சிக்கிய கோடிகள்! அலறும் புதுச்சேரி அரசு அலுவலர்கள்!

ss

சுற்றுலா பயணிகளைக் காட்டி, "இவுங்க உங்க ஊருக்கு நிறைய வர்றாங்க, இவுங்களால உங்க வாழ்க்கையே மாறப்போகுது'' எனச்சொல்லி புதுச்சேரி மக்களை ஏமாற்றியுள்ளதாக ஒரு நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

பெங்களுரூவை தலைமையிடமாகக்கொண்டு "கோ ஃப்ரி சைக்கிள்' என்கிற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதனை 2018ஆம் ஆண்டு பெங்களூருவில் நிஷாத்அகமத் என்பவர் தொடங்கியுள்ளார். விதவிதமாக விலையுயர்ந்த சைக்கிளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறதாம் அந்நிறுவனம். லூதியானாவில் உற்பத்தி தொழிற்சாலை, இந்தியாவின் பெருநகரங்களில் விற்பனை அலுவலகங்கள் உள்ளதாகவும், சென்னையில் பெரியளவில் ஷோரூம் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிறுவனம் புதுச்சேரியில் கடந்த இரண்டு வருடமாக இயங்கிவந்துள்ளது.

ss

புதுச்சேரிக்கு தினமும் வரக்கூடிய சுற்றுலா பயணிகள், சைக்கிளில் வலம்வர விரும்புகிறார்கள், இதனால் சைக்கிளுக்கான தேவை அதிகமாகியுள்ளது. எங்களது நிறுவனத் திட்டத்தில் ஒருமுறை 4.5 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு மாத வருவா யாக 52,25

சுற்றுலா பயணிகளைக் காட்டி, "இவுங்க உங்க ஊருக்கு நிறைய வர்றாங்க, இவுங்களால உங்க வாழ்க்கையே மாறப்போகுது'' எனச்சொல்லி புதுச்சேரி மக்களை ஏமாற்றியுள்ளதாக ஒரு நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

பெங்களுரூவை தலைமையிடமாகக்கொண்டு "கோ ஃப்ரி சைக்கிள்' என்கிற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதனை 2018ஆம் ஆண்டு பெங்களூருவில் நிஷாத்அகமத் என்பவர் தொடங்கியுள்ளார். விதவிதமாக விலையுயர்ந்த சைக்கிளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறதாம் அந்நிறுவனம். லூதியானாவில் உற்பத்தி தொழிற்சாலை, இந்தியாவின் பெருநகரங்களில் விற்பனை அலுவலகங்கள் உள்ளதாகவும், சென்னையில் பெரியளவில் ஷோரூம் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிறுவனம் புதுச்சேரியில் கடந்த இரண்டு வருடமாக இயங்கிவந்துள்ளது.

ss

புதுச்சேரிக்கு தினமும் வரக்கூடிய சுற்றுலா பயணிகள், சைக்கிளில் வலம்வர விரும்புகிறார்கள், இதனால் சைக்கிளுக்கான தேவை அதிகமாகியுள்ளது. எங்களது நிறுவனத் திட்டத்தில் ஒருமுறை 4.5 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு மாத வருவா யாக 52,250 உங்கள் வங்கிக் கணக்கில் 11 மாதம் செலுத்தப்படும். 12வது மாதம் நீங்கள் கட்டிய தொகை முழுவதும் திருப்பித் தரப்படும் எனச் சொல்லியுள்ளனர். இப்படி 5 விதமான முதலீட் டுத் திட்டங்களைப்பற்றி பிரபலமான நட்சத்திர விடுதிகளில் மீட்டிங் நடத்தி முதலீட்டாளர்களை மூளைச்சலவை செய் துள்ளனர். தென்னிந்திய மண்டலங்களின் தலைவராக அஜய் முருகன் என்பவர்தான் இக்கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தியுள்ளார். இதில் சின்னத்திரை நட்சத்திரங்களை அழைத்துவந்து காமெடி நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

திடீரென ஏப்ரல் 3ஆம் தேதி புதுச்சேரி மாநில சைபர் க்ரைம் போலீஸ் எஸ்.பி. பாஸ்கர் தலைமையிலான டீம், புதுச்சேரியிலுள்ள "கோ ஃப்ரி சைக்கிள்' அலுவலகத்துக்குள் புகுந்து சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் இருந்துள்ளது. அதற்கு கணக்கு கேட்டபோது, முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். கோடிக்கணக்கில் பணம் இருந்ததால் இதுகுறித்து அமலாக்கத்துறைக்கு தகவல் கூறினர். ஏப்ரல் 5ஆம் தேதி அமலாக்கத்துறை சென்னை மண்டல இணைஇயக்குநர் நளினி ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தியாவில் பல இடங்களில் அலுவலகங்கள் திறந்து, அதீத லாப ஆசைகாட்டி முதலீடுகளை வாங்கியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து அந்நிறுவனத்தின் 10 வங்கிக் கணக்குகளை முடக்கினர். கணக்கில் வராத 2.49 கோடி ரூபாயை கைப்பற்றினர். சைபர் க்ரைம் பொறுப்பு எஸ்.பி. ரச்னாசிங் மேற்பார்வையில், ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், லட்சுமி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என்கின்றனர் போலீஸ் தரப்பில்.

ss

இதுகுறித்து விசாரித்தபோது, "காவல்துறை அதிகாரி ஒருவரும், தாசில்தார் ஒருவரும், நட்பின் அடிப்படையில் சைபர் க்ரைம் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு, "கோ ஃப்ரி சைக்கிள்' நிறுவனத்தில் இன்வெஸ்ட் செய்திருந்தோம். மாதாமாதம் வட்டித் தொகையை தந்தவர்கள், இப்போது சில மாதங்களாகத் தரவில்லை' எனச்சொல்ல, அதனை விசாரிக்கவே சைபர் க்ரைம் உள்ளே சென்றது. அங்கே கட்டுக்கட்டாக பணம் இருப்பதைப்பார்த்து அதிர்ச்சியாகி அமலாக்கத்துறைக்கு தகவல்சொல்லி வரவைத்தனர். நிறுவனத்தின் 10 வங்கிக் கணக்குகளில் பலகோடி பணம் இருந்ததை தனியே விசாரிக்கின்றனர். புதுச்சேரியில் அரசுத் துறைகளின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான அதிகாரிகள், பல லட்ச ரூபாயை இங்கு முதலீடு செய்துள்ளார்கள். இதில் முதலீடு செய்துள்ளேன் எனச்சொன்னால் அதற்கு கணக்குக்காட்ட வேண்டும் என்பதால் பயந்துகொண்டு யாரும் புகார் தரவில்லை. அதேபோல் இவ்விவகாரத்தில் அமலாக்கத்துறை, பாண்டிச்சேரி சைபர் க்ரைம் இரண்டுமே திடீரென சைலன்டாகிவிட்டது. இந்த மோசடியின் பின்னணியில் பா.ஜ.க.வின் பெரும் புள்ளிகள் இருக்கிறார்கள். அதனாலயே புகாரை கிடப்பில் போட்டுவிட்டார்கள்'' என்கிறார்கள்.

ss

இதுகுறித்து "கோ ஃப்ரி சைக்கிள்' நிறுவனத்தை சேர்ந்த நிஷாத்அகமத், அஜய்முருகன் ஆகியோரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்களின் வழக்கறிஞர் ஹரிஹரன் மொபைல் எண்ணை தந்தார்கள். அவரிடம் நாம் கேட்டபோது, "6, 7 வருடமா தொழில் செய்யறாங்க. புதுச்சேரியில் இரண்டு வருடமா செய்யறாங்க. ஆர்.பி.ஐ. வரை சர்ட்டிபிகேட் வாங்கியிருக்காங்க. அவுங்க ஒரு ப்ராஞ்சை புதுச்சேரிக்கு தந்திருக்காங்க. அதுக்கான லைசென்ஸ் புதுச்சேரி அரசிடமிருந்து வாங்கல என்பதுதான் அவர்கள் மீது புகார். போலீஸ் அலுவலகத்துக்கு விசாரிக்க சென்றபோது, அங்கே தொகை அதிகமா இருந்தது பிரச்சனையாகிடுச்சி. இந்த முதலீட்டுத் திட்டம் ஆள் சேர்க்கற பிசினஸ் இல்லை. இதில் மக்கள் இதுவரை பாதிக்கப்படவில்லை. மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பார்கள். பணத்தை திரும்பக் கேட்பவர்களுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதிக்குள் பணம் திருப்பித் தரப்படும் என நீதிமன்றத்திலும் சொல்லியுள்ளோம். அலுவலகத்திலிருந்து எந்த ஆவணத்தையும் எடுக்கவில்லை. போலி ஆவணங்களும் கிடையாது. அங்கிருந்து எடுத்த 2.5 கோடி பணத்துக்கு ஆவணங்கள் கேட்கறாங்க. இங்கே புதுச்சேரி அரசு செயலாளர்கள், அரசு ஊழியர்களின் லஞ்சப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது எனச்சொல்வது தவறு. அப்படியிருந்தால் விசாரணையில் தெரியவரும்'' என்றார். விசாரணை அரசியல் தலையீடில்லாமல் நடத்தப்பட்டு, மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

nkn190425
இதையும் படியுங்கள்
Subscribe