ண்மைக் குறைபாட்டைப் போக்குவதாகக் கூறி இளைஞர் களுக்கு ஹோமோ செக்ஸ் தொல் லை கொடுத்த தோடு, உறவுக்கு ஒத்துழைக்காத இளைஞர்களை துண்டு துண்டாக வெட்டி வீட்டிலேயே புதைத்த கொடூரமான சைக்கோ சித்த வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியன்-வெண்ணிலா தம்பதியினர். அவர்களது மகன் அசோக்ராஜ், 27 வயது இளைஞர். இவர் சென்னையில் லாரி டிரைவராக இருந்து வந்தார். பாட்டி பத்மினி யோடு வசித்துவந்த அசோக்ராஜ், தீபா வளிக்கு பாட்டியைப் பார்க்க ஊருக்கு வந்து விட்டு சென்னைக்கு செல்வதாகக் கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார். சென்னைக்கு போன தும் பேசுவதாக பாட்டி யிடம் கூறிவிட்டு சென்ற அசோக்ராஜ், இரண்டு நாட்களாகியும் பேசவேயில்லை, அவரது போனும் சுவிட்ச்ஆப் ஆகி யிருந்தது. பதறிப்போன பாட்டி, சோழபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்ற போலீசார் சோழபுரம் கடைவீதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்தனர். அப்போது அசோக் ராஜ் சோழபுரம் கீழத்தெருவிற்கு செல்வதும், பிறகு அங்கிருந்து திரும்பி வராததை யும் கண்டுபிடித்தனர். அதோடு அவரது செல்போன் கடைசியாக சுவிட்ச் ஆப் ஆனதும் அங்கே தான் என்பதை கண்டுபிடித்தனர்.

ff

சோழபுரம் கீழத்தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தி யை கைதுசெய்து விசாரித்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி! கேசவ மூர்த்தி வீட்டினுள் தோண்டிய போலீசார், அசோக்ராஜின் உட லின் பாகங்களை வெளியே எடுத்தனர்.

மேலும் பல இடங்களில் மனித எலும்பு கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியா னார்கள்.

Advertisment

இதுகுறித்து போலீசாரிடமே கேட்டபோது, "கைது செய்யப்பட்டுள்ள கேசவமூர்த்தி தன்னை சித்தா மருத்துவர் எனக் கூறிக்கொண்டு பல ஆண்டுகளாக இந்த பகுதியில் நாட்டு மருத்து வம் பார்த்து வந்துள்ளார். கேசவமூர்த்தியோடு பிறந்தவர்கள் எட்டு பேர். இரண்டு மனைவிகள். குழந்தை கிடையாது. கேசவமூர்த்தியின் தொல்லை தாங்காமல் மனைவிகள் உள்ளிட்ட குடும்பமே அவரை விட்டு ஒதுங்கியிருக்கின்ற னர். கேசவமூர்த்திக்கு ஆண்மைத்தன்மை இல் லையென்று சென்னையில் ஒரு சித்த மருத் துவரிடம் சிகிச்சை பெற்றதோடு, கூடவே யிருந்து வைத்தியத்தையும் அரைகுறையாகக் கற்றுக்கொண்டு, ஊருக்குத் திரும்பியவர், தன் னையும் சித்த வைத்தியரென்று கூறிக்கொண்டு, ஆண்மைக் குறைபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்தியம் பார்த்துள்ளார். மனைவியோடு இல்லாத நிலையில், இவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அளவுக்கு அதிகமாக போதை மருந்து கொடுத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவார். ஒத்துழைக்க மறுத் தால் இதனை வெளியே கூறிவிடுவார்களென்று, கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டி வீட்டினுள்ளேயே புதைத்துள்ளார்.

