Advertisment

துறைமுகமா? மதக்கலவரமா? -பதட்டத்தில் கன்னியாகுமரி!

kanyakumaritension

துறைமுகத்துக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தை குறிவைத்து, மீண்டும் ஒரு மதக்கலவரத்துக்கு அடித்தளம் போடப்படுவதாக குமரி மாவட்ட மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.

Advertisment

kanyakumari-tension

1982-ஆம் ஆண்டு மீனவர்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மண்டைக்காடு கலவரம் இன்றைக்கும் ஆறாத வடுவாக நீடிக்கிறது. இந்த நிலையில்தான் மத்திய அரசு குளச்சல் அருகே உள்ள இணையத்தில் வர்த்தக துறைமுகம் கட்ட நடவடிக்கை எடுத்தது. அதற்கு மீனவர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து, கன்னியாகுமரியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவளத்தில் துறைமுகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதிலும் பா.ஜ.க.வின் மிகப்பெரிய சதி இருப்பதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.

Advertisment

இந்தத் திட்டத்தைப் பற்றி கோவளம் பங்குத் தந்தை பிரபுதாஸ் நம்மிடம் பேசினார்...

""துறைமுகத் திட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த மாவட்ட

துறைமுகத்துக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தை குறிவைத்து, மீண்டும் ஒரு மதக்கலவரத்துக்கு அடித்தளம் போடப்படுவதாக குமரி மாவட்ட மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.

Advertisment

kanyakumari-tension

1982-ஆம் ஆண்டு மீனவர்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மண்டைக்காடு கலவரம் இன்றைக்கும் ஆறாத வடுவாக நீடிக்கிறது. இந்த நிலையில்தான் மத்திய அரசு குளச்சல் அருகே உள்ள இணையத்தில் வர்த்தக துறைமுகம் கட்ட நடவடிக்கை எடுத்தது. அதற்கு மீனவர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து, கன்னியாகுமரியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவளத்தில் துறைமுகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதிலும் பா.ஜ.க.வின் மிகப்பெரிய சதி இருப்பதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.

Advertisment

இந்தத் திட்டத்தைப் பற்றி கோவளம் பங்குத் தந்தை பிரபுதாஸ் நம்மிடம் பேசினார்...

""துறைமுகத் திட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த மாவட்டத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சுடுகாடாக்க நினைக்கிறார். மொத்தத்தில் அது துறைமுகமே அல்ல, வெறும் சரக்குப் பெட்டகங்களை மாற்றும் முனையம்தான். இதைக் கொண்டுவருவதால் மாவட்டத்துக்கு எந்த வளர்ச்சியும் கிடைக்காது. பதிலாக மீனவர்கள் வாழ்க்கையும், குடியிருப்புகளும், விவசாய நிலங்களும், இயற்கை நிலங்களும் பாழ்படும்.

19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கோவளத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள துறைமுகத்துக்காக 6 கி.மீ. தூரத்துக்கு கடல் மேடுபடுத்தப்படும். இதற்காக ராமாயணத்தில் அனுமன் தூக்கி வந்து இறக்கி வைத்ததாக கூறப்படும் புனிதமான மருந்து மலை முழுமையாக அழிக்கப்படும்.

36 கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுடன் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளி வாசல்கள், 25-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களும் இடிக்கப்படும். பிரதான மணக்குடி காயலும் நிரப்பப்படும்.

துறைமுகம் கட்டுமானத்திற்கு நீர்நிலைகள் பயன்படுத்தப்படும் என்பதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும். மின் தேவைக்காக 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட அனல் மின்நிலையம் அமைக்கப்படும். அதிலிருந்து வெளிப்படும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசுபடும். இதெல்லாம் தெரிந்தும், பொன்.ராதாகிருஷ்ணன் தனது தேர்தல் ஆதாயத்துக்காக இதில் தீவிரம் காட்டுகிறார்.

velpandiராமர் பாலம் என்று சொல்லி, சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்திய இவர்கள், கடலை மேடுபடுத்த அனுமான் தூக்கி வந்த மலையாக கருதப்படும் மருந்துவாழ் மலையை உடைக்கப் போகிறார்களா?

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். கூடன்குளத்திலும் இதைத்தான் சொன்னார்கள். நடந்ததா? பக்கத்தில் இருக்கிற தூத்துக்குடியில் 400 பேர்தான் வேலை செய்கிறார்கள். பா.ஜ.க வினருக்கு கமிஷன் தேவையென்றால் இந்த நிதியை கொண்டு தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யலாமே. அதை விட்டுவிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தை கலவர பூமியாக்க தேவையில்லை. இங்கிருந்து திட்டத்தை துரத்தும்வரை போராடுவோம்'' என்றார் உறுதியாக. இப்படி வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய சிக்கல்கள் எழுவதால் பதட்டம் நீடிக்கிறது.

பா.ஜ.க.வின் முன்னாள் மாவட்டத் தலைவரும் துறைமுக ஆதரவு இயக்க தலைவருமான வேல்பாண்டியனிடம் பேசினோம்...

""இணையத்தில் துறைமுகம் கொண்டுவரத் திட்டமிட்டபோது, அது குடியிருப்பு பகுதியாகவும் சர்ச்சுகளும் பள்ளிவாசல்களும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என்றும் மீனவர்கள் தடுத்தனர். ஆனால், கோவளத்தில் எந்த குடியிருப்பும் இல்லை. இங்கும் தடுத்தால் மாவட்டம் எப்படி வளர்ச்சி அடையும். இதையெல்லாம் தூண்டி விடுவதே பாதிரியார்கள்தான்'' என்றார் காட்டமாக.

இது குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்...

pon-radhakrishnan""குமரி மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையும் கிடையாது. இந்த திட்டத்தினால் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மீனவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். திட்டஆய்வுக்குப் போன மாவட்ட கலெக்டரை சிறைப்பிடித்து மிரட்டியிருக்கிறார்கள். என்ன போராட்டம் நடத்தினாலும் வர்த்தக துறைமுகம் அங்கு வந்தே தீரும்'' என்றார்.

சமூக ஆர்வலர் டாக்டர் லால்மோகனிடம் கேட்டபோது... ""மத்திய அரசின் இந்தத் திட்டத்தால் பாதிப்பே தவிர பலன் இல்லை. மக்கள் கேட்காத மக்கள் ஒதுக்குகிற திட்டத்தை அரசு ஏன் திணிக்கிறது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மக்கள் காலங்காலமாக ரப்பர் தொழிற்சாலை, தேங்காய் தொண்டில் இருந்து கயிறு திரிக்கும் தொழிற்சாலைகளை கேட்கிறார்கள். அதுபோல ஒரு திட்டத்தை ஏன் பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை'' என்கிறார்.

""துறைமுக ஆதரவுப் போராட்டம், எதிர்ப்புப் போராட்டம் என நாளுக்குநாள் பதட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினை, மதக்கலவரமாக வெடித்துவிடக்கூடாது. அதை எதிர்கொள்ளும் சக்தி இல்லை'' என்கிறார்கள் குமரி மக்கள்.

kanyakumartension
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe