ஜா புயலை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடமுடியாது. புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை அது நிலை குலைத்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்ட மாயின. தென்னை, மா, பலா, வாழை, தேக்கு என கோடிக்கணக்கான மரங்களும் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. பலர் உயிரிழந்தார்கள். இவற்றின் இழப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக புனரமைக்கப்பட்டன. ஆனால், அந்த கஜா புயலின் கோர வடுவாக இப்போதும் சீரமைக்கப்படாமல் இருட்டிலேயே இருக்கிறது அந்த கிராமத்துத் தெரு. அங்கே இன்றுவரை மின் இணைப்பைத் தரவிடாமல் இடைஞ்சல் செய்துவருகிறது ஒரு கும்பல். அந்தக் கும்பலால் இன்னும் இருட்டிலேயே இருக்கும் அந்த சபிக்கப்பட்ட பகுதி... தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு அருகே இருக்கும் ஒக்கநாடு மேலையூரின் யாதவர் தெரு. இந்த யாதவர் தெருதான் பாதகர்களால் பழிவாங்கப்பட்டு வருகிறது. ஏன்?

gg

அது குறித்து விவரிக்கும் ஏரியாவாசிகள்...

Advertisment

""2016-ல் இங்க இருக்கும் ஆற்றைத் தூர்வார 4 லட்ச ரூபாயை ஒதுக்கியது அரசு. அதற்கான டெண்டரை வைத்திலிங்கம் எம்.பி.க்கு நெருக்கமான ஒருத்தர் எடுத்தார். வெறும் 100 மீட்டர் அளவுக்கு மட்டும் ஆற்றில் மணலைத் தோண்டிவிட்டு, கிளம்பினார்கள். முழுசா தூர்வாரிட்டுதான் பொக் லைன் எந்திரங்களை இங்கிருந்து நகர்த்தணும்னு வழிமறிச்சோம். மழை முடிஞ்சதும் வெட்டிக் கொடுக்கிறோம்னு அப்போதைய பொறியாளர்கள் கனிமொழியும், மின்னல்கொடியும் உத்தரவாதம் கொடுத்து இயந்திரத்தை மீட்டுக்கொண்டு போனாங்க. அதன் பிறகு வரவே இல்லை. நாங்க விடாது போராடியதால் 2017-ல் வேறொரு நிதியில் இருந்து தூர் வாரிவிட்டுப் போனாங்க. அதனால் அப்பவே எங்க மேல அவங்களுக்குக் கடுப்பு.

gg

இதேபோல், 2018-ல் அதே இடத்தில் குடி மராமத்து செய்ய அரசால் 14 லட்ச ரூபாய் ஒதுக்கப் பட்டது. அந்த வேலையை எங்க பாசனதாரர் சங்கம்தான் செய்யணும்னு கேட்டோம். இல்ல எம்.பி.வைத்திலிங்கம், இந்த வேலையை அவங்க கட்சிக்காரருக்குக் கொடுக்கச் சொல்றார். இல் லன்னா அந்த வேலையையே செய்ய வேண்டாம்னு சொல்லிட்டார்ன்னு சொன்னாங்க. இப்பவரை அந்த வேலை நிலுவையிலேயே இருக்கு. இதனால் எங்க தெருமீது இருக்கும் கோபத்தால்தான் எம்.பி. தரப்பு, எங்க பகுதிக்கு மின்சாரம் கொடுக்கவிடாம பண்ணுது. மின் இணைப்பு கொடுக்கவந்த மின் வாரிய ஊழியர்களைப் பலமுறை எம்.பி. ஆட்கள் துரத்தியடிச்சாங்க. இதேபோல் போன 18-ந் தேதி மறுபடியும் கம்பி இழுக்க மின்வாரிய ஆளுங்க வந்தாங்க. பழையபடி எம்.பி. டீம் தடுக்குதுன்னு சொல்லிட்டுத் திரும்பிப் போயிட்டாங்க. அதன் பிறகுதான் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்'' என்றவர்கள்...

Advertisment

""எங்க ஊர் பிரச்சினை சம்பந்தமாக பி.ஆர்.பாண்டியன், கலெக்டர் அண்ணாதுரையிடம் பேசினார். அப்ப, மின் இணைப்பு கொடுக்க வேண்டாம்னு மேலே இருந்து பிரஷர் வருதுன்னு அதிகாரிகள் சொல்றாங்களாம். இப்ப மழைக்காலம் தொடங்கிடிச்சி. பாம்பு, தேள், பூரான் மாதிரியான பூச்சிகள் வீடுகளுக்குள் வரத் தொடங்கிருச்சு. அதனால் தஞ்சாவூர்ல மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில்தான் இனி நாங்கள் குழந்தை குட்டி களோட குடும்பம் குடும்பமா குடியேறப் போறோம். எங்கப் பகுதிக்கு மின்சாரம் வந்த பிறகுதான் அங்கிருந்து வெளியேறுவோம்'' என்றார்கள் அதிரடியாய்.

இந்த நிலையில் 22-ந் தேதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருவதை அறிந்து, தங்கள் கோரிக்கையை வலியுறுத்திக் கருப்புக்கொடி காட்டப் போவதாக ஏரியா விவசாயிகள் அறிவிக்க, ggமுதல்நாள் இரவே 10 பேரை கைது செய்தது போலீஸ். அதையும் மீறி 22-ந் தேதி காலை ஆளு நருக்கு கருப்புக்கொடி காட்ட பெண்கள், குழந்தை கள், விவசாயிகள் என்று குடும்பம் குடும்பமாக 200-க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் வந்த போது, தஞ்சை எல்லையில் வைத்து அனைவரை யும் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்துவிட்டனர். ஆளுநர் செல்லும் வரை மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டு மாலையில்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சி யரின் கருத்தை அறிய தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

தஞ்சை நகரவாசிகள் சிலர் நம்மிடம்... ""தஞ்சையில் ஒட்டுமொத்தமாக எல்லா நிர்வாகமும் கெட்டு நாசமா போச்சு.. மாவட்ட ஆட்சியர் கிராம மக்களை இருளில் தவிக்க விடுகிறார். மாவட்டக் காவல் துறையின் உயர் அதிகாரி, "மணல் திருடர் களைப் பிடித்தால் உடனே அவர்களை வெளியே விடு'னு காவல் நிலையங்களுக்கே போன்போட்டு சொல்கிறார். தமிழ் பல்கலைக் கழகம் ஒரு பக்கம் ஊழலில் சிக்கித் தவிக்கிறது. இப்படி தஞ்சையே நாற்றமெடுக்கிறது'' என்கிறார்கள் வருத்தமாய்.

மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது அதிகார வர்க்கம். இவர்களுக்கு நீதி கிடைக்குமா?

-இரா.பகத்சிங்