நோய் நொடி 100% வருகிறது அமெரிக்க சிக்கன்! -அழிவில் தமிழக கோழிப்பண்ணைகள்!

chicken

லகமயம், தாராளமயம் என கட்டவிழ்த்துவிடப்பட்ட வணிகச்சந்தை அமெரிக்காவின் ஆதிக்க கரத்தின் பிடிக்குள் போய்விட்டது. இதன் அடுத்த இலக்கு, தமிழகத்தின் கோழிப்பண்ணைகள். இதற்குக் காரணம், உலக வர்த்தக அமைப்புடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தம்தான்.

பிராய்லர் கோழிகளில் இரண்டு வகை. ஒன்று முட்டைக்கோழி, மற்றொன்று கறிக்கோழி. இதன் உற்பத்தி என்பது நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில்தான் அதிகம். தமிழகத்தில் சுமார் முப்பத்தி ஐயாயிரம் கோழிப்பண்ணைகள் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு கோடி கறிக்கோழிகள் (ஒரு கோழி இரண்டு கிலோ) என இரண்டு கோடி கிலோ விற்பனையாகிறது. இத்தொழிலில் நேரிடையாக மூன்று லட்சம் பேரும் மறைமுகமாக 12 லட்சம் பேரும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவை மட்டுமல்லாது விவசாயமும் இதன் துணைத்தொழிலாக உள்ளது. மக்காச்சோளம், சோயா, சூரியகாந்தி, கடலைப்புண்ணாக்கு இவைகள்தான் கோழிக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன. இவையனைத்தும் விவசாயத்தின் உற்பத்திப் பொருட்கள். இரண்

லகமயம், தாராளமயம் என கட்டவிழ்த்துவிடப்பட்ட வணிகச்சந்தை அமெரிக்காவின் ஆதிக்க கரத்தின் பிடிக்குள் போய்விட்டது. இதன் அடுத்த இலக்கு, தமிழகத்தின் கோழிப்பண்ணைகள். இதற்குக் காரணம், உலக வர்த்தக அமைப்புடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தம்தான்.

பிராய்லர் கோழிகளில் இரண்டு வகை. ஒன்று முட்டைக்கோழி, மற்றொன்று கறிக்கோழி. இதன் உற்பத்தி என்பது நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில்தான் அதிகம். தமிழகத்தில் சுமார் முப்பத்தி ஐயாயிரம் கோழிப்பண்ணைகள் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு கோடி கறிக்கோழிகள் (ஒரு கோழி இரண்டு கிலோ) என இரண்டு கோடி கிலோ விற்பனையாகிறது. இத்தொழிலில் நேரிடையாக மூன்று லட்சம் பேரும் மறைமுகமாக 12 லட்சம் பேரும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவை மட்டுமல்லாது விவசாயமும் இதன் துணைத்தொழிலாக உள்ளது. மக்காச்சோளம், சோயா, சூரியகாந்தி, கடலைப்புண்ணாக்கு இவைகள்தான் கோழிக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன. இவையனைத்தும் விவசாயத்தின் உற்பத்திப் பொருட்கள். இரண்டு கிலோ கோழிக்கு நான்கு கிலோ தீவனம் கொடுக்கப்பட வேண்டும். ஆக, நான்கு கோடி கிலோ தீவனம் ஒவ்வொருநாளும் விவசாயத்தின் மூலம் செல்கிறது. இவை எல்லாவற்றையும் அழிக்கும் கோரப்பற்களாக அமெரிக்கா மாறியுள்ளது என்ற அபாயச்சங்கு தமிழக கோழிப்பண்ணைகளில் எதிரொலிக்கிறது.

chicken

ஆம், இனி தமிழக கோழிகளுக்குப் பதில் அமெரிக்க கோழிகள், கறிக்கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளன என்பதுதான் எச்சரிக்கை மணி. "மத்திய பா.ஜ.க. அரசும் அமெரிக்காவின் இறக்குமதிக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது' என்கிறார்கள் கோழிப்பண்ணை நிறுவனத்தினர்.

நம்மிடம் விரிவாகப் பேசினார் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளரான வாங்கிலி சுப்பிரமணியம். ""பிராய்லர் கோழி உற்பத்தித்தொழிலில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமல்லாது ம.பி., உ.பி., பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இந்தத் தொழில் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழிகள் 90% நம் மக்களுக்குத்தான் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா கோழி வந்தால் அதன் பாதிப்பு நமது தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் இருக்கும்.

