Advertisment

பயிர்க் காப்பீடு! புறக்கணித்த அதிகாரிகள்! போராட்டத்தில் விவசாயிகள்!

ff

"வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கியதுபோல், பயிர்க்காப்பீடும் வழங்கவேண்டும், பாராமுகத்தோடு பயிர்க்காப்பீடு வழங்குவது நியாயமில்லை''’என போராட்டத்தில் குதித்துள்ளனர் விவசாயிகள்.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி இரவு பெய்த வரலாறு காணாத கனமழையால், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா முழுவதும் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தது. தண்ணீர் வடிய வழியின்றி, நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் முழுவதும் வாரக்கணக்கில் தண்ணீரில் மூழ்கியிருந்ததால் முற்றிலும் அழுகி சேதமானது. மழைச்சேதங்களைப் பார்வையிட வந்த தமிழ்நாட்டு முதல்வர், "அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்'' எனஅறிவித்தார். அறிவித்தபடியே குடும்ப அட்டைக்கு தலா 1000 ரூபாய் வீதமும், பயிர் இழப்புக்கு 50 கோடி ஒதுக்கீடு செய்து, அதில் 43.92 கோடி ரூபாயை மயிலாடுதுறை மாவட்டத் திற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்து, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள அனைத்து விவசாயிகள

"வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கியதுபோல், பயிர்க்காப்பீடும் வழங்கவேண்டும், பாராமுகத்தோடு பயிர்க்காப்பீடு வழங்குவது நியாயமில்லை''’என போராட்டத்தில் குதித்துள்ளனர் விவசாயிகள்.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி இரவு பெய்த வரலாறு காணாத கனமழையால், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா முழுவதும் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தது. தண்ணீர் வடிய வழியின்றி, நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் முழுவதும் வாரக்கணக்கில் தண்ணீரில் மூழ்கியிருந்ததால் முற்றிலும் அழுகி சேதமானது. மழைச்சேதங்களைப் பார்வையிட வந்த தமிழ்நாட்டு முதல்வர், "அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்'' எனஅறிவித்தார். அறிவித்தபடியே குடும்ப அட்டைக்கு தலா 1000 ரூபாய் வீதமும், பயிர் இழப்புக்கு 50 கோடி ஒதுக்கீடு செய்து, அதில் 43.92 கோடி ரூபாயை மயிலாடுதுறை மாவட்டத் திற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்து, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய் வழங்கிடச் செய்தார்.

Advertisment

gg

இந்த நிலையில், ஜனவரி 11ம் தேதி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடாக 318.30 கோடி ரூபாய் வழங்குவதை முதல்வர் துவங்கிவைத்தார். 318.30 கோடியில் 2021-22 ராபி பருவத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய 284 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. மீதமுள்ள 34.30 கோடியில், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் தாலுகாவிற்கு மட்டுமே காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டதாக வும், சீர்காழி தாலுகாவில் 17 கிராமங்களுக்கும், தரங்கம்பாடி தாலுகாவில் 51 கிராமங்களுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறி, சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் இருந்த விவசாயிகள், "கன மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட் டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்கிட வேண்டும். கொள்ளிடம் தாலுகாவில் 43, சீர்காழி தாலுகாவில் 29, செம்பனார்கோயில் தாலுகாவில் 15 கிராமங்களுக்கு மட்டும் காப்பீட்டுத் துறையினர் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது'' என்றனர்.

இதுகுறித்து திருப்புங்கூர் பகுதி விவசாயி பிரபு பிள்ளை கூறுகையில், "நவம்பர், டிசம்பர் மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை, நவம்பர் 11ம்தேதி ஒரே இரவில் பெய்து வெள்ளக்காடாக்கியது. 122 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த கனமழை என்பதை அகில இந்திய வானிலை ஆய்வு மையமே கூறியிருந்தது. ஆய்வு செய்யவந்த முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும், எதிர்க்கட்சிகளும், எங்களின் நிலையை அறிந்து, அனைவருக்கும் நிவாரணமும், பயிர்க் காப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்றனர். ஒரு வார காலம் தண்ணீர் வடியாமல் பயிர்கள் முழுமையும் அழுகி பாசி படிந்துவிட்டது.

gg

சீர்காழியில், விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடக்கிறது. அதன்காரண மாக, வாய்க்கால், வடிகால்கள் அனைத்தையும் அடைத்துவைத்துள்ளனர். இதனைக்கூட ஆய்வு செய்யாத அதிகாரிகள், உட்கார்ந்த இடத்திலிருந்தே பாதி கிராமங்களை ஒதுக்கி ஊழல் செய்துள்ளனர். பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதி என தமிழக முதல்வரே அறிவித்து, நிவாரணம் வழங்கியும், காப்பீட்டு நிறுவனம் வழக்கம்போல் இந்த ஆண்டும் முறைகேடு செய்துள்ளது. கடந்த மூன்றாண்டு களாகவே இப்படித்தான் மோசடி செய்கிறார்கள். தமிழக முதல்வர் தலையிட்டு எங்க ளுக்கு காப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும்'' என்றார் கவலை யோடு.

சி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், "கன மழையால் பாதிக் கப்பட்ட பகுதி களை இரண் டாகப் பிரித்திருக்கிறார்கள் அதிகாரிகள். விழுப்புரம் டூ நாகப்பட்டினம் தேசிய நெடுஞ் சாலைப் பணிகள் நடக்கிறது. அதற்கு கிழக்கேயுள்ள பகுதி களுக்கு மட்டும் இழப்பீடு தந்துவிட்டு, மேற்கிலுள்ள பகுதிகளை மேட்டுப் பகுதி களென நினைத்து புறக்கணித் துள்ளார்கள். இந்த நிர்வாகக் குளறுபடியை யாரிடம் சொல்லி முறையிடுவது? ஒரு புறம் தூர்வாரும் பணி முழு மையாக நடக்கவில்லை. அதே போல் சாலைப் பணிகளும் நடப்பதால் பாசன வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக அடைந்து கிடக்கின்றன. அதனால் தண்ணீர் வடியாமல் முற்றிலும் அழிந்து போன பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை அதிகாரிகள் பெற்றுத் தரவேண்டும்'' என் கிறார் ஆதங்கத்துடன். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், "வரலாறு காணாத மழையால் பரவலாகவே பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. முதல்வர் அனைத்து விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தது போலவே, பயிர்க் காப்பீட்டுத்தொகை கிடைக்காத பகுதிகளுக்கும் தரப்பட வேண்டுமென அதிகாரிகளிடமும், முதல்வருக்கும் கோரிக்கை வைத்திருக்கிறேன். விரைவில் கிடைப்பதற்கு முயற்சிக்கிறேன்''’என்கிறார் பொறுப்புடன்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கேட்டோம். "பாதிப்பு உண்மைதான், ஆனால் இது காப்பீடு தொடர்பானது, அவர்கள், அதிகம் பாதித்த பகுதிக்கென ஒரு வரையறை செய்து பட்டியல் கொண்டுவந்தனர். அதில் பதினைந்து கிராமங்களைத்தான் தேர்வு செய் திருந்தனர். நான் தலையிட்டு 70 கிராமங்களுக்குக் கிடைக்கச் செய்துள்ளேன். மற்றவர்களுக்கு வழக்கம்போல அறுவடை முடிந்தபின் கிடைக்கும்''’என்றார்.

பயிர்களையே நம்பி வாழ்ந்துவரும் விவசாயிகளின் எதிர்காலமும் மூழ்கிடாதபடி காக்க வேண்டியது அரசு இயந்திரத்தின் கடமை.

nkn010223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe