக்கூடு திருவிழாவுக்கு நேரில் சென்று முஸ்லிம் ஜமாத்தார்களுக்கு சால்வை அணிவித்து விழாவில் கலந்துகொண்டனர்.

இதையடுத்து கடந்த ஜூலை 16-ஆம் தேதி செல்லியம்மன், மாரியம்மன், ராயப்பா சாமிகளுக்கு காப்புக் கட்டி மூன்று நாள் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவுக்கு முஸ்லிம் ஜமாத் பெரியவர்கள் குழுவாகச் சென்று ஊர்ப் பெரியவர் களுக்கு சால்வை அணிவித்து திருவிழாவை சிறப்பித்தனர்.

"சுமார் நூறாண்டு கால மத பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது இரு தரப்பினர் இடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' என்கிறார் கள் இரு மதத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் .

nkn060822
இதையும் படியுங்கள்
Subscribe