Advertisment

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்!  கண்ணீரில் டெல்டா விவசாயிகள்!

formers

"மழை ஓய்ந்தாலும் அது ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியல, எங்க வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. அரசு முன்வந்து உதவி செய்தால் மட்டுமே மீண்டுவர முடியும்'' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்.

Advertisment

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்திருந்தது. மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்ட தாலும், தென்மேற்கு பருவ மழை சீராக பெய்த தாலும் விளைச்சல் அமோகமாக இருந்தது. முன் கூட்டியே சாகுபடி செய்திருந்த பெரும்பாலான பகுதிகளில் அறுவடைப் பணிகள் முடிந்து சம்பா சாகுபடிக்கு சென்றுவிட்டனர். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் சில பகுதிகளில் அறுவடைப் பணிகள் தாமதமான நிலையில் வடகிழக்கு பருவமழை வந்து மொத்த விளைச்சலை யும் தண்ணீரில் முழ்கடித்து, தண்ணீர் வடியாமல் வயலிலேயே முளைத்துப் போனதால் என்ன செய்வதெனத் தெரியாமல் கண்ணீரோடு டிராக்டர்களைக் கொண்டு உழவடிக்கும் அவலங்களும் துவங்கியுள்ளது.

Advertisment

இது ஒருபுறமிருக்க, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களும் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கி தண்ணீர் வடியாமல் அழுகிய தைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தூர் வாருவதில் ஏற்பட்ட குளறுபடிகளும், நாகையில் நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் சி.பி.சி.எல்., ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் வடிய வழியின்றி பேரழிவு நடந்துள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் கண்துடைப்புக்காக கணக்கெடுப்புப் பணிகள் நடத்துவதாக வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.

மேலதிருப்பூந்துருத்தியை சேர்ந்த பெண் விவசாயியான விஜி, "மூன்று ஏக்கர் குத்தகை நிலத்தில் சாகுபடிசெய்தோம். விளைச்சலும் நல்லா இருந்துச்சி. அறுவடை சமயத்துல பெய்த மழையால் விளைச்சல் முழுக்க வயலில் சாய்ந்து, நீரில் மூழ்கி முளைச்சிடுச்சி. டிரிபில் வட்டிக்கு வாங்கியும், குழுவுல லோன் வாங்கியும்,  நகைநட்டு களை அடகு வச்சும் செலவு செய்து வளர்த்தோம். வெள்ளாமை கைக்கு வர்ற நேரத்துல மழை வந்து எங்க வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சி. வி.ஏ.ஓ., தாசில்தார், அரசியல்வாதிகள்னு கெஞ்சிப் பார்த்தோம், யாருமே வடிகாலுக்கான வ

"மழை ஓய்ந்தாலும் அது ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியல, எங்க வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. அரசு முன்வந்து உதவி செய்தால் மட்டுமே மீண்டுவர முடியும்'' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்.

Advertisment

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்திருந்தது. மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்ட தாலும், தென்மேற்கு பருவ மழை சீராக பெய்த தாலும் விளைச்சல் அமோகமாக இருந்தது. முன் கூட்டியே சாகுபடி செய்திருந்த பெரும்பாலான பகுதிகளில் அறுவடைப் பணிகள் முடிந்து சம்பா சாகுபடிக்கு சென்றுவிட்டனர். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் சில பகுதிகளில் அறுவடைப் பணிகள் தாமதமான நிலையில் வடகிழக்கு பருவமழை வந்து மொத்த விளைச்சலை யும் தண்ணீரில் முழ்கடித்து, தண்ணீர் வடியாமல் வயலிலேயே முளைத்துப் போனதால் என்ன செய்வதெனத் தெரியாமல் கண்ணீரோடு டிராக்டர்களைக் கொண்டு உழவடிக்கும் அவலங்களும் துவங்கியுள்ளது.

Advertisment

இது ஒருபுறமிருக்க, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களும் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கி தண்ணீர் வடியாமல் அழுகிய தைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தூர் வாருவதில் ஏற்பட்ட குளறுபடிகளும், நாகையில் நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் சி.பி.சி.எல்., ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் வடிய வழியின்றி பேரழிவு நடந்துள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் கண்துடைப்புக்காக கணக்கெடுப்புப் பணிகள் நடத்துவதாக வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.

