மணலுக்குப் பதில் கிரஷர் தூசி கலவை! -வீட்டு வசதி வாரிய ஊழல்!

sand

2018-ல் அ.தி.மு.க. அரசு கட்டிய சென்னை புளியம்தோப்பு பகுதியில் கூவம் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு கட்டிய வீடுகளின் சுவர்கள் தொட்டாலே உதிர்கின்றன. அதுபோல… மதுரையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டிய கட்டடங்களிலும் எளிய மக்களுக்கு ஒதுக்கிய வீட்டுமனைகளிலும் அரசாங்க விதிகளை மீறி பல ஆயிரம் கோடி ருபாய் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன. இவையெல்லாம் முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஒப்புதலோடு நடந்தேறியுள்ளன என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு புகார் கொடுத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின்.

"மதுரை ஆனையூர் சிலையனேரியில் உயர்வருவாய்ப் பிரிவில் 14 வீடுகளும் மத்திய வருவாய்ப் பிரிவில் 26 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. வீடுகள் கட்டுவதற்கு வாரியம் வெளியிட்டுள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. திட்ட அறிக்கையில் மணல் பயன்படுத்துவதாகவும் கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் குவாலிட்டி கண்ட்ரோலுக்கு அனுப்பி அதன் ஒப்புதலுக்குப் பிறகே கட்டுமானம் நடைபெறும் என்ற

2018-ல் அ.தி.மு.க. அரசு கட்டிய சென்னை புளியம்தோப்பு பகுதியில் கூவம் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு கட்டிய வீடுகளின் சுவர்கள் தொட்டாலே உதிர்கின்றன. அதுபோல… மதுரையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டிய கட்டடங்களிலும் எளிய மக்களுக்கு ஒதுக்கிய வீட்டுமனைகளிலும் அரசாங்க விதிகளை மீறி பல ஆயிரம் கோடி ருபாய் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன. இவையெல்லாம் முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஒப்புதலோடு நடந்தேறியுள்ளன என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு புகார் கொடுத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின்.

"மதுரை ஆனையூர் சிலையனேரியில் உயர்வருவாய்ப் பிரிவில் 14 வீடுகளும் மத்திய வருவாய்ப் பிரிவில் 26 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. வீடுகள் கட்டுவதற்கு வாரியம் வெளியிட்டுள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. திட்ட அறிக்கையில் மணல் பயன்படுத்துவதாகவும் கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் குவாலிட்டி கண்ட்ரோலுக்கு அனுப்பி அதன் ஒப்புதலுக்குப் பிறகே கட்டுமானம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

sand

கட்டடங்களுக்கான கம்பி, சிமெண்ட் அனைத்திலும் தரம் குறைந்தவற்றையே பயன்படுத்தியுள்ளனர். மணல் பயன்படுத்துவதாகச் சொல்லிவிட்டு எம்.சாண்ட் மணல்கூட பயன்படுத்தாமல் கிரஷர் தூசியைப் பயன்படுத்தி கட்டியுள்ளனர். இவையனைத்தும் எங்கிருந்து வாங்கப்பட்டது? அரசு நிர்ணயித்த பொருட்களைத்தான் உபயோகித்துக் கட்டினார்களா? என தகவல் உரிமை சட்டத்தில் கேள்வியெழுப்பியும் இதுவரை பதிலில்லை. இது இப்படியிருக்க…... ...

மதுரை துணைக்கோள் நகரத்தில் குடிசைமாற்று வாரியம் மூலம் 5 ஆயிரம் வீடுகளும், வீட்டுவசதி வாரியம் மூலம் 5 ஆயிரம் வீடுகளும் மொத்தம் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவைகளில் 60% இடங்களை ஓ.பி.எஸ் மகன்களே தங்கள் பினாமி பெயர்களில் வாங்கியுள்ளனர். துணைக்கோள் நகரத்தில் 60% இடங்கள் ஓ.பி.எஸ். மகன்கள் கைகாட்டும் நபர்களுக்கே ஒதுக்கப் பட்டுள்ளன.

