றநிலையத்துறை சர்ச்சை ஒருபக்கம் என்றால், வக்ஃப் போர்டு சர்ச்சைகள் இன்னொருபுறம்.

சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் இருக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஜும்மா மசூதிக்கு 700 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருக்கின்றன. இம்மசூதியின் தலைவராக இருக்கும் கேரளாவைச் சேர்ந்த மொய்தீன் குன்ஹியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருக்கும் விவகாரம்தான் வக்ஃப் வாரியத்தில் பூதாகரமாக வெடித்திருக்கிறது.

mohideen

Advertisment

இது குறித்து நம்மிடம் பேசிய ஜும்மா மசூதியின் பிரமுகர் ஆதம்பாஷா, ""மசூதியின் தலைவராக தற்போதிருக்கும் மலையாள இஸ்லாமியரான மொய்தீன்குன்ஹி, மூன்று வருடத்துக்கு முன்பு இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போதிலிருந்தே மலையாளிகளின் மசூதியாக இதனை மாற்றி வருகிறார். தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் உள்ள கிரிமினல் வழக்குகளுக்காக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் குன்ஹி.

moqueதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செண்பகத்தோப்பு அணைக்கட்டில் ஷட்டர்களை சரிசெய்யும் தமிழக அரசின் காண்ட்ராக்டில் 1 கோடியே 50 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான மொய்தீன் குன்ஹியை சமீபத்தில் போலீஸ் கைது செய்தது. அதேபோல, கேரளா, கர்நாடகாவிலும் இவர் மீதுள்ள பல்வேறு கிரிமினல் வழக்குகளுக்கான ஆதாரங்களும் இருக்கிறன. இந்நிலையில்தான்...

தலைவர் மொய்தீன்குன்ஹியையும் துணைத்தலைவர் எஸ்.எம்.மொய்தீனையும் தவிர்த்து நிர்வாக கமிட்டியில் மொத்தமுள்ள 9 உறுப்பினர்களில், 7 உறுப்பினர்கள் குன்ஹியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவு செல்லும் என்பது சட்டம்.

Advertisment

இந்த தீர்மானத்தை வக்ஃப் வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சட்டவிதிகளின்படி குன்ஹியை நீக்கி வாரியம் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், வாரியத்தின் அரசு அதிகாரியான முதன்மை நிர்வாக அதிகாரி அஸ்லாம், குன்ஹியின் நண்பரென்பதால் அந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. மாறாக, "என்னை நீக்கும் அதிகாரம் கமிட்டிக்கு இல்லை' என பிரச்சனையை கிளப்பினார் குன்ஹி. யாருக்கு அதிகாரம் இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோர்ட் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை வாரியம்.

இதுகுறித்து, வாரியத்தின் சேர்மன் அன்வர்ராஜாவை சந்தித்து உறுப்பினர்கள் முறையிட்ட நிலையில், "இப்படி ஒரு ஜட்ஜ்மெண்ட் இருப்பது எனக்குத் தெரியாதே' எனச் சொன்னவர், அஸ்லாமை அழைத்து கண்டித்தார். உடனே, இப்பிரச்சனை குறித்து வாரியத்தின் வழக்கறிஞர்களுடன் அன்வர்ராஜா விவாதித்தார். "மொய்தீன் குன்ஹி தவறு செய்திருப்பது உண்மை. அவரை நீக்கும் அதிகாரம் பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவெடுக்கும் நிர்வாக கமிட்டிக்குத்தான் இருக்கிறது' என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். "உடனே, குன்ஹியை நீக்கும் உத்தரவை ரெடி பண்ணுங்கள்' என அஸ்லாமுக்கு உத்தரவிட்டார் அன்வர்ராஜா. ஆனாலும் நோ ஆக்ஷன். "ஒரு கிரிமினலின் பிடியில் ஜும்மா மசூதி இருப்பதுதான் இஸ்லாமியர்களை வேதனைப்பட வைத்திருக்கிறது'' என்று விவரிக்கிறார் ஆதம்பாஷா.

துணைத்தலைவர் எஸ்.எம்.மொய்தீனிடம் நாம் பேசியபோது, ""ஜும்மா மசூதிக்கு சொந்தமான சொத்துகளில் அஸ்லாமின் உறவினருக்கு சில வீடுகள் இருக்கின்றன. மசூதிக்கு புதிய தலைவரை நியமித்துவிட்டால், அந்த வீடுகளில் நடந்துள்ள முறைகேடுகள் அம்பலமாகிவிடும் என்பதாலேயே குன்ஹியை மாற்றுவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் அஸ்லாம்'' என்கிறார்.

மசூதியின் முன்னாள் தலைவர் கஸ்னவியிடம் பேசியபோது, ""ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார் குன்ஹி. மசூதியின் வளாகத்தை வெளிநபர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால், அதனை கார் பார்க்கிங்கிற்காக தினசரி வாடகைக்கு விட்டிருக்கிறார் குன்ஹி. இரண்டு வருடமாக வாடகைக்கு விடப்பட்டதில் சுமார் 60 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளை வக்ஃப் போர்டுக்கு குன்ஹி காட்டவில்லை.

mosque

மசூதியின் வருவாயில் 7 சதவீதம் வாரியத்துக்கு கட்டவேண்டும். முறையான கணக்குகளை வாரியத்துக்கு குன்ஹி காட்டாததால் வாரியத்துக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடியையும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சையும் சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டு, "நான் அ.தி.மு.க.காரன். இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் நான் சொல்வதைத்தான் கேட்பாங்க'ன்னு சொல்லியே உறுப்பினர்களையும் இஸ்லாமிய மக்களையும் மிரட்டிவருகிறார்'' என்கிறார்.

இதுகுறித்து கருத்தறிய குன்ஹியை முயற்சித்தபோது, அவரது தொடர்பு கிடைக்கவே இல்லை. இந்த நிலையில் அரசு அதிகாரி அஸ்லாமிடம் இதுகுறித்து கேட்டபோது, ""இதில் முடிவெடுக்கும் அதிகாரம் சேர்மனிடம்தான் இருக்கிறது. என்னிடம் இல்லை. யாரையும் நான் காப்பாற்றவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை'' என்கிறார் அழுத்தமாக.

வாரியத்தின் சேர்மன் அன்வர்ராஜாவிடம் விசாரித்தபோது, ‘""இந்தப் பிரச்சினை எங்களிடம் கொண்டுவரப்பட்ட நிலையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வழக்கறிஞர்களிடம் லீகல் ஒப்பீனியன் கேட்கப்பட்டிருக்கிறது. அதன் முடிவைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார் உறுதியாக.

-இரா.இளையசெல்வன்