ரணகள யாத்திரை!

ramraj-car

தம் என்றாலே பயம் ஏற்படுவது இந்திய அரசியலில் சகஜம். 28 ஆண்டுகளுக்கு முன் 1990-ல் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையின் விளைவுதான் 1992-ல் பாபர் மசூதி தகர்ப்பு.

ramraj

இப்போது ரத யாத்திரையைக் கிளப்பியிருக்கிறது காவிப்படை. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஸ்ரீராமதாசா யுனிவர்சல் மிஷன் ஏற்பாட்டின்படி, பிப். 13-ஆம் தேதி கிளம்பியது ராம ராஜ்ய ரதயாத்திரை. ஸ்வராஜ் மஸ்தா லாரியில் ராமர், சீதை, அனுமன் சிலைகளை வைத்து 80 கி.மீ.வேகத்தில் செல்லும் ஹைடெக் ரதம் இது.

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிக் கிளம்பிய இந்த ரதம், பைசாபாத், வாரணாசி (பிரதமர் மோடியின் தொகுதி) வழியாக உ.பி.யைக் கடந்து மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக கேரளா வந்தது. பி.ஜே.பி. வலுவாக உள்ள நான்கு மாநிலங்கள் வழியாக வந்தும், மக்களிடம் இந்த ரதத்திற்கு பெரிதாக வரவேற்பு இல்லை. கம்யூனிஸ்டும் காங்கிரசும் வலுவாக உள்ள கேரளாவில், ஏதாவது அசம்பாவிதத்தை அரங்கேற்றி, ரதத்தைப் பற்றி மக்களிடம் பேச வைக்கவேண்டும் என சில ரகசியத் திட்டத்தை வகுத்தன சங்பரிவாரங்கள். உளவுத்துறை தந்த தகவலால் கேரள அரசு கவனமாக செயல்பட்டது.

சமூக நல்லிணக்க பூமியான தமிழகத்தில், ராமராஜ்ய ரதத்திற்கு கிளம்பிய எதிர்ப்பால் பரபரப்பு பற்றிக் கொண்டது. ""அது வெறும் ரதம் தானே, அதுபாட்ல போய்ட்டுப் போகுது, அதை தடுக்குறேன்னு சொல்லி ஏன் விளம்பரம் தரணும்?'' என்ற பேச்சு இருப்பதையும்’ மறுப்பதற்கில்லை.

தம் என்றாலே பயம் ஏற்படுவது இந்திய அரசியலில் சகஜம். 28 ஆண்டுகளுக்கு முன் 1990-ல் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையின் விளைவுதான் 1992-ல் பாபர் மசூதி தகர்ப்பு.

ramraj

இப்போது ரத யாத்திரையைக் கிளப்பியிருக்கிறது காவிப்படை. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஸ்ரீராமதாசா யுனிவர்சல் மிஷன் ஏற்பாட்டின்படி, பிப். 13-ஆம் தேதி கிளம்பியது ராம ராஜ்ய ரதயாத்திரை. ஸ்வராஜ் மஸ்தா லாரியில் ராமர், சீதை, அனுமன் சிலைகளை வைத்து 80 கி.மீ.வேகத்தில் செல்லும் ஹைடெக் ரதம் இது.

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிக் கிளம்பிய இந்த ரதம், பைசாபாத், வாரணாசி (பிரதமர் மோடியின் தொகுதி) வழியாக உ.பி.யைக் கடந்து மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக கேரளா வந்தது. பி.ஜே.பி. வலுவாக உள்ள நான்கு மாநிலங்கள் வழியாக வந்தும், மக்களிடம் இந்த ரதத்திற்கு பெரிதாக வரவேற்பு இல்லை. கம்யூனிஸ்டும் காங்கிரசும் வலுவாக உள்ள கேரளாவில், ஏதாவது அசம்பாவிதத்தை அரங்கேற்றி, ரதத்தைப் பற்றி மக்களிடம் பேச வைக்கவேண்டும் என சில ரகசியத் திட்டத்தை வகுத்தன சங்பரிவாரங்கள். உளவுத்துறை தந்த தகவலால் கேரள அரசு கவனமாக செயல்பட்டது.

சமூக நல்லிணக்க பூமியான தமிழகத்தில், ராமராஜ்ய ரதத்திற்கு கிளம்பிய எதிர்ப்பால் பரபரப்பு பற்றிக் கொண்டது. ""அது வெறும் ரதம் தானே, அதுபாட்ல போய்ட்டுப் போகுது, அதை தடுக்குறேன்னு சொல்லி ஏன் விளம்பரம் தரணும்?'' என்ற பேச்சு இருப்பதையும்’ மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த ரத யாத்திரையின் நோக்கமே, 1. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும், 2. இந்தியாவை ராமராஜ்யமாக்க வேண்டும், 3. இராமாயணத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும், 4. அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வியாழக்கிழமையை அறிவிக்க வேண்டும். இந்த நான்கு அஜெண்டாதான் இந்த யாத்திரையின் குறிக்கோள்.

protest

இது மிகவும் டேஞ்சரஸான அஜெண்டா என்கிற சமூகநீதி ஆர்வலர்கள், ""ராமர் கோவில் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போதே, ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்பது சட்ட மீறல். அடுத்து மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் "ராமராஜ்யம் என்றாலே இந்து நாடு' என பிரகடனப்படுத்தும் குரூர முயற்சி. இதற்கடுத்து, ஞாயிற்றுக்கிழமை என்பது கிறிஸ்தவர்களுக்கும் வெள்ளிக்கிழமை என்பது இஸ்லாமியர்களுக்கும் விஷேசமான விடுமுறை நாள் என்பதால் வியாழக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என விபரீதமாக சிந்திக்கிறார்கள் சங்பரிவாரங்கள்''’என்ற நிதர்சனத்தைச் சொன்னார்கள்.

இதனால்தான் மார்ச் 20-ஆம் தேதி தமிழகத்தில், ரதம் நுழைந்ததுமே எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்தது. கேரளாவிலிருந்து நெல்லை மாவட்டத்தின் புளியரை வழியாக தென்காசி நகருக்குள் ரதம் நுழையப் போகிறது என்ற தகவல் கிடைத்ததுமே, காவி தீவிரவாத எதிர்ப்பு அமைப்பினர் தென்காசி ஆர்.டி.ஓ. ராஜேந்திரனிடம் ரதம் நுழைய எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க்கள், த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என அனைத்துக் கட்சிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரதத்திற்கு எதிர்ப்பு வலுப்பதைப் பார்த்த மாவட்ட நிர்வாகம், நெல்லை மாவட்டத்தில் ஐந்து நாட்களுக்கு 144 தடை உத்தரவு போட்டது. எஸ்.பி.அருண் சக்திகுமார் தீவிர கண்காணிப்பில் இறங்கினார். புளியரை, செங்கோட்டை நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. வி.எச்.பி. பொறுப்பாளரான சாதுஉமேஷ் யாதவ் தலைமையிலான 20 சாதுக்களுடன் வந்த ரதத்தை, தமிழக எல்லையில் வரவேற்றார் தமிழக இந்து முன்னணி பொறுப்பாளரான ஜெயக்குமார்.

அதேநாளில் சட்டமன்றத்தில் பிரச்சினையை எழுப்பி, வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார் மு.க.ஸ்டாலின். செங்கோட்டை நகரில் நடக்கவிருக்கும் மறியலுக்காக வந்து கொண்டிருந்த வி.சி.க. தலைவர் திருமா, ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது செய்யப்பட்டார். எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க., ம.தி.மு.க. என அணி அணியாக வந்து மறியல் செய்து கைதானபடியே இருந்தனர்.

செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே, நாம் தமிழர் கட்சியின் மண்டலப் பொறுப்பாளர் ராம்குமார் தலைமையில் ஏராளமானோர் சீமான் வருகைக்காக திரண்டிருந்தனர். போலீசுக்கு டேக்கா கொடுத்துவிட்டு, மறியல் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்து எதிர்ப்பு முழக்கம் எழுப்பிய சீமானை போலீசார் கைது செய்தனர்.