அண்ணா நகரில் அம்மா திருமண மண்டபம் கட்டினார்கள். விற்பனைக்கு டெண்டர் விட்டும், அதை கடந்த நான்கு வருடங்களாக யாரும் வாங்க முன்வரவில்லை. அந்தளவுக்கு மிகவும் தரமற்றுக் கட்டியுள்ளார்கள். அதில் பல கோடிக்கு முறை கேடு நடந்துள்ளது. கடந்த ஆட்சியின்போது இந்தத் துறை ஓ.பி.எஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. இதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட ஓ.பி.எஸ். மற்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளேன். வழக்கும் போடவுள்ளேன்''” என்கிறார்.

வீட்டு வசதி வாரியத்தின் முறைகேடுகள் குறித்து தொடர்ச்சியாக தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்பெற்று போராடி வரும் சமூக ஆர்வலர் தவமணி, “"மதுரை வீட்டு வசதி வாரியத்தில் வேலைசெய்யும் சாதாரண பியூனுக்கே பல மாடி கட்டடங்கள் சொந்தமாக உள்ளன. மதுரைக் கோட்டத்தில் பணிபுரியும் 5 பொறியாளர்களுக்கு அரசு விதியைமீறி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வெறும் 10-வது படித்துவிட்டு கடைநிலை ஊழியராக சேர்ந்த 21 பேர் தற்போது உதவிப் பொறியாளராகவும் அதிகாரிகளாகவும் பதவி உயர்வு பெற்று பணியில் தொடர்கிறார்கள். அவர்கள் விநாயகா விஷன் தொலைதூரக் கல்லூரியில் பணம் கொடுத்து போலிச் சான்றிதழ் வாங்கி அரசுப் பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தொலைதூர கல்லூரியில் வாங்கிய பட்டம் அரசு பதவி உயர்வுக்கு செல்லாது என்று கோர்ட் தீர்ப்பிருக்க, எதனடிப்படையில் பொறியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டார்கள்

sans

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மதுரை பிரிவிலுள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் மற்றும் அடியாட்களின் உதவியோடு ஊழல் வேட்டையாடி வருகின்றனர். இங்குள்ள ஒவ்வொரு அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை''’என்கிறார்.

மேலும் கூறுகையில், "மதுரை சொக்கிகுளம். ரேஸ்கோர்ஸ், டிஆர்ஒ காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 10ஆண்டுகளில் மட்டும் பலகோடி ரூபாய்க்கு மராமத்துப் பணிகளுக்கான வேலைகள் நடந்துமுடிந்திருக்கிறது. இதில் எந்த வீடுகளிலும் திட்ட அறிக்கையில் சொல்லியதுபோல் மராமத்து வேலைகள் செய்யவில்லை. மாறாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் தரமில்லாத பெயிண்டுகளை அடித்து அதை பளிச்சென போட்டோ எடுத்து மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் பொறியாளர்கள்.

மராமத்து பணியின்போது ஒரு வீட்டிலிருக்கும் அனைத்து ரிப்பேர்களையும் சரி செய்யவேண்டும். ஒருசில வீடுகளைத் தவிர மற்ற எல்லா வீடுகளுக்கும் வெளிப்பகுதியில் மட்டும் பெயிண்ட் அடித்துவிட்டு கணக்கு முடித்துக் கொள்ளுவது பொறியாளர்களின் ஸ்டைல்''’ என்கிறார்.

மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மீது அடுக்கடுக்காக வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி அதன் இயக்குனர் அன்புமணியிடம் கேட்டோம். "நீங்கள் சொல்லும் சமூக ஆர்வலர்களுக்கு வேறு வேலையே இல்லை. தகவல் உரிமை சட்டத்தில் தொடர்ச்சியாக கேள்விமேல் கேள்வி கேட்பது, பின்பு அதை வைத்து எங்களை போன்ற அதிகாரிகளை மிரட்டுவது? தைரியமிருந்தால் அரசியல்வாதிகளிட்ம் போய் கேட்கச் சொல்லுங்கள்''’என்றார். மேலும் கேள்விகளை அடுக்கியபோது, "நீங்கள் யார் இதைக் கேட்க?… மேலதிகாரிகள் இருக்கிறார்கள், அவர்களிடம் சொல்லிக்கொள்கிறோம்''’என்று நழுவினார்.

nkn250821
இதையும் படியுங்கள்
Subscribe