ஊழல்களை கண்டறிந்து அதனை அம்பலப்படுத்தி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டிய உயரதிகாரி ஒருவரே லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியிருப்பது அரசு ஊழியர்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் மிரள வைத்திருக்கிறது.
சென்னை -தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்தில் தலைமை கணக்காயராக (அக்கவுண்ட் ஜெனரல்) இருக்கும் அருண்கோயலை லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். அருண்கோயல் பெற்ற லஞ்சத்தில் தொடர்புடைய கஜேந்திரன், சிவலிங்கம், ராஜா ஆகிய மூவரையும் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ.!
அருண்கோயலின் கைது மத்திய-மாநில அரசு அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரித்தபோது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள் கிடைக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன்... ""தேனாம்பேட்டையிலுள்ள அக்கவுண்ட் ஜெனரல் தலைமையகத்தில் 5 அக்கவுண்ட் ஜெனரல்கள் இருக்கிறார்கள். இதில் மாநில கணக்காய்வு தலைவராக இருப்பவர் அருண்கோயல். அரசுத் துறைகளில் செலவிடப்படும் நிதிகளில் ஊழல் நடக்காமல் தடுப்பதுதான் இவரின் முக்கிய கடமை. தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள கோட்ட கணக்காளர் பதவிகளை நிரப்பும் அதிகாரம் அருண்கோயலுக்கு மட்டுமே உண்டு.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் மட்டும் 120 கோட்டங்கள் இருக்கின்றன. கடந்த 2015 ஆகஸ்டில் தமிழகத்தில் இவர் பெறுப்பேற்றதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து கணக்காளர் பதவிகளும் தலா 5 லட்சம் என விலை பேசி விற்கப்பட்டன. லஞ்சம் பெற்றுத் தருவதற்காகவே பொதுப்பணித்துறையில் பென்ஷன் பிரிவில் இருந்த கஜேந்திரன் என்பவரை தமது அலுவலகத்தில் அக்கவுண்ட் ஆஃபிஸராக நியமித்துக்கொண்
ஊழல்களை கண்டறிந்து அதனை அம்பலப்படுத்தி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டிய உயரதிகாரி ஒருவரே லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியிருப்பது அரசு ஊழியர்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் மிரள வைத்திருக்கிறது.
சென்னை -தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்தில் தலைமை கணக்காயராக (அக்கவுண்ட் ஜெனரல்) இருக்கும் அருண்கோயலை லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். அருண்கோயல் பெற்ற லஞ்சத்தில் தொடர்புடைய கஜேந்திரன், சிவலிங்கம், ராஜா ஆகிய மூவரையும் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ.!
அருண்கோயலின் கைது மத்திய-மாநில அரசு அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரித்தபோது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள் கிடைக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன்... ""தேனாம்பேட்டையிலுள்ள அக்கவுண்ட் ஜெனரல் தலைமையகத்தில் 5 அக்கவுண்ட் ஜெனரல்கள் இருக்கிறார்கள். இதில் மாநில கணக்காய்வு தலைவராக இருப்பவர் அருண்கோயல். அரசுத் துறைகளில் செலவிடப்படும் நிதிகளில் ஊழல் நடக்காமல் தடுப்பதுதான் இவரின் முக்கிய கடமை. தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள கோட்ட கணக்காளர் பதவிகளை நிரப்பும் அதிகாரம் அருண்கோயலுக்கு மட்டுமே உண்டு.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் மட்டும் 120 கோட்டங்கள் இருக்கின்றன. கடந்த 2015 ஆகஸ்டில் தமிழகத்தில் இவர் பெறுப்பேற்றதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து கணக்காளர் பதவிகளும் தலா 5 லட்சம் என விலை பேசி விற்கப்பட்டன. லஞ்சம் பெற்றுத் தருவதற்காகவே பொதுப்பணித்துறையில் பென்ஷன் பிரிவில் இருந்த கஜேந்திரன் என்பவரை தமது அலுவலகத்தில் அக்கவுண்ட் ஆஃபிஸராக நியமித்துக்கொண்டார் அருண்கோயல். அவரின் மிகச்சிறந்த புரோக்கராக செயல்பட்டார் கஜேந்திரன்.
"மக்கள் பணத்தின் காவலன்' என அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்திற்கு உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்து வைத்திருக்கிறது நமது அரசமைப்புச் சட்டம். அருண்கோயலின் லஞ்ச விளையாட்டை அறிந்து பிரதமர் மோடி, இந்திய தலைமை தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி.), மத்திய உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ. உள்ளிட்ட உச்சபட்ச அதிகார மையங்களுக்குப் புகார் அனுப்பினோம். நடவடிக்கை இல்லை. பொதுவெளியில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருக்கிறோம். அப்போதும் ஏனோ ஆக்ஷன் எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் ஆக்ஷனில் குதித்திருக்கிறது சி.பி.ஐ.'' என சுட்டிக்காட்டுகிறார்.