மேலதிருப்பூந்துருத்தியை சேர்ந்த பெண் விவசாயியான விஜி, "மூன்று ஏக்கர் குத்தகை நிலத்தில் சாகுபடிசெய்தோம். விளைச்சலும் நல்லா இருந்துச்சி. அறுவடை சமயத்துல பெய்த மழையால் விளைச்சல் முழுக்க வயலில் சாய்ந்து, நீரில் மூழ்கி முளைச்சிடுச்சி. டிரிபில் வட்டிக்கு வாங்கியும், குழுவுல லோன் வாங்கியும்,  நகைநட்டு களை அடகு வச்சும் செலவு செய்து வளர்த்தோம். வெள்ளாமை கைக்கு வர்ற நேரத்துல மழை வந்து எங்க வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சி. வி.ஏ.ஓ., தாசில்தார், அரசியல்வாதிகள்னு கெஞ்சிப் பார்த்தோம், யாருமே வடிகாலுக்கான வசதி செய்து தரல. மழைக்காலம் துவங்கிடுச்சி. சம்பா சாகுபடிக்கு விதைவிட்டு ஒரு மாதத்தை தாண்டிடுச்சி. அதோட டிராக்டர் வர வழியில்லாம போயிடும். மழைக்காலமும் வந்துடும். குறுவை போயிடுச்சி, சம்பாவுக்கு விட்ட நாற்றையாவது நடலாம்னு உசுரைக் கொடுத்து உழைத்து வளர்த்த நெற்பயிர்களை நாங்களே அழிக்கிறோம். நல்லபடியா அறுவடை செய்திருந்தா ஏக்கருக்கு ஐம்பது மூட்டை கிடைத்து எங்க வாழ்க்கை மாறியிருக்கும். இப்ப வேற வழி தெரியல, யாருமே உதவி செய்யல. இதுக்கு வாங்கிய 1.30 லட்சம் கடனுக்கு வட்டி ஏறுது. இனி யார்ட்ட கடன் வாங்குறது?'' என்று தேம்பித் தேம்பி அழுகிறார்.

formers1

 பனங்குடியில் அமைந்துள்ள மத்திய அரசின் சி.பி.சி.எல். நிறுவனத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட ராட்சத சுற்றுச்சுவரால் மழை நீர் வடியாமல் வயலில் தேங்கியநிலையில், அப்பகுதி விவசாயிகள் பரிதவித்துவருகின்றனர். இதுகுறித்து நாகையைச் சேர்ந்த விவசாயியும், விவசாய சங்கத் தலைவருமான தமிழ்ச்செல்வன் கூறுகையில், "நாகை வடக்கு பகுதி தொடர்ந்து பாழாகிவருவதற்கு முக்கிய காரணமே. சி.பி.சி.எல். நிறுவனம்தான். விவசாயிகளை ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தும் நோக்கத்திலேயே தொடர்ந்து இடையூறுகளைக் கொடுத்துவர்றாங்க. ஏற்கெனவே பெரும்பாலான விவசாயத்தையும், நிலத்தையும் பாழ்படுத்திட் டாங்க. மிஞ்சிய நிலங்களையும், விவசாயிகளையும் அப்புறப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த மழை அவர்களுக்கு அமைந்துவிட் டது. அதிகாரிகளும் உடந் தையாக இருக்கிறாங்க. அவர்கள் கைப்பற்றிய நிலத்திற்கு உள்ளே போகிற வாய்க்காலை தூர்வாரவிடா மல் தூர்த்துப்போகவிட்டனர். அதேநேரம் இந்த வாய்க்காலை தூர் வாரியதாக கணக்குக் காட்டி விட்டனர். கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்புக் கூட்டத்தில் தூர்வாரியதாகக் கணக்குக் காட்டி அந்த பகுதியில் போர்டு வைத்திருந்ததை நான்தான் ஆதாரத்தோடு கூறினேன். பிறகு அந்த போர்டு அகற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர்.

இப்போது கோபுராஜபுரம், நரிமணம், குத்தாலம், வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.சி.எல். அமைத்துள்ள ராட்சத காம்பவுண்ட் டால் தண்ணீர் வடிய வழியின்றி தேங்கிநிற்கிறது. அறுவடைக்கு தயாராக இருந்த விளைச்சல் தண்ணீரில் மிதக்குது. அதிகாரிகளிடம் சொன்னா பெருசா கண்டுக்கவே இல்லை. மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்தும், ஆக்கிரமிப்பை துணிச்சலோடு எடுத்து விவசாயி களைக் காப்பாற்ற முன்வரல. நீர்நிலைகளின் ஆக்கிர மிப்புகளை அகற்ற நீதிமன்ற தீர்ப்பு இருக்கு. வீடு களை இடிக்கிறாங்க, மண்டபங்களை இடிக்கிறாங்க, கோயில்களை இடிக்கிறாங்க, ஆனால் ஆனால் உலகத் துக்கே சோறுபோடுற விவ சாயத்துக்கு பாதகமான தடுப்புச்சுவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குறது எந்த விதத் தில் நியாயம்?'' என்றவர்.

