இந்தியா முழுவதும் பா.ஜ.க.வை ‘தேர்தல் மாடல்’ கட்சி என அறிவிப்பார்கள். ஆனால், தமிழக தேர்தல் களத்தை கையாள்வதில் பா.ஜ.க. திக்குமுக்காடிப்போய் திணறுகிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர். பா.ஜ.க. தலைவர்களிலேயே தேர்தல் வேலைகளை மிக சாமர்த்தியமாக செய்பவர் அமித்ஷா. இந்தியாவில் பா.ஜ.க. மூன்றுமுறை வெற்றிபெற்றதற்கும், மகராஷ்டிரா, ஒடிசா போன்ற சிக்கலான மாநிலங்களில்கூட பா.ஜ.க. ஆட்சி யமைத்ததற்கும் காரணம் அமித்ஷா. அந்த அமித்ஷாவாலேயே தமிழகத் தேர்தல் களத்தை கையாள முடியவில்லை என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18% ஓட்டுக்களை பா.ஜ.க. கூட்டணி பெற்றது. 20% ஓட்டுக்களை அ.தி.மு.க. பெற்றது. மொத்தம் 38% மற்றும் நடிகர் விஜய் பிரிக்கும் தி.மு.க. ஓட்டுக்கள் இவையனைத்தும் ஒன்று சேர்ந்தாலே தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே கடும்போட்டி ஏற்படும். இந்த 38% ஓட்டுக்களை ஒன்றுதிரட்ட அமித்ஷாவால் முடியவில்லை.
சென்ற தேர்தலில் எடப் பாடிக்கு மைனஸானது முக்குலத் தோர் இனத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. வாக்குகள். முக்குலத் தோர்
இந்தியா முழுவதும் பா.ஜ.க.வை ‘தேர்தல் மாடல்’ கட்சி என அறிவிப்பார்கள். ஆனால், தமிழக தேர்தல் களத்தை கையாள்வதில் பா.ஜ.க. திக்குமுக்காடிப்போய் திணறுகிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர். பா.ஜ.க. தலைவர்களிலேயே தேர்தல் வேலைகளை மிக சாமர்த்தியமாக செய்பவர் அமித்ஷா. இந்தியாவில் பா.ஜ.க. மூன்றுமுறை வெற்றிபெற்றதற்கும், மகராஷ்டிரா, ஒடிசா போன்ற சிக்கலான மாநிலங்களில்கூட பா.ஜ.க. ஆட்சி யமைத்ததற்கும் காரணம் அமித்ஷா. அந்த அமித்ஷாவாலேயே தமிழகத் தேர்தல் களத்தை கையாள முடியவில்லை என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18% ஓட்டுக்களை பா.ஜ.க. கூட்டணி பெற்றது. 20% ஓட்டுக்களை அ.தி.மு.க. பெற்றது. மொத்தம் 38% மற்றும் நடிகர் விஜய் பிரிக்கும் தி.மு.க. ஓட்டுக்கள் இவையனைத்தும் ஒன்று சேர்ந்தாலே தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே கடும்போட்டி ஏற்படும். இந்த 38% ஓட்டுக்களை ஒன்றுதிரட்ட அமித்ஷாவால் முடியவில்லை.
சென்ற தேர்தலில் எடப் பாடிக்கு மைனஸானது முக்குலத் தோர் இனத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. வாக்குகள். முக்குலத் தோர் இனத்தின் மிக முக்கியமான அடையாளமாக கருதப் படுபவர் சசிகலா. டி.டி.வி. தினகரனை மிரட்டி அ.தி.மு.க. கூட் டணிக்கு கொண்டுவந் தார் அமித்ஷா. ஆனால், அவ ரால் ஓ.பி.எஸ்.சையும், சசிகலாவையும் அ.தி.மு.க. ஆதரவு நிலைக்கு கொண்டுவர முடியவில்லை. இருவரும் கேட்பது அ.தி.மு.க.வுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை. இந்த கோரிக்கை பலமுறை அமித்ஷா முன்னிலையில் எடுத்துவைக்கப்பட்டது. அமித்ஷா அதற்கு ஆதரவும் தெரிவித்தார். எடப்பாடி நான் சொன் னால் கேட்பார் என அமித்ஷா சொன்னார். ஆனால் எடப்பாடி இந்தக் கோரிக்கைக்கு சம்மதிக்கவில்லை. அதனால்தான் அ.தி.மு.க. உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என அமித்ஷா அறிவித்தார். காலப்போக்கில் சரியாகிவிடும் என முதல்கட்டமாக டி.டி.வி. தினகரனை கொண்டுவந்தார் அமித்ஷா. அதற்குப் பிறகும் எடப்பாடி இறங்கவில்லை. முக்குலத்தோர் வாக்கு விசயத்தில் எவ்வளவு முயற்சி செய்தும் அமித்ஷாவின் முயற்சிகள் திரிசங்கு சொர்க்கத்தின் நிலையிலேயே இருக்கிறது. அவரால் ஒரு உடன் பாட்டுக்கு சசிகலாவையும், ஓ.பி.எஸ்.சை யும் கொண்டுவர முடியவில்லை. மிரட் டல் உருட்டல் என எத்தனையோ ஆயுதங்களை பயன்படுத்தியும் அமித் ஷா சொல்வதை இந்த விவகாரத்தில் யாரும் கேட்கத் தயாராயில்லை.