டெல்லியிலுள்ள இந்திய கணக்கு மற்றும் ஆய்வுத்தலைவர்தான் (சி.ஏ.ஜி.-கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்) தனது பிரதிநிதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்காய்வுத் தலைவர்களை நியமிக்கிறார். அப்படி தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டவர்தான் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரை சேர்ந்த அருண்கோயல். மத்திய அரசு தரும் நிதியும், தமிழக அரசு ஒதுக்கும் நிதியும் முறையாக செலவிடப்படுகிறதா? செலவிடப்பட்டதா? மக்களுக்கு அதன் பலன்கள் கிடைத்தனவா? நிதி முறைகேடுகள், ஊழல்கள் நடந்திருக்கிறதா? என அனைத்தையும் கண்காணிக்கும் பொறுப்பு அருண்கோயலுக்கு இருக்கிறது. அரசு துறைகள் மற்றும் வாரியங்களின் வரவு-செலவு கணக்குகளை ஒவ்வொரு மாதமும் இவர் ஆடிட் செய்து அறிக்கை தயாரிக்க வேண்டும்.
""சொந்த மாநிலமான ராஜஸ்தானில் பணிபுரிந்தபோதே, இவர்மீது பல்வேறு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் தமிழகத்துக்கு மாற்றப்பட்டார். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சி.ஏ.ஜி. அதிகாரிகளை ஆரம்பத்திலிருந்தே குளிர்வித்து வைத்திருந்ததால் எவ்வித பயமுமில்லாமல் தனது ஊழல் விளையாட்டுகளை தமிழகத்தில் வேகமாக ஆடினார் அருண்கோயல்'' என்கிறார்கள் ஏ.ஜி. அலுவலகத்தினர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, ""வருடத்துக்கு 25 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசமுள்ள பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைகளின் திட்டங்களை செயலாக்கம் செய்ய 200 கோட்டங்கள் தமிழகம் முழுவதும் இருக்கின்றன. இவற்றில், ஒப்பந்ததாரர்களுக்கு (காண்ட்ராக்டர்கள்) பணப் பட்டுவாடா செய்ய பட்டியல்களை சரி பார்ப்பது, கோட்ட அளவில் கணக்குகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை கவனிப்பதற்காக கோட்ட கணக்காளர்கள் உள்ளனர்.
இந்த கோட்ட கணக்காளர்களை நியமிப்பதில் இரண்டு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. பொதுப்பணித்துறையில் கோட்ட கணக்காளர்களை நியமிக்க, ஏ.ஜி.அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை அயல்பணியாக (டெபுடேஷன்) அனுப்பிவைப்பார்கள். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கு அப்படி அல்ல. இங்குள்ள சூப்பிரண்ட்டெண்ட்டுகள், உதவியாளர்களுக்கு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுபவர்கள் கோட்ட கணக்காளராக நியமிக்கப்படுவார்கள். பணப்புழக்கம் அதிகமுள்ள மேற்கண்ட இரண்டு துறைகளிலும் கோட்ட கணக்காளர் பதவிகளை அடைய பல லட்சங்கள் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அந்தளவுக்கு இந்த பதவியில் சம்பாதிக்க முடியுங்கிற நிலை இருக்கிறது. லஞ்சம் கொடுத்து பதவிகளுக்கு வரும் இவர்களுக்கு துறையின் விதிகள், திட்டங்களின் விதிகள், ஒப்பந்தங்களின் ஷரத்துகள் எதுவுமே தெரியாது. ஆனால், திட்டம் மற்றும் ஒப்பந்த மதிப்புகளின்படி தங்களுக்கான கமிஷன் சதவீதம் மட்டும் நன்கு தெரியும். ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள் செய்யும் தில்லுமுல்லுகளையும் நிதி முறைகேடுகளையும் கண்டுகொள்ளாமல் இருக்க ஒப்பந்த தொகையில் 1 சதவீதம் வாங்கிக்கொள்கிறார்கள். இதற்காகவே இப்பதவியை பலரும் குறி வைக்கின்றனர்.