formers3

மேலும், "இரண்டு நாள் மழைக்கே பயிர்கள் மூழ்கிப்போச்சு. வடகிழக்கு பருவமழை என்பது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் எதிர்கொள்ள வேண்டியது. முன்னேற்பாடுகளை செய்யத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆட்சியர்கள், அதிகாரிகள் செய்யத் தவறிவிட்டனர். முக்கியமா தூர்வாருவதில் சுருட்டிவிட்டனர். சி.பி.சி.எல்., ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்களின் சி.எஸ். ஆர். பணத்தை வாங்கி எல்லோருமே பங்கு போட்டு பிரித்துக்கொள்கின்றனர். அதேபோல, ஆகாயத்தாமரையை அகற்ற நாங்கள் கோரிக்கை வைத்தால் உடனே பத்து லட்சம் ஒதுக்குவாங்க. ஆனா ஒரு லட்சம் கூட செலவுசெய்யாம  அப்படியே பங்கு பிரிச்சிக்குவாங்க. முறையாக தூர்வாரப்படாமல் விட்டதால் டெல்டா முழுவதும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவையும், சம்பாவும் பாதித்துக்கிடக்கிறது.  அரசு இதில் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதை சரிசெய்ய முதல்வர் முனைப்பு காட்டவேண்டும்'' என்கிறார் ஆதங்கத்துடன்.

formers2

மயிலாடுதுறை மாவட் டத்தில், கழுக்கானிமுட்டம், சேத்தூர், பொண்வாச நல்லூர், திருப்பங்கூர், தர்மதானபுரம் உள்ளிட்ட பல கிராமங்களிலும், நாகை மாவட்டத்தில் கொடியாலத்தூர், தென்சாரி, கோவில்பத்து, வடபாதி, மணலூர், காக்கழனி, தேவூர், வெண்மணி, காவாலக்குடி, திருப்பஞ்சாரம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் அளவில் இளம்பயிர்கள் தண்ணீர் வடியாமல் அழுகிப்போகும் நிலையாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூரைச் சேர்ந்த குறுவிவசாயி கண்ணையன் கூறுகையில், "இந்த வருசம் எல்லா வாய்க்கால்களையும் தூர்வாருனதா சொன்னாங்க, ஆனா கண்துடைப்புக்கு துடைச்சிட்டு போயிட்டாங்க. நாங்களும் நம்பி ஏமாந்துட்டோம். பருவமழை இன்னும் பெருசா ஆரம்பிக்கவே இல்ல. ஒருநாள் பெய்த மழைக்கே மொத்த நடவுகளும் முழுகி அழுகிடுச்சி. வடிகால் வசதியில்லாம பயிரை காப்பாற்ற முடியாம தவிக்கிறோம். இதுவரை ஒரு அதிகாரிங்ககூட வந்து எட்டிப்பார்க்கல, எம்.எல்.ஏ., எம்.பி. எங்க இருக்காங்கன்னே தெரியல. உள்ளூர் வி.ஏ.ஓ. வந்து பார்த்துட்டு மேல் அதிகாரிகளுக்கு சொல்லுறேன்னு சொல்லிட்டு போனார், அவரும் திரும்பி வரல. இந்த அரசையோ, நிர்வாகத்தையோ நம்பி சாகுபடி செய்தால் கடன்காரங்களா ஆகிடுவோம்'' என்கிறார் ஆத்திரம் குறையாமல். டெல்டா விவசாயிகளின் குரல்களை கவனத்தில் கொள்ளுமா அரசு?

___________________
ஈரத்தை கணக்குப் பார்க்காதீங்க! கோரிக்கை வைத்த விவசாயிகள்.

formers4

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளைவிட தென்மேற்கு பருவ மழை நல்ல மழைப் பொழிவைக் கொடுத்துள்ளதால், பல ஆண்டுகளுக்குப் பிறகு நெல் குறுவைச் சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்தினர் விவசாயிகள். அந்த நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டுவரும் நிலையில் வடகிழக்கு பருவமழையும் குறிப்பிட்ட நாளில் தொடங்கிவிட்டதால் அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்தமுடியாமலும், முற்றிய நெல்மணிகளை அறுவடை செய்யமுடியாமலும் விவசாயிகள் தவித்துவருகின்றனர். 

அதிகாரிகளின் குளறுபடி களால் நெல் கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டு நெல்மணிகள் முளைத்து வருவதை அறிந்த அரசு துரித நடவடிக்கைகளில் இறங்கி கொல்கத்தாவிலிருந்து ரயில்கள் மூலம் சாக்குகளை வாங்கிவந்து இறக்கியது. மற்றொரு பக்கம் கொள்முதல் செய்த நெல்மூட்டைகள் குடோன்களுக்கு ஏற்றிச்செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விவசாயி களின் பாதிப்பை குறைக்க மத்திய அரசு வைத்துள்ள ஈரப்பதம் அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக் கையையடுத்து 25-ஆம் தேதி 3 மத்திய குழுக்கள் வந்து ஆய்வு செய்வார்கள் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் ஒருநாள் தாமதமாக 26-ஆம் தேதியே மத்திய குழு டெல்டா மாவட்டங்களுக்கு வந்தது.

