"ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே... தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே'… என "நேற்று இன்று நாளை' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார். அந்த வரிகளை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி உயர்கோபுர விளக்கு அமைப்பதில் ஊழல் செய்து நிரூபித்திருக்கிறது.

Advertisment

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க 2020-ஆம் ஆண்டு திட்டமிடப் பட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத அந்த சமயத்தில் அதிகாரிகளின் உதவியோடு, தரமற்ற மின்விளக்கு கோபுரம் அமைத்தும், உண்மையான விலையை உயர்த்தியும், பல இடங்களில் பொருத்தாமலும் நூதனமான முறையில் பல ஆயிரம் கோடிகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

Advertisment

light

"இந்த ஊழல் ஓரிரு மாவட்டங்களில் மட்டும் நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் நடந்துள்ளது. "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல தமிழகம் முழுவதும் நடந்த ஊழலுக்கு திருவாரூர் மாவட்ட ஊழலே சாட்சி'’என்கிறார் மாவட்ட ஆட்சியரக அதிகாரி ஒருவர். இதுகுறித்து மயிலாடு துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவச்சந்திரன் கூறுகையில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு முறையான தகவல் கொடுக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். இதிலிருந்தே மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதும், அதற்கு அதிகாரிகள் துணை போயிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும், பேரூராட்சியிலும், நகராட்சியிலும் விலை வித்தியாசம் இருக்கு. அதோட போலியான நிறுவனங்களின் பெயரையே அதிகம் பயன்படுத்தியுள்ளனர். திருச்சியிலுள்ள ஒரு நிறுவனத்தில் சொந்த பயன்பாட்டிற்கு என விசாரித் தோம். "தரமானதாக 12 மீட்டர் உயரம் மின்கோபுரம் அமைக்க 1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்' என்றனர். கான்கிரீட் டில் துவங்கி பல்பு வரை அனைத்து வேலைகளும் அதில் பொருந்தும். அரசுத் தரப்பிலோ பல இடங்களில் 8.50 லட்சம் ரூபாய் வரை செலவானதாக ஆட்டையைப் போட்டிருக்கின்ற னர். ஒவ்வொரு பகுதியிலும் 10 கோடி வரை ஊழல் நடந் திருக்கிறது. இதுதொடர்பாக வழக்கு தொடரவிருக்கிறேன்'' என்கிறார் அவர்.

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையங் குடி ராஜாங்கட்டளையை சேர்ந்த கலியபெருமாளிடம் கேட்டபோது, "ஏதோ லைட்டுங்கிற பேர்ல அவசர அவசரமா வந்து போட்டாங்க. போட்டு ஒரு மாதம் கூட சரியா எரியல. இப்ப பீஸா போயிக் கிடக்கு. இந்த லைட்ட நம்பி போஸ்ட்ல இருந்த லைட்டுங்களையும் கழட்டிட்டாங்க. இருட்டுல பொண்டு பிள்ளைங்க போய்வரவே ரொம்ப சிரமமா இருக்கு''’என்கிறார்.

பசுமைச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜாவோ, “"திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு உயர்கோபுர மின்விளக்குகள் ஊராட்சிகள்தோறும் ஆறு மின்விளக்குகள் வீதம் பொருத்தப்பட்டன. அம்மின்விளக்குகள் ஒருசில மாதங்களிலேயே பழுதாகி வெறும் டவர் மட்டுமே நிற்கிறது. இந்த உயர் மின்விளக்குகள் ஊராட்சிகள்தோறும் அதிக அளவில் மக்கள் கூடும், முதன் மைச் சாலைகளில் பொருத்தப் பட்டிருந்தாலும், அரசு அதிகாரி களோ, மக்கள் பிரதிநிதிகளோ கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர். தமிழக அரசு இதில் நடந்துள்ள ஊழலைக் கண்டுபிடிப்பதோடு, உடனடியாக பழுதான விளக்குகளை சரி செய்து மக்கள் பயன்பெற செய்திட வேண்டும்''’ என்கிறார்.

gg

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப் புத் தலைவர் வீரா. வீரசேகர் கூறுகையில், "எங்க மாவட்டத் திலுள்ள 430 ஊராட்சிகளிலும் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதில் நூதன முறையைக் கையாண்டு ஊழல் செய்துள்ள னர். திருத்துறைப்பூண்டி ஒன்றி யத்தில் ஒவ்வொரு கோபுரமும் 3 லட்சம் மதிப்பீடுன்னு சொல்லிப் போட்டாங்க. முதலில் யாருக்கும் தெரியாம ஏ.டி. பஞ்சாயத்து நிதியில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் போட்டாங்க. பிறகு பஞ்சாயத்துல முக்கியமான அக்கவுண்டான ஒன்பதாவது அக்கவுண்ட்ல போட்டாங்க. பிறகு கவுன்சிலர் கணக்கு என மாவட்ட கவுன்சிலர் ஃபண்டுன்னு எந்தெந்த வகையில் பில் போட முடியுமோ அப்படி பில் போட்டு எடுத்துள்ளனர்.

430 ஊராட்சிகளிலும் ஊராட்சிக்கு சராசரியா ஐந்து கோபுரம் அமைத்து கோடிக் கணக்கில் ஊழல் செய்திருக் கின்றனர். இந்தத் திட்டத்துல மிகப்பெரிய ஊழல் நடக்க வாய்ப்பிருக்கிறது என அப்போதிருந்த மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தார். பிறகு அவரை அவசர அவசரமாக மாற்றி விட்டு வெ.சாந்தா என்பவரை ஆட்சியராகக் கொண்டுவந்தனர். வந்ததுமே அவசரமாக இந்தத் திட்டங்களைத் துவக்கி கோடிக்கணக் கில் ஊழலை செய்ய வழிவகை செய்துவிட்டு மாற்றலாகிச் சென்று விட்டார். அவர் ஆட்சியராக இருந்த சில மாதங்களில் அமைச்சர் காமராஜ் பின்னாடியே நின்று சேவகம் செய்தார். அவரது கண் பார்வையிலேயே இருந்தார்.

Advertisment

gg

திருவாரூர் மாவட்டம் முழுவதும் புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமிகள்தான் எடுத்திருந்தாங்க. ஆனால் சென்னை அட்ரஸ்ல டெண் டர் போட்டு செய்தாங்க. லைட் போட்ட மூன்று மாதத்தில் எல்லா லைட்டும் பீஸாகி, ஒரு கோபுரத்தில் 6 எல்.இ.டி. பல்பில் ஒண்ணு, ரெண்டு தான் எரியுது. பல இடங்களில் முழு மையா இருண்டு கிடக்கு. இந்த நிறு வனம் இரண்டு வருடம் பராமரிக் கணும். ஆனால் போட்டுவிட்டுப் போனதோடு சரி, தொடர்பு இல்லாம லேயே போய்ட்டாங்க. எங்க மாவட் டத்தில் மட்டும் கணக்குப் பார்த்தால் சுமார் 38 கோடி அளவுக்கு ஊழல் நடந் திருக்க வாய்ப்பிருக்கிறது''’என்கிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் உயர் மின்கோபுர விளக்கு அமைத்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தரணி ஹைடெக் புராஜெக்ட் பிரைவேட் லிமிடெட், ஏ.ஜி.ஏ. டிரேடர்ஸ் நிறுவனங்களை நீண்ட முயற்சிக்குப் பிறகு தொடர்புகொண்டு பேசினோம்.

"இது மேலிடத்து உத்தரவுங்க, நாங்க எலக்ட்ரிக் பிட்டிங் மட்டும்தான். மற்றபடி எங்களுக்குத் தெரியாது''’என போனைத் துண்டித்து ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரியின் கவனத்திற்கு கொண்டுசென்றோம். “"இதுவரை எனக்கு இது குறித்து புகார் எதுவும் வரவில்லை. உடனே ஆய்வு செய்கிறேன்''” என்றார்.

"தமிழக முதல்வர், கடந்த கால ஆட்சியில் தமிழகம் முழுவதும் நடந்த மின்கோபுர விளக்கு ஊழல் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.