நிலைமை ஓரளவு சுமுகமானதும் செங்கோட்டை வந்த ரதம், சிறிதுநேரம் நின்றுவிட்டு, தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பாக மக்கள் தரிசனத்திற்காக நின்றுவிட்டு, அங்கிருந்து கிளம்பி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக பயணித்து, மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடத்தை 60 முதல் 80 கி.மீ. ஸ்பீடில் கடந்து, 21-ஆம் தேதி இரவு 7.:00 மணிக்கு ராமேஸ்வரம் வந்தது.

இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ரதத்தை வரவேற்ற போது, தனக்குரிய மரியாதை கிடைக்கவில்லை என மாவட்ட பா.ஜ.க. தலைவர் முரளீதரனும் ராமமூர்த்தியும் உரசிக்கொண்டனர்.

22-ஆம் தேதி காலை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பி, ஈ.சி.ஆர். சாலையான கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி சென்றடையும் திட்டத்துடன் ரதம் கிளம்பியது. ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கீழக்கரை, ஏர்வாடி வழியாகச் செல்ல அனுமதி இல்லாததால், உத்தரகோசமங்கை வழியாக பயணித்தது ரதம்.

அனைத்துக் கட்சிகள் தரப்பிலும் எதிர்ப்பு பலமாக இருந்த நிலையில், மத்திய அரசின் விருப்பப்படி மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் பதட்டத்தை உருவாக்கிப் பறந்திருக்கிறது ரதம் என்ற பெயரிலான ரணகள யாத்திரை.

-பரமசிவன், நாகேந்திரன்

படங்கள்: ப.இராம்குமார் & ஸ்டாலின்

பெரியாரை சிதைத்த சிறியார்!

damagedperiyar-statue

செங்கோட்டை நகருக்குள் நுழைந்த ராம ரதத்தால் ரணகள பீதி என்றால், புதுக்கோட்டையில் பெரியார் சிலையின் தலையைத் துண்டித்தது கடும் கண்டனத்துக்குள்ளானது. பெரியார் குறித்து ஏறுக்குமாறாகப் பேசிவிட்டு, தனது அட்மின் மீது எச்.ராஜா பழியைப் போட்டபின் நடந்த முதல் அசம்பாவிதம் இது. ஆலங்குடி அருகே உள்ள சின்ன கிராமமான புதுக்கோட்டை விடுதியில், திராவிடர் கழகத்தினரால் நிறுவப்பட்டதுதான் ஆறடி முழுஉருவ பெரியார் சிலை. அந்தச் சிலையின் தலையைத் தான், கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் துண்டித்தனர். தலை துண்டிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் என சூடு பிடித்தது. புதுக்கோட்டை எஸ்.பி.செல்வராஜ் தலைமையிலான போலீசார், தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியபோது, டாஸ்மாக் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா தென்பட்டது. அதை ஆய்வு செய்தபோது, அனுமதியே இல்லாத அந்த பாருக்குள் இரவு 3 மணிக்கு ஒரு இளைஞன் நுழைவதைத் தெரிந்துகொண்டனர். அவரைப் பற்றி விசாரித்தபோது, ஓய்வு பெற்ற சிறைக்காவலர் சரவணமுத்து மகன் செந்தில்குமார் என்பது தெரிந்ததும், தூக்கி வந்து விசாரித்தனர். "எல்லைப் பாதுகாப்புப்படை வீரராக இருக்கும், தான் ஐந்து நாள் லீவில் ஊருக்கு வந்ததாகவும், மூணு மணிக்கு சரக்கடிச்சுட்டு அந்த வழியா போகும்போது, சிலையைத் தள்ளிவிட்டுட்டேன்... அது பெரியார் சிலைன்னு எனக்குத் தெரியாது' என்றிருக்கிறார். இதன் பின்னணியில் உள்ள சதி பற்றியும், இதுபோல மற்ற இடங்களிலும் சதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.

-பகத்சிங்

Bjpcar ramraj
இதையும் படியுங்கள்
Subscribe