தனியாருக்கு விற்கப்படும் தமிழக வளம்! -பசுமை வழிச்சாலை பயங்கரம்!

tnforest

த்தாயிரம் கோடி ரூபாயில் அமையவிருக்கும் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் மோடி அரசுடன் கை குலுக்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எடப்பாடிபழனிச்சாமி, ’"போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகும்'’’ என பெருமைப்பட்டுக்கொண்டார். ஆனால், "இது மக்களுக்கான திட்டமில்லை'’என்கிற குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

tamilnaduforest

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்களுக்கான திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடியுடன் கடந்தமாதம் சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இரவு 7:30 மணிக்குத் துவங்கி சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி. அதனையடுத்து, சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

"இந்தியாவின் இரண்டாவது பசுமை வழிச்சாலை' என அடையாளப்படுத்தப்படும் இத்திட்டம் சென்னை தாம்பரத்தில் துவங்கி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்ட எல்லைகள் வழியாக சேலத்தை அடைகிறது. மொத்த நீளம் 274 கிலோமீட்டர். இதில், சுமார் 210 கிலோ மீட்டர் தமிழக வனப்பகுதியினூடாகச் செல்கிறது. தற்போதைய சென்னை-சேலம் வழித்தடத்தைவிட 71 கி.மீ. குறையும். பயண நேரமும் பாதியாகக் குறைவதால், வாகனங்களின் எரிபொருள் செலவும் மிச்சமாகும்.

காஞ்சிபுர மாவட்டத்தில் 59 கிலோமீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு -வந்தவாசி -போளூர் -ஆரணி -செங்கம் வழியாக 122 கிலோமீட்டரும், அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில் 2 கிலோ மீட்டர் தூரம் மட்டும் தொட்டுவிட்டு தர்மபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி வழியாக 53 கிலோ மீட்டரும், அங்கிருந்து வாழப்பாடி வழியாக சேலம் அடைய 38 கிலோ மீட்டர

த்தாயிரம் கோடி ரூபாயில் அமையவிருக்கும் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் மோடி அரசுடன் கை குலுக்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எடப்பாடிபழனிச்சாமி, ’"போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகும்'’’ என பெருமைப்பட்டுக்கொண்டார். ஆனால், "இது மக்களுக்கான திட்டமில்லை'’என்கிற குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

tamilnaduforest

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்களுக்கான திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடியுடன் கடந்தமாதம் சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இரவு 7:30 மணிக்குத் துவங்கி சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி. அதனையடுத்து, சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

"இந்தியாவின் இரண்டாவது பசுமை வழிச்சாலை' என அடையாளப்படுத்தப்படும் இத்திட்டம் சென்னை தாம்பரத்தில் துவங்கி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்ட எல்லைகள் வழியாக சேலத்தை அடைகிறது. மொத்த நீளம் 274 கிலோமீட்டர். இதில், சுமார் 210 கிலோ மீட்டர் தமிழக வனப்பகுதியினூடாகச் செல்கிறது. தற்போதைய சென்னை-சேலம் வழித்தடத்தைவிட 71 கி.மீ. குறையும். பயண நேரமும் பாதியாகக் குறைவதால், வாகனங்களின் எரிபொருள் செலவும் மிச்சமாகும்.

காஞ்சிபுர மாவட்டத்தில் 59 கிலோமீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு -வந்தவாசி -போளூர் -ஆரணி -செங்கம் வழியாக 122 கிலோமீட்டரும், அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில் 2 கிலோ மீட்டர் தூரம் மட்டும் தொட்டுவிட்டு தர்மபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி வழியாக 53 கிலோ மீட்டரும், அங்கிருந்து வாழப்பாடி வழியாக சேலம் அடைய 38 கிலோ மீட்டரும் என சாலை அமைவதாக திட்டத்தின் வரைபடத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

lawyer-elangoநவீன கட்டமைப்புகளுடன் 8 வழிச்சாலையாக அமையும் இத்திட்டத்தில், வாகனங்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் வழிவகைகள் காணப்பட்டுள்ளன. அதிவேகத்தைக் குறைக்காமலேயே பயணிக்க முடியுமாம். ஆனால், இது எதுவும் மக்களுக்கானது இல்லை என்பதுதான் அதிர்ச்சித் தகவல்

"பூவுலகின் நண்பர்கள்' இயக்கத்தின் செயற்பாட்டாளர் சுந்தரராஜனிடம் நாம் பேசியபோது, ""சேலம் மாவட்டம் கஞ்சமலையிலும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை, தீர்த்தமலை உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் பல்லாயிரம் டன் இரும்புத்தாதுக்களான கனிம வளங்கள் புதைந்து கிடக்கின்றன. கவுத்திமலை-வேடியப்பன்மலை பகுதிகளில் உள்ள 93 மில்லியன் டன் இரும்புத்தாதில் முதல்கட்டமாக 35 மில்லியன் டன் இரும்புத்தாதுவை பிரித்தெடுக்க தமிழக அரசின் தொழில் மேம்பாட்டுக் கழகம் (டிட்கோ) 1996-2001-ல் ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசிடம் அனுமதி கோரியது. அதேபோல, மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறையின் அனுமதி பெற்று குறிப்பிட்ட பகுதியில் சுரங்கம் அமைத்து இரும்புத்தாதுவை பிரித்தெடுக்கலாம். இதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என பரிந்துரைத்தது தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை. இதற்கான அனுமதியை தமிழக அரசு தருவதற்குள் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஜெயலலிதா முதலமைச்சரானார் (2001-2006).

இவரது ஆட்சியில், மேற்கண்ட இரு மாவட்டங்களிலுமுள்ள மலைப்பகுதிகளில் இரும்புத்தாதுக்களை வெட்டியெடுக்கும் சுரங்க தொழிலில், ஜிண்டால் நிறுவனத்தை தனியார் பங்குதாரராக இணைத்துக்கொண்டு செயல்பட டிட்கோ நிறுவனம் முடிவு செய்தது. இதனடிப்படையில், டிட்கோவும் ஜிண்டாலும் இணைந்து, "தமிழ்நாடு இரும்புத்தாது சுரங்கக் கழகம்' (டிம்கோ) என்கிற புதிய நிறுவனத்தை உருவாக்கி செயல்படுவதற்கான ஒப்பந்தம் 2005-ல் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, டிம்கோ நிறுவன பங்குகளில் 99 சதவீதம் ஜிண்டாலுக்கும், 1 சதவீதம் டிட்கோவுக்கும் என முடிவு செய்தனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டிட்கோவின் பங்கு 1 சதவீதத்திலிருந்து 0.02 சதவீதமாக குறைந்துவிடும் என்றும் ஜிண்டால் நிறுவனம் சொல்லியிருக்கிறது. அதாவது, 100 கோடி லாபம் ஈட்டினால் அதில், வெறும் 20 லட்ச ரூபாய் மட்டுமே தமிழக அரசுக்கு கிடைக்கும்.

soundarajanஇயற்கை வளத்தை பலிகொடுத்து தனியாரை வாழவைக்கும் இத்திட்டத்துக்கு எதிராகக் கொந்தளித்த 51 கிராம மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தோம். இதனால், ஜிண்டாலின் திட்டம் நிறைவேறவில்லை. சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி குறித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் மழுப்பியது அப்போதைய ஜெயலலிதா அரசு.

வனப்பகுதியில் விதிமுறைகளுக்குட்பட்டு சுரங்கம் அமைக்கப்படுமாயின் மத்திய அரசின் சுற்றுச்சூழல்-வனத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியச் சுரங்க நிறுவனம் ஆகியவற்றின் அனுமதி கிடைத்த பிறகே மாநில அரசு அனுமதி வழங்கும். ஆனால், ஜிண்டாலுக்கான இந்த இரும்புத்தாது சுரங்கம் விவகாரத்தில் மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அனுமதி தரவில்லை. ஆனால், இந்தியச் சுரங்க நிறுவனமோ, ஜிண்டாலின் சுரங்கம் தொடர்பான திட்ட வரைபடத்திற்கு அனுமதி தந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என நீதிமன்றம் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதில் இல்லை. ஜிண்டாலும் டிட்கோவும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைய, 2006-2011 தி.மு.க. ஆட்சியில் இந்த விவகாரம் அப்படியே முடங்கிப்போனது.

இந்த நிலையில்தான் தற்போது, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வனப்பகுதிகளிலுள்ள இரும்புத்தாதுக்களை வெட்டியெடுத்து, சென்னை துறைமுகத்துக்கு அதிவிரைவாக கொண்டுவர வேண்டுமாயின் தடையின்றி வாகனம் பயணிக்கும் வகையில் சாலை வசதிகள் வேண்டும் என்பதற்காக பசுமைவழிச்சாலையை மோடியும் எடப்பாடியும் இணைந்து கொண்டு வருகின்றனர். ஜிண்டாலின் கொள்ளைகளுக்காக மக்களின் வரிப்பணம் 10,000 கோடி செலவிடப்படுகிறது'' என விரிவாக சுட்டிக்காட்டுகிறார் சுந்தரராஜன்.

இத்திட்டத்தின் பின்னணிகள் குறித்து ஆராய்ந்துவரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இளங்கோவன் நம்மிடம், ‘""ஜிண்டால் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் பல முட்டுக்கட்டைகளை உச்சநீதிமன்றம் போட்டு வைத்திருக்கும் நிலையில் அதை உடைத்தெறியும் அத்தனை வேலைகளையும் நடத்தி முடித்துவிட்டது மத்திய அரசு. அந்த வகையில், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருப்புத்தாதுக்களை வெட்டியெடுக்கும் ஜிண்டாலின் சுரங்க அனுமதிக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் சாதகமான தீர்ப்புக் கிடைக்கவிருக்கிறது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான இரும்புத்தாதுக்கள் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால், சர்வதேச நாடுகளில் இரும்பின் தேவை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தபடியே இருக்கிறது. இந்திய இரும்புக்கு சர்வதேச சந்தையில் மதிப்பு அதிகம். அந்த வகையில், சேலம், திருவண்ணாமலை பகுதிகளில் வெட்டியெடுக்கப்படும் இரும்புக் கனிமங்களில் 90 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த நிலையில், ஜிண்டாலின் வாகனங்கள் சென்னை துறைமுகத்தை குறைவான நேரத்தில் அடைவதற்கு வசதியாகத்தான் பசுமைவழிச்சாலை திட்டத்தை கொண்டு வருகின்றனர்.

சேலம், திருவண்ணாமலை வனப்பகுதிகளில் சுரங்கம் அமைக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அங்கு வெட்டியெடுக்கப்படும் இரும்புக் கனிமங்களை, வட இந்தியாவிலுள்ள தமது ஆலைகளுக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் செலவினங்களைக் குறைப்பதற்காக சேலம் உருக்காலையில் உருக்கி பல்வேறு உலோகங்களாக பிரித்தெடுக்கலாம் என திட்டமிட்டு சேலம் உருக்காலையை கபளீகரம் செய்யும் முயற்சியை எடுத்தது ஜிண்டால் குழுமம். ஆனால், கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த முயற்சி கிடப்பில் கிடக்கிறது. ஜிண்டாலின் இரும்புச்சுரங்கம் திட்டத்தில் 1 டன் இரும்பை வெட்டி எடுக்க அரசுக்கு கொடுக்கப்படும் உரிமம் (லைசன்ஸ்) தொகை வெறும் 27 ரூபாய். வெளிச்சந்தையில் 1 டன் இரும்பு குறைந்தபட்சம் 7,500 ரூபாய். அந்த வகையில் வருசத்துக்கு சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஜிண்டாலுக்கு கிடைக்கும். இந்தளவுக்கு லாபத்தை தனியாருக்கு அள்ளிக் கொடுப்பதுடன், பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்காக தமிழக வனத்துறைக்கு சொந்தமான 6,500 ஏக்கர் நிலமும் மத்திய அரசிடம் ஒப்படைக்கவிருக்கிறது எடப்பாடி அரசு. மக்களின் வரிப்பணம் 10,000 கோடியை விரயமாக்கி கார்ப்பரேட் நிறுவனத்துக்காக கூஜா தூக்குவதன் பின்னணியில் பல கோடி லஞ்சம் விளையாடுகிறது''’என்கிறார் ஆவேசமாக.

தமிழக அரசின் தொழில்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு இச்சாலை செல்லும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் விடுவது, காண்ட்ராக்டர்கள் முடிவு செய்வது எல்லாமே மத்திய அரசுதான். ஆனால், சாலை அமையும் பகுதிகளில் தமிழக அரசின் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை மாற்றிக்கொடுப்பது, தேவையான நிலங்களை கையகப்படுத்தித்தருவதுதான் தமிழக அரசின் பொறுப்பு. அதேசமயம், 10,000 கோடி ப்ராஜெக்ட்டில் 1 சதவீத கமிசன் மட்டுமே கணக்கிடப்பட்டிருப்பதால், அது மட்டுமே 1000 கோடி ரூபாய். அந்த 1000 கோடி ரூபாயும் யார், யாருக்கு பங்கு பிரிக்கப்படும்ங்கிறதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்''’என விவரிக்கிறது அதிகாரிகள் தரப்பு.

Tamil nadu forest
இதையும் படியுங்கள்
Subscribe