தஞ்சை மாவட்டம் ஆலக் குடிக்கு 26-ஆம் தேதி காலை பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலுள்ள மத்திய இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் பி.கே.சிங் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபித் சிவாக், ராகேஷ் பரலா, இந்திய உணவுக்கழகம் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மோகன் ஆகியோர் வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் பங்கஜம், தமிழக அதிகாரிகளும் அந்தக் குழுவுடன் வந்திருந்தனர். வந்தவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து மூடிவைக்கப்பட்டிருந்த நெல் குவியலிலிருந்து மாதிரிகளை சேகரித்துக்கொண்டு அங்கிருந்த மெசினில் ஈரப்பதம் ஆய்வு செய்து பார்த்தபோது 22% இருந்ததைப் பார்த்தனர். 

அப்போது அங்கிருந்த வழக்கறிஞர் ஜீவகுமார் உள்ளிட்ட விவசாயிகள், “"இந்தப் பருவத்தில் எப்போதும் மேகமூட்டமாகவும், தொடர்ந்து மழையும் பெய்துவருகிறது. வெயில் இல்லை. அறுவடை செய்த நெல் மணிகளை உலர்த்தமுடிய வில்லை. எத்தனை நாட்கள் வைத் திருந்தாலும் உலராத நிலைதான் உள்ளது. அதனால் நெல்லின் ஈரப்பதம் 22% இருந்தால் அந்த நெல்மணிகளை கொள்முதல் செய்யவேண்டும். 17% வரை காயவைக்கவேண்டும் என்றால் இப்போது சாத்தியமில்லை. இன்னும் அறுவடை செய்யவேண்டிய நெல்லும் வயலில் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று கோரிக்கை வைத்தனர்.

இதேபோல தஞ்சை மாவட்டத்தில் 9 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் புதுக்கோட்டையில் 2 இடங்களிலும் மத்திய குழு ஆய்வுசெய்து மாதிரிகளை சேகரித்துள்ளனர். 

இது ஒருபுறமிருக்க, புதுக் கோட்டை மாவட்டத்தில் குறுவை நெல் உற்பத்தி குறைவென்றாலும் ஏராளமான நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து வியாபாரி களின் நெல்மூட்டைகளை வாங்கி கொள்முதல் நிலையங்களிலேயே குவித்துவைத்துள்ளதால் மழை தொடங்கியதும் முளைக்கத் தொடங்கிவிட்டது. 

இந்த செய்திகள் வெளி யானதும் வேகமாக நூற்றுக் கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகளை குடோன்களில் இறக்கிவைக்க போதிய சுமைதூக்      கும் தொழிலாளர்கள் இல்லாததால் ஒரு நாளைக்கு 25 லாரி நெல்மூட்டைகளை மட்டுமே இறக்கமுடிகிறது. அதனால் ஈரத்    துடன் லாரிகளில் ஏற்றப்பட்ட நெல்மூட்டைகள் ஒரு வாரம்வரை லாரியில் தார்ப்பாய் போட்டு மூடிநிறுத்தப்பட்டுள்ளதால் முளைத்துவிட்டன. 

ரெகுநாதபுரத்திலிருந்து 17-ஆம் தேதி ஏற்றிவந்த ஒரு லாரி 24-ஆம் தேதிவரை இறக்காமல் நிறுத்தியிருந்ததால் நெல் முளைத்துவிட்டதாகக் கூறி ரெகுநாதபுரம் கொள்முதல் நிலைய ஊழியர்களையே பொறுப்பேற்கச் சொல்லி அதிகாரிகள் கூறி யுள்ளனர். இவ்விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் மண்டல அதிகாரிக்கு கோட்டைவரை பவர் இருப்பதாகக் கூறிக்கொள்கிறார். அவரது ஓட்டுநரின் மகன் ஒரு கொள்முதல் நிலைய உதவியாளராக இருந்துகொண்டு வெளிமாநில நெல்மூட்டைகளை வாங்கி வந்து அரசு கொள்முதல் நிலையங்களில் சாக்குமாற்றி கொள்ளை லாபம் சம்பாதித்துவருகிறார் என்கிறார்கள் பாதிக்கப்படும் கொள்முதல் நிலைய ஊழியர்கள்.

-இரா.பகத்சிங்

nkn011125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe