"இந்த மாவட்டத்துக்கு இப்படியொரு நபர் வேண்டவே வேண்டாம்'’ என்று இன்ஸ்பெக்டர் ஒருவரை, மாவட்டத்தைவிட்டே வெளியே அனுப்பியிருக்கிறார் திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ். அனுப்பப்பட்டவர், பொன்மலை இன்ஸ்பெக்டராக இருந்த மணிவண்ணன்.
"எதனால் இப்படி?' என திருச்சி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது...
""அவர் லேசுப்பட்ட ஆள் இல்லை. பேருக்கு இன்ஸ்பெக்டர்ன்னாலும் இவரோட முழு கவனமும் ரியல் எஸ்டேட் பிஸ்னஸில்தான் இருக்கும். அதுக்கான டீலிங் முழுதும் போலீஸ் ஸ்டேஷன்லதான் நடக்கும். இந்த பிஸ்னஸிக்கு அப்புறம் அவர் தீவிர கவனம் செலுத்துனது...கிளுகிளு சமாச்சாரத்துலதான். ரோட்டோரத்துல புடவை கஞ்சா கூட, அவர் வண்டியை நிப்பாட்டிடுவார். அவர் அப்படிப்பட்ட சபலிஸ்ட் சார்'' என்றவர்கள் பட்டியல் போட ஆரம்பித்தனர்...
""முதல்ல, இதே ஸ்டேஷன்ல வேலை பார்த்த ஒரு பெண் போலீஸை மடக்கினார். இந்த கசமுசாவால் அந்த பெண் போலீஸை வேறு ஸ்டேஷனுக்கு மாற்றினாங்க. ஆனால் இவர், அங்கும் ஆன் டூட்டில போக ஆரம்பிச்சிட்டார். அதேபோல், இவரோட சின்ன மாமனார் மனோகரன், குடும்பத் தகராறைத் தீர்த்துவையுன்னு ஒரு பெண்ணை இவர்கிட்ட அழைச்சிக்கிட்டு வந்தார். இன்ஸ்பெக்டரோ, அந்தப் பெண்ணோட குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டார். அப்புறம் செந்தண்ணீர்புரம் பகுதியில் இவர் ஒரு திருட்டுகேஸை விசாரிக்கப் போனார். போனவர், திருடன் மனைவியோட ’திருடன் போலீஸ்’ விளையாட ஆரம்பிச்சிட்டார். பிறகு, பணமோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு விதவைப் பெண்ணை விசாரிக்கப் போனார். அப்புறம் தினசரி விசாரணை தொடர ஆரம்பிச்சிடிச்சி.
இப்படி போற இடத்திலெல்லாம், அன்ஆதரைஸ்டு பேமிலி பிராஞ்ச்சை ஆரம்பிச்சவர், கடைசியா, விசா நீட்டிப்புக்காகக் காத்திருந்த ஒரு உகாண்டா மாணவியை விசாரிக்கிறேன்னு தினசரி அந்த மாணவி தங்கியிருந்த வீட்டுக்குப் போய், கதவை சாத்திக்கிட்டு விசாரிக்க ஆரம்பிச்சார். இதைப் பார்த்து டென்ஷனான கீழ்போர்ஷன் பெண்மணி, வீடியோ ஆதாரத்தோட புகார் செஞ்சிட்டார். இதை ஐ.எஸ். ஏ.சி கபிலன், கமிஷனர் கவனத்துக்கு கொண்டு போக, அதன்பின் நடந்த விசாரணையில்... சகலமும் தெரிய வந்திருக்கு. அதுக்குப் பிறகுதான், எங்க மாவட்டத்துக்கே வேண்டாம்னு, மணிவண்ணனை பெரம்பலூருக்கு அனுப்பிவச்சிட்டாங்க''’என்றார்கள் விரிவாகவே.
அடக்கொடுமையே!
-ஜெ.டி.ஆர்.