அதேபோல் அ..மலை விவ காரத்திலும் அமித்ஷா கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறார். அ..மலைக்கு நெருக்கமாக இருந்தவர் கேசவ விநாயகம். இந்த கேசவ விநாயகம் மீது பல புகார் கள் வந்தது. முன்பு அ.தி.மு.க. கூட்டணியுடன் சட்ட மன்றத் தேர்தலை சந் தித்தபோது கேசவ விநா யகம் அவரது நண்பர் கோவர்த்தன், பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் தேர் தல் நிதி என கொடுக் கப்படும் நூற்றுக்கணக் கான கோடிகளை கொள்ளையடித்தனர். சௌதாமணி, மீனாட்ஷி நித்யா சுந்தர், வேலூர் கார்த்தியாயினி போன்ற வர்கள் கேசவ விநா யகத்துக்கு நெருக்கமாக இருந்து பா.ஜ.க. தேர்தல் நிதியை பயன்படுத் தியதை பார்த்து அ..மலை யும் தேர்தல் நிதியை கொள்ளையடிக்க ஆரம் பித்தார். இதுவரை கேசவவினாயகம் மட்டும் பல கோடி ரூபாய் சேர்த்திருக்கிறார். அ..மலையும் பல கோடிகளைச் சேர்த்திருக்கிறார். இருவரும் சேர்ந்து பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செய லாளர் பி.எல்.சந்தோஷுக்கு கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த டீமுடன் ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழகத் தலைவர் செந்தில் போன்ற குட்டித் தலைவர்களும் கொள்ளைக்காரர்களாக மாறிவிட்டார்கள். இதற்கெல்லாம் தலைமை தாங்கிய அ..மலையை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிய பிறகும் கேசவ விநாயகம் மூலம் இந்த கொள்ளை தொடர்ந்தது. இவர்கள்மேல் பெண்கள் தொடர்பான ஏகப்பட்ட ஆபாசப் புகார்களும் குவிந்தன. தன்னை ஒரு முதலமைச்சர் வேட் பாளராக நினைத்துக்கொண்டிருக்கும் அ..மலை, நயினார் நாகேந்திரனுக்கு எதிராக செயல்பட்டு தமிழகத்தில் பா.ஜ.க. வாக்குகளை உடைத்தார். அ..மலைக்கு செக் வைக்க கேசவவிநாயகத்தை பதவியிலிருந்து நீக்கினார் அமித்ஷா. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேசவவிநாயகத்தின் சிஷ்யனான பிரஷோப குமார் என்கிற கேசவ விநாயகத்தின் சிஷ்யனையே மறுபடியும் அமைப்புச் செயலாளராக நியமித்து அமித்ஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. மலையாளியான இந்த பிரஷோப குமார், பதவி நீக்கம் செய்யப்பட்ட மலையாளியான கேசவ விநாயகத்துக்கு பதிலாக நியமிக்கப்பட்டதை பா.ஜ.க.வினராலேயே ஜீரணிக்க முடியவில்லை. கேசவ விநாயகம் தனது பினாமியை பதவியில் அமர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
“பா.ஜ.க. இதுவரை யாரையும் கட்சியிலிருந்து நீக்கியதில்லை. ஒருவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு வேறொரு பொறுப்பு கொடுப்பார்கள். இதுதான் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். நடைமுறை. அப்படி எந்த பதவியும் அ..மலைக்கு தரப்பட வில்லை. அவரை நடுத்தெருவில் நிற்க வைத் திருக்கிறார்கள். அதனால், அவர் பா.ஜ.க. தலைமையை நோக்கி கேள்விமேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருக்கிறார். இவையெல்லாம் அ.தி.மு.க.- பா.ஜ.க. வாக்கு வங்கிகளை பலமாக பாதிக்கிறது. ஒருபக்கம் சசிகலா, மறுபக்கம் அ..மலை, கேசவ விநாயகம் என எழும் சவால்களை சமாளிக்க கேசவ விநாயகத்தின் குருவான பொன்னார் தலைமையில் ஒரு கமிட்டியை போட்டிருக்கிறது பா.ஜ.க. ஆனால், யாரும் அமித்ஷாவின் கட்டளைகளை ஏற்பதாக இல்லை. அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு அ.தி.மு.க.வின் வெற்றியை தடுப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். இந்த இடியாப்பச் சிக்கலை தீர்ப்பது எப்படி எனத் திணறிக் கொண்டிருக்கிறார் அமித்ஷா’என்கிறது பா.ஜ.க. -அ.தி.மு.க. வட்டாரங்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us