கராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்திக்கிறது கடலூர். மொத்தமுள்ள 45 வார்டுகளில் மூன்று வார்டுகள் ஆதிதிராவிடர் பெண் களுக்கும், 20 வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரில் 23 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பெண்களும் கலக்கிவருகிறார்கள். மாநகர மேயர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என மொத்தம் 286 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ccதி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் முடித்துள்ளார். மா. செ.வும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை தி.மு.க.வுக்கு வசப்படுத்துவதற்காக அனைத்து வார்டுகளிலும் தீவிரப் பிரச்சாரத்தில் இருக்கிறார். கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் எவரேனும் ஈடுபட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கறார் காட்டி, கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுகிறார். கடலூர் எம்.எல்.ஏ. ஐயப்பன், அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு பக்கபலமாக வலம்வருவது கூடுதல் பலம்.

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ். பிரச்சாரம் செய்துள்ளார். அ.தி.மு.க. சார்பாக 2011-ல் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்பிரமணியன், உள்கட்சி பிரச்சினையால் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 2014 முதல் 2016 வரை குமரன் தலைவர் பதவியில் இருந்தார். எனவே, மீண்டும் மாநகராட்சியைத் தக்கவைக்கவும், சட்டமன்றத் தேர்தலில் கடலூரில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீளவும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாக மூட்டி தீவிரப் பிரச்சாரத்தில் உள்ளார்.

கடலூர் மாநகராட்சியின் பெண் மேயருக்கான ரேஸில், தி.மு.க.வில், மாவட்ட பொருளாளரும், கடலூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளருமான வி.எஸ்.எல்.குணசேகரனின் மனைவி கீதா, நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி என இருவருக்குமான போட்டி யில், அமைச்சரின் ஆதரவோடு, குணசேகரன் மனைவி கீதா மேயர் பதவியை பிடிக்க உள்ளார் என்று உறுதியோடு கூறுகின்றனர் தி.மு.க.வினர்.

Advertisment

அ.தி.மு.க. தரப்பில், கடலூர் நகரத் துணைச் செயலாளர் கந்தன் மனைவி நிஷா, வழக்கறிஞர் பிரிவு பாலகிருஷ்ணன் மனைவி உமா மகேஸ்வரி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றப் பிரமுகரும் முன்னாள் கடலூர் நகர மன்றத் துணைத் தலைவராக இருந்த சேவல் குமார் மருமகள் சங்கீதா ஆகியோர் மேயர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்களில், எம்.சி.சம்பத்தின் பலமான ஆதரவு சங்கீதாவிற்கு இருப்பதாகவும், அ.தி.மு.க. வெற்றி பெற்றால் சங்கீதாதான் மேயரென்றும் அடித்துக் கூறுகிறார்கள் ர.ர.க்கள். ஆக, கடலூர் மாநகரப் பெண் மேயராக அமரப்போவது கீதாவா -சங்கீதாவா என்ற பரபரப்பான போட்டி நிலவுகிறது.