Advertisment

உயிரைப் பறித்த மலைத் தீ! பவர்ஃபுல் குடும்பம் பின்னணியா?

mountainfire

குரங்கணி கொடூரத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் தமிழகம் விடுபடவில்லை. வெள்ளிவரை உயிர்ப்பலியின் எண்ணிக்கை 16 என உயர்ந்தது.

Advertisment

இந்த திடீர்க் காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? நடந்தது விபத்தா? சதியா? என்றெல்லாம் கலங்கிய மனதோடு பலரும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில்... இது முழுக்க முழுக்க சதிதான் என புகார் வாசிக்கிறார்கள், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் குழுவினர்.

Advertisment

mountainfire

""காட்டுத் தீ என்பது புதிது அல்ல. கோடைக் காலத்தில் வனப் பகுதியில் தீ பிடிப்பது இயற்கைதான். சில நேரம் சிலர் தீ வைப்பதும் உண்டு. இந்தமுறை உயிர்ப்பலிகள் ஏற்பட்டதால், இது மக்களின் கவனத்துக்கு வந்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் வனத்தில் உள்ள மரத்தை திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துக்கொண்டு, அந்தப் பகுதியில் செயற்கையாகத் தீவிபத்தை ஏற்படுத்தி... அதில் எல்லா மரமும் எரிந்ததாகக் கணக்

குரங்கணி கொடூரத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் தமிழகம் விடுபடவில்லை. வெள்ளிவரை உயிர்ப்பலியின் எண்ணிக்கை 16 என உயர்ந்தது.

Advertisment

இந்த திடீர்க் காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? நடந்தது விபத்தா? சதியா? என்றெல்லாம் கலங்கிய மனதோடு பலரும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில்... இது முழுக்க முழுக்க சதிதான் என புகார் வாசிக்கிறார்கள், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் குழுவினர்.

Advertisment

mountainfire

""காட்டுத் தீ என்பது புதிது அல்ல. கோடைக் காலத்தில் வனப் பகுதியில் தீ பிடிப்பது இயற்கைதான். சில நேரம் சிலர் தீ வைப்பதும் உண்டு. இந்தமுறை உயிர்ப்பலிகள் ஏற்பட்டதால், இது மக்களின் கவனத்துக்கு வந்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் வனத்தில் உள்ள மரத்தை திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துக்கொண்டு, அந்தப் பகுதியில் செயற்கையாகத் தீவிபத்தை ஏற்படுத்தி... அதில் எல்லா மரமும் எரிந்ததாகக் கணக்குக் காட்டிவிடுவார்கள். இப்படிப்பட்ட சதி இப்போதும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அதேபோல் மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்திற்காகவும், இந்த தீவிபத்து செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது''’என்பவர்கள்... மேலும் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

""சுயலாபத்துக்காக மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பவர்ஃபுல் அரசியல் குடும்பத்தினர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நியூட்ரினோ திட்டம், தேனி மாவட்ட பொட்டிபரம்புதூர் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கும் திட்டம். இது ரப்பர் மரங்கள் அடர்ந்திருக்கும் வனப்பகுதி. இந்தத் திட்டத்திற்காக குரங்கணி, கொழுக்குமலை, முட்டம் போன்ற பகுதிகள்வரை நியூட்ரினோ வாய்க்காலை வெட்டத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த வாய்க்கால் அமையவிருக்கும் பகுதியின் இருபுறமும் 2,000 ஏக்கர் நிலத்தை இந்தக் குடும்பம் வளைத்துப் போட்டிருக்கிறதாம். வழியில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர் மக்கள் 5,000 பேரை விரட்டியடிக்கவும் திட்டமிட்டிருக்கிறது. இதையறிந்த வைகோ, சமீபத்தில் அங்கேவந்து அந்த மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இதனால் அந்த பவர்ஃபுல் தரப்பினர் எரிச்சலடைந்தார்கள். எனவே அந்த கம்பளத்து நாயக்கர் மக்களை மிரட்டவும் இந்தத் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

mountain-fireமேகமலை வட்டாரத்தில் கடந்த 15 ஆண்டுகளாக, அங்கிருந்த தேக்கு மரத்தையும், இரும்பு போன்ற அதிக பலம் வாய்ந்த, ஈட்டி மரம் என அழைக்கப்படும் தோடகத்தி மரத்தையும் தொடர்ந்து வெட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

குற்றாலம் மலைப்பகுதியில் திருமலைக்கோவில் பின்பக்கம் உள்ள தோடகத்தி மரங்களையும் இப்போது குறிவைத்திருக்கும் இந்தக் கும்பல், தாங்கள் வைத்திருக்கும் தேக்குமரம் வெட்டும் டெண்டரைக் காட்டியே, தோடகத்தி மரங்களைத் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கவும் திட்டமிட்டிருக்கிறது.

மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தங்களை எதிர்க்கத் தயங்கமாட்டார்கள் என்பதால், அவர்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக... போடி, அகமலை ஏரியாவில் உள்ள கம்பளத்தாரையும், அணைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள பிறன்மலைக் கள்ளர்களையும், குரங்கணி, கொழுக்குமலை, முட்டம் பகுதிகளைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்களையும் பிரித்துவைத்து இந்தக் குடும்பம் அரசியல் செய்துவருகிறது. முதுவாக்குடி என்ற பழங்குடிகள், தெலுங்கும், மலையாளமும் சேர்த்துப் பேசுகிறவர்கள். மன்னார் என்ற பழங்குடிகள் தமிழும், மலையாளமும் சேர்த்துப் பேசுகிறவர்கள். இவர்களது வாழ்வாதாரத்தைக் கெடுத்து, நில ஆக்கிரமிப்பையும் செய்துள்ள குடும்பம் தீ வைத்ததன் பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகமும் மலைமக்களிடம் உள்ளது.

வட்டாரப் பழங்குடிகளான முதுவாக்குடியினரையும், மன்னார்குடியினரையும், வனத்துறை மலையேறும் பயிற்சிக்கு வழிகாட்டிகளாகப் பயன்படுத்தவில்லை. அவர்களைப் பயன்படுத்தியிருந்தால், உயிர்ச் சேதத்தைத் தவிர்த்திருப்பார்கள். இந்தமுறை மலையேறியவர்களுக்கு வழிகாட்டியவர்கள், தீ எரிந்த இடத்தில், சாம்பல் குவிந்திருந்த பகுதி வழியாக அவர்களை போகச் செய்திருக்கிறார்கள். சாம்பலுக்கு அடியில் நெருப்பு இருக்கும் என்ற அறிவுகூட அவர்களுக்கு இல்லை''’என்று தங்கள் ஆதங்கத்தையும் அவர்கள் தெரிவித்தனர்.

குரங்கணி தீ விபத்து சர்ச்சைகள் குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நாம் நேரில் கேட்டபோது...

விவசாயிகள் தீ வைத்ததாகச் சொல்வதையும், ட்ரெக்கிங்கிற்கு வனத்துறை அனுமதி அளித்திருப்பதாகச் சொல்வதையும், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் நடத்திய நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தியதால்தான் மீட்புப்பணி தாமதமாகி உயிர்ப்பலி அதிகமானது என்ற குற்றச்சாட்டையும் அமைச்சர் சீனிவாசன் மறுத்தார்.

-கீரன், சக்தி

mountainfire
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe