Advertisment

நம்ம பெயரைச் சொல்லியிருப்பாரோ... -பயத்தில் கோவை பல்கலை ஊழியர்கள்

kovai-vc

மிழக பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்த விசாரணைக்கு பிள்ளையார் சுழியாய் அமைந்திருக்கிறது, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் அதிரடி கைது.

Advertisment

லஞ்ச ஒழிப்புத் துறையின் வளையத்திலிருக்கும் கணபதி, தனக்கு உதவியாக இருந்தவர்களின் பெயர்களை விசாரணையின்போது தெரிவித்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதால் பல்கலைக்கழகத்தில் பலருக்குள்ளும் ஒரு மெல்லிய நடுக்கம் எழுந்திருக்கிறது.

Advertisment

kovai-vc

துணைவேந்தர் கணபதிக்குக்கீழ் இயங்கக்கூடிய அந்த நெட்வொர்க் பற்றி பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம். தங்கள் பெயர் வேண்டாமென்ற நிபந்தனையுடன் பேராசிரியர்கள் சிலர் பேசத் தொடங்கினர்.

""பல்கலைக்கழக கல்வித்துறையின் தலைவராக இருக்கக்கூடியவர் சிங்காரவேலன். இவர் துணைவேந்தரின் தனிப்பட்ட ஆலோசகர்போல செயல்பட்டு வந்திருக்கிறார். தனது துறையில் இருப்பதைவிட துணைவேந்தரின் அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தவர். இவர்மீது முன்னரே பி.எட். சேர்க்கையில் முறைகேடு செய்தார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும், சிண்டிகேட்டில் எப்படி உறுப்பினராக பொறுப்பு வழங்கினார்களென்று கேள்வியெழுப்புகிறார்கள்.

professor-darmarajதுணைவேந்தரிடம

professor-darmarajதுணைவேந்தரிடம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவரான கபில்தேவ், பல்கலைக்கழகத்தில் ஒதுக்கப்படக்கூடிய வெவ்வேறு துறைகளின் நியமனத்தில் கிடைக்கக்கூடிய பணத்தை வசூல்செய்யும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர் தலைமையில்தான் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றிருக்கிறது.

துணைவேந்தரின் தனிச் செயலாளர் சுல்தான்பேகம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பதவியில் இருந்துவருகிறார். மேலும் பல்வேறு விஷயங்களில் துணைவேந்தருக்கு ஆலோசனை வழங்கக்கூடியவராக இருந்திருக்கிறார். வசூலிக்கவேண்டிய தொகை, குறிப்புகளை பென்சிலில் எழுதிக்கொடுத்த முன்னெச்சரிக்கை, காப்பு மாட்டுவதிலிருந்து இவரைக் காப்பாற்றியிருக்கிறது.

ஃபிசிகல் டிபார்ட்மெண்ட்டில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தவர் அன்பழகன். அப்போதே பொறுப்பு அடிப்படையில் பி.ஆர்.ஓ. பதவி கொடுக்கப்பட்டது. தற்போது இணைப் பேராசிரியராக இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பி.ஆர்.ஓ.வாக இருக்கிறார். பல்கலைக்கழக வாகனத்தைப் பயன்படுத்தி மதுரை சென்று வசூல் செய்தபோது வசமாக சிக்கியவர்.

கம்ப்யூட்டர் துறையில் பேராசிரியராக இருப்பவர் தேவி. கடந்த 10 ஆண்டுகளாக டெண்டர் விடாமல் தொடர்ந்து ஒரே நிறுவனத்திடமிருந்து கணினி வாங்கியிருக்கிறார். இவர் தற்போது பதிவாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

kovaiபல்கலை விதிகளின்படி மூத்த பேராசிரியர்களுக்குத்தான் பதிவாளர் பணி கொடுக்கவேண்டும். அதை மீறி மோகன் என்பவருக்கு பதிவாளர் பணி கொடுக்கப்பட்டது. பின்னர் நியமனத்தில் பிரச்சனை ஏற்பட்டு பதவி விலகினார். தற்போது வனிதா என்பவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. விதிகளின்படி ஒரு வருடத்திற்கு மட்டுமே இந்தப் பொறுப்பில் இருக்கமுடியும். ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாக அந்தப் பதவியில் தொடர்கிறார் வனிதா. அதேபோல, பேராசிரியர் ஜெயகுமார்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்க, நியமனக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.

தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் தர்மராஜுக்கு அண்மையில் ஹாஸ்டல் மூத்த வார்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்டப்பஞ்சாயத்து மற்றும் வசூலில் இவர் காட்டிய அர்ப்பணிப்புக்குக் கொடுக்கப்பட்ட பரிசுதான் இந்தப் பதவி என்கிறார்கள். தமிழ்த்துறை தலைவரும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை இயக்குநருமான ஞானசேகரன், பிஹெச்.டி.க்கு வரும் மாணவர்களிடம் தலா 5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுவந்திருக்கிறார்.

சிண்டிகேட் உறுப்பினர்கள் சிங்காரவேலன், சரவணசெல்வன், பதிவாளர் வனிதா, விலங்கியல் துறை உதவிப்பேராசிரியர் ராமசுப்பிரமணியம், துணைவேந்தரின் உறவினரான கணிதத்துறை பேராசிரியர் ஜெயராமன், நான்-டீச்சிங் அசோசியேசன் பொதுச்செயலாளர் சிவகுமார், இணைப்புக் கல்லூரி முதல்வர்கள் வடிவேலு, ரமேஷ் என ஊழலுக்குத் துணைபோனவர்கள் பட்டியல் நீள்கிறது.

பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை வெளியில் கொண்டுவந்த காரணத்திற்காக செல்வம் என்ற பேராசிரியருக்கு சம்பளக் குறைப்பு, பணி உயர்வு ரத்து என கணபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதற்கு பல பேராசிரியர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர்களைத் தொடர்புகொண்டோம். சிலர் தங்கள்மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது என மறுக்க, இன்னும் சிலரோ அழைப்பை ஏற்காமல் தொடர்ந்து புறக்கணித்தார்கள்.

14-02-18 அன்று, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் சுனில்பாலிவால், நிலுவையில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார்.

பல்கலைக்கழக செயல்பாடுகள் பற்றிகேட்டபோது, ""சிண்டிகேட் உறுப்பினர்களை மாற்ற வழிமுறைகள் இல்லை, அவர்களை மாற்ற வேண்டிய தேவையும் ஏற்படவில்லை. தகுதியான நபரை துணைவேந்தராக நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்பிறகு பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணி நியமனங்கள் குறித்த முறையான விசாரணைகள் நடக்கின்றன'' என்றார் சுனில்பாலிவால்.

-சி.ஜீவாபாரதி

"சூசைடு பண்ணிக்குவேன்' -காவல்துறையை மிரட்டும் தூ... வேந்தர்!

துணைவேந்தர் கணபதியை, 5 நாள் காவலில்வைத்து விசாரிக்க கோவை கோர்ட் அனுமதித்தது. கவுண்டம்பாளையம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட அவரிடம் மெதுவாக விசாரணையைத் தொடங்கியிருக்கிறது காவல்துறை. பல்கலைக்கழகத்தில் உள்ள கிரிஜா, தர்மராஜ், மதிவாணன் பெயர்களைத் தொடர்புபடுத்தி என்னதான் சுற்றிவளைத்துக் கேட்டபோதும், ""நான் யோக்கியமானவன். லஞ்சம் வாங்கவேயில்லை'' என சாதிக்கும் கணபதி, ""என்னைத் துன்புறுத்தி விசாரிக்க நினைத்தால் தற்கொலை செய்துகொள்வேன். அதற்குமுன், காவல்துறைதான் காரணமென என்னோட லாயர் ஞானபாரதிக்கு கடிதம் அனுப்பிவிடுவேன்'' என மிரட்டியிருக்கிறார் தூ... வேந்தர். இதனால் விசாரணை மேற்கொண்டு நகராமல் தவிக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

-அருள்குமார்

kovai VC corruption
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe