Advertisment

இளம்பெண்ணை ஏமாற்றிய எம்.பி. மகன்!-பிசினஸ் பார்ட்னரா? லைஃப் பார்ட்னரா?

mpson

டுத்தெருவில் கதறியபடி நின்றார் அந்த இளம்பெண். அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜாவின் மகன் நாசர்அலியின் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக பெரும்பாடுபட்ட ரேடியோ ஜாக்கி பிரபுல்லா சுபாஷ் என்ற ரொபினா.

Advertisment

mpson

""அவன் என்னை ஏமாற்றிவிட்டான். மூணு வருஷத்துக்கு முன்னாடி அவனும் நானும் சைதாப்பேட்டை விக்னேஷ் காலனியில இருக்கிற என் வீட்ல கல்யாணம் பண்ணிக்கிறாமலே சேர்ந்து வாழ ஆரம்பிச்சோம். அவனோட ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் என் வீட்டு அட்ரஸ்தான். அவனுக்காகத்

டுத்தெருவில் கதறியபடி நின்றார் அந்த இளம்பெண். அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜாவின் மகன் நாசர்அலியின் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக பெரும்பாடுபட்ட ரேடியோ ஜாக்கி பிரபுல்லா சுபாஷ் என்ற ரொபினா.

Advertisment

mpson

""அவன் என்னை ஏமாற்றிவிட்டான். மூணு வருஷத்துக்கு முன்னாடி அவனும் நானும் சைதாப்பேட்டை விக்னேஷ் காலனியில இருக்கிற என் வீட்ல கல்யாணம் பண்ணிக்கிறாமலே சேர்ந்து வாழ ஆரம்பிச்சோம். அவனோட ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் என் வீட்டு அட்ரஸ்தான். அவனுக்காகத்தான் மதம் மாறினேன். என்னோட நகை, பணம்னு 50 லட்சத்தை பறிச்சிக்கிட்டான். 6 மாதம் முன்னே தற்செயலா அவனோட மொபைல்ல எடுத்துப் பார்த்தேன். அதில் பல பெண்களோட நெருக்கமா இருக்கிற படங்கள். சண்டை போட்டேன். உடனே வெளியே போய்ட்டார். கல்யாணம்னு கேள்விப்பட்டு காரைக்குடி வந்தேன். இராமநாதபுரம் போகச் சொல்கிறார்கள்'' என்றபடி ராமநாதபுரம் பனைக்குளத்தில் உள்ள ஜமாத்துக்குச் சென்றார் ரொபீனா.

அதுதான் அன்வர்ராஜாவின் பங்கிற்கு உரிய ஜமாத்.

""தாராளமாக திருமணம் செய்து கொடுக்கலாம்னு காரைக்குடி பெண் வீட்டார் ஜமாத்துக்குக் கடிதம் கொடுத்து விட்டோம். எங்களால் இனி திருமணத்தை தடுக்க முடியாது. காரைக்குடி ஜமாத்துக்குப் போம்மா'' ரொபீனாவை திருப்பி அனுப்பினார்கள்.

Advertisment

mpson

ஞாயிறு காலை, காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்தார் ரொபீனா. பள்ளிவாசல் சுவரில் முட்டிக்கொண்டு கதறினார். அங்குள்ள ஜமாத்காரர்கள் பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் அழைப்பு விடுத்தனர். பெண்ணின் தந்தை வந்தார். மாப்பிள்ளையின் தந்தை எம்.பி. அன்வர்ராஜா வரவில்லை.

""எங்கள் ஜமாத்தில் இருந்து நாங்கள் கல்யாணம் நடத்தி வைக்கவில்லை'' நழுவிக் கொண்டது காரைக்குடி ஜமாத்.

அப்படியானால் நாசரின் திருமணம் எங்கேதான் நடக்கிறது.

""தாப்பா ஹோட்டலில் அவர்கள் திருமணம் நடக்கப் போகிறது'' என்ற தகவல் கிடைத்தது. தாப்பா ஹோட்டலுக்கு விரைந்தார் ரொபினா. வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று ரகளை செய்தார்.

anwar-raja-mp

அங்கு வந்த போலீசார் ""ஸ்டேஷனுக்கு வாங்க, புகார் கொடுங்க. அப்புறம் ஊருக்குக் கிளம்புங்க. நாங்க உங்களுக்கு உற்ற துணையாக இருப்போம்'' அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்த போலீசார் ரொபீனாவை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.பி.யின் மகன் நாசருக்கு போன் செய்தோம். போனை அட்டர்ன் செய்த நபர் நம்மிடம், ""நாசருக்கும் ரொபீனாவுக்கும் திருமணம் நடந்ததே இல்லை. அந்தப் பெண் நாசரின் பிஸ்னஸ் பார்ட்னர். அவ்வளவுதான். பணத்திற்காக நாடகம் போடுகிறார்'' என்றார்.

எம்.பி. அன்வர்ராஜாவோ ""என்கிட்ட இருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறாங்க... போனை வைங்க'' லைனை கட் செய்தார்.

வாழ்க்கை விவகாரத்தை அவ்வளவு எளிதாக "கட்'பண்ண முடியுமா?

MP son
இதையும் படியுங்கள்
Subscribe