இப்பதவிகளுக்கான தேர்வை நடத்துவது அருண்கோயல்தான். தேர்வில் 5 தாள்கள் உண்டு. ஒரு தாளுக்கு 1 லட்சம் வீதம் 5 லட்சம் கொடுத்து தேர்ச்சி பெறுகின்றனர் கோட்ட கணக்காளர்கள். பணம் கொடுத்தவர்களை மட்டுமே தேர்ச்சி பெற வைப்பார் அருண்கோயல். உதாரணமாக, கடந்த வருடம் 17 கோட்ட கணக்காளர் காலி இடங்களுக்கு தேர்வு நடந்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இதில் 23 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 17 பேரை மட்டும் பதவியில் அமர வைத்தார் அருண்கோயல். மீதி 6 பேர் காத்திருக்கிறார்கள். காலிப்பணியிடம் உருவாக... உருவாக அங்கு அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
ஊழல்களையும் நிதி முறைகேடுகளையும் தடுக்க கோட்டப் பொறியாளர்களுக்கு ஆலோசகர்களாக இருக்கவேண்டிய கோட்ட கணக்காளர்கள், அருண்கோயலுக்கு லஞ்சம் கொடுத்து பதவிக்கு வந்துவிடுவதால் போட்ட முதலீட்டை வட்டியுடன் சேர்த்து வசூலிப்பதில்தான் கவனமாக இருக்கின்றனர். நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைகளில் ஊழல்கள் தலைவிரித்தாடுவதற்கு இவர்கள்தான் காரணம். தார் கொள்முதலில் 1000 கோடியும், புல்லு வெட்ட 1000 கோடியும் ஊழல் நடந்தததற்கு இவர்கள்தான் காரணம். ஆக, இவர்களை உருவாக்கிய அருண்கோயல் மீது சி.ஏ.ஜி.க்கு நெடுஞ்சாலைத் துறையிலிருந்தும் புகார் அனுப்பப்பட்டது. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. புகார்கள் வந்தகாலத்திலேயே முறையான விசாரணையை துவக்கியிருந்தால் அருண்கோயல் எப்போதோ கைது செய்யப்பட்டிருப்பார். ஒரு சிறப்பு தணிக்கைக் குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைத்து நெடுஞ்சாலைத்துறை கணக்குகளை மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தினால், இன்னும் பல ஊழல்கள் வெட்டவெளிச்சமாகும்''’என விவரித்தனர்.
அருண்கோயலின் கைது குறித்து, முன்னாள் அக்கவுண்ட் ஜெனரலான நாகல்சாமியிடம் நாம் விவாதித்தபோது, ""மிக நேர்மையாக இருந்த இந்தத் துறை, அருண்கோயலால் அசிங்கப்பட்டு நிற்கிறது. அவரது கைது, அவரை மட்டும் பாதிக்கவில்லை; "அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல்களை தடுத்து மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்கும் உயரிய அமைப்பு' என பெயரெடுத்த இந்தத் துறையும் சேர்ந்தே பாதிக்கப்பட்டிருக்கிறது. இவர் பணிபுரிந்த அனைத்து இடங்களிலுமே இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. முதன்முறை குற்றச்சாட்டு வந்தபோதே தீர விசாரித்து அதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தால், இன்றைக்கு இந்தத்துறைக்கு இப்படிப்பட்ட அவப்பெயர் வந்திருக்காது. குற்றச்சாட்டுகள் வந்தபோதெல்லாம் மாநிலம் விட்டு மாநிலம் இடமாற்றினார்களே தவிர, சரியான ஆக்ஷன் எடுக்கவில்லை. தமிழகத்தில் இவர் பொறுப்பேற்ற 2015 ஆகஸ்டிலிருந்து இவரால் போடப்பட்ட நியமனங்களையும், ஏ.ஜி. அலுவலகத்தில் எடுத்த நடவடிக்கைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் இன்னும் பெரிய பூதங்களெல்லாம் கிளம்பும்''’என்கிறார் அழுத்தமாக.
அருண்கோயலின் ஊழல்களுக்கு எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்தேன் என்பதை பற்றி சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் அருணின் புரோக்கர் கஜேந்திரன். அதேபோல, தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆடிட்டிங்கில் என்னென்ன உதவிகள் செய்தேன், அதற்காகப் பெறப்பட்ட லாபங்கள் என்ன என்பதை ஒளிவுமறைவின்றி ஒப்புவித்துள்ளார் அருண்கோயல். இதனைத்தொடர்ந்து, ஜெய்ப்பூரில் அருணின் வீட்டில் நடத்திய சோதனையில் 1000 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளது சி.பி.ஐ.! அருண்கோயலின் வாக்குமூலம் எடப்பாடி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஏ.ஜி. அலுவலக அதிகாரிகள்.
-இரா.இளையசெல்வன்
மனைவிக்கும் ஊழல் ஆலோசனை!
ராஜஸ்தானிலுள்ள ஜெனரல் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் ஹவுசிங் ப்ளான்ட்ஸ் கார்ப்பரேசனில் அருண்கோயலின் மனைவி பணிபுரிந்து வந்துள்ளார். அருண் கோயல் அட்வைஸால் ஊழல் செய்து சிக்கிய அருணின் மனைவி, வேலையிலிருந்து நீக்கப்பட்டார். கணவர் மீது மனைவி கோபப்பட்ட நிலையில்... தேனாம்பேட்டையிலுள்ள தனியார் வங்கியில் மனைவிக்கு அருண்கோயல் வேலை வாங்கித்தர, சமாதானமாகியிருக்கிறார் மனைவி.