ஒருபுறம் தொழிலையும் அதை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தையும் பறிப்பது என்றால், மறுபுறம் அந்த அமெரிக்க கோழியைச் சாப்பிடும் மக்களுக்கு கொடுமையான நோயை கொடுப்பதும் ஆகும். இங்கு நாம் கோழிக்குக் கொடுக்கும் தீவனம், நம் மண்ணில் விளையும் பயிர்கள்தான். ஆனால் அமெரிக்க கோழிகளோ மரபணு மாற்றப்பட்ட சோயா மற்றும் ஊசி மூலம் கொடுக்கப்படும் தீவனத்தால் வளர்கின்றன. நம் நாட்டில் மரபணு மாற்றப்பட்ட சோயா பீன்ஸுக்கு தடை உள்ளது. ஆனால் அந்தத் தீவனத்தைத்தான் அமெரிக்கா தனது கோழிகளுக்குத் தீவனமாகத் தருகிறது. மரபணு மாற்றப் பயிர்களால் நோய் வரும் என்று தடை செய்துள்ள நமது அரசு, அதே நோயை அமெரிக்காக்காரன் கொடுப்பதற்கு தலையாட்டி வரவேற்பது அநியாயமில்லையா?

அமெரிக்காக்காரன் முழுக்கோழியை இங்கு இறக்குமதி செய்யவில்லை. கோழியின் கால் மற்றும் தொடைப்பகுதியான லெக் பீஸைத்தான் இறக்குமதி செய்யவுள்ளான். அந்த லெக்பீஸ் என்பது அமெரிக்காவில் "வேஸ்ட் இறைச்சி'யாக உள்ளது. அங்குள்ள மக்கள் இந்த லெக்பீஸை சாப்பிட மாட்டார்கள். காரணம், தொடைப் பகுதியில் போடப்படும் ஊசி மூலம்தான் அந்தக் கோழியே வளர்கிறது. அப்படிப்பட்ட அந்த லெக்பீஸைத்தான் அவன் இங்கு இறக்குமதி செய்கிறான். அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? எல்லாம் 6, 7 வருட ஸ்டாக்காக உள்ள லெக்பீஸ்கள். அவன் நாட்டில் அது கழிவுப்பொருள். அதுவே நம் நாட்டின் உணவுப் பொருளாம். இதற்காகவே அவன் 50 லட்சம் டன் லெக்பீஸ்களை ஏழாண்டுகளாக பதப்படுத்தி வைத்துள்ளான்.

subramaniyamநாங்கள் முன்பு, மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிடம் போய் பேசினோம். "அமெரிக்க இறக்குமதி என்பது அரசின் பாலிசி மேட்டர், அதை தடுக்க முடியாது' என்று கூறிவிட்டார். ஆனால் இறக்குமதிக்கு இருநூறு அல்லது முன்னூறு சதம் வரி போட்டால் கூடுதல் விலையாகிவிடும். இங்கு அந்தக் கோழிகளை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க மாட்டார்கள் என்ற கருத்தை நாங்கள் கூறினோம்'' என்றார்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இறக்குமதி கொள்கையில் உணவுப் பொருளில் கவனமாக இருந்தது. இப்போது எல்லா வாசலையும் மோடி அரசு திறந்து வைத்துவிட்டது. அமெரிக்க கோழிக்கு அதிக வரி போட்டாலும்கூட அவன் மலிவு விலையில் நமது மக்களை சாப்பிட வைப்பான். நாளாக நாளாக நமது உற்பத்தியும் தொழிலும் முடங்கும்... தொடர்ந்து அழியும். அதனால் உண்டாகும் நோய்க்கும் அவனே மருந்து இறக்குமதி செய்து கொடுத்து, மனித உயிர்களை வணிகப்பொருளாக மாற்றுவான். இது பேராபத்து'' என அதிர்ச்சியோடு கூறுகிறார்கள் நாமக்கல் கோழி உற்பத்தியாளர்கள்.

ஏற்கனவே பல பிராண்டுகள் மூலம் பிராய்லர் சிக்கன் வகைகள் குழந்தைகளுக்கும், நடுத்தர வயதினருக்கும் தவிர்க்க முடியாத இறைச்சி உணவாக உள்ளது. அமெரிக்க லெக் பீஸ் டேஸ்ட்டும் மக்களின் ஈர்ப்பாக மாறும் ஒரு காலத்தில் இந்த இறைச்சி உணவின் மூலம் இந்தியாவில் மனித இறப்பும் கூடுதலாகும் அபாயம் உள்ளது.

-ஜீவாதங்கவேல்

chicken
இதையும் படியுங்கள்
Subscribe