அசோக்ராஜ் காணாமல் போனது தொடர்பாக அவரது பாட்டி புகார் கொடுத்த போது கேசவமூர்த்தியும் உடன் இருந்துள்ளார். தன்னை காத்துக்கொள்ள பல யுக்திகளை கையாண்டார். மெயின் சாலையிலுள்ள சி.சி. டி.வி. பதிவுகளை அழிப்பதற்காக இணைப்பு ஒயர்களைத் துண்டிக்க முயன்றுள்ளார். ஐந்து நாட்களாக எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், திடீரென அசோக்ராஜ் எழுதியதாக அவனது காதலிக்கு வந்த கடிதம்தான் கேசவமூர்த்தியை சிக்கவைத்தது. அசோக்ராஜ் அந்த பெண்ணிடம், தனக்கு ஆண்மைக் குறை பாடு இருப்பதாகவும், அதற்காக கேசவமூர்த்தி யிடம் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறியிருந் தான். அசோக்ராஜ் காணாமல் போனதாக புகா ராகி, ஐந்து நாட்கள் கழித்து வந்த கடிதத்தில், "என்னை மன்னித்துவிடு, உன்னோடு வாழ நான் தகுதியில்லாதவன், ஆண்மையில்லாதவன். நீ வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழவேண்டும். இதுதான் எனது கடைசி ஆசை. இனி இந்த உலகத்தில் என்னை பார்க்க முடியாது' என எழுதியிருந்தது. இந்த கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அசோக்ராஜின் பாட்டியிடம் கூறியுள் ளார். பிறகு அந்தப் பெண்ணிடம் விசாரித்த தில் "இந்த கையெழுத்து அசோக் கையெழுத்து இல்ல, வேற யாரோ எழுதியிருக்காங்க' என்றும், கேசவமூர்த்தியிடம் வைத்தியம் பார்த்ததையும் கூறினார். பிறகு கேசவ மூர்த்தியின் வீட்டில் சோதனை நடத்தியதில் ஒரு டைரி கிடைத்தது. அந்த டைரியிலிருந்த கையெ ழுத்தும், அந்த பெண்ணுக்கு வந்த கடிதத்திலிருந்த கையெழுத்தும் ஒன்றுபோலிருந்தது. அத் துடன், கேசவமூர்த்தி வீட்டிற்கு அசோக்ராஜ் சென்ற சி.சி.டி.வி. பதிவு மற்றும் அசோக்ராஜ் செல்போன் கடைசியாக சுவிட்ச் ஆப் செய்யப் பட்ட இடம் கேசவமூர்த்தி வீடு என்பது விசா ரணையில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை மடக்கி கைது செய்தோம்'' என்றனர்.

dd

Advertisment

கேசவமூர்த்தியிடம் நெருக்கமாக இருந்து அவரிடமிருந்து தப்பிய வேப்பத்தூரை சேர்ந்த ஒருவர் நம்மிடம், "கேசவமூர்த்தியின் நாட்டு வைத்தியம் பலன் அளிப்பதாக நம்பி நிறைய பேர் வாடிக்கையா வருவாங்க. நானும் வாடிக்கை யாளராக இருந்தேன். இதில் பெரும்பாலானோர் போதை மாத்திரைக்கும், ஆண்மைக் குறைபாடு போக்கவும் மருந்து கேட்டு வருவாங்க. கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலை கொண்டு பொடி செய்து மாத்திரையாகத் தயா ரித்து அவர்களுக்கு கொடுத்து பணம் பறிப்பார். குறிப்பா ஆண்மைக் குறைபாடு நீங்கவும், உடல் வலி குறைவதற்கும் அவரே தனித்தனியாக மாத்திரை தயாரித்துக் கொடுப்பார். அதோட இஸ்லாமியர்களுக்கு சுன்னத் சிகிச்சையும் அளிப்பார். 2021ஆம் ஆண்டு காணாமல்போன அனஸ் என்பவரும், கேசவமூர்த்திடம் சிகிச்சை பெற்றவர்தான். இதேபோல் போதை மருந்து கொடுத்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக்கி புதைத்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான். அசோக்ராஜ் உடலை ஆடு வெட்டும் கத்தியால் துண்டு துண் டாக்கியதோடு, தோலையும் கோழி உரிப்பதுபோல் உரித்துப் புதைத்ததோடு, நெஞ்சு எலும்புகளை நொறுக்கி வீட்டின் கழிப்பறைக் கான இடத்தில் புதைத்துள்ளான். கேசவமூர்த்தி யிடம் பெரிய பெரிய வி.ஐ.பி.க்களும்கூட இரவு நேரத்தில் வைத்தியம் பார்க்க வருவாங்க. ஆண் மை இல்லையென்று வருபவர்களின் அந்தரங்க உறுப்பை படம் பிடித்து வைத்துக்கொள்வார். அழகாக இருக்கும் இளைஞர்களிடம் பயிற்சி என்கிற பெயரில் ஹோமோசெக்ஸ் செய்வார். அதிலிருந்து தப்பியவர்களில் நானும் ஒருவன். சிக்கியவர்கள் அதிகம். போலீசார் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்''’என்றார்.

