Advertisment

கொள்ளைக் கூட்டத்தில் ஸ்தபதி! -ஐ.ஜி. அதிரடி விசாரணை!

ig

ழனி முருகன் கோவில் மூலஸ்தானத்தில் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலையை மறைத்து, ஐம்பொன் சிலையை வைத்ததில் மோசடி நடந்திருப்பது தெரிந்ததன் பேரில் ஸ்தபதி முத்தையாவையும், முன்னாள் கோவில் இணைஆணையரான ராஜாவையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைது செய்தனர். இச்செய்தியை கடந்த ஏப்.01 தேதியிட்ட நக்கீரன் இதழில் தெள்ளத் தெளிவாக வெளியிட்டிருந்தோம். அதில் "விரைவில் பழனிக்கு வந்து விசாரிப்பேன்' என்றார் ஐ.ஜி. அப்படி விசாரித்தால் இருட்டறை மர்மங்கள் பலப்பல வெளிச்சத்திற்குவரும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம். அதைத் தொடர்ந்து, இருட்டறை மர்மங்களை வெளிப்படுத்துவதற்காக பழனிக்கு வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடம் ஒரு மினி பேட்டி.

Advertisment

ponmanickavel

நக்கீரன் : 14 வருடங்களுக்கு முன்பு செய்த ஐம்பொன் சிலையில் மோசடி நடந்திருப்பதாக இப்ப கூறுகிறீர்கள்? அப்படி என்ன அந்த ஐம்பொன் சிலையில் மோசடி நடந்திருக்கிறது?

Advertisment

ஐ.ஜி. : 202 க

ஐ.ஜி. : 202 கிலோ ஐம்பொன் சிலையில் வெள்ளி உலோகம், எள்ளளவில் கூட சேர்க்கப்படவில்லை. செம்பு அதிகமாக சேர்த்து தங்கத்தில் மோசடி நடந்திருக்கிறது. இந்த ஐம்பொன் சிலையை சொல்லி வெளியிலயும் தங்கம் நன்கொடையாக வாங்கியிருக்கிறார்கள். அது கணக்கில் வரவில்லை. அதோடு ஐந்து உலோகங்களுக்கு மூன்று உலோகங்கள் மட்டுமே சேர்த்து முறைகேடு செய்து, இந்த முப்பொன் சிலையை செய்திருப்பது தெரியவந்தது. 5 மாதங்களுக்கு முன் இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினேன்.

நக்கீரன் : இந்த சிலை மோசடியில் ஸ்தபதி முத்தையாவையும், முன்னாள் இ.ஓ. ராஜாவையும் கைது செய்திருக்கிறீர்கள்? வேறு யாரும் சிக்குகிறார்களா?

ஐ.ஜி. : நிச்சயமாக மேலும் சிலர் சிக்கவிருக்கிறார்கள். அதற்கு முருகப்பெருமானின் பெயரிலேயே ஆதாரம் இருக்கு. அதன்மூலம் இந்த மோசடிக் குற்றவாளிகளில் ஸ்தபதி உள்பட யாருக்காவது ஆயுள் தண்டனை நிச்சயம் கிடைக்கும்.

நக்கீரன் : நவபாஷாண மூலவர் சிலையை கடத்த முயற்சி செய்ததாகவும், ஒரு பேச்சு அடிபட்டு வருகிறதே?

muthaiahஐ.ஜி. : கருவறையில் இந்த உலோகச் சிலையைத் தொடர்ந்து வைத்திருந்தால் நிச்சயம் நவபாஷாண சிலையை கடத்தியிருப்பார்கள். ஏனென்றால் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் எல்லாம் நவபாசாண சிலைக்கு முன் இருக்கும் இந்த ஐம்பொன் சிலையைப் பார்த்து வணங்குவதிலேயே கவனம் வரும். அதை சாதகமாக பயன்படுத்தி கீழே தள்ளிவிட்டு பழுதடைந்துவிட்டது என்று கூறி, ஸ்டோர்ரூமில் போட்டுவிடுவார்கள். அதன்பின் வெளிநாட்டுக்கு விற்றுவிடுவார்கள்.

நக்கீரன் : அலுவலக ரீதியாக முருகனுக்கு பக்தர்கள் கொடுக்கும் தங்கம், வெள்ளிப் பொருட்களை கணக்கில் காட்டாமல் அங்குள்ள அதிகாரிகள் சுருட்டிக்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவிவருகிறதே?

ஐ.ஜி : அதற்குள் நாங்க போகவிரும்பல. இவையெல்லாம் மலைக்குக்கீழே உள்ள போலீஸ் ஸ்டேசன் பார்க்கவேண்டிய வேலை.

நக்கீரன் : இந்த சிலை மோசடி சம்பந்தமான விசாரணையைத் தொடங்கிவிட்டீர்களா?

ஐ.ஜி. : ஆமாம். முதலில் கோவில் இணை ஆணையரையும் (செல்வராஜ்) மேனேஜரையும் (உமா) வரச்சொல்லி ஒருநாள் முழுவதும் விசாரணை செய்து 2004 முதல் நடப்புவரை பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை வாங்கியிருக்கிறோம். அதோடு வெளியில் சொல்லக்கூடாத சில சீக்ரெட் ரெக்கார்டுகளையும் கைப்பற்றியிருக்கிறோம்.

நக்கீரன் : இந்த சிலை மோசடி வெளிவந்ததற்கு அரசியல் உள்நோக்கம் ஏதும் இருக்கிறதா?

ஐ.ஜி. : அரசியல்வாதிகள் யாரும் எனக்கு பிரஷர் கொடுத்ததில்லை. இருந்தாலும் இந்த மோசடியில் முன்னாள், இன்னாள் மந்திரிகள் யார் தலையிட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நக்கீரன் : இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வுபெறவிருக்கிற நீங்க, மேலும் பணி நீட்டிப்பு கேட்டு அரசிடம் வலியுறுத்துவீர்களா?

ஐ.ஜி. : தேவையிருக்காது. அதற்குள் இந்த முருகப்பெருமானின் ஆசியோடு வழக்குகளை எல்லாம் முடித்து தண்டனைகளையும் வாங்கிக் கொடுத்துவிடுவேன்.

-சந்திப்பு : சக்தி

கோவிலும் பங்களாக்களும்!

தேவகோட்டைக்கு அருகிலுள்ள எழுபொன்கோட்டையைச் சேர்ந்தவர் கல்லாசாரி முத்தையா.

அவருக்கு கணபதி, சட்டநாதன், முத்தையா, சண்முகம் என நான்கு மகன்கள். நால்வரும் புகழ்பெற்ற ஸ்தபதிகளே. மூத்தவர் கணபதி ஸ்தபதி ஆந்திர மாநில அரசின் ஸ்தபதியாக இருந்தவர்.

இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் முத்தையா ஸ்தபதி, அமெரிக்க நியூயார்க்கில் வெங்கடாசலபதி கோவிலும், சிகாகோவில் விநாயகர் கோவில்களையும் கட்டியவர். தென்காசி கோபுரத்தை எழுப்பியவர். சென்னை நங்கநல்லூரில் 108 அடி ஆஞ்சநேயரை வடித்தவர். பெசன்ட் நகரில் அறுபடை வீடு கட்டியவர். இவருடைய இரண்டு மகன்களும் சிற்பிகளே.

இந்த முத்தையா ஸ்தபதிக்கு சென்னை -அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட பங்களாக்கள் உள்ளன. தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் நிலபுலன்கள் உள்ளன.

""2004 வாக்கில் கோடிகளைக் கொட்டிக் கொடுத்து அறநிலையத் துறையில் உயர் பதவிகளைப் பெற்ற கோவை கே.கே.ராஜன், திருவண்ணாமலை பிச்சாண்டி ஐ.ஏ.எஸ். போன்றவர்களால் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறார் முத்தையா ஸ்தபதி. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்'' என்கிறார்கள் எழுபொன் கோட்டையைச் சேர்ந்த முதியோர் சிலர்.

-கீரன்

IG Ponmanikavel Aaivu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe