மனித உயிர்களை வதைக்கும் ஆதிக்க உணர்வு!

sirya

ரை கிலோ அரிசி திருடியதாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனை அடித்துக் கொன்று செல்ஃபி எடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

வெறும் 14 செண்ட் நிலத்துக்காக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கைம்பெண்ணையும், அவளுடைய குழந்தைகளையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்தி குதூகலிக்கிறது ஒரு கூட்டம்.

ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளையும் கொன்றுகுவித்து, தங்கள் அதிகார வெறியை பறைசாற்றுகிறது ஒரு கூட்டம்.

ஒன்று கேரளாவில் நடக்கிறது. இன்னொன்று தமிழ்நாட்டில் நடக்கிறது. மற்றொன்றோ சிரியாவில் நடக்கிறது.

கேரள மாநிலம் -பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் காலனிகளில் ஒன்று முக்காலி. இந்தக் காலனியைச் சேர்ந்த 27 வயது மது, சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு வனப்பகுதியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். பசிக்காக ஊருக்குள் வந்து உணவைக் கேட்டு வாங்கி சாப்பிடுவது இவருடைய வழக்கம். பிறர்

ரை கிலோ அரிசி திருடியதாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனை அடித்துக் கொன்று செல்ஃபி எடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

வெறும் 14 செண்ட் நிலத்துக்காக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கைம்பெண்ணையும், அவளுடைய குழந்தைகளையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்தி குதூகலிக்கிறது ஒரு கூட்டம்.

ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளையும் கொன்றுகுவித்து, தங்கள் அதிகார வெறியை பறைசாற்றுகிறது ஒரு கூட்டம்.

ஒன்று கேரளாவில் நடக்கிறது. இன்னொன்று தமிழ்நாட்டில் நடக்கிறது. மற்றொன்றோ சிரியாவில் நடக்கிறது.

கேரள மாநிலம் -பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் காலனிகளில் ஒன்று முக்காலி. இந்தக் காலனியைச் சேர்ந்த 27 வயது மது, சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு வனப்பகுதியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். பசிக்காக ஊருக்குள் வந்து உணவைக் கேட்டு வாங்கி சாப்பிடுவது இவருடைய வழக்கம். பிறர் கொடுக்கும் பொருட்களில் மிச்சம் இருப்பதை ஒரு பையில் போட்டு வைத்திருந்திருக்கிறார்.

அவருடைய பையை சோதனையிட்ட ஒரு கும்பல் உணவுப் பொருட்களைத் திருடியதாக கூறி கட்டிவைத்து மிருகத்தனமாக அடித்து உதைத்து தங்கள் வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

murder

கேரளாவில் அப்படியென்றால், தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் நடந்ததோ கொடூரமான ஆணவத் திமிரின் வெளிப்பாடாக இருக்கிறது. வேலம்புதூர் என்ற கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் வசித்தவர் ஆராயி. கணவனை இழந்த இவருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு மகன்கள் வெளியூரில் வேலை செய்த நிலையில், ஆராயி தனது 14 வயது மகள், 8 வயது மகனுடன் வசித்து வந்தார்.

கடந்த 22-ஆம் தேதி இரவு ஒரு கும்பல் ஆராயி வீட்டுக்குள் புகுந்திருக்கிறது. 8 வயது சிறுவன் தமயனை அடித்து, முகத்தை சிதைத்து கொன்றிருக்கிறது. பின்னர் ஆராயியையும் 14 வயது சிறுமி தனத்தையும் பாலியல் வன்புணர்வு செய்து குற்றுயிரும் குலையுயிருமாக விட்டுச் சென்றிருக்கிறது. "ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆராயி குடும்பம் மீது ஆதிக்க சாதி வெறி துணையுடன் இந்தக் கொடூரம் நடந்துள்ளது' என்கிறார்கள்.

ஆராயிக்குச் சொந்தமான 14 செண்ட் நிலத்துக்காக இந்த கொடுமை அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுமியின் உறுப்பில் 13 தையல்கள் இடப்பட்டிருப்பதாக வெளியான செய்தி மனிதநேயமிக்க நெஞ்சங்களை கலங்கடிக்கிறது.

இவை இரண்டும் ஆதிக்க சாதியினரின் வெறித்தனத்தை வெளிப்படுத்துகின்றன என்றால், சிரியாவில் நடப்பதோ வல்லாதிக்க அரசுகளின் ஏகாதிபத்திய வெறிக்கு சாட்சியாக அமைந்துள்ளது.

சிரியாவை அலவைட் என்ற இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த அல் பஷர் ஆசாத் என்பவர் ஆட்சி செய்கிறார். தந்தையும் மகனுமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியை கையில் வைத்திருக்கிறார்கள். இது அந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழும் ஸன்னி முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு காரணமாகியது. எகிப்து, லிபியா, துனிஷியா போன்ற நாடுகளில் தொடர் எதிர்ப்பு காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த சமயம். சிரியாவிலும் அதே பாணியில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

சிரியாவை ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து விலக்கி, அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாற்ற, அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அதற்காகவே போராட்டத்தை தீவிரப்படுத்தின. ஆனால், அதிபர் ஆசாத் போராட்டத்தை ஒடுக்குவதில் கவனம் செலுத்தினார். இது உள்நாட்டுப் போராக மாறியது. சிரியாவின் அரசுப் படைகளுக்கு ரஷ்யாவும், கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் ஆயுத உதவி செய்யத் தொடங்கின.

ஸன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும், அந்த பகுதிகளை மீட்பதற்காக அவற்றை வான் தாக்குதல் மூலம் தகர்ப்பதும் தொடர்கதை ஆகிவிட்டன.

பதவியைக் காப்பாற்றுவதற்காக பிஞ்சுக் குழந்தைகளை சிரியா அரசு கொன்று குவிக்கிறது. இதயத்தை கிழிக்கும் புகைப்படங்கள் வெளியாகி, ரத்தக்கண்ணீரை வரவைக்கின்றன. பச்சிளம் குழந்தைகளை ஈவிரக்கமின்றி பலிகொடுக்கும் அளவுக்கு இந்தப் போரை தொடர்ந்து நடத்தி அரசும் கிளர்ச்சியாளர்களும் சாதிக்கப் போவது என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

மொத்தத்தில் அடுத்தடுத்து வெளியான மூன்றுவிதமான படுகொலைகளின் பின்னணியிலும் மனிதன் தனது ஆதிக்க வெறியை வெளிப்படுத்தும் நோக்கமே முக்கியமாக இருக்கிறது.

ஆதிக்கவெறி என்பது சிறு குழுவினரிடம் மட்டுமே இருக்கிறது. அந்தக் குழுவின் வெறித்தனத்தை மனிதநேயம் மிக்க பெரும்பான்மையோர் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கும் நிலைதான் கேவலமாக இருக்கிறது.

இந்த மூன்று சம்பவங்களுக்கும் அதனதன் அளவில் எழுந்துள்ள எதிர்ப்பு அலை, மனித உரிமை மீதான நம்பிக்கையைக் காப்பாற்றுகிறது.

-ஆதனூர் சோழன்

இதையும் படியுங்கள்
Subscribe