டைரியிலிருந்த வாடிக்கையாளர்களின் பெயர்களைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு காரணம், அதில் பெரும்பாலானோர் அரசியல் பிரமுகர்களாக இருந்தனர். பாதிக்கு மேற்பட்டோர் இளைஞர்கள். தற்போது கேசவமூர்த்தியின் டைரியில் குறிப் பிடப்பட்டுள்ள பெயர்களில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ள னர். அவர்களில் யாரெல்லாம் காணாமல் போயுள்ளார்கள், எந்த சிகிச்சைக்காக வந்தார் கள், வேறெதற்காகவும் சந்தித்தார்களா என்பது குறித்தெல்லாம் போலீசார் விசாரிக்கவுள்ளனர். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் காணாமல்போன இளைஞர் கள் குறித்த பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். அதேவேளை, கேசவமூர்த்தியின் டைரியிலுள்ள அரசியல் பிரமுகர்கள் தங்களது பெயர் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற் காக பல வகையில் முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வல ரும் வழக்கறிஞ ருமான சங்கர் கணேஷ் கூறுகை யில், "இளைஞர் களை கஞ்சா உள் ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி, பலரை ஓரினச் சேர்க்கைக்கு பயன்படுத்திய கேசவமூர்த்தியையும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கண்ட றிந்து பாராபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதோடு, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள் ளனர் என்பதை முழுமையாக வெளி உலகத் திற்கு தெரியப்படுத்த வேண்டும். கடந்த சில வாரங்களாக இதுபோன்ற மிக மோசமான சம்ப வங்கள் கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து நடந்துவருகிறது. இரண்டு வாரத்திற்கு முன்பு திருவலஞ்சுழியில் காப்பகம் நடத்திய ஐம்பது வயதைத் தாண்டிய பெண்மணி ஒருவர், வய தானவரோடு சேர்ந்துகொண்டு, உணவு கொடுக்கவந்த சிறுவனை பாலியல் ரீதியாகத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததில் அவனது உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, அந்த உண்மை தெரியவந்தது. தற்போது அந்த பெண்மணி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

அதேபோல திருவிடைமருதூர் அடுத்துள்ள பருத்திக்குடியை சேர்ந்த ராமலிங்கம் என்கிற 80 வயது முதியவர் ஒருவர், வீட்டு வேலைக்கு வந்த பெண் ஒருவரிடம் பலவந்தமாகக் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தன் இச்சையை போக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் ராமலிங்கத்தை விட்டு விலகி சக்திவேல் என்பரோடு நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டதை தாங்கிக்கொள்ளமுடியாத ராம லிங்கம், சசிகலாவையும், சக்திவேலையும் டிராக்டர் ஏற்றி கொலை செய்துள்ளார். இப்படி வித்தியாசமான கொடூரங்கள் இந்த பகுதியில் தொடர்கிறது. அதற்கு காவல் துறை முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்'' என்றார்.