Advertisment

அதிகாரிக்கு நெருக்கடி! -மதுரை பொதுப்பணித்துறை அலுவலக களேபரம்!

ss

துரை பொதுப்பணித்துறை அலுவலகத்திலுள்ள நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் என்ற பெய ரில், நமக்கு வந்த புகாரில், தலைமைப் பொறியாளர் ரவி மற்றும் துணை தலைமைப் பொறியாளர் கோமதிநாயகம் ஆகியோர் உள்ளனர்.

இந்த அலுவலகத்தில் நிர்வாக ஆட்சி அலுவலக அதிகாரியாக பணிபுரியும் (சூப்பிரண்டு ஏ.ஓ.) விஜயன் மீது குற்றஞ் சாட்டியிருந்தனர். அவர், இங்கு பணிபுரியும் அலுவலர்களை மரியாதையிலாமல் ஒருமையில் பேசுவதாகவும், பெண் ஊழியர்களை டார்ச்சர் செய்வதாகவும், கோப்புகளுக்கு எந்தவித காரணமும் கூறா மல் கையெழுத்திட மறுப்ப தாகவும், இதனால் பணிகள் தேங்கிக்கிடப்பதாகக்கூறி முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகாரனுப்பியதையடுத்து, தல்லாகுளம் காவல் நிலைய எஸ்.ஐ. முனியாண்டி, நிர்வாக அதிகாரி விஜயனிடம் விசாரணை செய்திருக்கிறார்.

Advertisment

mm

நாம் கடிதம் அனுப்பி யிருந்த நபரிடம் விசாரித்தோம். விசாரித்தவரையில், டீ குடிக்க போனாலும் இவரிடம் சொல்லிட்டு தான் போகணும

துரை பொதுப்பணித்துறை அலுவலகத்திலுள்ள நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் என்ற பெய ரில், நமக்கு வந்த புகாரில், தலைமைப் பொறியாளர் ரவி மற்றும் துணை தலைமைப் பொறியாளர் கோமதிநாயகம் ஆகியோர் உள்ளனர்.

இந்த அலுவலகத்தில் நிர்வாக ஆட்சி அலுவலக அதிகாரியாக பணிபுரியும் (சூப்பிரண்டு ஏ.ஓ.) விஜயன் மீது குற்றஞ் சாட்டியிருந்தனர். அவர், இங்கு பணிபுரியும் அலுவலர்களை மரியாதையிலாமல் ஒருமையில் பேசுவதாகவும், பெண் ஊழியர்களை டார்ச்சர் செய்வதாகவும், கோப்புகளுக்கு எந்தவித காரணமும் கூறா மல் கையெழுத்திட மறுப்ப தாகவும், இதனால் பணிகள் தேங்கிக்கிடப்பதாகக்கூறி முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகாரனுப்பியதையடுத்து, தல்லாகுளம் காவல் நிலைய எஸ்.ஐ. முனியாண்டி, நிர்வாக அதிகாரி விஜயனிடம் விசாரணை செய்திருக்கிறார்.

Advertisment

mm

நாம் கடிதம் அனுப்பி யிருந்த நபரிடம் விசாரித்தோம். விசாரித்தவரையில், டீ குடிக்க போனாலும் இவரிடம் சொல்லிட்டு தான் போகணும். இவர் சொல்ற கடையில் தான் அலுவலகத்துக்கான பிரிண்டிங் பேப்பர் பொருட்கள் வாங்கணும். தேவையில்லாமல் அரசுக்கு செலவு வைக்கக்கூடாது. காலையி லிருந்து இரவு வரை அலுவலகத்திலேயே கிடப்பார். இவர்தான் என்னமோ நாட்டை நிமிர்த்துவது மாதிரி செயல்படுவார் என்றெல்லாம் அவர்கள் கூறும் புகார்களில் எதுவுமே தவறென்று சொல்வதாகவே இல்லை.

இவர்கள் குறைகூறும் விஜயன் ஒரு கண்டிப்பான மனிதர் என்பதால் இவர் களுக்கு அவர்மீது கோபமென்பதாகப் பட்டது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள நாமே நேரடியாக அந்த அலுவலகத்திற்கு சென்று, பொதுப்பணித்துறை ஊழியர் சங்க தலைவர் வரத முனீஸ் வரனிடமும் விசாரித்தோம்.

""இத்தனை வருட சர்வீஸில் இப்படி ஒரு ஆளைப் பார்த்தது இல்லை. இவரை எல்லோரும் எதிர்க்கவில்லை, ஓரளவு மனசாட்சியுடன் வேலை செய்பவர்கள் விஜயன் சாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர் மிகவும் நேர்மையானவர். மதுரை கோட்டத்திற்கு மட்டும் 60 உதவிப் பொறியாளர்கள் உள்ளனர். தென் மாவட்டங்கள் முழுவதும் சேர்த்து 200க்கும் மேற்பட்ட உதவிப் பொறியாளர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் பராமரிப்புப் பணிகளுக் காக மாதத்திற்கு 13 லட்சம் வரை செலவு செய்யலாம்.

இதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு உதவிப் பொறியாளரும் வேலையே செய்யாமல் சூப்பிரடெண்ட்களை வைத்து போலிக் கணக்கு காட்டி பல நூறு கோடி வரை சுருட்டிக்கொண்டிருந்தனர். சில சமயம் சென்னை தலைமை அலுவலக ஆடிட்டிங் கில் பிழை வந்தால், சில ஓய்வுபெற்ற அதிகாரிகளை வைத்து போலி பில்கள் போட்டு சரிக்கட்டுவார்கள்.

ss

Advertisment

இதற்கெல்லாம் முட்டு கட்டையாக விஜயன் இருப்பதால் அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்க்கிறார்கள்'' என்று அனைத் தையும் விவரித்தார்.

நாம் பொதுப்பணித்துறை நிர்வாக அதிகாரி விஜயனிடம் பேசினோம்.

""பொதுப்பணித்துறை நிர்வாக அலுவலகத்திற்கான ஃபண்ட் அலாட் மெண்ட், அலுவலர்களுக்கான சம்பளம், அலுவலக செலவுகள் மற்றும் ஒவ்வொரு உதவிப் பொறியாளருக்கும் ஆண்டு பராமரிப்புக்கான செலவு, பில் என அனைத்துமே கணக்காளர்கள், சூப்பிரண் டன்ட்கள் மேற்பார்வைக்குப்பின் கடைசி யில் என்னிடம் வரும். நான் கையெழுத் திட்டு மேல் அதிகாரியின் ஒப்புதலுக்கு சென்று, பில் பாஸ் ஆகும். இதுதான் நடை முறை. இதில் மதுரை அலுவலகத்தில் எனக்கு கீழ் 40க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.

மேலும் தென் மாவட்டங்கள் முழுவதுமான அலுவலகங்களுக்கும் இதேபோல் நான் பில் பாஸ் செய்தாக வேண்டும். இங்கு வேலை செய்யும் அனைத்து அலுவலர்களும் எந்த ஃபைலும் பராமரிப்பது இல்லை. ஏற்கனவே இங்கு வேலை செய்த இரு அதிகாரிகள் மூலமாக பல போலி பில்கள் போடப்படுகிறது. இதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம், தியாகராஜன், அசோகன், சரவணகுமார் போன்ற கண்காணிப்பாளர்கள்தான். இவர்கள் 17 வருடத்திற்கு மேலாக ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள். ஒரு அரசு ஊழியர் 3 வருடத்திற்கு மேல் ஒரு இடத்தில் வேலை செய்யக்கூடாது என்பது அரசு விதி. அதை யும் தாண்டி பல ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். இதனால் இங்கு அனைத்து தில்லுமுல்லும் நடக்கிறது. இந்த சரவணக்குமார், மாஜி அ.தி.மு.க. அமைச்சருக்கு பினாமி என்று சொல்லிக்கொண்டு இங்கு அனைவரையும் ஏகபோகத்துக்கு மிரட்டி வேலை வாங்குகிறார். தற்போது நான் கடிவாளம் போடவே என்மேல் கோபம் திரும்புகிறது. பணி ஓய்வுபெற்ற அசோகன் என்னிடம், "எந்த பில்லுக்கும் நீ கையெழுத்து போடுவது இல்லையாமே, நீ அவ்வளவு பெரிய ஆளா?' என்று மிரட்டுகிறார். நான் போலீசில் புகாரளித்ததும், தல்லாகுளம் போலீசார் வந்து விசாரித்தனர். மற்ற ஊழியர்கள் கேட்டுக்கொண்டதால் நான் புகாரை வாபஸ் பெற்றேன். அனைவரையும் எனக்கெதிராக தூண்டிவிட்டு, சி.எம். செல் முதல் பத்திரிகைகள் வரை புகாரளிக்கிறார்கள். எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமும் இல்லை!'' என்றார்.

காவல்நிலையத்தில் இவ்விவகாரம் குறித்து விசாரித்தபோதும், "விஜயன் கறாராக இருப்பதால்தான் அவர்மீது புகாரளித்துள்ளனர். அவர்மீது எந்த குற்றமும் இல்லை'யென்று நற்சான்றிதழ் கொடுத்தனர். ஒரு அதிகாரி நேர்மையாக இருப்பதற்கே தற்போது போராடவேண்டியிருக்கிறது!

-அண்ணல்

nkn260225
இதையும் படியுங்கள்
Subscribe